!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2021/10 - 2021/11 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, October 31, 2021

Illuminations in Blackpool, England

இங்கிலாந்தின் பிளாக்பூல் நகரம், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வண்ணமயமாய் ஜொலிக்கும். வண்ண விளக்குகளும் வாண வேடிக்கைகளும் இரவைப் பகலாக்கும். இந்த ஆண்டு இந்த விழாக் காலத்தை நீட்டித்திருக்கிறார்கள். 2022 ஜனவரி வரை இந்தக் கோலாகல வைபவம் தொடரும். இது முற்றிலும் இலவசம். எவரும் கண்டுகளிக்கலாம். இதோ இந்த 2021ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி. படப்பதிவு, நவ்யா.

சாரணைக் கீரை அறுவடை | Saranai Keerai | Boerhavia Diffusa

எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் இன்று சாரணைக் கீரை அறுவடை.

Saranai Keerai harvest today at our terrace garden.

Saturday, October 30, 2021

#Shorts: Peacock Feather Seller

Peacock Feather Seller at the entrance of Pothys, Chrompet, Chennai.

சென்னை, குரோம்பேட்டை, போத்தீஸ் வாசலில், மயிலிறகு விற்பவர் ஒருவரை இன்று கண்டேன். 

Friday, October 29, 2021

மழலை மகாலட்சுமி | சித்தநாதேஸ்வரர் கோவில் | கும்பகோணம் | Mazhalai Mahalakshmi

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில், திருநறையூர் ஆகிய தலங்களில் உள்ள மூன்று ஆலயங்களுக்கு வெ.சுப்ரமணியன் அண்மையில் சென்றிருந்தார். இந்த ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு சௌந்திர நாயகி அம்பாள் சமேத சித்தநாத சுவாமி திருக்கோவிலுக்கும் சென்று வழிபட்டு வந்தார். 

வேறெந்தச் சிவாலயத்திலும் இல்லாத அமைப்புகள், இந்த ஆலயத்தில் உள்ளன. இந்தத் திருத்தலத்தில் மேதாவி மகரிஷி, சித்தநாதரைப் பூஜித்து மகாலட்சுமியை மகளாக அடைந்து வளர்த்து, நாச்சியார்கோவில் அருள்மிகு சீனிவாசப் பெருமாளுக்குத் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம்.

சித்தநாத சுவாமி திருக்கோவிலில் மூன்று தட்சிணாமூர்த்திகள், ஐந்து சண்டிகேஸ்வர்கள், மழலை மகாலட்சுமிக்குத் தனிச் சன்னதி என்று பல சிறப்புகள். நவகிரகங்களைத் தட்சிணாமூர்த்தி பார்த்தவாறு இருப்பது கூடுதல் சிறப்பு. இந்தத் தலத்தின் சிறப்புகளை விளக்குகிறார் T.G. குருநாத சிவாச்சாரியார். பார்த்து மகிழுங்கள்.

வேளாண் தொழில்நுட்பம் - ஓர் அறிமுகம் | An Intro to AgriTech by Venky Ramachandran

வேளாண் தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் வளர்ந்து வருகின்றன. இதனால் சாதகங்களும் உண்டு. பாதகங்களும் உண்டு. இந்த நுட்பங்களை எப்படிப் பயன்படுத்தலாம்? வேளாண் தொழில்நுட்ப ஆலோசகர் வெங்கி என்கிற வெங்கட்ராமன் ராமச்சந்திரன் விளக்குகிறார். 

Thursday, October 28, 2021

#Shorts: ABCD EFG

எங்கள் மகன் ஹரி நாராயணனின் புதிய பாடல்.

A new song from our son Hari Narayanan.

பச்சைப் பயறு அறுவடை | Mung Bean Harvest

இந்த நாள் இனிய நாள். இக்கணம் பொற்கணம்.

நம் மாடித் தோட்டத்தில் இன்று பச்சைப் பயறு என்கிற பாசிப் பயறு அறுவடை. 

Wednesday, October 27, 2021

தங்கப் பத்திரங்கள் - சில கேள்விகள் | ராமகிருஷ்ணன் நாயக் | Sovereign Gold Bond

தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது பற்றி, முந்தைய பதிவில் விளக்கியிருந்தோம். அது தொடர்பாகச் சில கேள்விகளைச் சுதா மாதவன் எழுப்பியுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக், இவற்றுக்குப் பதில் அளித்துள்ளார். உங்களுக்கு ஏதும் ஐயங்கள், கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.

#Shorts: Keep Rolling

Keep Rolling

எனது காலை நடை | My Morning Walk

இன்றைய எனது காலை நடையின்போது தென்பட்ட காட்சிகள்.

Tuesday, October 26, 2021

ஓம் எனும் பிரணவ ரூப நாயகா | Om Ennum Pranava Roopa Naayagaa

உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றிய 'ஓம் எனும் பிரணவ ரூப நாயகா' என்ற பாடலைத் திருமதி விஜயலட்சுமியின் குரலில் கேளுங்கள். 72 வயதிலும் இனிமையாகப் பாட முடியும்; திறமைக்கு முதுமை ஒரு தடையில்லை என இவர் நிரூபிக்கிறார். கேட்டு மகிழுங்கள்.

Sunday, October 24, 2021

பட்டாணி சுண்டல் செய்வது எப்படி? | How to make Pattani Sundal?

பச்சைப் பட்டாணி சுண்டல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், ஜெயந்தி சுப்ரமணியன். உடன் உரையாடுகிறார், வெ.சுப்ரமணியன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

#Shorts: No worry! Fly buddy!

விடு கவலை! விரி சிறகை!

Saturday, October 23, 2021

கண்ணை மூடி, ஒற்றைக் காலில் | Couple Challenge in Pink Gym

பிங்க் உடற்பயிற்சி நிலையத்தில் இன்று குடும்ப விழா நடந்தது. இதில் இன்று தம்பதிகளுக்குப் போட்டி நடத்தினார்கள். பல்வேறு போட்டிகளைத் துண்டுச் சீட்டில் எழுதி வைத்து, குலுக்கல் முறையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். எங்களுக்கு வந்தது, கண்ணை மூடிக்கொண்டு ஒற்றைக் காலில் நிற்கும் போட்டி. அதிக நேரம் நிற்பவரே வெற்றியாளர். எங்கள் போட்டி எப்படி நடந்தது என்று பாருங்கள்.

மழையில் நனையும் குயில் | Asian Koel in Rain

இன்று பெய்த மழையில் குயில் நனையும் காட்சி இங்கே. சிறகுகளை அடிக்கடி உதறுவதும் கோதுவதும் சிலிர்ப்பதும் அக்கம் பக்கம் திரும்புவதும் மட்டுமின்றி, வாயை விநோதமாகத் திறக்கவும் செய்தது. இதோ அந்தக் காட்சிகள்.

நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பது எப்படி? | ராமகிருஷ்ணன் நாயக்

சரியான முதலீடுகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ள, சந்தையில் நிபுணத்துவம் வாய்ந்த நிதி மேலாளரும் நிதி ஆலோசகரும் தேவை. ஆனால், இந்த நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

Friday, October 22, 2021

#Shorts: Cat Vs Spider

A cute fight between the cat and spider.

Video by Tulsi Gopal, Newzealand.

முருகா உன்னடி பணிந்தேனே | விஜயலட்சுமி பாடல்

'முருகா உன்னடி பணிந்தேனே' என்ற பாடலைத் தமது 72 வயதில் திருமதி விஜயலட்சுமி எத்தனை இனிமையாகப் பாடுகிறார், கேளுங்கள்.

கீசுகீசு எனப் பாடும் ஆனைச்சாத்தன் - 2 | Voice of Drongo - 2

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? எனத் திருப்பாவையில் கேட்கிறார். ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தன் இதுதான். இரட்டைவால் குருவி, கரிச்சான், கரிக்குருவி என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இதன் கீசுகீசு என்ற குரலை இங்கே கேளுங்கள்.

பங்குச் சந்தையில் அரசு முதலீடு செய்வது ஏன்? | Share Market | ராமகிருஷ்ணன் நாயக்

பங்குச் சந்தையில் அரசு முதலீடு செய்வது ஏன்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

Thursday, October 21, 2021

Chariot Ride in England

இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் நகர வீதிகளில் காரும் ஓடுகிறது, தேரும் ஓடுகிறது. குதிரை பூட்டிய தேரில் டக் டக் என்று மிடுக்காக நகர்வலம் வரும் அழகே தனி தான். நம் ஊரிலும் இப்படி அழகான குதிரை வண்டிச் சவாரியை அறிமுகப்படுத்தினால், சுற்றுலாத் துறை செழிக்குமே. படப்பதிவு, நவ்யா.

எழுத்தாளர் சாய் குமார் நேர்காணல் | ஆலயங்கள் | அற்புதங்கள் | Sai Kumar

பல்துறை வித்தகராக விளங்கும் எழுத்தாளர் சாய் குமார், ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன், அர்ப்பணிப்புடன் 25 நூல்களை எழுதியுள்ளார். பாடல் பெற்ற தலங்கள், திவ்விய தேசங்கள், புராணத் தலங்கள் என நூற்றுக்கணக்கான ஆலயங்களுக்கு நேரில் சென்று வணங்கியுள்ளார். மற்றவர்களும் அந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காக, அந்தந்தக் கோவில்களின் தல வரலாற்றுடன், அனைத்து விவரங்களுடன் வழிகாட்டி நூல்களை வெளியிட்டுள்ளார். 

எழுத்துடன் பாடவும் தெரிந்த இவர், ஆயிரம் கச்சேரிகள் செய்துள்ளார். ஆண்டுதோறும் 15 படிகளில் கொலு வைத்துப் புதுமைகள் செய்து வருகிறார். கீபோர்டு வாசிக்கத் தெரிந்தவர். கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றைப் படித்து ஆவணப்படுத்துகிறார். சமஸ்கிருதத்திலும் பட்டயம் பெற்றுள்ளார். சாய் குமாரின் பல்வேறு முகங்களை இந்த நேர்காணலின் வழியே வெளிக்கொண்டு வந்துள்ளார், வெ.சுப்ரமணியன். பார்த்து மகிழுங்கள்.

Wednesday, October 20, 2021

அண்ணாகண்ணன் மதிப்பாய்வு 1 - தலையங்கக் கவிதை | Annakannan Review 1

நமது புதிய திட்டத்தின்படி, படைப்புகளை அனுப்பக் கேட்டிருந்தேன். முதல் படைப்பாக ஒரு தலையங்கக் கவிதை வந்திருக்கிறது. அது குறித்த எனது மதிப்பாய்வு இங்கே.

மூக்குத்தி அவரைப் பூ | Mookkuthi Avarai Poo

நம் வீட்டுத் தோட்டத்தில் பச்சை மூக்குத்தி அவரைப் பூ விதைகள் இரண்டை என் மனைவி விதைத்தார். அவை இரண்டும் அமோகமாக வளர்ந்து வருகின்றன. இன்று ஒரே நாளில் பத்துப் பூக்கள் பூத்துள்ளன. பார்த்து மகிழுங்கள்.

அந்நிய முதலீடுகள் வெளியேறினால், பங்குச் சந்தை விழுமா? | ராமகிருஷ்ணன் நாயக்

அந்நிய முதலீடுகள் வெளியேறினால், பங்குச் சந்தை விழுமா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

#Shorts: Kankrej Cattle

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த கங்குரேஜ் இன மாடுகள், சென்னை தாம்பரத்தில் நடை பயில்கின்றன. இவை, கம்பீரமான தோற்றம் கொண்டவை. இவற்றுள் ஒற்றைக் கொம்பு மாடு ஒன்றும் இருக்கிறது.

Tuesday, October 19, 2021

புயங்கப் பெருமான் புஜங்கம் | சிவசிவா | நாகி நாராயணன்

சிவபக்தர், அருட்கவிஞர் சிவசிவா இயற்றிய 'புயங்கப் பெருமான் புஜங்கம்' பாடல்களை மெட்டமைத்துப் பாடுகிறார், நாகி நாராயணன். 'பொலா நோய்கள் தீர்க்கும்' எனத் தொடங்கும் இந்தப் புஜங்கத்தைக் கேளுங்கள். கொரோனா உள்ளிட்ட பொல்லா நோய்கள் தீரட்டும்.

உங்கள் வயிறு என்ன இடுகாடா? - வி.கிருத்திகா பேச்சு | V.Krithika Speech on Vallalar

திண்டிவனத்தில் எட்டாம் வகுப்புப் படிக்கும் வி.கிருத்திகா, 'அருட்திரு வள்ளலாரின் புலால் உண்ணாமையும் ஜீவகாருண்யமும்' என்ற தலைப்பில் உரை ஆற்றியிருக்கிறார். புலால் உண்ணாமையின் பயன்களை விவரித்த அவர், மனிதர்கள் இறந்த பின் மண்ணில் புதைக்கிறோம். புலால் உண்போர், ஆடு, மாடு, கோழி போன்ற உயிர்களைக் கொன்று தங்கள் வயிற்றையே அவற்றுக்கு இடுகாடாக மாற்றிவிடுகிறார்கள் எனப் பேசியிருக்கிறார். அவரது உரையை இங்கே கேளுங்கள்.

Monday, October 18, 2021

பாலயமாம் லலிதே | ரஞ்சனி சதீஷ் | Palayamam Lalithe | Ranjani Satish

மீனாட்சி சுதா இயற்றிய 'பாலயமாம் லலிதே' என்ற பாடலை ரஞ்சனி சதீஷ் குரலில் கேளுங்கள்.

வாங்கலாமா? விற்கலாமா? | Share Market | To buy or sell? | ராமகிருஷ்ணன் நாயக்

சந்தை உச்சத்தில் இருக்கும் இன்றைய நிலையில், பங்குகளை வாங்கலாமா? விற்கலாமா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

Sunday, October 17, 2021

Navratri Garba Dance in England

கர்பா நடனம் என்பது, குஜராத்தைத் தாயகமாகக் கொண்டது. மகாசக்தியின் முன்னால் பக்தியுடன் ஆடக் கூடியது. இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் இணைந்து ஆடிய கர்பா நடனத்தைக் கண்டு களியுங்கள். படப்பதிவு - நவ்யா.

மைதிலி கண்ணன் வீட்டுக் கொலு | Kolu 2021 by Mythili Kannan

திருப்பதியில் வசிக்கும் மைதிலி கண்ணன் வீட்டுக் கொலு இதோ. அம்பாள் ஊர்வலத்தைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ள விதம், அழகு. படிகள்தோறும் படிப்பினையைத் தரும் இந்த இனிய கொலுவைக் கண்டுகளியுங்கள்.

ஆண் சிலை - ஷைலஜாவின் கவிதை | A poem by Shylaja

ஷைலஜாவின் 'ஆண் சிலை' கவிதை, அவரது குரலில்.

சாம்பார் பொடி செய்வது எப்படி? | How to make Sambar Powder?

கடைகளில் வாங்கும் சாம்பார் பொடியின் தரத்தில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? வீட்டிலேயே நாமே எளிமையான முறையில் சாம்பார் பொடி செய்யலாம். நமக்கு ஏற்ற அளவில், விருப்பமான கலவையில், சுகாதாரமான, சுவையான சாம்பார் பொடி (குழம்புப் பொடி) தயாரிக்க முடியும். இதோ சுதா மாதவன் நமக்காகச் செய்து காட்டுகிறார். நீங்களும் செய்து பாருங்கள்.

Saturday, October 16, 2021

பொம்மைகளை எடுத்து வைப்பது எப்படி? | How to pack Kolu Bommai?

கொலு முடிந்த பிறகு, பொம்மைகளைப் பாதுகாப்பாக எடுத்து வைப்பது, மிக முக்கியப் பணி. இதில் மிகுந்த கவனமும் பொறுமையும் வேண்டும். இதை எப்படிச் செய்வது? இதோ விளக்குகிறார், வெ.சுப்ரமணியன்.

சிவனை நம்பிய இஸ்லாமியர் | Muslim believed Lord Shiva

சிதம்பரம் நடராஜர் கோவில் வாசலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. மத நல்லிணக்கத்திற்கு ஓர் அடையாளம். இந்தியாவின் ஒற்றுமைக்கு ஓர் உதாரணம். வெ.சுப்ரமணியன் சொல்லும் சம்பவத்தைக் கேளுங்கள்.

சாய் குமாரின் அதிசயக் கொலு | Kolu 2021 by Sai Kumar

25 நூல்களை எழுதியுள்ள ஆன்மிக எழுத்தாளர் சாய் குமார், தம் வீட்டில் 15 படிகள் கொண்ட மிகப் பெரிய கொலுவை அமைத்துள்ளார். நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த அபூர்வப் பொருள்கள் இந்தக் கொலுவை அலங்கரிக்கின்றன. இதில் பல அதிசயங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார். சித்தமெல்லாம் எனக்குச் சிவமயமே என்ற அர்ப்பணிப்புடன் இதை உருவாக்கியுள்ளார். இந்த அரிய கொலுவைக் கண்டுகளிக்க வாருங்கள். 

சந்திப்பு - வெ.சுப்ரமணியன்

#Shorts: Navratri Devis

சென்னை, அண்ணாநகரில் சிந்தாமணி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. அதில் அருள்மிகு கருமாரியம்மனுக்கு இந்த நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்தார்கள். அவற்றை இயேகாம்பரம், தினமும் பதிவு செய்தார். அவற்றின் தொகுப்பு இங்கே.

Friday, October 15, 2021

நிஜமுன்னை நம்பினேன் நீலாயதாட்சி | ரஞ்சனி சதீஷ் | Nijam Unnai Nambinen

பாபநாசம் சிவன் இயற்றிய 'நிஜமுன்னை நம்பினேன் நீலாயதாட்சி' என்ற புகழ்பெற்ற பாடலை, தம் வீட்டுக் கொலுவில் திருமதி ரஞ்சனி சதீஷ் பாடுகிறார். நீலாயதாட்சியிடம் நேரில் பேசுவது போன்ற இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளைத் தொடும் | ராமகிருஷ்ணன் நாயக்

தினந்தோறும் புதிய புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கும் மும்பை பங்குச் சந்தை, இப்போதைய 61 ஆயிரம் புள்ளிகளிலிருந்து ஒரு லட்சம் புள்ளிகளைத் தொடும் என்கிறார், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக். அவருடன் ஒரு நேர்காணல்.

Thursday, October 14, 2021

ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலு | Kolu 2021 by Jayanthi Subramanian

சென்னை, கோயம்பேட்டில் வசிக்கும் ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலு விழாவைக் கண்டுகளியுங்கள். அவர் பாடும் 'நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா?' என்ற பாடலைக் கேளுங்கள். பொம்மைகள் அணிவரிசைக்கு இந்தப் பாடல், ஏகப் பொருத்தம். நமது மரபின்படி, வருகை தந்த விருந்தினர்களுக்குப் பிரசாதம் அளித்துக் கௌரவிப்பதையும் பாருங்கள்.

கலைவாணி நின் கருணை | ஜெயந்தி சுப்ரமணியன்

கலைமாமணி கே.சோமு இயற்றி, இசையமைத்த 'கலைவாணி நின் கருணை தேன்மழையே' என்ற பாடலை ஜெயந்தி சுப்ரமணியன் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்தச் சரஸ்வதி பூஜைத் திருநாளில் கலைவாணியின் அருளைப் பெறுங்கள்.

#Shorts: Durga Tandavam

ஹரி நாராயணனின் துர்க்கைத் தாண்டவம்.

Durga Tandavam by Hari Narayanan.

Wednesday, October 13, 2021

எனை நீ மறவாதே | ரஞ்சனி சதீஷ் | Ennai Nee Maravathe | Ranjani Satish

எம்.‌எம். தண்டபாணி தேசிகர் இயற்றிய  'எனை நீ மறவாதே அங்கயற்கண்ணி எனை நீ மறவாதே' என்ற பாடல், புகழ் பெற்றது. இதை ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலுவில் பாடுகிறார், திருமதி ரஞ்சனி சதீஷ். இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

நியூசிலாந்தில் துளசி கோபால் வீட்டுக் கொலு | Kolu 2021 by Tulsi Gopal from Newzealand

நியூசிலாந்தில் வாழும் துளசி கோபால், உலகின் பல பகுதிகளுக்குப் பயணித்தவர்.  'ஆஹா அற்புதம்!' எனக் கொண்டாடத்தக்க வகையில், நுணுக்கமான கலைப்பொருள்களுடன் இந்த நவராத்திரி கொலுவை வடிவமைத்துள்ளார். Over to Newzealand.

Nithila Annakannan Ideas - 4 - Designer Bandage

நித்திலாவின் புதிய யோசனை இதோ. உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.

Here is a new idea from Nithila Annakannan. We seek your feedback.

பணியாரம் செய்வது எப்படி? | Paniyaaram Recipe

பணியாரம் செய்வது இவ்வளவு எளிதா? இதோ நான்கே நிமிடத்தில் சுடச் சுடப் பணியாரம். செய்து காட்டுகிறார் மஞ்சுளா லோகநாதன். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

Tuesday, October 12, 2021

ஸ்ரீபிரியா ஆனந்த் வீட்டுக் கொலு | Kolu 2021 by SriPriya Anand

சென்னை, தாம்பரத்தில் வசிக்கும் ஸ்ரீபிரியா ஆனந்த், முதல் முறையாகக் கொலு வைத்திருக்கிறார். இராமர் பட்டாபிஷேகம், வள்ளித் திருமணம், காந்தியடிகள் ரவுண்டானா எனப் பலவும் இவரது கொலுவை அலங்கரிக்கின்றன. இவர் மகள், வன உயிரினங்களுக்கும் பறவைகளுக்கும் தனித் தனியே சரணாலயம் அமைத்துள்ளார். சிங்கங்களை இப்படித் திறந்துவிட்டிருக்கிறீர்களே, ஆபத்து இல்லையா? என வெ.சுப்ரமணியன் கேட்டதற்கு ஸ்ரீபிரியாவின் பதில் அழகானது. தேவியரையும் தெய்வங்களையும் தரிசிக்க வாருங்கள்.

போத்தீஸ் கொலு | Pothys Kolu

சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் பேரங்காடியின் வாயிலில் பிரமாண்ட கொலு வைத்திருக்கிறார்கள். அதன் முன்னே நின்று வாடிக்கையாளர்கள் படம் எடுத்துக்கொள்கிறார்கள். இதில் என்னென்ன பொம்மைகள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்.

படப்பதிவு - ஹேமமாலினி லோகநாதன்

Boat Ride in River Avon | This is England

இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டிராட்போர்டு என்ற ஊரில் பாயும் ஏவன் நதியில் ஓர் இனிய படகுப் பயணம். அன்னப் பறவைகள் உடன்வர, காற்றில் புறாக்கள் கவிதை வரைய, சில்லென்ற காற்றில் சிலுசிலுத்தபடி தவழும் நதியலையின் தாலாட்டில் மிதந்தபடி, உலாப் பகலாம் வாருங்கள். படப்பதிவு - நவ்யா.

A simple idea - 12

தண்ணீர் ஆவியாகாமல் இருக்கத் தெர்மோகோல் இட்டவரை நமக்குத் தெரியும். இங்கே சூரியனின் சூட்டிலிருந்து மீன்களைக் காக்க, என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்.

Monday, October 11, 2021

ஜெயலட்சுமி நயினார் வீட்டுக் கொலு | Kolu 2021 by Jayalakshmi Nainar

திருவனந்தபுரத்தில் வசிக்கும் ஜெயலட்சுமி நயினார் வீட்டுக் கொலு, இதோ. அவர் கணவர் பேராசிரியர் மா.நயினார், கொலுவைக் குறித்து அழகாக விளக்கியுள்ளார். உள்ளன்புடனும் கலையுணர்வுடனும் மிளிரும் இந்தக் கொலுவைக் கண்டுகளிக்க வாருங்கள்.

ஜெயந்தி மோகன் வீட்டுக் கொலு | Kolu 2021 by Jayanthi Mohan

சென்னை, கோவூரில் வசிக்கும் ஜெயந்தி மோகன் வீட்டுக் கொலுவைக் கண்டுகளிக்க வாருங்கள். கொலுவை நமக்கு அறிமுகப்படுத்தி,  'சகலம் சௌபாக்கியம் சுபம்' என இவர் நிறைவுசெய்வது மங்களகரம். செல்வியர் காயத்ரியும் ஹரிணியும் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' என மழலைக் குரலில் பாடுவது தனி அழகு. 

#Shorts: Swans in England

இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டிராட்போர்டு என்ற ஊரில், ஏவன் நதியில் ஆனந்தமாக நீந்தும் அன்னப் பறவைகளைப் பாருங்கள்.

படப்பதிவு - நவ்யா.

Swans and birds in River Avon at Stratford-upon-Avon (birthplace of  William Shakespeare).

Video by Navya.

Sunday, October 10, 2021

சின்னஞ்சிறு பெண்போலே | Chinnanjiru PenPole | ஜெயந்தி சுப்ரமணியன்

நவராத்திரியில் கொலு வைப்பதுடன், பாட்டுப் பாடி, அன்னையை இசையால் ஆராதிப்பது நம் மரபு. சென்னையில் ஜெயந்தி சுப்ரமணியன் தம் வீட்டில் கொலு வைத்துப் பாடுகிறார். உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றி, உயர்புகழ் பெற்ற 'சின்னஞ்சிறு பெண்போலே' பாடலை அவரது குரலில் கேளுங்கள். அவர் வீட்டுக் கொலுவைக் கண்டுகளியுங்கள்.

சாந்தி ஜெயராமன் வீட்டுக் கொலு | Kolu 2021 by Shanthi Jeyaraman

கொலு எப்படி வைக்க வேண்டும் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டு, இதோ. சென்னை, விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள சாந்தி ஜெயராமன் வீட்டுக் கொலுவை இணையம் வழியே கண்டுகளிக்க வாருங்கள்.

#Shorts: Rainbow

A rainbow at Chennai. Video by V.Subramanian.

ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் - 3 | Artist Jeyaraj | Shyam Meets Jeyaraj

கலையை விற்கலாமா? கலை என்ன வியாபாரப் பொருளா? என்று கேட்டால், ஆமாம், கலை வியாபாரம்தான் என அடித்துச் சொல்கிறார் ஓவியர் ஜெயராஜ். அவருடன் ஓவியர் ஸ்யாம் நிகழ்த்திய உரையாடலின் மூன்றாவது பகுதி, இதோ. பத்திரிகை உலகின் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதிரடி நேர்காணலைப் பாருங்கள்.

Saturday, October 09, 2021

குழந்தைகள் அடம்பிடித்தால் | How to Handle Adamant Child? | நிர்மலா ராகவன்

குழந்தைகள் அடம்பிடித்தால் என்ன செய்வது? அவர்களை அவர்கள் போக்கில் விட்டால் என்ன ஆகும்? மிக முக்கியமான ஆலோசனையை வழங்குகிறார் நிர்மலா ராகவன், இந்த உரையாடலைப் பார்த்துப் பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Friday, October 08, 2021

கொலு 2021 | சாய் ஐஷ்வர்யா | Kolu 2021 by Sai Aishwarya

சென்னையில் ஆறாம் வகுப்புப் படிக்கும் சாய் ஐஷ்வர்யா, தங்கள் வீட்டுக் கொலுவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மூன்று தலைமுறைகளாகப் பாதுகாக்கப்படும், 100 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தைக் காட்டுகிறார். மரபின் செழுமை கொண்ட இந்தக் கொலுவைக் கண்டு களிக்க வாருங்கள்.

கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி? | Kadalai Paruppu Sundal

நவராத்திரி என்றாலே கொலுவும் சுண்டலும் நமக்கு நினைவுக்கு வரும். அந்தச் சுண்டலிலும் ஏராளமான வகைகள் உண்டு. கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி என்பதை இன்று செய்து காட்டுகிறார், ஜெயந்தி சுப்ரமணியன். உடன் உரையாடுகிறார், வெ.சுப்ரமணியன். இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிருங்கள்.

Thursday, October 07, 2021

கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ | நிர்மலா ராகவன் | Nirmala Raghavan

இன்று இரண்டு பேர் சேர்ந்து வாழ்வதே கூட்டுக் குடும்பம்தான் என ஒரு நகைச்சுவைத் துணுக்கு உண்டு, இந்தக் கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ என்ன செய்ய வேண்டும்? மிக முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளார் நிர்மலா ராகவன், இந்த உரையாடலைப் பார்த்துப் பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். 

உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும்.

நின்னைச் சரணடைந்தேன் | Ninnai Charanadainthen | மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியின் 'நின்னைச் சரணடைந்தேன்' பாடலுடன் இந்த நவராத்திரியைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம். அன்னை மகாசக்தியை வணங்கி வேண்டுவோம். அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட, நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! 

Wednesday, October 06, 2021

Premium Products and Secondhand Products | ராமகிருஷ்ணன் நாயக்

சந்தைப் பொருள்களில் பல அடுக்குகள் உண்டு. உயர்வகைப் பொருள்களுக்கும் இரண்டாம்கைப் பொருள்களுக்கும் இடையில் எவ்வளவு விலை வேறுபாடு இருக்கிறது? இவற்றுக்குப் பின்னால் உள்ள வாய்ப்புகள், கணக்கீடுகள், அணுகுமுறைகள், மனநிலைகள் என்னென்ன? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

Tuesday, October 05, 2021

#Shorts: Mother Dog

ஒரே நேரத்தில் ஆறு குட்டிகளுக்குப் பாலூட்டும் நாய்.

வள்ளலார் யார்?

வள்ளலார் யார்? என்று குழந்தைகள் கேட்டால், சுதா மாதவனின் இந்த அறிமுகத்தைக் கேட்கச் சொல்லலாம். 

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் | வள்ளலார்

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்ற அமுத வாசகத்தை அருளிய வடலூர் வள்ளல் பெருமான், இராமலிங்க அடிகள் இயற்றிய 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்' என்ற வானளாவிய புகழ்பெற்ற பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

இன்று வள்ளலார் பிறந்தநாள்.

Monday, October 04, 2021

மாமியார் Vs மருமகள் | நிர்மலா ராகவன் | Nirmala Raghavan

மாமியாருக்கும் மருமகளுக்கும் நிகழும் சண்டைகள் குறித்து நிறையப் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். எப்படிச் சண்டை ஆரம்பிக்கிறது? இதில் கணவன் என்ன செய்ய வேண்டும்? சண்டையைத் தீர்ப்பது எப்படி? தவிர்ப்பது எப்படி? ஆலோசனை வழங்குகிறார் எழுத்தாளர் நிர்மலா ராகவன். இந்த உரையாடலைப் பார்த்துப் பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும்.

#Shorts: Dress Art

A dress art by Nithila.

உடைகளை வைத்து நித்திலா செய்திருக்கும் உருவம்.

Sunday, October 03, 2021

#Shorts: London St Pancras International Train Station

St Pancras railway station, also known as London St Pancras or St Pancras International and officially since 2007 as London St Pancras International, is a central London railway terminus on Euston Road in the London Borough of Camden (Wikipedia). Video by Navya.

எதை வாங்குவது? எங்கே வாங்குவது? | ராமகிருஷ்ணன் நாயக் | Ramakrishnan Nayak

நாம் வாங்க விரும்பும் ஒரு பொருளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது? பிராண்டு, விலை, சலுகை, வழக்கம், தரம், அழகு, சந்தைப்படுத்தல்... எனப் பல காரணங்கள் இருக்கையில் நுகர்வோர் இவற்றில் எதை முக்கியமாகக் கொள்ள வேண்டும்? இதே போன்று அந்தப் பொருளை வீட்டுக்கு அருகில் உள்ள சிறிய கடையில் வாங்குவதா? பேரங்காடிகளில் வாங்குவதா? அல்லது இணையத்தில் வாங்குவதா? உள்நாட்டுப் பொருளா? வெளிநாட்டுப் பொருளா? எது நுகர்வோரின் முன்னுரிமையாக இருக்கலாம்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் தமது கருத்தை முன்வைக்கிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

Saturday, October 02, 2021

டிராகன் புரூட் எப்படி இருக்கு? | How is Dragon Fruit?

நம்ம ஊர்க் கடைகளில் அடிக்கடி தென்படும் டிராகன் புரூட், கண்ணைக் கவர்ந்தது. இன்று அதை வாங்கி வந்தோம். உள்ளே எப்படி இருக்கு, இதன் சுவை எப்படி இருக்கு எனப் பார்க்கலாமா?

#Shorts: White Spider

Have you ever seen a white Spider?

இன்று இந்த வெள்ளைச் சிலந்தியைப் பார்த்தேன். இதுபோல் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

Friday, October 01, 2021

தவலை வடை செய்வது எப்படி? | Thavalai Vadai Recipe

தமிழர் பலரும் மறந்துவிட்ட தவலை வடையைச் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். படப்பதிவு, சகஸ்ரா அஜய்.