திரிசக்தி பதிப்பகம் பதிப்பித்த 'நினைவில் நிற்கும் நேர்காணல்கள்' என்ற என் நூலைச் சென்னையில் 30.04.2010 அன்று, காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் அதிபர் மனோகரன் வெளியிட, சாதி்க் பாட்சா பெற்றுக்கொண்டார்.
இதே நிகழ்வி்ல் மேலும் 11 பேர்களின் நூல்களும் வெளியாயின. பதிப்பாளர் நளினி சுந்தர்ராமன், நூலாசிரியர்களுக்கு அதே மேடையிலேயே கையோடு ராயல்டி தொகையை வழங்கி மகிழ்ந்தார். அன்று வெளியான 12 நூல்களின் பட்டியல் இதோ இங்கே:
பாரதி பாஸ்கரின் சிறப்புரையும் ரமணனின் தொகுப்புரையும் மிக அருமை. காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் அதிபர் மனோகரன், தம் வளர்ச்சியின் அடிப்படைகள் சிலவற்றை அழகாக விளக்கினார். திரிசக்தி சுந்தர்ராமன், தினமும் இரவி்ல் 1 மணிக்கு மேல் கண்விழி்த்து, 2 மணி நேரங்கள் எழுதுவதே தமக்குப் பெரும் இன்பம் அளிப்பதாகக் கூறினார்.
இயக்குநர் மதுமிதா, ஓவியர் ஜீவநாதனின் திரைச்சீலை நூல் குறித்துச் சிற்றுரை நிகழ்த்தியதோடு, அடுத்து வரவிருக்கும் தம் கொலகொலயா முந்திரிக்கா என்ற படத்திலிருந்து ஒரு பாடலைத் திரையிட்டுக் காட்டினார்.
மறவன்புலவு க.சச்சிதானந்தன், விக்கிரமன், அப்துல் ஜப்பார், இராம.கோபாலன், ரவி தமிழ்வாணன், சுப்பு, வீரராகவன், தமிழ்த்தேனீ, பிரபுசங்கர், ஷைலஜா, துளசி கோபால், நிர்மலா, ராமச்சந்திரன் உஷா, மதுமிதா, யுகமாயினி சித்தன், அம்சப்ரியா, அய்யப்ப மாதவன், நிலா ரசிகன், ரீச் சந்திரா, சைதை முரளி.... உள்ளிட்ட நண்பர்கள் பலரையும் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தேன். ஓவியர் ஜீவநாதன், சிமுலேஷன்,அந்தக் கால எழுத்தாளரான அவரின் தாயார் விஜயஸ்ரீ, வசந்தகுமார் ஆகியோரை முதன் முதலில் சந்தித்தேன்.
மிக இனிய இந்தச் சந்திப்பு, மனத்திற்கு நிறைவாக இருந்தது.
படங்களுக்கு நன்றி: தமிழ்த்தேனீ, 'ரீச்' சந்திரா
No comments:
Post a Comment