கோவையிலிருந்து வெள்ளியங்கிரி அடிவாரம் வரைக்கும் அண்மையில் நாங்கள் சென்றபோது, வழியெங்கும் அருமையான இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்தோம். தென்னந்தோப்புகள், வாழைத் தோப்புகள், பாக்குத் தோப்புகள், நெல் வயல்கள், திராட்சைத் தோட்டங்கள், மஞ்சள், சோளம், காலிபிளவர்.... என விதவிதமான பயிர்கள் விளைந்து நிற்கக் கண்டோம். கூடவே புதுப் பொலிவுடன் காட்சி தரும் கோவில்கள், கல்லூரிகள், சாலைகள், பழைமை மாறாத வீடுகள், கடைகள் எனப் பலவும் கண்ணுக்கு விருந்து. கொங்கு மண்ணின் கொஞ்சும் அழகைப் பாருங்கள். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இங்கே.
#Coimbatore #Kovai #கோவை #கோயம்புத்தூர் #Vellingiri #Velliangiri #வெள்ளியங்கிரி #வெள்ளிங்கிரி
No comments:
Post a Comment