!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2020/07 - 2020/08 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, July 31, 2020

பெயர் என்ன? - 3 | Find the name - 3

இந்தப் பறவையின் பெயர் என்ன?



 Find the name of this bird.



 

கொத்துமல்லி அறுவடை | Coriander harvest

காலி தயிர் டப்பாக்களில் நாங்கள் விளைவித்த கொத்துமல்லியை இன்று அறுவடை செய்தோம்.



 

Q&A: மின்னிதழ்களில் விளம்பர வருவாய் வாய்ப்புகள்

நண்பர் பாரதியின் கேள்விகளுக்கு எனது பதில் இங்கே.



உங்களுக்கு ஏதும் கேள்விகள், ஐயங்கள் இருந்தால், எனக்கு எழுத்து வடிவிலோ ஒலி வடிவிலோ ஒளி வடிவிலோ அனுப்புங்கள்.



 

Thursday, July 30, 2020

Q&A: அனேகனும் அநேகனும் ஒன்றா?

கனடாவிலிருந்து நண்பர் குமணன் எழுப்பிய கேள்விக்கு எனது பதில்.

Wednesday, July 29, 2020

கூடு திரும்பும் பறவைகள் - 2 | Birds returning to nest - 2

இன்று மாலை பறவைகள், கூடு திரும்பிய காட்சி.



 Birds are on the way to nest; a flying shot in this evening.



கம்புள் கோழியின் குளியல் | White breasted Waterhen is taking bath

மழையில் தேங்கிய தண்ணீரில் குளித்துக் கும்மாளம் போடுகிறது கம்புள் கோழி.



 

Sunset at Chennai - 15

சென்னையின் இன்றைய சூரிய அஸ்தமனம்.



Sunset at Chennai today.



ஓணான் - 2 | Oriental garden lizard - 2

இரை தேடும் ஓணான்
இரு கண்கள் உருட்டும்!
அசைவின்றி நிற்கும்!
தலைதூக்கிப் பார்க்கும்!
குறி வைக்கும் ஓணான்
மெல்லூர்ந்து செல்லும்!
இலக்கினை நெருங்கி நின்று
லபக்கென எட்டிப் பிடிக்கும்!

The dance of teabag

A silent teabag has started dancing. Find your inner potential. Keep on working.



 

Tuesday, July 28, 2020

Evening sky at Chennai - 12

A flight is getting ready for landing. Welcome to Chennai.



Sunset at Chennai - 14

மழைக்குப் பிந்தைய சென்னையில், இன்றைய சூரிய அஸ்தமனம். 




Sunset at Chennai today, after the rain.



 

புகை பறக்கும் மழை | Rain smoke

மழைச்சாரல், புகையென விசிறிப் பறக்கும் விறுவிறு காட்சி.



அதிவேக மழை | Superfast rain

Superfast rain at Chennai, Tambaram, today.



சென்னை, தாம்பரத்தில் சற்று முன் பெய்த அதிவேக மழை.



 

சென்னையில் கனமழை | Heavy rain at Chennai | 28.07.2020

ஆடி மாதத்தில் இப்போது சென்னையில் அடித்துப் பெய்கிறது மழை. வானப் பரிசு வருகவே! வாரி வாரித் தருகவே!

 

Green spider | பச்சைச் சிலந்தி

எங்கள் வீட்டில் இந்தப் பச்சைச் சிலந்தியைக் கண்டேன். கைகழுவும் திரவப் புட்டியின் மீதே அமர்ந்திருந்தது. இது, மனிதர்களை அரிதாகவே கடிக்கும். அப்படிக் கடித்தால், அது விஷக் கடிதான். வலிக்கும் ஆனால், மரணத்தை ஏற்படுத்தாது. வீக்கத்தை உண்டாக்கும் என விக்கிப்பீடியா வழியே அறிந்தேன்.



 

வெள்ளரளி | Nerium oleander 'white'

பூவைப் போலச் சிரியுங்கள்!

புதிய சிறகை விரியுங்கள்!



 

Monday, July 27, 2020

Female Cuckoo - A close-up look

The female Cuckoo's yawn is very rare to watch.



குயில் கொட்டாவி விடுவதை முதல்முறையாக இன்று பார்த்தேன். பெண் குயில் பொறுமையாக எனக்கு நெடுநேரம் காட்சி தந்தது. யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.



Cat is eating Upma | உப்புமா உண்ணும் பூனை

ருசி கண்ட பூனை, உப்புமாவை விரும்பி உண்ணுகிறது.



A simple idea - 8

சித்தானந்த், ஒரே கல்லில் ஐந்து மாங்காய் அடிக்கிறார். பூச்சியும் எறும்பும் அரித்த சுண்டைக் கிளையை வெட்டிப் போட்டார். தென்னையிலிருந்து விழுந்த கீற்றுகளிலிருந்து விளக்குமாறு செய்துவிட்டு மட்டையை எடுத்துப் போட்டார். வீட்டைச் சுற்றிலும் குப்பையாகக் கிடந்த சருகுகளைக் குவித்தார். இவற்றை எரித்துக் கிடக்கும் சாம்பலிலிருந்து உரம் தயாரிக்கிறார். எரிப்பதன் மூலம் வரும் புகையினால், கொசுவையும் விரட்டுகிறார். அவரது முயற்சியைப் பாருங்கள்.



 

Sunday, July 26, 2020

Evening sky at Chennai - 11

மழைக்கு முந்தைய இன்றைய அந்தி வானம், சென்னையைக் குளிர்வித்தது. பேருருக் கொண்ட கருமேகங்கள், அடர்த்தியாய்ச் சூழ்ந்திருந்தன. தூரத்தில் மழை பெய்வதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது. மின்னல் விட்டு விட்டு வெட்டியது. குயில்கள், வானுக்கும் பூமிக்கும் மாறி மாறிப் பாய்ந்தன. சூரியனின் சுந்தர வதனம், மேலை வானத்தை மனோரம்மியமாக மாற்றியது.



 

சென்னையில் கனமழை | Heavy rain at Chennai | 26.07.2020

பிரம்மாண்டமான கருமேகக் கூட்டங்களுடன் சென்னையில் அடித்துப் பெய்கிறது மழை.



 

Female Cuckoo is eating Upma | உப்புமா உண்ணும் பெண் குயில்

இந்தப் பெண் குயிலுக்கு உப்புமா என்றால் ரொம்ப இஷ்டம்!



This female Cuckoo loves Upma! Oh, yummy!



Cuckoo is eating Upma | உப்புமா உண்ணும் குயில்

குயில் சாதம் உண்ணுவதை முன்னர் பார்த்தோம். குயில் உப்புமாவும் சாப்பிடும் என்று இன்று கண்டேன்.



Sleeping cat - 2 | உறங்கும் பூனை - 2

"இந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் நடுச்சாலையிலும் உறங்குவேன். யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்" என்கிறது பூனை.



 The cat says "In the complete lockdown on this Sunday, I can sleep in the middle of the road; please don't disturb."



 

குயில்களின் உரையாடல் | Cuckoos in a discussion

அசோக மரத்தில் அமர்ந்து, இரு குயில்கள் உரையாடுகின்றன.



Two Cuckoos in a discussion on an Ashoka tree.



Saturday, July 25, 2020

செடி நடவு - 2 | From tray to ground

From seedling tray to ground and grow bags. On the field from our home garden.



ஆடிப் பட்டம் தேடி விதை என்பார்கள். இந்த ஆடி மாதத்தில் குழி நாற்றங்காலில் விதைகள் இட்டு வளர்த்தோம். துளிர் விட்டுள்ள அவற்றை இன்று நிலத்திலும் தொட்டியிலுமாக நானும் என் மகளும் நட்டு வைத்தோம். நாங்கள் நட்ட சில மணி நேரங்களில் சிறு மழையும் பெய்தது. வானம் அனுப்பிய வாழ்த்துக்கு நன்றி.



கொய்யா அறுவடை - 4 | Guava Harvest - 4

இன்று எங்கள் வீட்டுக் கொய்யா மரத்திலிருந்து சில பழங்களைக் கொய்தோம்.



Guava harvest at our house today.



A simple idea - 7

A simple idea can be developed as a product. See how it is.



அரசின் நெறிமுறைகளின்படி, அனைத்துக் கடைகளிலும் உணவகங்களிலும் சானிடைசர் வைக்க வேண்டும். அங்கு வரும் அனைவரும் கைகளைத் தூய்மை செய்துகொள்ள வேண்டும். பற்பல கடைகளிலும் இதற்கென ஒருவரை நியமித்து, அவர் ஒவ்வொருவர் கைகளிலும் சானிடைசர் துளிகளை விடுகிறார். அப்படி ஆள் நியமிக்காத இடங்களில், வாசலில் இந்த டப்பாவை வைத்துவிடுகிறார்கள். எல்லோரும் தங்கள் கைகளால் இதை அழுத்தித் துளிகளைப் பெறுகிறார்கள். இதனால் ஒரே மூடியை எல்லோரும் தொடும் வாய்ப்பு உள்ளது. இப்போது இந்தக் கருவியின் மூலம், கைகளால் தொடாமலே அந்தத் துளிகளைப் பெற முடிகிறது. அடையாறு ஆனந்த பவன் உணவகத்தின் வாசலில் இதை இன்று கண்டேன்.



 

செடி நடவு - 1 | From tray to pot - 1

குழி நாற்றங்காலிலிருந்து நாற்றுகளை எடுத்து, இன்று செடியாக நட்டோம். இனி, செடிகள் தம் காலில் அல்லது வேரில் தாமே நிற்க வேண்டும். ஒட்டுமொத்த உயிர்ச்சூழலும் இவற்றுக்கு அருள் புரியட்டும்.



From seedling tray to plantation pot. Hard work at our home garden.



 

Friday, July 24, 2020

Sunset at Chennai - 13

சென்னையின் இன்றைய சூரிய அஸ்தமனம், ஒரு நவீன ஓவியம் போல் ஈர்க்கின்றது.



The Sunset at Chennai today is nothing but a modern art.



கொய்யாப்பூ - 2 | Guava flower - 2

காற்றில் ஆடும் சுடர்களாய், எழில் மலர்கள்!



 

Cuckoo - A close-up look - 2

குயில், மிக நெருக்கத்தில்.



Come, close to Cuckoo!



 

A simple idea - 6

தங்கப்பாண்டியின் யோசனையைப் பாருங்கள்.



Watch Thangapaandi's idea!



 

Thursday, July 23, 2020

Butterfly - 9 | வண்ணத்துப்பூச்சி - 9

சாம்பல் நிறத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி!

வாங்கண்ணா வாங்க

வியாபாரிகள் ஒவ்வொருவரின் பாணியும் வெவ்வேறு விதமாய் இருக்கும். அதிலும் அவர்கள் கூவி அழைப்பது, தனித்துவம் உடையதாக இருக்கும். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு, இந்த வாங்கண்ணா வாங்க.

கல்யாண முருங்கை | Erythrina Indica – Coral Tree

கல்யாண முருங்கை இலைகளைப் பறித்து, அரைத்துத் தோசை மாவுடன் கலந்து, தோசை சுட்டுச் சாப்பிடலாம். இது, அரிய மருத்துவக் குணங்கள் கொண்டது. மகப்பேறு, தாய்ப்பால் சுரப்பு ஆகியவற்றுக்கு உதவுவதோடு, தோல்நோய், வயிற்றுப் பூச்சி, உடல் பருமன் ஆகியவற்றுக்கும் மருந்தாக விளங்குகிறது.

புல் மீது ஒரு புள் | Bird on the grass

நேற்று மாலை வேறு ஒரு பறவையை எடுத்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக இதைக் கண்டேன். புல்லின் மீது ஒரு பறவை வந்து அமர்ந்தது. மிகச் சிறிய பறவை. அது, ஒரு புல்லிலிருந்து இன்னொரு புல்லுக்கு மாறி மாறிப் பறந்தது. இந்த அரிய காட்சியை இங்கே பாருங்கள்.



Wednesday, July 22, 2020

Sunset at Chennai - 12

வலை போட்டு இன்று சூரியனைப் பிடித்தேன்.



 

மயில் உள்ளான் - 2 | Greater Painted - Snipe - 2

நான்கு குஞ்சுகளுடன், சூரிய ஒளியில் தகதகக்கும் மயில் உள்ளான்.



A simple idea - 5

A simple solution!



 

கொய்யா அறுவடை - 3 | Guava Harvest - 3

இன்று எங்கள் வீட்டுக் கொய்யா மரத்திலிருந்து சில பழங்களைக் கொய்தோம்.

Guava harvest at our house today.

Tuesday, July 21, 2020

மயில் உள்ளான் | Greater Painted - Snipe

மயில் உள்ளான் என்ற புதிய பறவையை இன்று கண்டேன். நம் வீட்டுக்குப் பின்னால் உள்ள புல்வெளியில் நான்கு குஞ்சுகளுடன் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதை அடையாளம் காண உதவிய நண்பர் சுந்தர் லட்சுமணன் அவர்களுக்கு நன்றி.

Cat on the wall - 4 | மதில் மேல் பூனை - 4

இந்த சுவாரஸ்யமான பூனை, சுவரை நக்கிப் பார்க்கிறது.



 This interesting cat is licking the wall.



Dragonfly - A close-up shot

தும்பிக்கு இந்தக் காய்ந்த இலையில் என்ன கிடைக்கும்? அருகில் நெருங்கிப் பார்ப்போம், வாருங்கள்.



 

Body Language of Cat | பூனையின் உடல்மொழி

பூனைகள் தங்கள் வால், காதுகள், கண்கள் வழியாகச் செய்திகளைச் சொல்கின்றன. தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இந்தப் பதிவில் பூனையின் காது அசைவுகளைக் கவனியுங்கள்.

Watch this cat's ear movement. Here is a guide from Petfinder to interpret.

* Ears forward – A cat with ears slightly forward is likely feeling content or even playful.
* Ears straight up – When a cat is alert, his ears are likely standing at attention as well.
* Ears turned back – Watch out for this kitty! He might feel irritated over stimulated, so it’s probably a good idea to leave him alone.
* Ears turned sideways or back – This cat is feeling nervous or anxious about something. Use caution around a cat whose ears are in this position.
* Ears back and flat against head – This is a sure sign a cat is scared and feeling defensive. Ears flat against the head may also indicate an angry or aggressive cat. Either way, ears against the head means don’t mess with this guy!

தயிர் டப்பாவில் வெந்தயக் கீரை | Methi Leaves or Fenugreek Leaves in curd...

நம் வீட்டுக் காலி தயிர் டப்பாக்களில் வெந்தயக் கீரை செழித்து வளர்கிறது.



Methi leaves in empty curd box at our house garden.



Monday, July 20, 2020

Butterfly - 8 | வண்ணத்துப்பூச்சி - 8

இன்று கண்ட வண்ணத்துப்பூச்சி.



The butterfly, which I saw today.



 

பழைய பேப்பர் வாங்குபவர் | Old paper buyer

சில மாதங்களாக, காய்கறி, பழங்கள் விற்பவர்கள் மட்டுமே வீடுகளுக்கு வந்துகொண்டிருந்தனர். இன்று பழைய பேப்பர்காரரும் வரத் தொடங்கிவிட்டார். அவரவர் பணிகளைத் தொடங்கிவிட்டார்களா?



 

தையல் சிட்டு | Tailorbird

தையல் சிட்டு பாடுவதைக் கேளுங்கள்.

Listen to the Tailorbird.

The Astonishing Dragonfly | வியப்பூட்டும் தும்பி

The dragonfly is an extremely unique insect, both in the shape of its body, and its 4 independent wings. Lets start with its eyes. The dragonfly, like many insects, has nearly 30,000 eyes, called compound eyes. It gives the dragonfly a 360 degree motion detector of sorts. This is critical because the dragonfly uses that motion detector to find prey and it enables the dragonfly to use its supreme mobility to hunt down what it saw.

Birds can fly only in one direction because of the requirement of having air flow over their wings to generate lift. While there is a humming bird that can fly backwards it nowhere nears the acrobatics of a dragonfly. With 4 wings it can fly up, down, sideways, forward, and backward without changing its orientation. These amazing insects can hover in one spot with no motion in any direction or fly upwards of 38 mph depending on the species.

The secret to this maneuverability is the dragonfly’s 4 wings. They enable it to quickly change direction, slow down, or accelerate extremely rapidly. Recent studies by Cornell Physicists looked into different ways of pairing and flapping the wings affected flight and energy use. The dragonfly can use both pairs of wings flapping in tandem to obtain the fastest acceleration and directional changes while by flapping the wings at the same rate but out of phase the dragonfly could conserve energy while hovering. Out of phase means when the front pair of wings are at the top of the flap the back pair are at the bottom and vice versa.

There are currently projects going on to develop robotic dragonflies to use as spy cams along with other things.

Source: Scottish National Heritage

Sunday, July 19, 2020

Evening sky at Chennai - 10

சென்னையின் இன்றைய அந்தி வானத்தை ஒரு விமானம் அலங்கரித்தது. புலம்பெயர்ந்த எவரோ, தாய்மண்ணுக்குத் திரும்புகிறார்கள். அவர்களை வரவேற்கிறோம். நலம் சிறக்க வாழ்த்துகிறோம்.



Crows attacks cat | பூனையைத் தாக்கிய காக்கைகள்

A revenge attack by crows, even after the cat climbed on the neem tree.

பூனை என்ன செய்ததோ தெரியவில்லை. காக்கைகள் விரட்டி விரட்டித் தாக்கவே, வேப்ப மரத்தில் ஏறிவிட்டது. அதன் பிறகும் காக்கைகள் சுற்றி வளைத்துத் தாக்குவதைப் பாருங்கள்.

குயிலின் பின்னழகு | Back pose of Cuckoo

குயிலுக்கும் ஒரு சிறிய தோகை இருக்கிறது.



மழையில் ஒரு கம்புள் கோழி | White-breasted Waterhen in rain

மழையில் நனைந்தபடி இரையுண்ணும் கம்புள் கோழி. அடாது மழை பெய்தாலும் விடாது எமது பணி.



உப்புமா சாப்பிடும் அணில் | Squirrel is eating Upma

நம் வீட்டுச் சேமியா உப்புமாவைச் சுவைத்து உண்ணும் அணிலைப் பாருங்கள்.

சென்னையில் முற்பகல் மழை | Forenoon rain at Chennai

சென்னை, தாம்பரத்தில் இன்று முற்பகல் பெய்து வரும் மழையின் சில காட்சிகள் இங்கே.



மின்கம்பியில் ஊஞ்சலாடும் காக்கை | Crow swing on the electric wire

மின்கம்பியில் அமரும்போது, காக்கை உள்ளிட்ட பறவைகளுக்கு மின்னதிர்வு ஏற்படுவதில்லை. ஏன் தெரியுமா? மின் தடை மற்றும் மின்னழுத்த வேறுபாடே காரணம். பறவைகளின் மின்தடை மதிப்பு அதிகமாக இருப்பதாலும் பறவையின் இரு கால்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள மின்னழுத்த வேறுபாடு பூஜ்ஜியமாக இருப்பதாலும் (240 volts-240 volts=0) பறவைகளுக்கு மின்னதிர்வு ஏற்படுவதில்லை. ஆனால் அதே பறவை, இரு வயர்களுக்கு இடையே அமர்ந்தால் (line மற்றும் neutral) தூக்கி எறியப்படும். (நன்றி - தமிழ் கோரா)



Saturday, July 18, 2020

கால்நடைகள் | Cattle

தாம்பரத்தில் நம் வீட்டருகே வட இந்தியர் ஒருவர், 50 மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். அருகில் உள்ள புல்வெளியில் இவை மேய்வது வழக்கம். இவற்றின் கொம்புகளும் தோற்றமும் ஆகிருதியும் அசத்தலாய் இருக்கும். எந்த வகை மாடுகள் என்று தெரியவில்லை. இவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.



தவிட்டுக் குருவி | Yellow-billed babbler

வெண்தலை சிலம்பன், பன்றிக்குருவி, கரியில்லாக்கிளி (மலையாளத்தில்), புலுனி என்று பலவாறு அழைக்கப்படும் தவிட்டுக் குருவி, தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் இலங்கைப் பகுதிகளிலும் மட்டுமே காணப்படும்.



ஜோடிக் குயில் | Dual Cuckoo

சரக்கொன்றையில் அமர்ந்துள்ள ஜோடிக் குயில்களுள் ஒன்று, வேப்பம்பழத்தைத் தின்றுவிட்டுக் கொட்டையைத் துப்புவதைப் பாருங்கள்.



அசோக மரத்தில் தேன்சிட்டு | Sunbird at Ashoka tree

பறவை அமர்ந்து சென்ற பிறகு

அதிர்கிறது கிளை

பிரிவுத் துயரால்!



இரட்டை மைனாக்கள் | Dual Mynas

இன்றைய நாளை ஆசீர்வதித்த இரட்டை மைனாக்கள்!



Friday, July 17, 2020

கல்வாழை | Indian shot

Canna indica, commonly known as Indian shot, African arrowroot, edible canna, purple arrowroot, Sierra Leone arrowroot, is a plant species in the family Cannaceae. It is native to much of South America, Central America, the West Indies, and Mexico.



Sunset at Chennai - 11

சென்னையில் இன்றைய சூரிய அஸ்தமனம்.



Sunset at Chennai today.



குயிலின் கண்கள் | Eyes of Cuckoo

குயிலுடைய கண்களின் கூர்மையை இதில் பாருங்கள்.



How sharp the Cuckoo's eyes are? Check here.



கொய்யா அறுவடை - 2 | Guava Harvest - 2

இன்று எங்கள் வீட்டுக் கொய்யா மரத்திலிருந்து சில பழங்களைக் கொய்தோம்.



Guava harvest at our house today.



மைனாவின் நடை | Morning walk of Myna

நடைபயிலும் மைனாவுக்குத் தடையேதும் இல்லை.



Walk or fly; choice is yours.



 

Thursday, July 16, 2020

இளம் வியாபாரிகள் | Young sellers

19 வயது இளைஞர்களின் நெஞ்சுரமும் உலகை எதிர்கொள்ளும் விதமும் வியக்க வைக்கிறது. இளைய பாரதத்தினாய் வாவாவா!



உறங்கும் பூனைகள் | Sleeping cats

பூனை கண்ணை மூடினால், உலகம் இருண்டுவிடுமா?



When the cat closes its eyes, will the world become dark?



கருவேப்பிலைப்பூ | Curryleaves flower

கருவேப்பிலையை அடிக்கடி பார்க்கின்றோம். ஆனால், கருவேப்பிலைப்பூ எப்படி இருக்கும் தெரியுமா?



கொய்யாப்பூ | Guava flower

கொய்யாக்காய், கொய்யாப்பழம் ஆகியவற்றைப் பார்த்திருப்பீர்கள். கொய்யாப்பூவைப் பார்த்திருக்கிறீர்களா? இதோ பாருங்கள்.



குயிலின் அமுத கானம் - 4 | Singing Cuckoo - 4

சரக்கொன்றை மரத்தில் ஜோடிக் குயில்கள் இசைக்கும் கானம் கேளீர்!



Listen the divine music of dual Cuckoo from Golden shower tree.



 

Wednesday, July 15, 2020

சென்னையில் இரவு மழை | Night rain at Chennai

சென்னை, தாம்பரத்தில் இன்று இரவு 9.30 மணியளவில் விசிறி அடிக்கும் காற்றுடன், இடி மின்னலுடன் சிறிது நேரம் கனமழை பெய்தது. அந்தக் காட்சியை இங்கே பாருங்கள். இத்தனை களேபரத்திலும் மழையில் நனைந்தபடி இருக்கும் காகம், சிறிதுகூட அசையாமல் உட்கார்ந்திருப்பது, இன்னோர் ஆச்சரியம்!



மூன்று மைனாக்களும் ஒரு குயிலும் | Three Mynas and a Cuckoo

ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு மைனாக்கள் உண்ணுகையில், இடையில் ஒரு குயிலும் வந்து உண்ணுகிறது. குயில், சாதம் சாப்பிடும் என்பது எனக்கு இன்றைக்குத்தான் தெரியும்.



 

மகராசர் காமராசர் - மூன்று மெட்டுகளில் ஷைலஜாவின் குரலிசை

வாழ்க நீ எம்மான்!



ஒரு நூறு புறாக்கள் | One hundred pigeons

புறாக்கள் எப்போதும் கூட்டமாகவே இருக்கின்றன. கோவில்கள், மசூதிகள், கடற்கரைகள், புல்வெளிகள் எங்கெங்கும் அவை நூற்றுக்கணக்கில் அமர்ந்தும் நடந்தும் பறந்தும் திரிந்தும் வருவது கொள்ளை அழகு. மும்பையிலும் பெங்களூருவிலும் இவற்றை நிறையப் பார்த்திருக்கிறேன். சென்னையில் எங்கள் வீட்டருகே இத்தனை புறாக்கள் வந்தமரும் என நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், இன்று அது நடந்துவிட்டது.



சரக்கொன்றைக் குயில் | Cuckoo on Golden shower tree

சரக்கொன்றை மரத்தில் வீற்றிருக்கும் குயில்!



A simple idea - 4

இது எப்படி இருக்கு?



How is it?



Tuesday, July 14, 2020

கொய்யா அறுவடை | Guava Harvest

இன்று எங்கள் வீட்டுக் கொய்யா மரத்திலிருந்து சில பழங்களைக் கொய்தோம்.



Guava harvest at our house today.



 

சிவப்பு மூக்கு ஆள்காட்டி | Red Wattled Lapwing-Vanellus indicus

ஆள்காட்டிப் பறவை, “twit, twit” என்று இரண்டு வினாடிக்கொரு தடவையும், இடைஇடையே, மிகவும் உயர்ந்த குரலில் “twit-twit-twit-twit” என்று இரக்கமான குரலும் கொடுக்கும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சூழ்நிலைக்கேற்றவாறு, குரலை உயர்த்தியோ, தாழ்த்தியோ, “Did-he-do-it?” என்று வருத்தம் தோய்ந்த குரல் கொடுக்கும்”



சங்க இலக்கியத்தில் கணந்துள் என அழைக்கப்பெற்ற பறவையே இன்று ஆள்காட்டிப் பறவை என அழைக்கப்படுகிறது. இரண்டு சங்கப் பாடல்களில் கணந்துளின் நீண்ட கால்களை “நெடுங் காற் கணந்துள்”, என்று புலவர்கள் குறிப்பிடுகின்றனர்.



இது குறித்து, வல்லமை மின்னிதழில் சற்குணா பாக்கியராஜ் எழுதிய கட்டுரையைப் படியுங்கள். https://www.vallamai.com/?p=81865



 

வெண்நெஞ்சு நீர்க்கோழி | White-breasted Waterhen

சங்க இலக்கியத்தில் கம்புள்



“வெண் நுதல் கம்புள் அரிக் குரல் பேடை

தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்’”

ஓரம்போகியார், ஐங்குறு நூறு, 85: 1-2



சுருக்கமான உரை: வெண்மையான நெற்றியையும் விட்டு விட்டு ஓசை எழுப்பும் குரலையும் உடைய பெண் கம்புள், தன் சுற்றத்தோடு குளிர்ந்த பொய்கையிலிருந்து மகிழ்ந்து விளையாடும்..

சங்க இலக்கியத்தில் “கம்புள்” என்ற பறவையின் பெயர் நான்கு பாடல்களில் காணப்படுகிறது (ஐங்குறுநூறு 85, 60, அகநானூறு 356, புறநானூறு 297). மேற் கண்ட ஒரே ஒரு பாடலில் மாத்திரமே “வெண் நுதல் கம்புள்” என்று இந்தப் பறவையைச் சங்கப் புலவர் ஓரம்போகியார் மருதத் திணையின் பின்னணியில் வர்ணித்துள்ளார்.



இது குறித்து, வல்லமை மின்னிதழில் சற்குணா பாக்கியராஜ் எழுதிய கட்டுரையைப் படியுங்கள். https://www.vallamai.com/?p=87265



 

Snake attacks White-breasted Waterhen | கம்புள் கோழி மீது பாய்ந்த பாம்பு

இன்று காலை, பக்கத்துப் புல்வெளியில் கம்புள் கோழிகள் வழக்கம்போல் மேய்ந்துகொண்டிருந்தன. அப்போது உஸ் உஸ்ஸென்று சத்தம். கம்புள் கோழிகள் இரண்டும் என்னவென்று மதிலருகே சென்று ஆராய்ந்தன. அப்போது அவற்றின் மீது பாம்பு பாய்ந்து சீறியது. கம்புள் கோழிகள் சட்டென்று பின்வாங்கின. ஆனால், பயந்து ஓடிவிடாமல் மீண்டும் மீண்டும் மதிலருகே சென்று தேடின. மாறி மாறி பாம்பு சீறுவதும் கோழி தேடுவதுமாக இருந்தது. குலை நடுங்கச் செய்யும் இந்தக் காட்சியைப் பாருங்கள்.



Snake attacks White-breasted Waterhen | கம்புள் கோழி மீது பாய்ந்த பாம்பு

இன்று காலை, பக்கத்துப் புல்வெளியில் கம்புள் கோழிகள் வழக்கம்போல் மேய்ந்துகொண்டிருந்தன. அப்போது உஸ் உஸ்ஸென்று சத்தம். கம்புள் கோழிகள் இரண்டும் என்னவென்று மதிலருகே சென்று ஆராய்ந்தன. அப்போது அவற்றின் மீது பாம்பு பாய்ந்து சீறியது. கம்புள் கோழிகள் சட்டென்று பின்வாங்கின. ஆனால், பயந்து ஓடிவிடாமல் மீண்டும் மீண்டும் மதிலருகே சென்று தேடின. மாறி மாறி பாம்பு சீறுவதும் கோழி தேடுவதுமாக இருந்தது. குலை நடுங்கச் செய்யும் இந்தக் காட்சியைப் பாருங்கள்.



Monday, July 13, 2020

இன்றைய குயில் | Today's Cuckoo

இன்று காட்சி தந்த குயில்!



Three birds | மூன்று பறவைகள்

மூன்று திசைகளில் பறக்கும் மூன்று பறவைகள்!



Three birds in three directions!



Cat on the wall - 3 | மதில் மேல் பூனை - 3

பல நேரங்களில் முடிவு எடுக்கும்போது நம்முள் பலரும் இப்படித்தான் இருப்போம்.



When taking a decision, many of us will be like this.



நம்ம வீட்டுக் கொய்யா -2 | Guava at our house - 2

நம் வீட்டில் உள்ள பெரிய ரக கொய்யாவை இங்கே நீங்கள் பார்க்கலாம். இதில் காய்க்கும் கொய்யாக்கள், சற்றே பெரிதானவை.



Sunday, July 12, 2020

மின்னலின் நாட்டியம் | Lightning dance

இன்று மாலை மழைக்குப் பிறகு, இரவில் மின்னலின் நாட்டியம், வானை நெடுநேரம் அலங்கரித்தது. 15 நிமிடக் காணொலிப் பதிவை 30 விநாடிகளாகச் சுருக்கி இங்கே வழங்குகிறேன்.



Bird and shadow | புல்லின் நடுவே ஒரு புள்

இந்தக் கம்புள் கோழி (white-breasted waterhen), தன் நிழலோடு நடப்பது ஓர் அழகு எனில், காலைத் தட்டித் தட்டி இரையைக் கண்டுபிடிப்பது இன்னோர் அழகு.



Evening sky at Chennai - 9

Evening sky, after the rain!



மழைக்குப் பிந்தைய மாலை வானம்!



நம்ம வீட்டுக் கொய்யா -1 | Guava at our house - 1

நம் வீட்டில் சிறிய ரகம், பெரிய ரகம் என இரு வகை கொய்யா மரங்கள் உள்ளன. இரண்டுமே காய்க்கத் தொடங்கியுள்ளன. இதில் சிறிய ரக கொய்யாவை இங்கே நீங்கள் பார்க்கலாம்.



பெயர் என்ன? - 4 | Find the name - 4

குரோட்டன்ஸ் செடி போல் இருக்கிறதே. இதன் பெயர் என்ன?



 

பெயர் என்ன? - 3 | Find the name - 3

What is the name of this plant?



நேற்று மாலை, செடிகள் வாங்க, செடியகம் (நர்ஸரிக்கு இந்தச் சொல் சரியா?) சென்றேன். அப்போது, இந்தச் செடியைப் பார்த்தேன். வாங்குவோர் கூட்டம் அதிகமாக இருந்ததால், படம் மட்டும் எடுத்து வந்தேன். இதன் பெயர் உங்களுக்குத் தெரியுமா?



Saturday, July 11, 2020

Evening sky at Chennai - 8

கலைவண்ணம் கொண்டாடும் இன்றைய அந்தி வானம்.



An artistic evening sky at Chennai today.



கூடு திரும்பும் பறவைகள் | Birds returning to nest

இன்று மாலை பறவைகள், கூடு திரும்பிய காட்சி.



Birds are on the way to nest; a flying shot in this evening.



பெயர் என்ன? - 4 | Find the name - 4

இந்தப் பறவையின் பெயர் என்ன?



What is the name of this bird?



பெயர் என்ன? - 3 | Find the name - 3

What is the name of this bird?



இந்தப் பறவையின் பெயர் என்ன?



Friday, July 10, 2020

அணில் | Squirrel

அணிலாடு முன்றிலாரை நினைத்துக்கொள்கிறேன்.



Sunset at Chennai - 10

அழகோ அழகு!



Lovely sunset!



கீற்றுக் கொட்டகை கட்டுவது எப்படி? | How to build a hut - A demo

கீற்றுக் கொட்டாய் அல்லது கொட்டகை கட்டுவது எப்படி? இதோ ஒரு வழிகாட்டி.



Rose Hibiscus | ரோஸ் செம்பருத்தி

மைக்கை நீட்டும் செம்பருத்தி

மடமடவென்று கேட்கிறதே!

பட்டு பட்டெனக் கேட்கிறதே!

பதிலுக்கு எங்கே நான்போவேன்!



அரசும் வேம்பும் | Ficus religiosa or sacred fig and Neem

அரசமரமும் வேப்பமரமும் சிறு செடிகளாக இணைந்து வளரும் அழகைப் பாருங்கள்.



Thursday, July 09, 2020

தாம்பரத்தில் திடீர் மழை | Sudden rain at Tambaram

இன்று மாலை சென்னை, தாம்பரத்தில் வெயில் அடித்துக்கொண்டிருக்கும்போதே திடீர் மழை பெய்தது. கொடியில் காய்ந்த துணிகளை எடுக்கவும் நேரமில்லை. மண்ணும் மரங்களும் மகிழ்ந்து மலர்ந்த அந்த அழகிய தருணத்தை இங்கே காணுங்கள்.



Vegetable seller in van

வீடு தேடி வந்து காய்கறி, கீரை விற்பனையில் பற்பலர் ஈடுபட்டுள்ளனர். மாலை ஆறு மணிக்குப் பிறகும் உலா வருகிறது இந்த வண்டி.



குயிலின் வாயில் வேப்பங்கொட்டை

இன்றும் குயில் கூவியது. அத்துடன் வாயில் ஒரு வேப்பங்கொட்டையை உருட்டியது.



இரண்டு பூனைகளும் பின்னே ஒரு நத்தையும்

இரண்டு பூனைகளும் பின்னே ஒரு நத்தையும்!



மாதுளையின் பேரழகு | Unique beauty of Pomegranate

என்ன அழகு! எத்தனை அழகு!



Vegetable sellers in car with a megaphone

First I thought, it is a recorded voice. But, they hired a person to speak in the megaphone. After two-wheeler, tri-cycle, auto, now sellers are in a car. Earlier one or two vendors came; but, now 7 - 8 vendors are coming to homes daily.



முதலில் இதைக் கேட்டபோது, வழக்கம்போல், பதிவு செய்த குரல் என நினைத்தேன். ஆனால், மெகாபோனோடு ஒருவர், காரில் கூவியபடியே செல்கிறார்.



சந்தைக்கு நாம் போகாவிட்டால், சந்தை நம்மை நோக்கி வரும்.



Badam tree | வாதுமை அல்லது பாதாம் மரம்

சிறு வயதில் வாதாம் மரத்தின் கீழ் விழுந்து கிடக்கும் வாதாங்கொட்டைகளை எடுத்து வந்து, உடைத்து உண்போம். நீங்களும் அவ்வாறு சாப்பிட்டிருக்கிறீர்களா?



இவற்றின் தடித்த, பெரிய இலைகளில் சிற்றுண்டிகளை உண்ணலாம். எளிதில் கிழியா.



எங்கள் வீட்டருகே உள்ள, எழிலும் கம்பீரமும் நிறைந்த இந்த மரத்தைப் பாருங்கள்.



கீரை வியாபாரி - 2 | Greens seller - 2

Florist turned to Greens seller.



பூக்காரர், கீரை வியாபாரி ஆனார்.



Morning sky at Chennai - 2

சென்னையில் இன்றைய காலை வானம்.



Video by: Hemamalini Lokanathan



Wednesday, July 08, 2020

Sunset at Chennai - 9

வானவில் ஜரிகையுடன் பட்டுச் சேலை அணிந்து, வளைக்கை வீசி நடக்கிற வண்ணச் சிங்காரியை நீங்கள் எங்காவது பார்த்தீர்களா?

Pile foundation - A demo

எங்கள் வீட்டருகே புதிதாக வீடு கட்டத் தொடங்கியிருக்கிறார்கள். சதுரமாகத் தோண்டிக் கடைக்கால் அமைப்பதற்குப் பதில், Pile foundation என்ற முறையில் அடித்தளம் அமைத்து வருகிறார்கள். வழக்கமான முறையை விட இதில் வேகமாகவும் வலுவாகவும் அமைக்க முடிகிறது என்கிறார்கள். இந்த முறையில் எப்படி அடித்தளம் அமைக்கிறார்கள் என்று பாருங்கள்.



அன்னம் உண்ணும் மைனா | Myna is having lunch

Myna is having lunch!



அன்னம் உண்ணும் மைனா!



உப்புமா சாப்பிடும் மைனாக்கள்!

சேமியா உப்புமா சாப்பிடும் மைனாக் குஞ்சுகள்!



Myna is eating Vermicelli Upma!



தேன்சிட்டு - 2 | Sunbird - 2

Sunbird is a micro poetry!



தேன்சிட்டு, ஒரு துளிக் கவிதை!



Tuesday, July 07, 2020

குழித் தட்டு நாற்றங்கால் | Seedling in Tray

குழித் தட்டு நாற்றங்காலில் விதைப்பது எப்படி? இதோ ஒரு வழிகாட்டி.



தயிர் டப்பாவில் பாலக் கீரை | Palak Keerai in Curd box

காலி தயிர் டப்பாக்களைத் தூக்கி எறிய வேண்டியதில்லை. அவற்றில் அருமையாகக் கீரை வளர்க்கலாம். இங்கே பாலக் கீரை வளர்க்கும் முறையைப் பாருங்கள்.



How to grow Palak Keerai in empty curd box? Check here.



Cats on the wall | மதில் மேல் பூனைகள்

Both cats will jump on the same side? or different side?

மதில் மேல் இரு பூனைகளும் எந்தப் பக்கம் குதிக்கும்? ஆளுக்கொரு பக்கமா? இரண்டும் ஒரே பக்கமா?

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை!

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை!

வால் காக்கை | Dendrocitta vagabunda

வால் காக்கை (Rufous Treepie அல்லது Dendrocitta vagabunda) என்பது காக்கைக் குடும்பத்திலுள்ள பறவைகளுள் ஒன்று. இது அரிகாடை என்றும் முக்குறுணி என்றும் மாம்பழத்தான் குருவி என்றும் கொய்யாப் பழத்தான் என்றும் அழைக்கப்படும்[2]. நீண்ட வாலும் உரத்த இசைக் கூப்பாடும் (கோகீலா ... கோகீலா... என்ற தொனியில் இருக்கும்) இதன் தெளிவான அடையாளங்கள். வேளாண் இடங்களிலும் நகர்ப்புறத் தோட்டங்களிலும் தென்படும் இப்பறவை காக்கையைப் போலவே ஒரு அனைத்துண்ணி. இப்பறவைக்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்டுள்ள பெயர் டென்றொசிட்டா வேகபண்டா (Dendrocitta vagabunda). இதன் பொருள் மரங்கள் இடையே அலைபவன் (Wanderer amongst trees) என்பதாகும்.


காக்கையும் தோசையும்

இரை கிடைத்தது!



Morning sky at Chennai | சென்னையில் காலை வானம்

"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக"



காயத்ரி மந்திரம் தமிழாக்கம்: மகாகவி சுப்ரமண்ய பாரதி



Butterfly - 7 | வண்ணத்துப்பூச்சி - 7

இந்த வண்ணத்துப்பூச்சியின் நிறம், கறுப்பு வெள்ளையா?



Monday, July 06, 2020

The smart cat!

The cat choose a smart way to cross the wall!



ஒற்றைத் தேன்சிட்டு!

இங்கும் அங்கும் தாவித் தாவி இந்த ஒற்றைத் தேன்சிட்டு ஒய்யாரமாய்த் தேன்குடிப்பதைப் பார்ப்பதற்கு இன்னொரு பெயர் வரம்!



மைனா - 2 | Myna - 2

வேப்பங்கிளையில் ஊஞ்சலாடும் மைனா!



Myna in swing on the Neem tree!



 

சங்குப்பூ - 2 | Clitoria - 2

சங்குப்பூவின் வெவ்வேறு தோற்றங்கள்!



பெயர் என்ன? - 2 | Find the name - 2

Find the name of this flower!



இந்தப் பூவின் பெயர் என்ன?



Sunday, July 05, 2020

தொட்டியில் செடி வைப்பது எப்படி?

இன்று எங்கள் வீட்டில், தக்காளி, கத்திரிக்காய், குண்டு மிளகாய், நீட்டு மிளகாய்ச் செடிகளைத் தொட்டியில் நட்டு வைத்தோம். மண்ணைத் தூய்மைப்படுத்துவது, உரக் கலவை இடுவது, செடியின் அடி மண்ணை நெகிழ்த்துவது உள்ளிட்ட முறைகளை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். இதன் பெருமை முழுவதும், செடி, உரம் என அனைத்தையும் வாங்கிவந்து, எனக்கு வழிகாட்டிய என் மனைவி ஹேமமாலினிக்கே உரியது.



மூங்கில் குயில் | Bamboo Cuckoo

குழலிசை நல்கும் மூங்கிலின் மீது ஒரு குயிலிசை!



 

A simple idea - 3

Here is a simple solution!



இதோ ஓர் எளிய தீர்வு!



மைனா | Myna

Watch this young Myna's cheerful activities.



இந்த இளம் மைனா என்னென்ன செய்கிறது, பாருங்கள்.



பெயர் என்ன? | Find the name

இந்தப் பூவின் பெயர் என்ன?



Saturday, July 04, 2020

Cat on the wall - 2 | மதில் மேல் பூனை - 2

பூனை எந்தப் பக்கம் குதிக்கும்?



Which side the cat will jump on?



Mother dog feeding puppies - 2

Mother dog feeding 4 puppies at a time.



4 குட்டிகளுக்கும் ஒரே நேரத்தில் பாலூட்டும் தாய்.



பழ வியாபாரி | Fruit Seller

ஒலிபெருக்கியைச் சிறப்பாகப் பயன்படுத்தும் பழ வியாபாரி, குடும்பமாக வந்து பழம் விற்கிறார்.



மழைத் துளிகள் | Rain drops

இடுப்பிலிருந்து இறங்க மறுக்கும் குழந்தையைப் போல், இலை நுனியிலும் கொடிக் கம்பியிலும்... நீண்ட நேரமாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது மழைத் துளி. (அகமொழி 830)



 

சங்குப்பூ | Clitoria

சங்குப்பூ, சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. சங்குப் போன்று தோற்றம் அளிப்பதால், சங்குப்பூ என்கிறோம். யோனி இதழ்களைப் போல் உள்ளதால், ஆங்கிலத்தில் Clitoria என்று அழைக்கிறார்கள்.



வெள்ளை, நீலம் என இரு நிறங்களில் வளரும் சங்குப்பூ, தமிழகமெங்கும் காடுகள் வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. இதன் இலை, வேர், மலர்கள், விதை என ஒவ்வொன்றும் மருத்துவப் பண்புகளைக் கொண்டவை.



நம் இயற்கைச் சூழலைப் போற்றி வளர்ப்போம். அவையே நம்மைக் காக்கும் அரண்கள்.



நித்தியக் கல்யாணி | Madagascar Periwinkle

சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படும் அரிய நித்தியக் கல்யாணி!



மாதுளம்பூ | Pomegranate flowers

மாதுளம்பூவின் தனித்த அழகைக் கண்டு மகிழ்க!



Friday, July 03, 2020

Evening sky at Chennai - 7

Evening sky, after the rain!



மழைக்குப் பிந்தைய மாலை வானம்!



தாம்பரத்தில் மிதமான மழை | Moderate rain at Tambaram

தாம்பரத்தில் இன்று பெய்த மழையின் போது எடுத்த காட்சிகள்!



மழையின் இசை நாட்டியம் | Musical dance of rain

மழை
விழும்போது இசை!
எழும்போது நாட்டியம்!

Rain is music
While falling!
Dance when raise!



மழை வரைந்த வட்டங்கள் | Rainmade Circles

Rainmade circles at Tambaram, Chennai.



சென்னை, தாம்பரத்தில் சற்று முன், மழை வரைந்த வட்டங்கள்!



குயிலின் அமுத கானம் - 3 | Singing Cuckoo - 3

Want to hear the Cuckoo's song for 5 mins?



குயில் பாடுவதை ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கேட்க வேண்டுமா?



Butterfly - 6 | வண்ணத்துப்பூச்சி - 6

தேடல், அதை மட்டும் விட்டுவிடாதீர்கள் என்று இந்த வெந்தய வரியன் வாழ்ந்து காட்டுவதைப் பாருங்கள்!



இந்த மலரின் பெயர் என்ன?

What is the name of this lovely flower?



பளீரெனச் சிரிக்கும் இந்த மலரின் பெயர் என்ன?



Thursday, July 02, 2020

மைனா குளிக்கும் காட்சி!

இரண்டு மைனாக்கள் ஒன்றாகக் குளியல் போடும் அரிய காட்சி!



Sunset at Chennai - 8

Sunset at Chennai today!



சென்னையில் இன்றைய சூரிய அஸ்தமனம்!



மீன்கொத்தி | Kingfisher

மீன்கொத்தியைத் துரத்திவிட்டு, அந்த இடத்தைக் காகம் பிடிப்பதைப் பாருங்கள்.



 

இந்தக் கொடியின் பெயர் என்ன?

எருக்கம்பூவில் கருவண்டு!

பூவில் வண்டு கூடும்! கண்டு பூ கண்கள் மூடாது!



Butterfly - 5 | வண்ணத்துப்பூச்சி - 5

Which secret the Hibiscus bud is hearing from Butterfly!?



செம்பருத்தி மொக்கின் காதில் வண்ணத்துப்பூச்சி சொன்ன ரகசியம் என்ன?



கீரை வியாபாரி | Greens seller

கீரை வியாபாரியுடன் சிறு உரையாடல்.



A short conversation with Greens seller.



குயிலின் அமுத கானம் - 2 | Singing Cuckoo - 2

மனம் மயக்கும் மதுர கானம்!



குக்கூ குக்கூ எனக் கூவும் குயில் - 1

Cuckoo is singing! Get the awesome experience!



குயில் வெண்ணிற அலகு திறந்து, செவ்வாய் காட்டி, செங்கண்ணால் உற்று நோக்கி, மூச்சிழுத்து அமுத இசையாய்க் கூவும் அழகைப் பாருங்கள்.



இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,

மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்

வந்து பரவுதல்போல்



குயில் இசைக்கும் பாடலைக் கேளுங்கள்.



அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி?

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2500 ஓய்வூதியமும் ரூ.500 மருத்துவப் படியும் வழங்குகிறது. மேலும் பேருந்துகளில் இலவசமாகப் பயணிப்பதற்கான சலுகையையும் வழங்குகிறது. இவை அவரது ஆயுள் நிறையும் வரை வழங்கப்பெறும். அவருக்குப் பிறகு அவரது மரபுரிமையருக்கும் இதே உதவிகள் தொடரும். இந்த நிதியுதவியைப் பெறுவது எப்படி? இதோ ஒரு வழிகாட்டி.



இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.



Wednesday, July 01, 2020

Two trees in touch!

These two trees are just neighbors? Or friends? Or lovers? Write your story.



மெல்லத் தொட்டு உறவாடும் இந்த இரண்டு மரங்களுக்கு இடையே இருப்பது அண்டை வீட்டு உறவா? நட்பா? காதலா? உங்கள் கற்பனையை எழுதுங்கள்.



Butterfly - 4 | வண்ணத்துப்பூச்சி - 4

Don't miss the climax!



எருக்கம்பூவில் வண்ணத்துப்பூச்சி!



Cuckoo - A close-up look

குயில், மிக நெருக்கத்தில்!



  

காய்கறிக் கடையாக மாறிய ஆட்டோ | Auto rickshaw turned as Vegetable shop

In conversation with a Auto driver family, whom turned as vegetable sellers.



சவாரி இல்லாததால், ஆட்டோக்களும் கார்களும் கடைகளாக மாறி வருகின்றன. இன்று காலை எங்கள் வீட்டருகே வந்த அத்தகைய நடமாடும் காய்கறிக் கடை ஒன்றினை ஒரு குடும்பமே இணைந்து நடத்துவதைக் கண்டேன். அவர்களுடன் ஒரு சிறு உரையாடல்.



Evening sky at Chennai - 6

Evening sky after heavy rain!



போருக்குத் திரண்டது போல் காட்சியளித்த அந்தி வானம்! பெருமழைக்குப் பிறகு, இயற்கை வரைந்த எழிலோவியம்!