!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2023/07 - 2023/08 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, July 18, 2023

Top 3% of Rising Creators at Facebook


Again on Top 3% of Rising Creators at facebook. Thanks to all.

#creator #rising #digital #content #facebook #fb 

Annakannan Times

 அண்ணாகண்ணன் டைம்ஸ் என்ற புதிய யூடியூப் அலைவரிசையைத் தொடங்கியுள்ளேன். இனி, என் புதிய பதிவுகள், இதில் இடம்பெறும். அன்பர்கள் இதில் இணைந்து ஆதரிக்க வேண்டுகிறேன். 


Annakannan Times - My new YouTube channel. More exciting videos can be expected here. Subscribe & support.


https://youtube.com/@Annakannantimes

Monday, July 17, 2023

உளுந்து வடை

நம்ம வீட்டு உளுந்து வடை

Ulundu Vadai at our home kitchen

#food #ulunduvadai #vadai #vada #kitchen #samayal #cook #cooking #recipe #உளுந்து #வடை #உளுந்துவடை 

https://youtu.be/DiJIwt88EhI

Sunday, July 16, 2023

தென்கச்சி பார்வையில் ஆத்திகம் - நாத்திகம்

தென்கச்சியார் பார்வையில் ஆத்திகம் - நாத்திகம். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தின் 239ஆவது மாத நிகழ்ச்சியில் கணேஷ் மூர்த்தியின் பகிர்வு.

Friday, July 14, 2023

Bodybuilding Masters - 40+ Years | Mr.Cleanman Bodybuilding Championship

Mr.Cleanman Bodybuilding Championship 2023 at Chennai. Watch the power of Masters - 40+ Years.

#bodybuilding #bodybuilder #bodybuilders #bodybuildinglifestyle #bodybuildingnation #bodybuildinggym #bodybuildingmotivation #physique #physiques #physiquecompetitor #physiquecoaching #physiquenews #men #mister #gym #gymowners #tamilnadu #chennai #ஆணழகன் #அழகன் #அழகு #கட்டுடல்

Senniyongu 9 & 10 | சென்னியோங்கு | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Naalayiram

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் ஒன்பதாம், பத்தாம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள். இந்த நாள் இனிய நாள்.

Thursday, July 13, 2023

மொழிப் பயிற்சி | கெங்கவல்லி ஆ.மணவழகன் பேச்சு | Manavazhahan Speech on Tamil Language

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மொழிப் பயிற்சி என்ற தலைப்பில் கெங்கவல்லி ஆ.மணவழகன் ஆற்றிய உரை இதோ.

நெல்லை ஜெயந்தா பேச்சு | கலைஞர் செம்மொழிச் செயற்பாடுகள் | Nellai Jayantha Speech

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலைஞரின் செம்மொழிச் செயற்பாடுகள் என்ற தலைப்பில் நெல்லை ஜெயந்தா ஆற்றிய உரை இதோ.

Wednesday, July 12, 2023

கணினித் தமிழ் | அண்ணாகண்ணன் உரை | கலைஞர் 100 | Annakannan Speech on Tamil Computing

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கணினித் தமிழ் என்ற தலைப்பில் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இதோ.

Annakannan Speech on Tamil Computing at International Institute of Tamil Studies, as a part of Kalaignar Centenary Celebration.

Tuesday, July 11, 2023

காதல் சுகுமார் நகைச்சுவை உரை | Kadhal Sukumar Humour Speech

திரைப்பட நடிகர், இயக்குநர் காதல் சுகுமார், அம்பத்தூர் சிரிப்பரங்கத்தின் 2023 ஜூலை மாதக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தன் சொந்த வாழ்விலும் திரைத் துறையிலும் நிகழ்ந்த நகைச்சுவை அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்க வழங்கினார். உலக நாயகன் கமல்ஹாசன் தனக்கு வழங்கிய முக்கிய அறிவுரையைத் தெரிவித்தார். கலகலப்பும் விறுவிறுப்பும் மிக்க காதல் சுகுமாரின் சிறப்புரை, சிரிப்புரை இதோ.

ஆயிரம் ரூபாய் யாருக்கு? | நெல்லிக்குப்பம் புகழேந்தி பேச்சு | Nellikuppam Pugazhendhi Speech

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் யாருக்குக் கிடைக்கும்? யாருக்குக் கிடைக்காது? திமுக பேச்சாளர் நெல்லிக்குப்பம் எஸ்.புகழேந்தி தாம்பரத்தில் பேச்சு.

Junior Bodybuilding | Mr.Cleanman Bodybuilding Championship 2023

'தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே' எனக் கம்ப ராமாயணத்தில் ராமனைப் பாடுகிறார், கம்பர். இதோ இந்த இளம் சிங்கங்களின் வசீகர மேனியைக் காண்பவர்களும் பார்வையை விலக்க முடியாமல் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். செதுக்கிய சிலை போன்ற இவர்களின் கட்டுடலைக் காண்பவர்களும் சிலையாகி நிற்பார்கள். இதோ புதிய இந்தியா, பார்த்து மகிழுங்கள்.

Monday, July 10, 2023

மோடி ஒரு வாழாவெட்டி - நெல்லிக்குப்பம் புகழேந்தி பேச்சு

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, கிழக்குத் தாம்பரத்தில் திமுக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. டி.ஆர்.பாலு கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் எஸ்.புகழேந்தி பேசினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு விதவை என்றால், மோடி ஒரு வாழாவெட்டி என்று பேசினார். அவரது பேச்சு இங்கே.

Mens Physique - Above 172 cms | Bodybuilding Championship | Mr.Cleanman 2023

172 செ.மீட்டருக்கு மேல் உயரம் உள்ளவர்களுக்கான கட்டுடல் ஆணழகன் போட்டி 2023

Mens Physique - Above 172 cms - Mr.Cleanman Bodybuilding Championship 2023 at Chennai. Watch the beautiful, energetic, promising Young India. Come on India!

#bodybuilding #bodybuild #bodybuilder #bodybuilders #bodybuildinglifestyle #bodybuildingnation #bodybuildinggym #bodybuildingmotivation #physique #physiques #physiquecompetitor #physiquecoaching #physiquenews #men #mister #gym #gymowners #tamilnadu #chennai #ஆணழகன்

Mens Physique - Below 172 cms | Bodybuilding Championship | Mr.Cleanman 2023

Mens Physique - Below 172 cms - Mr.Cleanman Bodybuilding Championship 2023 at Chennai. Watch the beautiful, energetic, promising Young India. Come on India!

Junior Bodybuilding | Mr.Cleanman 2023 | ஆணழகன் போட்டி 2023

ஆணழகன் போட்டி, சென்னையில் 2023 ஜூலை 9 அன்று நடைபெற்றது. இளையோர் (ஜூனியர்) பிரிவில் ஆஹா என ஆர்ப்பரித்து நின்ற அடலேறுகள், வீறு நடை இட்ட வேங்கைகள், கட்டுடல் காளையர்கள், நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் நெஞ்சை அள்ளும் காட்சி இதோ. இளைய பாரதத்தினாய் வா வா வா! எதிரிலா வலத்தினாய் வா வா வா!

Saturday, July 08, 2023

என்னங்க!

ராமன் எத்தனை ராமனடி என்பது போல், இங்கே என்னங்க எத்தனை என்னங்க. குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தில் ஜெயராமன் அடித்த சிக்ஸர் இது.

A lovely sixer at Chromepet Humour Club.

Storm Water Drain works at Chennai | சென்னையின் பிரமாண்டக் கால்வாய்கள்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை, சிட்லப்பாக்கம் பகுதியில் நடைபெறும் பிரமாண்டக் கால்வாய் அமைக்கும் பணிகள் - ஒரு பார்வை.

மனைவியைத் திட்டிட்டேன்

மனைவியைத் திட்டிட்டேன். குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தில் நாசூக்காய் ஒரு நகைச்சுவைத் துளி.

Wife joke at Chromepet Humour Club.

புத்திசாலி திருடன்

திருடனின் புத்திசாலித்தனம். குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தில் நச்சென்று ஒரு நகைச்சுவைத் துளி.

A clever thief's presence of mind. A joke at Chromepet Humour Club.

#jokes #joke #chromepet #laughter #laughtertherapy #laugh #sirippu #குரோம்பேட்டை #நகைச்சுவை #சிரிப்பு #ஜோக்ஸ் #ஜோக் #fun #funny #thief #clever #intelligent #presenceofmind 

Friday, July 07, 2023

Squirrel eats Jamun Fruit

நாவல் பழத்தைச் சுவைக்கிறது அணில் Squirrel eats Jamun Fruit

புற்றுநோய்க்கு இதோ மருந்து | இரண்டே மாதத்தில் குணம் தெரியும் | Cure for Cancer

சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் சங்கர நாராயணன், தம் அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவக் குறிப்புகளை வழங்கி வருகிறார். இன்றைய நம் உரையாடலில், புற்றுநோயைத் தீர்க்கும் வீரியம் உள்ள மருந்தினைப் பரிந்துரைத்துள்ளார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தம் மனைவிக்கு இந்த மருந்தினைக் கொடுத்துள்ளார். இரண்டே மாதத்தில் மனைவியின் புற்றுநோய்க் கட்டி கரைந்து மறைந்துள்ளது. தமது அனுபவங்களை பலரும் பயன் பெறுவதற்காக, நம்முடன் பகிர்ந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் போராடுகின்ற ஒவ்வொருவரும் இதை முயன்று பாருங்கள். உங்களுக்கு எத்தகைய குணம் கிடைத்தது என்று எழுதுங்கள். 

Hot Chocolate at Kodaikanal | Lisk Xocolatl Chocolate Factory and Cafe

இன்று உலக சாக்லேட் தினம். அண்மையில் கொடைக்கானல் சென்றபோது, அங்கே லிஸ்க் சாக்லேட்டல் என்ற சாக்லேட் தொழிற்சாலைக்குச் சென்றோம். அங்கே சூடான சாக்லேட் பானத்தை அருந்தினோம். இதை அவர்கள் தயாரிப்பது எப்படி? இந்த சாக்லேட் தினத்தில் இதைப் பாருங்கள்.

அடுக்குமாடிகளில் வாஸ்து அமைப்பது எப்படி? | Vastu in Apartments

இன்று அனைத்து அடுக்குமாடிகளுமே வாஸ்து முறையில் கட்டப்பட்டவை (Vastu compliant) என அறிவிக்கிறார்கள். அடுக்குமாடிகளில் வாஸ்து அமைப்பது எப்படி? இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? 100 சதம் வாஸ்து என்பது நடைமுறைச் சாத்தியமா? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார். 

Senniyongu 7 & 8 | சென்னியோங்கு | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Naalayiram

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் ஏழாம், எட்டாம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள். இந்த நாள் இனிய நாள். இக்கணம் பொற்கணம்.

Enjoy Senniyongu songs from Naalayira Divya Prabandham, sung by Neelamegam & team.

Thursday, July 06, 2023

அண்ணாகண்ணனுக்குப் பாராட்டு | Appreciation to Annakannan

அண்ணாகண்ணனின் படப்பதிவு, யூட்யூப், காட்சி ஊடகப் பணிகளைப் பாராட்டி, குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தில் சால்வை அணிவித்துக் கெளரவித்தார்கள். 

Chromepet Humour Club appreciates Annakannan, for his videography, YouTube publishing & publicity services, on 2nd July 2023.

கனடா வரவேற்கும் 6 வகை வல்லுனர்கள் | 6 New Categories to get Canadian PR

கனடாவின் நிரந்தர வசிப்புரிமைக்கு விண்ணப்பிக்க, புதிதாக ஆறு வகை வல்லுனர்களைக் கனடா வரவேற்கிறது. இவை என்னென்ன துறைகள்? யார் யார் விண்ணப்பிக்கலாம்? இதற்கான தகுதிகள், நடைமுறைகள் என்னென்ன? இது குறித்து, கேனெக்ஸ்ட் குடியேற்ற நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

6 New Categories to get Canadian PR. Interview with CANext CEO Nat Shriram.

#Canada #immigration #PR #PermanentResident #Canadian #canadianimmigration #canadianbusiness #canadianjobs #canadianpr #canadianeducation #canadianvisa #visa #toranto #CANext #carreer #carreers #job #jobhunt #hiring #employability #employment #recruitment #recruiting #openings #opening #opportunity #opportunities #கனடா #குடியேற்றம் #வேலைவாய்ப்பு #கல்வி #வாய்ப்புகள் #growth 

Wednesday, July 05, 2023

Three Jokes

மனைவிமார்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம். குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தில் முத்தான மூன்று நகைச்சுவைத் துளிகள்.

Three jokes at Chromepet Humour Club.

ஹிட்லர் வருகிறார்

இந்த நகைச்சுவையில் ஏதும் உள்குத்து இருக்குமோ! குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்திற்கு ஹிட்லர் வருகை தந்தார்.

Hitler joke at Chromepet Humour Club.

Tuesday, July 04, 2023

மணிப்பூர் கலவரம் | தாம்பரம் முழக்கம் | Slogans against Manipur Violence

மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் எழுப்பிய முழக்கங்கள் இங்கே.

மணிப்பூர் கலவரம் | ரூபி ஆர்.மனோகரன் கண்டன உரை | MLA Ruby R Manoharan Speech

மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் நிகழ்த்திய கண்டன உரை இதோ.

Nanguneri MLA Ruby R Manoharan Speech at Tambaram on Manipur Violence.

மணிப்பூர் கலவரம் | வன்னி அரசு கண்டன உரை | Vanni Arasu Speech on Manipur Violence

மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு நிகழ்த்திய கண்டன உரை இதோ.

Vanni Arasu Speech at Tambaram on Manipur Violence.

மணிப்பூர் கலவரம் | தாம்பரம் யாக்கூப் கண்டன உரை | Tambaram Yakoob Speech

மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் நிகழ்த்திய கண்டன உரை இதோ.

Tambaram Yakoob Speech at Tambaram on Manipur Violence.

மணிப்பூர் கலவரம் | தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கண்டன உரை

மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நிகழ்த்திய கண்டன உரை இதோ.

Tambaram MLA S R Raja Speech at Tambaram on Manipur Violence.

#manipur #manipurviolence #manipurattack #condemn #condemnation #christian #christians #tambaram #Kuki #UPF #KNO #SoO #kukizone #kukizo #Meitei #naga #violence #attack #srraja #mla #தாம்பரம் #மணிப்பூர் #tamilnadu #dmk #dmknews #dravidamunnetrakazhagam 

Monday, July 03, 2023

மணிப்பூர் கலவரம் | ஆயர் பவுன் சங்கீதா கண்டன உரை | Pavun Sangeetha Speech

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஆயர், அருட்சகோதரி பவுன் சங்கீதா கண்டன உரை நிகழ்த்தினார். பெரும் தலைவருக்கு உரிய உடல்மொழியுடன் இவரது பேச்சு அமைந்திருந்தது. இவரது ஆவேசப் பேச்சு இதோ.

Pastor at Diocese of Madras Pavun Sangeetha Speech at Tambaram on Manipur Violence.

Guru Brahma Guru Vishnu

இந்தக் குரு பூர்ணிமா நன்னாளில், 'குரு பிரம்மா குரு விஷ்ணு' என்ற குருவந்தனப் பாடலை வைஜெயந்தி குரலில் கேட்டு மகிழுங்கள்.

Enjoy the divine song 'Guru Brahma Guru Vishnu' by Vyjayanthi on this auspicious Guru Purnima Day.

#gurupurnima #guru #purnima #mahaperiyava #periyava #kanchi #kamakoti #jayajayashankara #மஹாபெரியவா #காஞ்சி #hindu #hindutva #ChandraSekarendraSaraswathi #ChandraSekarendraSaraswati #மகாபெரியவா #மகாபெரியவர் 

Sunday, July 02, 2023

ரம்பா சேலை

ரம்பா சேலை, நக்மா சேலை என்று வாங்கினது தப்பாப் போச்சு. குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தில் சில்லுன்னு ஒரு நகைச்சுவை. 

Sensible saree joke at Chromepet Humour Club.

Wow Hibiscus!

சூரிய ஒளியில் தகதகக்கும் செம்பருத்திப் பூக்கள். நம் வீட்டுத் தோட்டத்தில் சிரிக்கும் சிவப்புத் தங்கம், குங்கும அங்கம். காற்றில் ஆடும் கவிதைகள், காண இருகண் போதுமோ!

Wow Hibiscus! The shining beauty in our home garden at Chennai.

#hibiscus #garden #homegarden #plants #flower #flowers #red #malar #chennai #tamilnadu #செம்பருத்தி #beauty #beautiful #beautifulflower #beautifulflowers #nature #natural #naturalbeauty 

Saturday, July 01, 2023

Chandrodayam Oru Pennanatho | சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடிப்பில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், வாலியின் வரிகளில் வெளியான புகழ்பெற்ற பாடல், சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ. தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில், அமிர்தராஜ் குரலில் ஒலித்த அந்தப் பாடல் இதோ.

IELTS சலுகை | கனடாவின் அதிரடி முடிவு | இந்திய மாணவர்களுக்கு நல்ல வாய்ப்ப...

கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்கள், ஐஇஎல்டிஎஸ் (IELTS) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஆங்கிலத்தில் படிப்பது, எழுதுவது, பேசுவது, கேட்பது ஆகிய நான்கு பிரிவுகளிலும் தலா ஆறு மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும். இதில் மயிரிழையில் பலரும் தோல்வி அடைவது உண்டு. அவர்கள் மீண்டும் எல்லாத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுத்தான் கனடா வர முடியும். இந்த நடைமுறையில் கனடா அரசு இப்போது முக்கியத் திருத்தம் ஒன்றைச் செய்துள்ளது. இது இந்திய மாணவர்களுக்கு நல்வாய்ப்பு. இது குறித்து, கேனெக்ஸ்ட் குடியேற்ற நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

Relaxation in IELTS score. Big relief to Indian students. Interview with CANext CEO Nat Shriram.

#Canada #immigration #PR #PermanentResident #Canadian #canadianimmigration #canadianbusiness #canadianjobs #canadianpr #canadianeducation #canadianvisa #visa #toranto #CANext #carreer #carreers #job #jobhunt #hiring #employability #employment #recruitment #recruiting #openings #opening #opportunity #opportunities #கனடா #குடியேற்றம் #வேலைவாய்ப்பு #கல்வி #வாய்ப்புகள் #workpermit #growth #ielts #ieltspreparation #ieltsexam #ieltswriting #ieltstraining #ieltscoaching #ieltscoach #ieltscourse #ieltstips #ieltsscore #ieltsscores 

இ‌ந்த‌ச் செலவு தேவை தானா? | மினிமலிசம் என்றால் என்ன?

அளந்து செலவிடு, சிறுகக் கட்டிப் பெருக வாழ், சிக்கனமாய் இரு போன்றவை எல்லாம் எங்கோ கேட்டாற்போல் இருக்கிறதா? நம் முந்தைய தலைமுறை வரைக்கும் இதுவே இயல்பான வாழ்க்கை முறையாக இருந்தது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் பொருள்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிகிறார்கள். தாம்தூம் செலவுகள் ஏராளம். இந்நிலையில், மினிமலிசம் என்பது ஓர் இயக்கமாகப் பரவி வருகிறது. இதன் அடிப்படை என்ன? இந்தச் செலவு தேவைதானா என நம்மை நாமே ஏன் கேட்க வேண்டும்? வாங்கிக் குவிக்கும் மோகத்திலிருந்து விடுபடுவது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.