!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, January 04, 2008

சென்னை வானொலியில் என் நிகழ்ச்சி

சென்னை வானொலியின் முதல் அலைவரிசையில் (Medium Wave 720 kilo hertz) 5.1.2008 சனிக்கிழமை அன்று காலை 7.25 மணிக்கு (தில்லிச் செய்திகள் முடிந்த பின்) மக்கள் மேடை என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

அதில் இந்த வாரம், கணினி யுகக் கழிவுகள் என்ற தலைப்பில் மின்னணுக் கழிவுகள் (e-waste) பற்றிச் சிலரிடம் கருத்துக் கேட்டுத் தொகுத்து வெளியிடுகிறார்கள். அதில் என் கருத்துகளையும் பதிந்து சேர்த்துள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியை அமைத்துள்ளவர்: கீதப்ரியன். (இவர், கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.)

வாய்ப்பு உள்ளவர்கள் கேளுங்கள்.