சென்னை அம்பத்தூர் அண்ணா அநாதை இல்லத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் துணை கண்காணிப்பாளர் உலகநாதன், விருதினை வழங்கினார். என்னுடன் சேர்த்து, கவிசுரபி சுப.சந்திரசேகரன் (பாரதிதாசன் விருது), ஷியாம்சுந்தர் (அன்னை தெரேசா விருது), சார்லஸ் தினகரன் டானியேல் (டாக்டர் அப்துல் கலாம் விருது), ஜெயா பாஸ்கர் (வள்ளுவர் வாசுகி விருது) ஆகியோரும் விருது பெற்றனர்.
தமிழ்நாடு சிறப்புக் காவல் படை இரண்டாம் அணியின் பிரிவுக் கண்காணிப்பாளர் செந்தமிழ்ச்செல்வன், உதவும் உள்ளங்கள் மாத இதழின் ஆசிரியர் ஆடானை சுகுமார், அறக்கட்டளையின் தலைவர் மாரிமுத்து, முத்தமிழ் மன்றத்தின் செயலாளர் எழில் சோம.பொன்னுசாமி, கவிதாயினி தேன்மொழி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இல்லக் குழந்தைகளின் நடனம், நாடகம், யுவராஜின் மாயாஜால (மேஜிக்) நிகழ்ச்சி, கவிதாயினி சமாரியாவின் பாடல் ஆகியவை நிகழ்ச்சிக்குச் சுவை சேர்த்தன.
மறவன்புலவு க.சச்சிதானந்தன் அரங்கிற்கு நேரில் வந்து வாழ்த்தினார்.
அம்பத்தூர் அரிமா சங்க நிர்வாகி சீனிவாசன், அம்பத்தூர் நகர கவுன்சிலர் எம்.டி. மைக்கேல்ராஜ் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

நண்பர் கவிஞர் புதுகை மா.உதயகுமார், இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்.

அண்ணா அநாதை இல்லத்தின் பொறுப்பாளர் மங்களலட்சுமியை என் அம்மா
சௌந்திரவல்லி, அறக்கட்டளை சார்பில் சிறப்பித்தார்.
22 comments:
வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி :-)
வாழ்த்துக்கள் தொடருங்கள் இலக்கியப்பணியை..தமிழ் வாழட்டும்
வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி! உங்கள் அன்னையின் ஆர்வமும் அக்கறையும் நெகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணாகண்ணன்!
வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்! உங்கள் இலக்கியப் பணி மென்மேலும் தொடர்க. மேலும் இது போன்ற பல்வேறு பரிசுகள் பெற இன் இதயங் கனிந்த வாழ்த்துகள்.
மனமார்ந்த வாழ்த்துகள், கண்ணன்.மகிழ்ச்சியாக இருக்கிறது.
Congratulations. wishing you many more laurels.
வாழ்த்துக்கள் அண்ணா கண்ணன்
பத்ரிநாத்
வாழ்த்துக்கள் அண்ணா..!
மென்மேலும் பல பல விருதுகள் உமக்காகக் காத்திருக்கிறது..!
வாழ்க வளமுடன்..!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி
Hello,
Heartfelt wishes to you !
thanks
Vidya
இனிய வாழ்த்துகள்.
அண்ணாகண்ணன்!
மகிழ்ச்சியான செய்தி!
நல்வாழ்த்துகள்!
உங்கள் இலக்கியப் பணிக்கு மேலும் ஊக்கம் தருமாறு இப்பரிசு அமையட்டும் என நினைத்து வழுத்துகிறேன்.
நண்பர் அண்ணா கண்ணன்,
மிக்க மகிழ்ச்சியும், உங்கள் நண்பர் என்று சொல்வதில் பெருமையும் அடைகிறேன்.
வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்!
பாரதிதாசன் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.....
***ஆண்டோ பீட்டர்***
கண்ணன், இன்று தான் பார்க்கிறேன். மிகவும் மகிழ்ச்சி. இன்னும் பல விருதுகளை நீங்கள் பெற வேண்டும்.
எழுச்சிவாழ்த்துக்கள்
எதிர் காலத்தில் இமயம் உன்னை அண்ணாந்து பார்க்கும்
ஆரூர் புதியவன்
மேலும் பல சிகரங்களை எட்டிப்பிடிக்க வாழ்த்துக்கள்
அபுஸாலிஹ்
Kudos dear friend
வாழ்த்துக்கள்.
ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது..!
Post a Comment