சங்க இலக்கியத்தில் கம்புள்
“வெண் நுதல் கம்புள் அரிக் குரல் பேடை
தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்’”
ஓரம்போகியார், ஐங்குறு நூறு, 85: 1-2
சுருக்கமான உரை: வெண்மையான நெற்றியையும் விட்டு விட்டு ஓசை எழுப்பும் குரலையும் உடைய பெண் கம்புள், தன் சுற்றத்தோடு குளிர்ந்த பொய்கையிலிருந்து மகிழ்ந்து விளையாடும்..
சங்க இலக்கியத்தில் “கம்புள்” என்ற பறவையின் பெயர் நான்கு பாடல்களில் காணப்படுகிறது (ஐங்குறுநூறு 85, 60, அகநானூறு 356, புறநானூறு 297). மேற் கண்ட ஒரே ஒரு பாடலில் மாத்திரமே “வெண் நுதல் கம்புள்” என்று இந்தப் பறவையைச் சங்கப் புலவர் ஓரம்போகியார் மருதத் திணையின் பின்னணியில் வர்ணித்துள்ளார்.
இது குறித்து, வல்லமை மின்னிதழில் சற்குணா பாக்கியராஜ் எழுதிய கட்டுரையைப் படியுங்கள். https://www.vallamai.com/?p=87265
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Tuesday, July 14, 2020
வெண்நெஞ்சு நீர்க்கோழி | White-breasted Waterhen
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:59 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment