!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 20-20: தமிழ்சிஃபி நடத்தும் கட்டுரைப் போட்டி ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, October 03, 2007

20-20: தமிழ்சிஃபி நடத்தும் கட்டுரைப் போட்டி



நீங்கள் கிரிக்கெட் ரசிகரா? தென்னாப்பிரிக்காவில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பை ஆட்டங்களைப் பார்த்து ரசித்தவரா? அவை பற்றிய செய்திகளை ஏடுகளிலும் இணையத்திலும் தொலைக்காட்சியிலும் படித்திருக்கிறீர்களா? உங்களுக்காகத்தான் இந்தப் போட்டி.

டுவென்டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? அதன் சரி, தவறுகள் என்னென்ன? இது குறித்தான உங்கள் கருத்துகளை ஒரு கட்டுரை வடிவில் எழுதி tamileditor@sify.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

கட்டுரைகளைத் தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். யுனிகோடு, டாம், டாப், ஸ்ரீலிபி... என எந்த எழுத்துருவிலும் இருக்கலாம். எழுத்து (டெக்ஸ்ட்) வடிவில் இருக்க வேண்டும்; பிடிஎப் வடிவில் அனுப்பக் கூடாது. பக்க வரையறை இல்லை. சிறந்த ஒரு கட்டுரைக்கு இந்திய அணித் தலைவர் தோனி கையொப்பம் இட்ட டி-சட்டை (டி-சர்ட்) பரிசாக வழங்கப்படும். வெற்றி பெற்ற படைப்பு, தமிழ்சிஃபியில் வெளியாகும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர், இந்தியாவுக்குள் இருந்தால் அவருக்குப் பரிசு அனுப்பி வைக்கப்படும். வெளிநாடுகளில் இருப்பவர் வென்றால், அவரது இந்திய முகவரிக்குப் பரிசு அனுப்பப்படும். கட்டுரையாளர்கள், தங்கள் முகவரியையும் தொடர்பு எண்ணையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். புகைப்படம் இருந்தால் இணைத்து அனுப்பலாம். கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள், 3.10.2007 என்று அறிவித்திருந்தோம். வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாசகர்கள், 10.10.2007 அன்றைக்குள் தங்கள் கட்டுரைகளை tamileditor@sify.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

இந்தப் போட்டியில் வாசகர்கள் உற்சாகமாகப் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

- ஆசிரியர், தமிழ்சிஃபி

=============================
தமிழ் ஸ்கோர் கார்டு பாருங்கள்

2 comments:

Unknown said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

முனைவர் அண்ணாகண்ணன் said...

தமிழ்சிஃபி நடத்திய கட்டுரை போட்டிக்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை இந்தப் பக்கத்தில் சென்று பார்க்கலாம்: http://tamil.sify.com/fullstory.php?id=14569398