!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2022/06 - 2022/07 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, June 30, 2022

அகதியைப் போல் ஒரு பறவை - செம்போத்து | Bird like a Refugee - Greater Coucal

Greater Coucal is like a refugee, wandering for food & water

ராஜ கம்பீரம் உள்ள ஒரு பறவை, தமிழீழத்தின் தேசியப் பறவை, அகதியைப் போல் அலைகிறது. உணவுக்காகவும் நீருக்காகவும் அதன் தேடல் தொடர்கிறது.

இப்படிப்பட்டவனை யசோதா எப்படி பெற்றாயோ | முகுந்த இராமானுஜ தாசர் பஜனை

'இப்படிப்பட்டவனை யசோதா எப்படிப் பெற்றாயோ!' என்ற இனிய பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினரின் ஆடல், பாடல், பஜனை. தஞ்சை வீதிகளில் நடைபெற்ற இயல்பான, சுவையான, எதிர்பாராத நிகழ்வுகள், புதுச் சுவை கூட்டியுள்ளன. கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Wednesday, June 29, 2022

சாம விநோதா | Saama Vinodha | முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பஜனை

'சாம விநோதா' என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள். தஞ்சை 24  கருட சேவையில்  நடைபெற்ற  பஜனை.

Tuesday, June 28, 2022

Exam Numbers on Temple Walls | கோவில் சுவர்களில் தேர்வு எண்கள்

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. வழக்கமாக, தாங்கள் தேர்ச்சி பெற வேண்டும், நல்ல மதிப்பெண் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கடவுளை வேண்டுவோர் ஏராளம். இங்கே தங்கள் பதிவு எண்களைக் கோவில் சுவர்களில் மாணவர்கள் எழுதி வைத்துள்ளனர். இடம் - குன்றத்தூர் முருகன் கோவில்.

Tamilnadu students public exam registered numbers on temple walls.

அங்கே அங்கே அங்கே பாரு தெரியும் | தஞ்சை பஜனை | முகுந்த இராமானுஜ தாசர்

அங்கே அங்கே அங்கே பாரு தெரியும்
அந்த அழகு ராமர் அற்புதங்கள் புரியும்

என்ற இனிய பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள். தஞ்சை 24  கருட சேவையில்  நடைபெற்ற  பஜனை.

Monday, June 27, 2022

How to Fix a Car Puncture? | Tubeless Tyre Puncture Repair | கார் பங்சரா?

How to Fix a Car Puncture? Here is a demo at Rao Tyres, Tambaram.


கார் பங்சர் பழுது நீக்குவது எப்படி? இதோ செய்முறை விளக்கம்.


#car #puncture #fix #fixing #tyre #tubeless #tyrepuncture #repair #tool #mechanic #fourwheeler #carrepair #workshop #garrage #engineer #automobile #wheel #tools #quickfix #nail #road #tambaram #chennai #கார் #பங்சர் #சக்கரம் #ஆணி #தாம்பரம் #சென்னை


How to Study in Canada | கனடாவில் கல்வி கற்பது எப்படி? | CANext CEO Natraj Shriram

கனடாவில் கல்வி கற்பது, அண்மைக் காலமாகப் பல மடங்கு அதிகரித்து வருகிறது. காரணம், படித்து முடித்ததும் அங்கேயே வேலை பார்க்கலாம், விரைவில் குடியுரிமை பெறலாம் என்ற நல்வாய்ப்பு. ஆனால், கனடாவில் படிப்பது எப்படி? நமக்கு ஏற்ற கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? அங்கே படிக்க எவ்வளவு செலவாகும்? பகுதி நேரமாக வேலை பார்த்துச் சம்பாதிப்பது எப்படி? விரிவாகப் பதில் அளிக்கிறார்,கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

How to Study in Canada? How to select the best university / college in Canada? How to get part time job in Canada? An interview with CANext CEO Natraj Shriram. 

Asian Koel Singing - 16 | குயிலின் அமுத கானம் - 16

Asian Koel's call at Chennai, Tambaram.

குயிலின் அமுத கானத்தைக் கேளுங்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

#AsianKoel #Koel #SingingKoel #குயில் #குக்கூ #Eudynamysscolopaceus #VoiceofKoel #Koelvoice #Koelsong #songofkoel #maleKoel #Asiankoelscall #asiankoelcalling #Asianmalekoel #cuckoocuckoo #koo #birdvoice #birdscall #bird #birdfeeding #BirdsSeenIn2022 #birds #birdwatching #birding #nature #NatureBeauty #garden #birdwatcher #birdlovers #birdlover #birders #birdlife

Saturday, June 25, 2022

செம்போத்து என்கிற செம்பகம் - 2 | Greater Coucal | Bird Feeding

தமிழீழத்தின் தேசியப் பறவையான செம்போத்து என்கிற செம்பகம், அடிக்கடி விரும்பி வருகின்ற இடமாக நம் இல்லம் மாறிவிட்டது. இதோ நம் வீட்டுச் சாம்பார் சாதத்தைச் சுவைத்து மகிழ்கிறார்.

Greater Coucal became a regular visitor to our house; having lunch with us.

கோவிந்தராஜா கோவிந்தா | முகுந்த இராமானுஜ தாசர் | Govindaraja Govinda

'கோவிந்தராஜா கோவிந்தா' என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள். தஞ்சாவூர் வீதிகளில் நடைபெற்ற பஜனை.

Govindaraja! Govinda! An energetic bhajan by Mukunda Ramanuja Dasar group at Tanjavur (Tanjore).

Friday, June 24, 2022

பேரனுடன் விளையாடும் பாட்டி

இன்று 76ஆவது பிறந்தநாள் காணும் எங்கள் அன்புத் தாயார் சௌந்திரவல்லி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பேரன் ஹரி நாராயணன் உடன் அவர் விளையாடும் காட்சி இதோ.

Thursday, June 23, 2022

குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி?

எழுத்தாளர் ஜெயமோகன், அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இக்காலப் பெற்றோர்களின் பரிதாப நிலை, அவர்களை ஆட்டிப் படைக்கும் குழந்தைகளின் நிலை பற்றிக் கடுமையாக எழுதியிருந்தார். குழந்தைகளை மனவளர்ச்சி குன்றிய எஜமானர்கள் என்றும் பெற்றோர்களை அடிமைச் சேவகர்கள் என்றும் சாடியிருந்தார். இப்படியான காட்சிகளை நாமும்கூடப் பல இடங்களில் பார்த்திருப்போம். குழந்தைகளை இப்படியே விட்டுவிட முடியுமா? அவர்களின் இடத்தை அவர்களுக்கு உணர்த்துவது எப்படி? குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி? தம் அனுபவங்களின் வாயிலாக நிர்மலா ராகவன் முக்கியமான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Masala Poli | Masala Boli

Making of Masala Poli / Masala Boli at Om Saravana Sweets & Bakery, West Tambaram.

சுவையான மசாலா போளி செய்வது எப்படி? சென்னை, தாம்பரம் ஓம் சரவணா ஸ்வீட்ஸ் & பேக்கரியில் இதோ சுடச் சுடச் செய்து காட்டுகிறார்.

Wednesday, June 22, 2022

Mother Cat feeding Kittens | குட்டிகளுக்குப் பாலூட்டும் பூனை

நாய்த்தாய் நிறையக் குட்டிகளுக்கு ஒரே நேரத்தில் பாலூட்டுவதைப் பார்த்திருக்கிறேன். பூனைக் குட்டிகள் அப்படி ஒரே நேரத்தில் பால் குடிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.

Poor attempt by the Greater Chennai Corporation

தொலைநோக்குப் பார்வை இல்லாமல், நிகழ்கால இடையூறுகளைக் கூட யோசிக்காமல், இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவார்களா? சென்னை மாநகராட்சியின் சிந்தனை வறட்சிக்கு இந்தத் திட்டம் ஓர் உதாரணம். இதை மறுபரிசீலனை செய்வது, எதிர்காலச் சிக்கல்களைத் தவிர்க்கும்.

Tuesday, June 21, 2022

பள்ளிக்கூடம் போகப் போறேன் | Hari Narayanan Excitement

பிளே ஸ்கூல், பிரி கே.ஜி. எதுவும் இல்லாமல் நாளை மறுநாள் நேரடியாக எல்.கே.ஜி. சேரப் போகிறான், ஹரி நாராயணன். பள்ளிக்குப் போனால் ஜாலியாக விளையாடலாம் என ஆவலாக இருக்கிறான். அவனுடன் ஓர் உரையாடல். இது நம் அலைவரிசையின் இரண்டாயிரமாவது பதிவு.

I will play and study in school | Hari Narayanan Excitement | 2000th post of our channel.

Monday, June 20, 2022

Kumbakonam Degree Coffee Secret | கும்பகோணம் டிகிரி காபி ரகசியம்

கும்பகோணம் டிகிரி காபி தனிச் சுவையோடு இருப்பது எப்படி? எந்தக் கலவையில் இதை உருவாக்குகிறார்கள்? ரகசியத்தை உடைத்துச் சொல்லிவிட்டார் இவர். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

How to make a perfect coffee? Here is the secret of Kumbakonam Degree Coffee from New Indian Coffee House.

Sunday, June 19, 2022

பேத்தியுடன் விளையாடும் தாத்தா | Kuppusamy with Nithila

எங்கள் அப்பா சீ.குப்புசாமி, 2016 ஜனவரி 27ஆம் தேதி, தோள்பட்டைப் புற்றுநோயால் மறைந்தார். அவர் மறைவதற்கு இரண்டரை மாதங்கள் முன்பு 2015 நவம்பரில் தீபாவளி அன்று அம்பத்தூர் சென்று அவரைச் சந்தித்தேன். தோளில் உள்ள கட்டியைத் துண்டால் மறைத்துக்கொண்டு, என் மகள் நித்திலாவுடன் அவர் விளையாடும் காட்சி இதோ.

#fathersday #father #dad #daddy #அப்பா #தந்தை

ரத்னா கஃபே சாம்பார் இட்லி

 திருவல்லிக்கேணி ரத்னா கஃபே சாம்பார் இட்லி எப்படி இருக்கு?


Our experience with Triplicane Ratna Cafe Sambar Idly.


#Triplicane #RatnaCafe #Sambar #Idly #Cafe #restaurant #hotel #SambarIdly #chennai #cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #samayal #sappadu #tiffen #tasty #taste #சமையல் #சாப்பாடு #திருவல்லிக்கேணி #ரத்னாகஃபே #சாம்பார் #இட்லி #உணவு


https://youtu.be/BPPL4BMx-uQ

Saturday, June 18, 2022

Janapada Loka - Folk Museum at Karnataka

கர்நாடகத்தின் ராமநகரத்தில் அமைந்துள்ள ஜன்பட் லோகா, நாட்டுப்புறக் கலை, தொழில், வாழ்வியல் அருங்காட்சியகமாகத் திகழ்கிறது. ஐந்தாயிரம் கலைப் பொருள்களுக்கு மேல் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தத்ரூபமாகக் கண்முன் எழச் செய்துள்ளனர். நவீனம் என்ற பேரலையில் பாரம்பரியத் தொழில்களும் கலைகளும் அடித்துச் செல்லப்படும் சூழலில், அருங்காட்சியகத்திலாவது இவற்றைப் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கியது அருஞ்செயல். இதோ ஜன்பட் லோகாவின் உள்ளே ஒரு சிறு உலா.

Janapada Loka, is a folk museum that has an exclusive display of the village folk arts of Karnataka. It is under the aegis of the Karnataka Janapada Parishat Loka Mahal, a wing in the museum has a display of 5,000 folk artifacts. It is situated in Ramanagara, Ramanagara district in the Indian state of Karnataka, on the Bangalore-Mysore highway, 53 kilometres (33 mi) to the south of Bangalore. (Wiki)

Friday, June 17, 2022

பக்தர்களே இப்படிச் செய்யாதீங்க | பழநி மலை | Palani Malai

பழநி மலையில் கண்ட காட்சி. பக்தர்களே இப்படிச் செய்யாதீங்க!

Monkey with Nipple at Palani Hill

குழந்தையின் பால்புட்டிக் காம்பை வைத்துக்கொண்டு இந்தக் குரங்கு செய்வதைப் பாருங்கள்.

What to do with a nipple? Monkey's experiments with his new toy at Palani hill.

#Monkey #Monkeys #nipple #babynipple #bottlenipple #toy #play #palani #hill #waterbottle #milkbottle #baby #animal #animals #animalvideo #குரங்கு #குரங்குகள் #மந்தி #பழனி #பழநி

Thursday, June 16, 2022

Happy Married Life - How to be Happy? | திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய என்ன செய்ய வேண்டும்? சிக்கல்கள் எதனால் எழுகின்றன? அவற்றை எப்படித் தவிர்ப்பது, தீர்ப்பது? மகிழ்ச்சியை, இனிமையைப் பெருக்குவது எப்படி? அனுபவங்கள் வாயிலாக ஆலோசனை வழங்குகிறார் நிர்மலா ராகவன். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

"Happy Married Life!" Everyone wishes. Where does this go wrong? How to be happy? An interview with Nirmala Raghavan.

Wednesday, June 15, 2022

Palani Monkeys - Mother and baby | பழநி மலையில் குரங்கும் குட்டியும்

Mother and baby monkeys at Palani Hill.

பழநி மலையில் கண்ட குரங்கும் குட்டியும். 

#Monkey #Monkeys #palani #hill #குரங்கு #குரங்குகள் #மந்தி #குட்டிக்குரங்கு #குட்டிகுரங்கு #பழனி #பழநி #animal #animals #mammal #mammals #mother #motherhood #mom #mummy #baby

Tuesday, June 14, 2022

Social Security Benefits in Canada | கனடா சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்

கனடாவில் என்னென்ன வகையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளன? அங்கே வாழ்க்கைச் செலவு எவ்வளவு? கனடாவில் குடியேற எளிய வழி எது? 40 - 50 வயதுக்கு மேலானவர்களும் கனடாவில் குடிபெயர முடியுமா? விரிவாகப் பதில் அளிக்கிறார்,கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Social Security Benefits in Canada & How to choose the correct program to immigrate? An interview with CANext CEO Natraj Shriram

Rolled Ice cream at North Wales

Yummy rolled ice cream in Llandudno, North Wales.

முயல் மனிதன்

 கோடை விடுமுறைக்குப் பிறகு, நேற்று தமிழகம் முழுதும் அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களை ஒவ்வொரு பள்ளியிலும் விதவிதமாக வரவேற்றனர். தாம்பரத்தில் உள்ள என்.எஸ்.என். பள்ளியில் மாணவர்களை முயல் மனிதன் வரவேற்கும் காட்சி இதோ.

Bunny welcomes students at NSN School, Chitlapakkam, Chennai.

https://youtu.be/VvYdzNsf3O4

Monday, June 13, 2022

Apara Karuna Sindhum | அபார கருணா சிந்தும் | 4K

மஹா பெரியவா குறித்து ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இயற்றிய 'அபார கருணா சிந்தும்' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். 

Kanchi Kamakoti Peeta Jagathguru | காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு | 4K

இன்று மஹா அனுஷம். காஞ்சி மஹா பெரியவா அவர்களின் 129ஆவது பிறந்த நாள். இத்திருநாளில், 'காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். இதில் மஹா பெரியவா அவர்களின் கூர்மையும் தெளிவும் செறிவும் கொண்ட அரிய படங்களை மஹாபெரியவா தளத்திலிருந்து நன்றியுடன் பயன்படுத்தியுள்ளோம். 4K தரத்தில் அவரைக் கண்டு மகிழுங்கள். அன்பே சிவம்! அறமே தவம்!

Sunday, June 12, 2022

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா | Hare Krishna Hare Krishna | காஞ்சி பஜனை

காஞ்சிபுரம் உலகளந்தார் பெருமாள் கோவிலில் நடைபெற்ற பஜனை. 'ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா' என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் ஆடிப் பாடுவதைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Ukkadam Lake | உக்கடம் ஏரி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை உக்கடம் பெரியகுளம் ஏரி புதுப்பிக்கப்பட்டுள்ளது. கண்கவர் வடிவமைப்பு, நேர்த்தியான கட்டமைப்பு, பளிச்சிடும் ஒளி விளக்குகள் என அழகுற அமைந்துள்ளது. அதை இரவு நேரத்தில் அண்மையில் பேருந்தில் கடந்தோம். இந்த ஏரியை ஒட்டியுள்ள சாலை எந்தத் தரத்தில் உள்ளது என்பதை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். நண்பர் சித்ரன் ரகுநாத், கோவைச் சாலைகள் குறித்து எழுதிய சிறுவர் பாடல் இப்படித் தொடங்குகிறது

கோவை என்றொரு நகருண்டு.
நகரில் சாலைகள் பலவுண்டு.
சாலைகள் முழுக்கக் குழியுண்டு.
அரசுக்கு அதனால் பழியுண்டு.

Auto ride at Coimbatore

கோவையில் குஞ்சம் வைத்த ஆட்டோவில் ஒரு பயணம்.

An auto ride at Coimbatore. Check how the driver made a difference and gave a better experience.

Saturday, June 11, 2022

பழநி மலைக் குரங்குகள் | Palani Hill Monkeys

பழநி மலை உச்சியில் ஏராளமான குரங்குகளைக் கண்டோம். அவை, பக்தர்களின் தண்ணீர்ப் புட்டியையும் குளிர்பானப் புட்டியையும் பறிக்கின்றன. பக்தர் தரும் உணவைப் பெற, குறுக்கும் நெடுக்கும் நடக்கின்றன. இங்கும் அங்கும் தாவுகின்றன. பக்தர்களின் மிக அருகில் இயல்பாக நடக்கின்றன. கூட்டத்தில் புகுந்து செல்கின்றன. புத்திசாலிக் குரங்குகள், புட்டியின் மூடியைத் திறந்து தண்ணீரைக் குடிக்க, எந்த உத்தியைப் பயன்படுத்துகின்றன என்று பாருங்கள். 

ராமானுஜா ராமானுஜா | Ramanuja Ramanuja | Bhajan by Mukunda Ramanuja Dasar Group

வையகம் போற்றும் வைணவ ஆசார்யர், இந்து மதத்தின் எழுச்சித் தலைவர், புதிய சீர்திருத்தங்களை நிறுவிய புரட்சிக் கனல் இராமானுஜரை அடியவர்கள் வணங்கி மகிழ்கிறார்கள். 'ராமானுஜா ராமானுஜா' என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள். திருநீர்மலை இராமானுஜர் கூடத்தில் நடைபெற்ற பஜனை.

Friday, June 10, 2022

பலா மரம் | Jackfruit Tree

 Jackfruit Tree at Chennai Tambaram.


சென்னை, தாம்பரத்தில் இன்று கண்ட பலா மரம்


#Jackfruit #jacktree #fruit #fruits #tree #trees #palaa #garden #homegarden #nature #natural #Chennai #Tambaram #Artocarpusheterophyllus #sweet #பலா #பலாமரம் #பலாப்பழம் #பலாச்சுளை #பழம் #மரம் #தோட்டம்


https://youtu.be/lP9KOdrk9qY

அரச மரக் காற்று | Arasa Maram | Sacred Fig | Ficus religiosa | Chitlapakkam Lake

சிட்லபாக்கம் ஏரிக் கரையின் மீது ஆட்சி செலுத்தும் அரச மரத்தின் சிலுசிலு காற்றில் சிறிது நேரம் நின்றபோது.

Thursday, June 09, 2022

காஞ்சிபுரீசனைக் காண வாருங்கள் | முகுந்த இராமானுஜ தாசர் | Kanchi Varadaraja Perumal Temple

'காஞ்சிபுரீசனைக் காண வாருங்கள்' என்ற இனிய பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடுவதைக் கண்டும் கேட்டும் மகிழுங்கள். காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில் பிரமோற்சவத்தில் நடைபெற்ற பஜனை.

Job & Career Opportunities in Canada | கனடாவில் வேலை & தொழில் வாய்ப்புகள்

ஊறுகாய் போடத் தெரிந்தால் கூடப் போதும். கனடாவில் பிழைத்துக்கொள்ளலாம். கனடாவில் எப்படிப்பட்ட திறன்கள் தேவைப்படுகின்றன? என்ன வகையான வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்? எத்தகைய தொழில் வாய்ப்புகள் உள்ளன? கள நிலவரத்தை நம்முடன் பகிர்கிறார், கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Wednesday, June 08, 2022

ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் | முகுந்த இராமானுஜ தாசர் | Oruthi Maganai

காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்தப் பெருமாள் திருதேர் நிகழ்ச்சியில் நடைபெற்ற பஜனை. 'ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம், ஒருத்தி மகனாய் வளா்ந்தவனாம்' என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள்.

Tuesday, June 07, 2022

செந்தாமரைக் கண்ணனோடு வரதனைத் தானே | முகுந்த இராமானுஜ தாசர்

காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற பஜனை. 'செந்தாமரைக்  கண்ணனோடு  வரதனைத் தானே காஞ்சி வரதனைத் தானே' என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதை, ஆடிப் பாடுவதைப் பார்த்து மகிழுங்கள்.

அடி பிரதட்சணம்

 A women devotee at Palani Murugan Temple is doing Adi pradakshinam as a prayer.


பழநி முருகன் கோவிலில் பக்தை ஒருவரின் அடி பிரதட்சணம்.


https://youtu.be/qApRpJOCb8A

Monday, June 06, 2022

பழநி முருகன் தீர்த்தக்காவடிகள் | Palani Murugan Thirtha Kavadi

பழநிக்குச் சென்றபோது, பழநி முருகனுக்காகத் தீர்த்தக்காவடி எடுத்து, பாத யாத்திரையாக வரும் பக்தர்களை முதல் முறையாகக் கண்டேன். கலசத்தில் இருப்பதை நான் தண்ணீர் என்றபோது, தீர்த்தம்னு சொல்லணும் எனத் திருத்தினார்கள். தீர்த்தக்காவடிகளுடன் இதோ ஓர் உரையாடல்.

ஊரு சனம் | Ooru Sanam | Ilayaraja | Gangai Amaran | Priya Jagan

இசைஞானி இளையராஜா இசையில் ஊரு சனத்தையெல்லாம் கட்டிப் போட்ட பாடலைப் பிரியா ஜெகன் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.

#Ilayaraja #song #tamilcinema #melody #music #musicdirector #musician #singer #இசைஞானி #இளையராஜா #இசை #raja #rajasir #talent #new #voice #tamil

கும்மி ஆட்டம் | Kummi Dance

'இப்படிப்பட்டவனை யசோதா எப்படிப் பெற்றாளோ!' என்ற பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் மிக இயல்பாகக் கும்மி ஆடுகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், குமுளம் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற இந்த அழகிய நடனத்தைக் கண்டு களியுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Sunday, June 05, 2022

How to immigrate to Canada | A realistic, on-the-ground report | CANext CEO Natraj Shriram

How to immigrate to Canada? A realistic, on-the-ground report by CANext CEO Natraj Shriram.

கனடாவில் குடியேறுவது எப்படி? அங்குள்ள வளம், வளர்ச்சி, வாய்ப்புகள் எத்தகையவை? உண்மை நிலவரத்தை நம்முடன் பகிர்கிறார், கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

முகுந்த இராமானுஜ தாசர் பஜனைகள் | Bhajans of Mukunda Ramanuja Dasar

முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர், பல்வேறு இடங்களில் நடத்திய ஆறு பஜனைகளின் தொகுப்பு.

Bhajans of Mukunda Ramanuja Dasar

Saturday, June 04, 2022

மெரினா கடற்கரை - சில தெறிப்புகள் | Snippets of Marina Beach

உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையான மெரினாவில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமே இல்லை. அண்மையில் அங்கே சென்ற சுதா மாதவன், தெறிப்பான சில காட்சிகளைப் படம்பிடித்து, அவரே படங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். செலவே இல்லாமல் இயற்கையை அனுபவிக்க, கொண்டாட, வரம் போல் கிடைத்த வாய்ப்பு இது. இயல்பான இந்தக் காட்சிகளைக் கண்டு களியுங்கள்.

Veg Fried Rice Making | Isthara Food Court

Veg Fried Rice Making at Isthara Food Court

A child's song

 சற்றுமுன் திடீரென இந்தப் பாடலை ஹரி நாராயணன் பாடினான்.


Our son Hari Narayanan's song today.


https://youtu.be/gG7VGqTfcMo

காஞ்சி வரதர்

 காஞ்சி வரதர், தேரின் மேல் ஏறிச் செல்லும் காட்சி.


Kanchi Varadar is getting into the car. Video by Malliga Dharani.

https://youtu.be/_GeChzmvGLQ

Vikram Movie Review | விக்ரம் திரை விமர்சனம்

கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் வெளியாகியுள்ள விக்ரம் படம் எப்படி? இதில் இயக்குநர் ஒரு முக்கியத் தவறு செய்துள்ளார். அது என்ன? இதோ எனது திரை விமர்சனம்.

Vikram Movie Review by Annakannan

#Vikram #KamalHaasan #VijaySethupathi #FahadhFaasil #Suriya #LokeshKanagaraj #RaajKamalFilmsInternational #moviereview #movie #tamilmovie #cinema #maiam #விக்ரம் #கமல் #கமல்ஹாசன் #பகத்பாசில் #விஜய்சேதுபதி #சூர்யா #லோகேஷ்கனகராஜ் #அனிருத் #திரைவிமர்சனம் #மய்யம்

Friday, June 03, 2022

திருப்பதி பஜனை | Tirupati Bhajan

கீழ்திருப்பதி அருள்மிகு கோவிந்தராஜர் சந்நிதியில் நடைபெற்ற பஜனை. 'திருவேங்கடத்தில்  விளையாடும்  வேங்கடவா'  என்கின்ற  பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Thursday, June 02, 2022

இப்படி ஒரு மருத்துவமனையா? | A visit to Sree Balaji Dental College & Hospital

சென்னை, பள்ளிக்கரணையில் அமைந்துள்ள பாலாஜி பல் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவுக்கு இன்று சென்று வந்தோம். இப்படி ஒரு மருத்துவமனையா என்று வியந்தோம். நீங்களும் பாருங்கள்.

Wednesday, June 01, 2022

குமுளம் சீனிவாசப் பெருமாள் கோவில் | Kumulam Srinivasa Perumal Temple

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குமுளம் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவிலில் சுவாமி புறப்பாடு ஆகும் அருட்காட்சி. அன்பர்களின் தோள்களில் அமர்ந்து, அவர் ஆடும் திருநடனத்தைக் கண்டு மகிழுங்கள்.