!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 'பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு' நூல் வெளியீட்டு விழா ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, June 16, 2010

'பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு' நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் புனல் க.முருகையன் எழுதி, காந்தளகம் வெளியி்ட்ட 'பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். சென்னைப் பல்கலைக்கழகப் பவழ விழா அரங்கில் 15.06.2010 என்று மாலை நடந்தது. சத்குருநாதன் குழுவினரின் திருமுறை இன்னிசையுடன் விழா தொடங்கியது.


தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் நூலை வெளியிட்டார். பெரியகருப்பன் இடையில் செல்ல வேண்டி இருந்ததால், வழக்கறிஞர் இரா.காந்தியிடம் நிகழ்வின் தலைமைப் பொறுப்பினை ஒப்படைத்துச் சென்றார்.

இந்நிகழ்வில் திருப்பனந்தாள், தருமபுரம், திருவாடுதுறை ஆகிய திருமடங்களைச் சார்ந்த தம்பிரான் சுவாமிகள், சிங்கப்பூர் தமிழ்ப் பேராசிரியர் சுப. திண்ணப்பன், ஆஸ்திரேலியா தமிழ்ப் பேராசிரியர் ஆ. கந்தையா பேராசிரியர் கந்தையா உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தொடக்கவுரை ஆற்ற, மறவன்புலவு க. சச்சிதானந்தன் அறிமுகவுரை ஆற்ற, பேராசிரியர் புனல் க.முருகையன் ஏற்புரை நிகழ்த்தினார். ஒலிபெயர்ப்புக் குறியீடுகளை இணையத்தில் (http://www.virtualvinodh.com/tamilipa/tamilipa.php) ஏற்றிய வினோத் ராஜன், கணித் திரையில், செயலாக்க முறைகளை விளக்கினார்.



சென்னைப் பல்கலைக்கழக மாணவி பார்கவி விழாவுக்கு ஒத்துழைத்தார். காந்தளகம் நித்தியா கணேசன், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

4 comments:

செல்வமுரளி said...

மிக்க மகிழ்ச்சி. இங்கே அனைவரின் முயற்சியும் பாராட்டத்தக்கது :)
இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்

Guru Prasad Pandurengan said...

வாழ்த்துக்கள்...

ANGOOR said...

சைவ சமயத்திற்கு ஒரு அருமையான தொண்டு ......இதற்காக உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி

Anonymous said...

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்


ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி