அம்பத்தூர் ரைட் சாய்ஸ் நகைச்சுவை சங்கத்தின் மாதாந்திர நிகழ்ச்சி, 9.11.2008 அன்று அம்பத்தூர் சிறீ மகா கணேஷா வித்யாசாலா பள்ளியில் நடைபெற்றது. இதில் இந்த மாதச் சிறப்பு விருந்தினராக நான் பங்கேற்று 'சிரிப்பு உங்கள் பொறுப்பு' என்ற தலைப்பில் உரையாற்றினேன்.
சங்கத்தின் செயலர் சிரிப்பானந்தா (எஸ்.சம்பத்) நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கவனிக்க, சங்கத்தின் தலைவர் குகன் தலைமை வகிக்க, சரண்யா தொகுத்து வழங்க, உறுப்பினர்களும் பார்வையாளர்களும் சிரிப்பு வெடிகளை வீசி அவையை அதிர வைத்தார்கள்.
சிறுவர்களும் கலந்துகொண்டு கலக்கியது இன்னும் சிறப்பு.
CHILD என்ற சேவை அமைப்பைச் சார்ந்த சிறுவர்கள், நகைச்சுவை நாடகம் ஒன்றைச் சிறப்புற அரங்கேற்றினார்கள்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இறை வணக்கத்திற்குப் பதிலாக, மூன்று முறை அனைவரும் உரக்கச் சிரிக்க வேண்டும்; நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் ஒரே நேரத்தில் உரக்கச் சிரித்து விடைபெற வேண்டும் என்ற முறையைக் கடைபிடித்து வருகிறார்கள்.
"அவர் ஏம்ப்பா லோ லோன்னு அலையிறாரு?
லோ வோல்டேஜாம். அதனால்தான்"
இந்த நகைச்சுவையைச் சொன்ன சீனிவாசனுக்கு நகைச்சுவை தேன்கிண்ணம் விருது அளிக்கப்பட்டது. இந்த விருதினை ஏற்படுத்தியவர், 'அப்புசாமி புகழ்' பாக்கியம் ராமசாமி.
பார்வையாளர்களில் மூவருக்குக் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிரிப்பு (ஜோக்)த் தோரணம் கட்டிய அனைவரும் பேனா, பொத்தகம்... எனப் பரிசுகள் பெற்றார்கள்.
செவிக்கு விருந்து படைத்ததோடு வேர்க்கடலை சுண்டல் மூலம் வயிற்றுக்கும் விருந்து படைத்தது சங்கம்.
மாதம்தோறும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி, அம்பத்தூர் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.
இறுக்கமான வாழ்க்கைச் சூழலில் இதமான புதுமையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Sunday, November 09, 2008
அம்பத்தூரில் நகைச்சுவை விருந்து
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பல நேரங்களில் பல மனிதர்கள்
திரு.அண்ணாகண்ணன்: குழும நண்பர்களுக்கு ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கடந்த வருடத்தில், நான் உயிர்மையில் எழுதிய 13 கட்டுரைகள், தீராநதியில் எழுதிய ஒரு கட்டுரை, அமுத சுரபியில் எழுதிய 4கட்டுரைகள் – மொத்தம் 18 கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பு பல நேரங்களில் பல மனிதர்கள் என்ற தலைப்பில் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக சென்னை புத்தகவிழாவுக்கு முன்பாக வெளிவர இருக்கிறது..
புத்தகத்தலைப்பு உபயம் என் நண்பர் வ.ஸ்ரீநிவாஸன். ஜெயகாந்தன் சண்டைக்கு வருவாரா என்று தெரியவில்லை. எனது முதலும் கடைசியுமான இந்த புத்தகத்துக்கு கனம் சேர்ப்பது பல துறைகளிலும் நான் சேர்த்த ஒரே சொத்தான என் நண்பர்களில் பலர் என்னைப்பற்றி உயர்வாக எழுதியிருக்கும் ‘பொய்கள்’. சுமார் 25 பிரபலங்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். இதில் பாவண்ணன், அ. முத்துலிங்கம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் அடக்கம். தவிர இலக்கியத்துறையிலிருந்து அசோக மித்திரன், இ.பா, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், கடுகு, வாஸந்தி, எஸ். ராமகிருஷ்ணன், நாடகத்துறையிலிருந்து கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, வெளி ரங்கராஜன், பேரா. எஸ். ராமானுஜம், வேலு சரவணன், இசைத்துறையிலிருந்து லால்குடி ஜெயராமன், T.V.G., சினிமாத்துறையிலிருந்து பி. லெனின், சத்யராஜ், டெல்லி கணேஷ், அம்ஷன் குமார் போன்றோர் என்னைப்பற்றிய உண்மைகளைத்தவிர்த்து நிறையவே புகழ்ந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதுகிறார். எத்தனை பொய்களை அள்ளி வீசுவாரென்று தெரியவில்லை!
இத்தனை பிரபலங்களை ஒன்றுசேர்த்து ஆயிரம் பொய்களை சொல்ல வைத்த என்னை எத்தனை பாராட்டினாலும் தகும்! நாஞ்சிலிடம் இந்த புகழாரங்களை உயிருடன் இருக்கும்போதே என் Obituary-யாகத்தான் பார்க்கிறேன் என்று தமாஷாக சொல்லப்போக, அவரிடமிருந்து செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டேன். நான் இருந்து அவருக்கு வழி நடத்தவேண்டுமாம்! செய்துட்டா போச்சு!
போனவருடம் யாராவது என்னிடம் என் புத்தகம் வெளிவரும் என்று சொல்லியிருந்தால், அவனை பரிதாபமாக பார்த்திருப்பேன். ஆக்ராவுக்கு இல்லை கீழ்ப்பாக்கத்துக்கு – திருவனந்தபுரமென்றால் ஊளம்பாறை – போகவேண்டியன் என்று தான் நினைத்திருப்பேன். விதி யாரை விட்டது?
இதைப்படித்து விட்டு, எல்லோரும், ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்’ என்று எழுத வேண்டுகிறேன்.
பாரதி மணி
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்
pls visit and give your feedback thanks
http://peacetrain1.blogspot.com/
Post a Comment