கிளவுட் கம்ப்யூட்டிங் அல்லது மேகக் கணிமை என்ற புதிய தொழில்நுட்பம், இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கணினியில் ஆற்றக்கூடிய அனைத்தையும் இணையத்திலேயே ஆற்றலாம்; அனைத்துத் தரவுகளையும் இணையத்திலேயே சேமித்து வைக்கலாம்; இதன் மூலம் எந்த ஊரில், எந்த நாட்டில் இருந்தாலும் நம் கணினியில் உள்ள தரவுகளை நாம் அடையலாம்; மென்பொருள் வடிவமைப்பாளர் முதல் தனி நபர் வரையிலும் பலருக்கும் பல விதங்களில் இந்த வசதி பயன்படுகிறது.
கிளவுட் கம்ப்யூட்டிங் நுட்பத்தின் அடிப்படையிலான பல்வேறு சேவைகளை http://www.8kmiles.com என்ற இணையதளம் வழங்கி வருகிறது. இதன் நிறுவனர்களுள் ஒருவர், ஹரிஷ் கணேசன்; அத்துடன் அதன் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகவும் திகழ்கிறார். இவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், 2009 ஜூலை மாதம் குரல் அரட்டை (Voice Chat) நிகழ்த்தினார். கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பம் குறித்து, தமிழ் வாசகர்கள் அறியும் வண்ணம், எளிய முறையில் இந்தக் குரல் அரட்டை அமைந்துள்ளது.
இதனைப் பின்வரும் பக்கத்தில் கேட்கலாம்:
http://www.chennaionline.com/tamil/Audio/Aug09/HarishGaneshanPlayer.aspx
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Thursday, August 20, 2009
கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த குரல் அரட்டை
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:53 PM 1 comments
Labels: அரட்டை, இணைய தளங்கள், இணையம்
Friday, August 14, 2009
தமிழன் தொலைக்காட்சியில் என் நேர்முகம்
தமிழன் தொலைக்காட்சியின் மக்கள் மன்றம் பகுதியில் 28.07.2009 அன்று இரவு இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு என் நேர்முகம் ஒளிபரப்பானது. அரிமா அமீர் ஜவ்ஹரின் கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தேன். அதன் ஒளிப்பதிவினை இங்கே காணுங்கள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:39 PM 0 comments
Labels: இணைய தளங்கள், இதழியல், கல்வி, தொலைக்காட்சி, நேர்காணல்
Subscribe to:
Posts (Atom)