நம் ஜன்னலை ஒட்டியுள்ள வேப்ப மரத்தில், கோவைக் கொடி ஒன்று அண்மையில் தானாகவே வளரத் தொடங்கியது. திரும்பிப் பார்ப்பதற்குள் எல்லாப் பக்கமும் படர்ந்து நிற்கிறது. அதில் கோவைப் பூக்களும் காய்களும் பழங்களும் பெருகியுள்ளன. இந்த மரத்தில் வசித்து வருகின்ற குயில்களுக்கும் இதர பறவைகளுக்கும் இப்போது கொண்டாட்டம்தான். இந்தப் பதிவில் கோவைப் பழம் ஒன்றை ஆண்குயில்களும் பெண்குயிலும் அடுத்தடுத்து பற்றி இழுத்து உண்பதை மிக நெருக்கத்தில் நீங்கள் பார்க்கலாம்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Monday, November 22, 2021
கோவைப் பழத்தை உண்ணும் குயில் - 3 | Asian Koel is eating Ivy Gourd Fruit - 3
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:41 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment