!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2021/11 - 2021/12 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, November 30, 2021

மழையில் நனையும் பவழமல்லி | Pavalamalli in Rain

மழையில் நனையும் பவழமல்லி ஒன்றைக் கண்டேன். காண்போரைக் கொள்ளை கொள்ளும் அந்தக் காட்சி இங்கே.

#Shorts: Underwater Bird | Little Cormorant

Indian cormorant can walk, swim underwater and fly, a 3-in-1 bird. Here you can see this Little Cormorant is swimming underwater and flying. This might be an inspiration to ambitious cars that can travel on land, water and air.

நீர்க்காக்கை, ஓர் அரிய பறவை. இதனால் தரையில் நடக்கவும் தண்ணீருக்கு அடியில் நீந்தவும் பறக்கவும் முடியும். நீரிலும் நிலத்திலும் வானிலும் இயங்கும் வாகனங்களுக்கு இதுவே தூண்டுதலாக இருக்கலாம். இதோ இங்கே இந்த நீர்க்காக்கை, தண்ணீருக்கு அடியில் நீந்துவதையும் பிறகு சிறகடித்துப் பறப்பதையும் பாருங்கள்.

Monday, November 29, 2021

த.மு.மு.க.வின் படகுச் சேவை | TMMK Boat Service | Chennai Flood

வெள்ளத்தில் ஒரு குடும்பம் சிக்கியுள்ளது என அறிந்தவுடன், ஆட்டோவில் படகினை ஏற்றிக்கொண்டு களத்துக்கு விரைகின்றது த.மு.மு.க.வின் படகு அணி.

கரைமீறும் அடையாறு | Adyar River Overflow | Exclusive Video

நுங்கும் நுரையுமாக, சுழிப்பும் அலையுமாக, கழிவும் கசடுமாக, சிரிப்பும் சீற்றமுமாக, துடிப்பும் துள்ளலுமாக கரைமீறிப் பாய்கிறது அடையாறு. ஒரே நேரத்தில் மேலே கனமழை, கீழே பெருவெள்ளம் என்ற காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா? ஆஹா என்று எழுந்து அதிர நடக்கும் அடையாற்றின் பேரழகு இங்கே.

Sunday, November 28, 2021

வீடுகளைச் சூழ்ந்தது வெள்ளம் | Tambaram Flood | Micro Update

அடையாறு நதியில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேரளவு நீர், ஊருக்குள் பாய்கின்றது. தாம்பரத்தில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாள் முழுவதும் தண்ணீர் வடியவில்லை. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

ஆவேச அடையாறு, தத்தளிக்கும் தாம்பரம் | Adyar River Overflow | Flood in Tambaram

அடையாறு நதியில் வெள்ளப் பெருக்கு, கரை உடைப்பு, கனமழை என ஒரே நேரத்தில் பலமுனைத் தாக்குதலால் தாம்பரம் தத்தளிக்கிறது. வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். சாதாரணப் பயணமே சாகசப் பயணமாய் ஆகிவிட்டது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

அடையாறு நதியில் மீண்டும் உடைப்பு | Damage in Adyar River's bank again

தாம்பரம் அருகில் அடையாறு நதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை அப்பகுதி மக்கள் தற்காலிகமாக அடைத்துள்ளனர். ஆனாலும், அபாயம் முழுமையாக நீங்கியதாகக் கொள்ள முடியாது. இதற்கு வலிமையான கரையமைத்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசர அவசியம். மக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

Saturday, November 27, 2021

#Shorts: Tambaram Market

தாம்பரம் சண்முகம் சாலை, மார்க்கெட் பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீர்.

Birmingham - Second-largest city of England

இங்கிலாந்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்காம் மாநகரில் ஓர் உலா. 

படப்பதிவு - நவ்யா

Birmingham is a city and metropolitan borough in the West Midlands, England. It is the second-largest city, urban area and metropolitan area in England and the United Kingdom. Birmingham is commonly referred to as the "second city of the United Kingdom". Located in the West Midlands county and region in England, approximately 100 miles (160 km) from Central London, Birmingham, as one of the United Kingdom's major cities, is considered to be the social, cultural, financial, and commercial centre of the Midlands (Wiki).

Video by Navya.

Friday, November 26, 2021

வருமான வரியைச் சேமிப்பது எப்படி? - முழு விவரங்கள் | How to Save Income Tax?

வருமான வரியைச் சேமிப்பது எப்படி? அதிகபட்ச பலன்களைப் பெறுவது எப்படி? வரிசேமிப்பின் மூலம் இன்னொரு வருவாயை ஈட்டுவது எப்படி? பழைய வரிவிதிப்பு முறையா? புதிய வரிவிதிப்பு முறையா? யாருக்கு எது சிறந்தது? இதோ முழு விவரங்கள். அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். 

Thursday, November 25, 2021

பீடா மடிப்பது எப்படி? | Sweet Beeda

பீடா மடிப்பது எப்படி? இதோ ஒரு செய்முறை விளக்கம்.

(காஞ்சிபுரம் சுதர்சன் & ஐஷ்வர்யா திருமணத்தில்)

#Shorts: Tomato Harvest

நம் மாடித் தோட்டத்தில் தக்காளி அறுவடை.

Wednesday, November 24, 2021

நம்ம வீட்டுத் தக்காளித் தோட்டம் | Tomato Garden

தக்காளி கிலோ 150 ரூபாயாமே. பேசாம, வீட்டிலேயே வளர்த்திடுங்க. நம்ம வீட்டுத் தோட்டத்தில் எத்தனை வகை இருக்குன்னு பாருங்க.

#Tomato #தக்காளி

#Shorts: Female Koel Cheats Male

இந்த அநியாயத்தைப் பாருங்க! ஆண்குயிலுக்குக் கொடுக்காமல் தானே மொத்தக் கோவைப் பழத்தையும் ஒரே வாயில் காலி செய்துவிட்டது இந்தப் பெண்குயில். ஐயோ பாவம் ஆண்!

சின்ன வெங்காயம் முளைத்துவிட்டால்? | Small Onion

கடையில் வாங்கிய சின்ன வெங்காயம் முளைத்துவிட்டால்... இப்படி செஞ்சிடுங்க!

Tuesday, November 23, 2021

Asian Koel - Female | Close-up

பெண்குயில், அவ்வளவு எளிதில் காட்சி கொடுக்காது. நம்மைக் கண்டாலே பறந்து ஓடிவிடும். அதிர்ஷ்டவசமாக, என் ஜன்னலை ஒட்டியுள்ள கருவேப்பிலை மரக்கிளையில் மிக அருகில் வந்தமர்ந்தது. ஓசைப்படாமல் ரகசியமாக இதைப் படம் பிடித்தேன். இதன் பேரழகை நுணுக்கமாக நீங்கள் ரசிக்கலாம். 

#Shorts: Chocolate Fountain

காஞ்சிபுரத்தில் சுதர்சன் - ஐஷ்வர்யா திருமணத்தில் சாக்லேட் நீரூற்று.

Monday, November 22, 2021

சுதர்சன் & ஐஷ்வர்யா திருமணம் | மாப்பிள்ளை அழைப்பு

காஞ்சிபுரத்தில் திருமிகு சுதர்சன் & ஐஷ்வர்யா திருமணம், வெகு சிறப்பாக நடைபெற்றது. 2021 நவம்பர் 20 அன்று நடைபெற்ற மாப்பிள்ளை அழைப்பு வைபவத்திலிருந்து சில காட்சிகள் இங்கே. மணமக்கள் நீடூழி வாழ்க!

இந்தியாவில் உள்ள உலக மரபுச் சின்னங்கள் | World Heritage Monuments in India

நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, 'இந்தியாவில் உள்ள உலக மரபுச் சின்னங்கள்' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள திரு பரமேஸ்வர விண்ணகரம் என்கிற வைகுந்தப் பெருமாள் கோவிலில் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. உலக மரபுச் சின்னங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காண்பது, ஓர் அரிய வாய்ப்பு. இதோ இந்தக் கண்காட்சியின் உள்ளே ஓர் உலா.

படப்பதிவு - மது என்கிற ரங்காச்சாரி சேஷாத்ரி

கோவைப் பழத்தை உண்ணும் குயில் - 3 | Asian Koel is eating Ivy Gourd Fruit - 3

நம் ஜன்னலை ஒட்டியுள்ள வேப்ப மரத்தில், கோவைக் கொடி ஒன்று அண்மையில் தானாகவே வளரத் தொடங்கியது. திரும்பிப் பார்ப்பதற்குள் எல்லாப் பக்கமும் படர்ந்து நிற்கிறது. அதில் கோவைப் பூக்களும் காய்களும் பழங்களும் பெருகியுள்ளன. இந்த மரத்தில் வசித்து வருகின்ற குயில்களுக்கும் இதர பறவைகளுக்கும் இப்போது கொண்டாட்டம்தான். இந்தப் பதிவில் கோவைப் பழம் ஒன்றை ஆண்குயில்களும் பெண்குயிலும் அடுத்தடுத்து பற்றி இழுத்து உண்பதை மிக நெருக்கத்தில் நீங்கள் பார்க்கலாம். 

Sunday, November 21, 2021

பழைய சீவரம் ஜி.காளிதாஸ் குழுவினர் மங்கல இசை | Palaya Seevaram G.Kalidass Mangala Vadyam

காஞ்சிபுரத்தில் இன்று சுதர்சன் - ஐஷ்வர்யா திருமணம் விமரிசையாக நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், பழைய சீவரம் ஜி.காளிதாஸ் குழுவினர் வழங்கிய மங்கல இசை இதோ.

பாலாறு - வாலாஜாபாத் நிலவரம் | Palar Flood in Walajabad

பாலாறு வெள்ளம், வாலாஜாபாத்தில் எந்த அளவு உள்ளது? களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

River Palar - Flood update from Walajabad.

Saturday, November 20, 2021

#Shorts: Kind and Compassion

தாயின் பரிவும் அதில் கண்செருகும் கன்றும்.

Mother Cow's Kind and Compassion. See, how the calf is enjoying the lick.

Friday, November 19, 2021

விண்ணோர் தொழும் திரு அண்ணாமலை | Vinnor Thozhum Thiru Annamalai | Ilayaraja

'விண்ணோர் தொழும் திரு அண்ணாமலை' என்ற பாடலை இசைஞானி இளையராஜா இயற்றி இசையமைத்துள்ளார். "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பில் இருந்து இதைக் கற்றுக்கொண்டு நாகி நாராயணன் பாடுகிறார். இந்தத் திருக்கார்த்திகைத் திருநாளில், திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட இந்த நன்னாளில் இதை வெளியிடுகிறோம். கேட்டு மகிழுங்கள். திருக்கார்த்திகை தின நல்வாழ்த்துகள்.

#Shorts: Rain Pearls

Rain pearls today in our terrace garden.

எங்கள் மாடித் தோட்டத்து மலர்களை இன்று அலங்கரித்த மழை முத்துகள்.

Axis Ride in England | Adventure Island | Southend-on-Sea

இங்கிலாந்தின் சவுத் எண்டு பகுதியில் அமைந்துள்ள அட்வென்சர் ஐலேண்டு என்ற கேளிக்கைப் பூங்காவில், ஒரு புதுமையான ரங்க ராட்டினம் (AXIS ride). பார்த்து மகிழுங்கள்.

படப்பதிவு - நவ்யா

Thursday, November 18, 2021

#Shorts: How is this Earrings?

How is this Earrings? 

A shorts by Gayathri.

மூலிகை வணிகர் ஆறுமுகம் | Herbal seller Arumugam

தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் வாசலில், நடைபாதையில் அமர்ந்து மூலிகைகளை விற்கும் ஆறுமுகத்துடன் ஒரு நேர்காணல்.

Wednesday, November 17, 2021

பதினெண் சித்தர்கள் | 18 சித்தர்கள் | The 18 Siddhars

தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை, பதினெண் சித்தர்களின் திருவுருவப் படங்கள் அலங்கரிக்கின்றன. இவர்கள், செயற்கரிய செய்த மாமுனிகள், தமிழரின் பெருமைக்குரிய மாமணிகள். இவர்களைக் கண்டு வணங்கி, கருத்தில் இருத்தி, இவர்தம் தடத்தில் நடப்போம் வாருங்கள்.

Tuesday, November 16, 2021

மூக்குத்தி அவரை அறுவடை | Clove Beans Harvest | Mookkuthi Avarai Aruvadai

நம் மாடித் தோட்டத்தில் மூக்குத்தி அவரை அறுவடை.

Monday, November 15, 2021

மூத்த குடிமக்களுக்கான தொடர் வருவாய்த் திட்டங்கள் | Regular Income Schemes for Senior Citizens

மூத்த குடிமக்கள் முதலீடு செய்ய, இவ்வளவு வாய்ப்புகளா? இவ்வளவு திட்டங்களா?  இந்த அளவுக்குத் தொடர் வருவாய் கிடைக்குமா? இவ்வளவு பாதுகாப்பானதா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக், விரிவான விவரங்களைத் தருகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பெரியவர்களுக்கும் பகிருங்கள்.

Sunday, November 14, 2021

கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு | Fierce Flood in Kanyakumari | Part 2

அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அதிகாலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை  பெய்தது. அதன்பின்னர் பகலில் அவ்வப்போது கனமழை பெய்தது. சில நேரங்களில் வெயில் அடித்தது.

* திற்பரப்பு அருவியில் நேற்று முன் தினத்தை விடக் குறைந்த சீற்றத்துடன் வெள்ளம் பாய்ந்தோடியது. நேற்றைய முன் தினத்தை விடச் சற்று தெளிவாக அருவியில் தண்ணீர் கொட்டியது. அருவியின் மேற்பகுதி தடுப்பணையில் மறுகால் இட்டதால் படகு சவாரி நடக்கவில்லை.

 * மாத்தூர்  தொட்டிப்பாலத்தின் கீழே ஓடும்  பரளியாற்றுத் தண்ணீர், அருவிக்கரை - வேர்க்கிளம்பியை இணைக்கும் சப்பாத்துப் பாலத்தை மூழ்கடித்தபடி நேற்று முன்தினம் முதலே சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை வரை தண்ணீர் வரத்து குறையவில்லை. இதனால் அருவிக்கரை ஊராட்சியில் இருந்து மறு பகுதியிலுள்ள பொன்னன் சிட்டி விளை, முதலார் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை எற்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.  இந்த மழை நேரத்திலும் மாத்தூர் தொட்டிப்பாலத்தைப் பார்க்க, பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை  தந்து தொட்டிப்பாலத்தைப் பார்த்து மகிழ்ந்து சென்றனர்.

களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

செய்தி & படப்பதிவு: திருவட்டாறு சிந்துகுமார்

சரிகமபதநி | Sa Ri Ga Ma | Hari Narayanan

குழந்தைகள் தினச் சிறப்பு வெளியீடு. ஹரி நாராயணனின் சரிகமபதநி.

#Shorts: Water Sport in Kanyakumari Flood

வெள்ளத்திலும் இப்படி விளையாட, கொஞ்சம் துணிச்சலும் நிறைய உற்சாகமும் வேண்டும்.

முடிச்சூர் ஏரி நிரம்பியது | Mudichur Lake | ஆகாயத் தாமரை | Water Hyacinth

சென்னை, தாம்பரத்தை ஒட்டியுள்ள முடிச்சூர் ஏரி நிரம்பியது. இதன் மேற்பரப்பை ஆகாயத் தாமரைகள் மூடியுள்ளன. இந்த ஏரியின் உபரி நீர், கால்வாய்களில் பாய்ந்து ஓடுகின்றது. களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

Saturday, November 13, 2021

கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு | Fierce Flood n Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்றுவரை விடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது.

பெருஞ்சாணி அணையில் இருந்து வெள்ளம் திறந்துவிடப்பட்டுள்ளதால் மாத்தூர் தொட்டிப் பாலத்தின்  அருகே அருவிக்கரைப் பகுதியில் பரளியாற்றில்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

திற்பரப்பு  அருவியின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கும் வெண்ணிறப் புகை மண்டலமாய் அருவித் தண்ணீர் கொட்டுகிறது.  அருவியின் முன்பகுதி சிறுவர் குளத்தை மூழ்கடித்து, கல்மண்டபம் வழியாக தண்ணீர் ஓடுகிறது. குளிக்க அனுமதி இல்லாதாதால் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், தடுப்பு வேலி வழியாக அருவியைப் பார்த்துத் திரும்பினர். தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் படகு சவாரியும் நடைபெறவில்லை. இதனால் படகுத் துறையில் படகுகள் அனைத்தும் ஓய்வெடுத்துக்கொண்டன.

திருநந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலயத்தையொட்டி மழை நீர் புகுந்துள்ளது. கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களைச் சுற்றி மழை நீர் ஆறாக ஓடியிருப்பதோடு விளை நிலங்களுக்கு உள்ளும் புகுந்துள்ளது.

களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

செய்தி & படப்பதிவு: திருவட்டாறு சிந்துகுமார்

தாம்பரத்தில் வெள்ளம் வடிகிறது | Tambaram is recovering from flood

ஒரு வார அவதிக்குப் பிறகு தாம்பரம் மீண்டு வருகிறது. இன்று வெள்ளம் வடியத் தொடங்கியிருக்கிறது. இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

வெறுங்கையால் மீன்பிடிக்கலாம் | Fishing in barehand

தூண்டிலும் வலையும் வேண்டாம். வெறுங்கையாலேயே மீன்பிடிக்கலாம். இதோ ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மண்ட்டேஷ் குமார் யாதவ், முடிச்சூர் கால்வாயில் வெறுங்கையால் மீன்பிடிப்பதைப் பாருங்கள்.

சென்னையில் இப்படி ஓர் இடமா?

மழையால் ஒரு புதிய சுற்றுலாத் தலம் உருவாகிவிட்டது. 

#Shorts: Waterflow! What a flow!

Waterflow! What a flow!

Friday, November 12, 2021

தாம்பரம் வெள்ள நிலவரம் | Tambaram Flood Update

தாம்பரத்தில் மழை நின்றபோதும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எந்த இடத்தில் எவ்வளவு தண்ணீர் நிற்கின்றது? இதோ வெள்ளத்தின் ஊடே ஒரு பயணம்.

வெள்ளத்தில் ஒரு பாம்பு | A snake in flood | Chennai Flood 2021

வெள்ளத்தில் பொதுவாகத் தண்ணீர் மட்டும் வருவதில்லை. ஊரில் உள்ள குப்பை கூளங்களும் மீன்கள், தவளைகள், வண்டுகள், பூச்சிகள் எனப் பலவும் கூடவே வரும். இன்று தாம்பரம் பாப்பான் கால்வாயில் பெருகி ஓடும் வெள்ளத்தில் ஒரு பாம்பினைப் பார்த்தேன். இதோ அந்தக் காட்சிகள்.

அடையாறு நதியில் உடைப்பு | தாம்பரத்தை வெள்ளம் சூழ்ந்தது | Adyar River Overflow

சென்னை அடையாறு நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாம்பரத்திற்கு அருகில் அதன் கரையின் ஒரு பகுதி உடைந்துள்ளது. அதை அடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் ஆறாகத் தண்ணீர் ஓடுகிறது. பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர். களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

Thursday, November 11, 2021

#Shorts: Tambaram Irumbuliyur Bridge

தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தின் அருகே ஆறாக ஓடும் நீர்.

Waterflow under Tambaram Irumbuliyur Bridge.

Wednesday, November 10, 2021

#Shorts: A straight line

இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம்?

Suggest a better title for this.

#Shorts: Tambaram Mudichur Road

தாம்பரம், முடிச்சூர் சாலையின் அவல நிலையைப் பாருங்கள். இந்தச் சாலையைக் கடப்பவர்கள், விழிப்புடன் இருங்கள். தாம்பரம் சுற்று வட்டார நண்பர்களுக்கு இதைப் பகிருங்கள்.

Tuesday, November 09, 2021

திருப்புகழ் | முத்தைத்தரு | நேத்ரா ஜெயராமன் | Thiruppugazh

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழின் 'முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலைச் செல்வி நேத்ரா ஜெயராமன் குரலில் கேட்டு மகிழுங்கள். கந்தன், குமரன், செந்தில் முருகன் புகழ் பாடுங்கள்.

திருப்புகழ் | தாரகாசுரன் சரிந்து | Thiruppugazh | சூர சம்ஹாரம்

அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழிலிருந்து 'தாரகாசுரன் சரிந்து' எனத் தொடங்கும் பாடலை, திருமதி நாகி நாராயணன் குரலில் கேட்டு மகிழுங்கள். சூர சம்ஹாரம் நிகழும் இந்த நாளில், வேல்வீச்சினைப் போல் வேகவேகமாக இதன் வரிகள் பாய்ந்து வருகின்றன. இந்த இனிய பாடலுடன் கந்தசஷ்டி விழாவைக் கொண்டாடுங்கள்.

Monday, November 08, 2021

தாம்பரத்தில் மழை - வெள்ள நிலவரம் | Tambaram Rain - Flood Update | 2021

சென்னை தாம்பரத்தில் மழை - வெள்ள நிலவரம் எப்படி? களத்திலிருந்து இதோ நேரடிக் காட்சிகள். தாம்பரம்வாசிகளுக்கு இதைப் பகிருங்கள்.

மாடித் தோட்ட உலா | Terrace Garden Tour

இந்த நாள் இனிய நாள் ஆகுக! 

எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தை அலங்கரிக்கும் செடிகொடிகளுடன் கைகுலுக்க வாருங்கள்.

Sunday, November 07, 2021

திருப்புகழ் | சுவாமிமலை | பாதி மதிநதி | Thiruppugazh | Swamimalai Murugan

அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழிலிருந்து 'பாதி மதிநதி' எனத் தொடங்கும் பாடலை, திருமதி விஜயலட்சுமியின் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த இனிய பாடலுடன் கந்தசஷ்டி திருவிழாவைக் கொண்டாடுங்கள்.

Saturday, November 06, 2021

#Shorts: Neck Music

பசுவின் கழுத்து மணியோசை.

Cow's neck music.

Friday, November 05, 2021

நாய்க்குடை | காளான் | Mushroom

நாய்க்குடையைப் பார்க்காதவர்கள், பார்த்துக்கொள்ளுங்கள். பார்த்தவர்கள், பிறருக்குப் பகிருங்கள்.

சரவெடி | Saravedi | Joined Crackers | Diwali 2021

சரவெடிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. எனினும் இந்தத் தீபாவளி அன்று சரவெடி பரவலாக வெடிக்கப்பட்டது. மாலன் நாராயணன் வசிக்கும் பகுதியிலும் வெடிக்கப்பட்டதாக எழுதியுள்ளார். சென்னை, அம்பத்தூர், ஒரகடத்தில் நேற்று இரவு வெடித்த சரவெடி இதோ.

Thursday, November 04, 2021

கண்ணன் தீபாவளி | இசைச் சொற்பொழிவு | நாகி நாராயணன் | Kannan Deepavali

நரகாசுரனைக் கண்ணன் வதம் செய்த நாளையே தீபாவளி எனக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், கண்ணனின் அருமை, பெருமைகளை இசைச் சொற்பொழிவாக வழங்கியுள்ளார், நாகி நாராயணன். இந்த அமர கீதங்களைக் கேட்டு, தீபத் திருநாளைக் கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Wednesday, November 03, 2021

வீட்டுக்குள் வந்த டைனோசர் | A Dinosaur visits our home

இன்று காலை நம் வீட்டுக்குள் ஒரு டைனோசர் வந்துவிட்டது. அது செய்யும் அதகளத்தைப் பாருங்கள்.

Tuesday, November 02, 2021

சிட்டுக் குருவி - ஷைலஜா கவிதை | A poem by Shylaja

ஷைலஜா எழுதிய 'சிட்டுக் குருவி' கவிதையை அவரது குரலில் கேளுங்கள்.

Monday, November 01, 2021

பேரறிஞர் அண்ணா உரை - 3 | C.N.Annadurai Speech | 1968 | தமிழ்நாடு பெயர் மாற்றம்

சென்னை மாகாணம் என இருந்ததைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, 1.12.1968 அன்று நடந்த விழாவில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

#Shorts: Bee on Lily

Bee on Lily.

லில்லிப் பூவில் ஒரு தேனீ.