!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2022/07 - 2022/08 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, July 31, 2022

திருப்பல்லாண்டு | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Thiruppallandu

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் தொடக்கமாய் அமைந்துள்ளது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு. இதன் மூன்றாம், நான்காம் பாடல்களை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Saturday, July 30, 2022

Moringa Noodles | முருங்கை நூடுல்ஸ்

இன்று நம் வீட்டில், முருங்கை நூடுல்ஸ். ஹேமமாலினி வழங்கும் செய்முறை இதோ.

Center Line Marking on Road

சில நொடிகளில் சாலை நடுப்பட்டை வரைவது இப்படித்தான்.

Center Line Marking on Pallavaram–Thuraipakkam Radial Road (State Highways 109), Chennai.

Friday, July 29, 2022

மாடு மேய்க்கும் கண்ணே | Maadu Meikkum Kanne | Oothukadu Venkata Subbaiyer

ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இயற்றிய 'மாடு மேய்க்கும் கண்ணே' என்ற புகழ்பெற்ற பாடலை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள். 

Tuesday, July 26, 2022

பங்குச் சந்தைகள் மேலும் சரியுமா? | Will the Markets fall further?

பங்குச் சந்தைகள் இறங்குமுகமாக உள்ளன. அந்நிய முதலீடுகள் பெரிய அளவில் வெளியேறியுள்ளன. பணவீக்கமோ உச்சத்தில் உள்ளது. பொருளாதார மந்தநிலை வருமோ என்ற அச்சம் உள்ளது. இந்தப் பின்னணியில் பங்குச் சந்தைகள் மேலும் சரியுமா? இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

Classic Mosquito Net - A Review

அண்மையில் நாங்கள் வாங்கிய கொசுவலை, இரண்டு சிக்கல்களைத் தீர்க்கிறது. இது குறித்து எங்கள் அனுபவத்துடன் கூடிய மதிப்பாய்வு.

Here is our review on Classic Mosquito Net, after using the product.

#Mosquito #MosquitoNet #Net #review #product #productreview #classic 

Monday, July 25, 2022

பல்லாண்டு பல்லாண்டு | பெரியாழ்வார் | Pallandu Pallandu | Periyalvar

பாடப் பாட இனிப்பது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டுப் பாடல். இதை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

Sunday, July 24, 2022

இராகவனே தாலேலோ | குலசேகர ஆழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

'கொங்குமலி கருங்குழலாள்' மற்றும் 'ஆலினிலைப் பாலகனாய்' எனத் தொடங்கும் தாலாட்டுப் பாடல்கள் இதோ. குலசேகர ஆழ்வார் இயற்றி, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம்பெற்ற இந்த அழகிய பாசுரங்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Saturday, July 23, 2022

Panda and Mickey

Giant Panda Bear and Mickey Mouse at Fantastic Jeyachandran Textiles, Chennai, Pallikkaranai.

https://youtu.be/TcLffAIMim4

மன்னுபுகழ் | குலசேகர ஆழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

குலசேகர ஆழ்வாரின் இனிய தாலாட்டுப் பாடல், 'மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே'. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இந்த அழகிய பாசுரத்தை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Friday, July 22, 2022

ராமானுஜா ராமானுஜா | முகுந்த இராமானுஜ தாசர் | Ramanuja Ramanuja

வையகம் போற்றும் வைணவ ஆசார்யர், இந்து மதத்தின் எழுச்சித் தலைவர், புதிய சீர்திருத்தங்களை நிறுவிய புரட்சிக் கனல் இராமானுஜரை அடியவர்கள் வணங்கி மகிழ்கிறார்கள். 'ராமானுஜா ராமானுஜா' என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் பாடி ஆடுவதைப் பாருங்கள். திருநீர்மலை இராமானுஜர் கூடத்தில் நடைபெற்ற பஜனை.

Thursday, July 21, 2022

இப்படியும் ஆசிரியர்கள் | Bad and Worst Teachers


இப்படிப்பட்ட மோசமான ஆசிரியர்களும் இருக்கிறார்கள். நிர்மலா ராகவன் தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

#teacher #teachers #school #college #professors #professor #lecturer #lecturers #bad #worst #experience #student #students #university #classroom #classroommanagement #learning #learn #teach #teaching #abuse #sexualabuse 

நாராயணா என்னும் நாமம் | திருமங்கை ஆழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

திருமங்கை ஆழ்வார் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடுகிறார். இவை நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாம் ஆயிரத்தில் அமைந்துள்ளவை. இந்த இனிய பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Wednesday, July 20, 2022

சிங்கள பவுத்தருடன் இணக்கம் ஏன்? | மறவன்புலவு சச்சிதானந்தன்

மதமாற்ற எதிர்ப்பு, பசுவதை தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுடன் இலங்கையில் சிவசேனை, தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இவற்றை ஆதரிக்கும் பவுத்தர்களுடன் இணைந்து பயணிக்கிறது. திருவாசகத்தைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கச் செய்து, அதனை இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கையளித்துள்ளார். சிங்கள பவுத்தர்களுடன் நட்பு பேணுகிறார். சிங்களர்களும் முன்பு தமிழர்களாக இருந்தவர்களே. சிங்கள மொழியில் 70 சதம் தமிழ்ச் சொற்களே உள்ளன என்கிறார். சிங்கள மொழியை ஏன் திராவிட மொழிக் குடும்பத்தில் சேர்க்கவில்லை என்ற சிந்தனை எழுகிறது. சமூக, சமய நல்லிணக்கம் சார்ந்த அவரது முன்னெடுப்புகள் குறித்து, சச்சிதானந்தன் அவர்களுடன் அர்த்தமுள்ள ஓர் உரையாடல் இதோ.  

One leg Crow

 Have you ever seen an one leg Crow?


நீங்கள் ஒற்றைக் கால் காகத்தைப் பார்த்திருக்கிறீர்களா?


https://youtu.be/X84_pPX8S-s

வாராயோ வேங்கடேசா | முகுந்த இராமானுஜ தாசர் | Tirumalai Tirupati Karuda Sevai

திருமலை திருப்பதி கருட சேவையின் சிறப்பினைக் குறித்து, 'வாராயோ வேங்கடேசா' என்ற பாடலை இயற்றிப் பாடுகிறார், முகுந்த இராமானுஜ தாசர். கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Tuesday, July 19, 2022

துள்ளிசை பஜனை | முகுந்த இராமானுஜ தாசர் | Mugunda Ramanuja Dasar Bhajan

பஜனை என்ற வடிவத்திற்குள் பல புதுமைகளை நிகழ்த்தி வருகிறார், முகுந்த இராமானுஜ தாசர். இதோ இங்கே துள்ளிசையுடன் கூடிய பஜனையை அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னை, திருநீர்மலையில் அவர் நிகழ்த்திய அசத்தலான பஜனையைக் கண்டு மகிழுங்கள்.

Monday, July 18, 2022

பேரறிஞர் அண்ணா உரை - 3 | தமிழ்நாடு பெயர்மாற்றம்

 சென்னை மாகாணம் என இருந்ததைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, 1.12.1968 அன்று நடந்த விழாவில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.


C.N.Annadurai, ex-chief minister of Tamilnadu, speech on Tamilnadu name change.


(ஜூலை 18 (1967) - தமிழ்நாடு பெயர் மாற்றம் நிகழ்ந்த நாள்)


https://youtu.be/xMuP08yst1U

Sunday, July 17, 2022

Tamilnadu Police used Siren to clear Traffic Jam

ஆம்னி பேருந்துகள், கடந்த ஆண்டுகளில் சென்னைப் புறவழிச் சாலையில் சென்றன. வானகரம் சுங்கச் சாவடி உள்ளிட்ட இடங்களில் மக்கள் நின்று அவற்றில் ஏறுவது வழக்கம். இப்போது அத்தனை வாகனங்களும் கத்திப்பாராவிலிருந்து தாம்பரம் வழியே ஜி.எஸ்.டி. சாலையில் செல்கின்றன. இவை பல இடங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக, ஓரங்களில் நிற்கின்றன. முக்கியமாக, தாம்பரம் ரெயில் நிலைய வாசலில் அதிகம் நிற்கின்றன. இதனால் அவற்றின் பின்னே நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் ஸ்தம்பித்து நிற்கின்றன. நின்றுகொண்டிருக்கும் வாகனங்களைக் கிளப்ப, இந்தக் காவலர் சைரன் ஒலியைப் பயன்படுத்துகிறார்.

அவசர ஊர்தி, தீயணைப்பு வாகனம், பெருந்தலைவர்கள் பயணம் போன்றவற்றில் சைரன் ஒலிப்பதைப் பார்த்திருக்கிறேன். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சைரன் ஒலியைப் பயன்படுத்துவதை இப்போது தான் பார்க்கிறேன். முக்கியமான, அவசரத் தருணங்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் எனப் படித்த ஞாபகம். இம்மாதிரி போக்குவரத்தைச் சரிசெய்யவும் சைரனைப் பயன்படுத்தலாமா?

நேமியும் சங்கமும் ஏந்தினானே | பெரியாழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதல் ஆயிரத்தில் அமைந்துள்ள பெரியாழ்வார் திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை நீலமேகம் பாட, முகுந்த இராமானுஜ தாசர் ஆடுகிறார். நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவினர், சென்னை, திருநீர்மலையில் நிகழ்த்திய பஜனையைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

Saturday, July 16, 2022

செவ்வாழை மால்ட் | வெந்தயக் களி | பிரண்டை இட்லி பொடி | Farmer's Food

தூத்துக்குடியில் உள்ள ஃபார்மர்ஸ் ஃபுட் (Farmer's Food) என்ற நிறுவனம், இயற்கை உணவுகள் பலவற்றைப் புதிய வடிவத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை நடத்தி வரும் பூர்ணிமா விக்னேஷ், முருங்கை நூடுல்ஸ், கேரட் நூடுல்ஸ், பீட்ரூட் நூடுல்ஸ், செவ்வாழை மால்ட், வெந்தயக் களி, பிரண்டை இட்லி பொடி.... எனப் பலவற்றைத் தயாரித்துச் சந்தைப்படுத்துகிறார். இவரிடமிருந்து அண்மையில் சில பொருள்களை நாங்கள் வாங்கினோம். அவை எப்படி இருக்கின்றன எனப் பாருங்கள்.

Unboxing food products delivered by Farmer's Food from Thoothukudi (Tutucorin)

Friday, July 15, 2022

மகராசர் காமராசர்

 பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜர் குறித்துச் சிறுவர் பாடல் ஒன்று எழுதினேன். மகராசர் காமராசர் என்ற இந்தப் பாடலை மூன்று மெட்டுகளில் ஷைலஜா பாடியுள்ளார். கேட்டு மகிழுங்கள். வாராது வந்த மாமணியைப் போற்றுங்கள்.

Here is my song on Kingmaker Kamaraj, who introduced the Kamaraj Plan & former chief minister of Tamil Nadu. Shylaja Narayan sung this song in three different tunes.

#பெருந்தலைவர் #கர்மவீரர் #காமராஜர் #காமராசர் #காமராஜ் #கல்வி #கல்விவளர்ச்சிநாள் #Kamaraj #Kamarajar #education #kingmaker #leader #tamilnadu #india

https://youtu.be/nyTEbRx4Q30

திருப்பல்லாண்டு | பெரியாழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

பெரியாழ்வார் இயற்றிய திருப்பல்லாண்டுப் பாடலை நீலமேகம் பாட, முகுந்த இராமானுஜ தாசர் ஆடுகிறார். நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவினர், சென்னை, திருநீர்மலையில் நிகழ்த்திய பஜனையைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

Thursday, July 14, 2022

ஆசிரியர்களுக்குப் பாத பூஜை எதற்காக? | Why Pada Pooja to Teachers?

Why Pada Pooja to Teachers? A discussion with Nirmala Raghavan.

குரு பூர்ணிமா அன்று, பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்யும் நடைமுறை, அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. குரு வந்தனம் என்ற பெயரில் முக்கிய சடங்காக இது இடம் பெற்றுள்ளது. இது சரியா? மரியாதையை இப்படித்தான் காட்ட வேண்டுமா? ஓய்வுபெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான நிர்மலா ராகவன் அவர்களுடன் ஓர் உரையாடல். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

Wednesday, July 13, 2022

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் | பெரியாழ்வார் திருமொழி

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே! 

என்ற பெரியாழ்வார் திருமொழியை நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவைச் சேர்ந்த நீலமேகம் பாடக் கேளுங்கள். 

வரவேண்டும் வரவேண்டும் | Varavendum Varavendum | Guru Purnima

இன்று குரு பூர்ணிமா. தபோவனம் ஞானானந்த கிரி சுவாமிகளைக் குருவாய் வணங்குவோர் பலர். அவரைப் பற்றி,  திருமதி மங்களம் சங்கரநாராயணன் இயற்றிய 'வரவேண்டும் வரவேண்டும்' என்ற பாடலை அவர் புதல்வர் கிருஷ்ணகுமார் இங்கே பாடுகிறார்.

Tuesday, July 12, 2022

ப்ரியா கல்யாணராமன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம் | Artist Shyam on Priya Kalyanaraman

குமுதம் ஆசிரியராக, புகழ் பெற்ற எழுத்தாளராக விளங்கிய ப்ரியா கல்யாணராமன், அண்மையில் தமது 56ஆவது வயதில் மாரடைப்பால் மறைந்தார். அவருடன் நெருங்கிப் பழகிய ஓவியர் ஸ்யாம், தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். 

Brinjal Gravy

 Hot & Spicy Brinjal Gravy.


நம்ம வீட்டுக் கத்தரிக்காய்க் குழம்பு, நாவுக்கும் நாசிக்கும் விழிக்கும் செவிக்கும் விருந்து.


https://youtu.be/VjmUU42Sy0I

Tambaram Wall Paintings | தாம்பரம் சுவரோவியங்கள்

தாம்பரம் மேம்பாலச் சுவர்களை அலங்கரிக்கும் அழகு திகழும் ஓவியங்கள் இதோ. கல்லூரி மாணவர்களின் கைவண்ணம், கலை வண்ணமாக மிளிர்வதைக் கண்டு மகிழுங்கள்.

Monday, July 11, 2022

சிவசேனையின் களப்பணிகள் | மறவன்புலவு சச்சிதானந்தன் | Groundworks of Sivasenai

'பசுவைத் தெய்வமாக மதிக்கின்றோம். இந்த மண்ணில் பசுக்களைக் கொல்லாதே. இந்த மண்ணின் மரபுகளை மதித்து இருப்பதானால் இரு, இல்லாவிட்டால் வெளியேறு'. இதுவே சச்சியின் குரல், சிவசேனையின் முழக்கம். யாழ்ப்பாணத்திலும் தமிழ் ஈழம் நெடுகிலும் நடைபெற்ற களப்பணிகள், போராட்டங்கள், எழுச்சிகள் குறித்து விவரிக்கிறார், மறவன்புலவு சச்சிதானந்தன்.

உயிரைக் காத்த வரதன் | முகுந்த இராமானுஜ தாசர் நேர்காணல் | Part 2

தன் உயிரைக் காஞ்சி வரதன் காத்து அருள் பாலித்தது எப்படி? உயிரில், உணர்வில் தேவராஜன் கலந்தது எப்படி? தாமே இயற்றிய பாமாலைகளால் இறைவன் புகழைப் பாடுகிறார் முகுந்த இராமானுஜ தாசர். அவரது நேர்காணலின் இரண்டாவது பகுதி இதோ.

Mukunda Ramanuja Dasar interview on his bhakti and bhajans at Thiruneermalai temple. Part 2

Sunday, July 10, 2022

Rocketry The Nambi Effect | ராக்கெட்ரி நம்பி விளைவு - சில கேள்விகள்

நடிகர் மாதவன், முதன்முதலாக இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்படத்தைப் பார்த்தேன். இந்தக் கேள்விகளை, உறுத்தல்களைத் தவிர்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்து என்ன?

My opinion on 'Rocketry The Nambi Effect'.

#RocketryTheNambiEffect #ராக்கெட்ரிநம்பிவிளைவு #Nambi #NambiNarayanan #Rocketry #ராக்கெட்ரி #TheNambiEffect #நம்பி #நம்பிவிளைவு #நம்பிநாராயணன் #director #directorMadhavan #Madhavan #ISRO #நடிகர் #மாதவன் #மாதவன் #Movie #film #tamil

தேவராஜன் போட்ட பிச்சை | முகுந்த இராமானுஜ தாசர் நேர்காணல்

பஜனைகளில் புதிய வீச்சையும் விறுவிறுப்பையும் கூட்டி, அர்ப்பணிப்புடன் ஆனந்த நர்த்தனம் ஆடி, திக்கெட்டும் சென்று திருப்பணிகள் ஆற்றி வரும் முகுந்த இராமானுஜ தாசர் அவர்களின் நேர்காணல் இதோ.

Saturday, July 09, 2022

கனடாவில் படிப்பதால் என்ன நன்மை? | Why to study in Canada?

கனடாவில் படிப்பதால் என்ன நன்மை? ஒரே பணிக்கு இந்தியாவைக் காட்டிலும் கனடாவில் ஊதியம் அதிகமாக இருக்குமா? கனடா குடியுரிமை வாயிலாக அமெரிக்காவில் பணியாற்ற முடியுமா? விரிவாகப் பதில் அளிக்கிறார்,கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

Thursday, July 07, 2022

Nithila Annakannan Ideas - 5 | Vertical Wiper

நித்திலாவின் புதிய யோசனை. உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.

Here is a new idea from Nithila Annakannan. We welcome your feedback.

Wednesday, July 06, 2022

மீன்கொத்தி

 நம் இல்லத்திற்கு இன்று வருகை தந்த மீன்கொத்தி.


Kingfisher today at our house in Tambaram.


https://youtu.be/jbrdKd48r6o

கனடாவில் உதவித் தொகையுடன் படிப்பது எப்படி | How to study in Canada with scholarship

கனடாவில் கல்வி உதவித் தொகையுடன் படிப்பது எப்படி? இதை வழங்கும் கல்வி நிறுவனங்கள் எவை? இதைப் பெறுவது எப்படி? இதற்கான தகுதிகள் என்னென்ன? பதில் அளிக்கிறார்,கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

How to Study in Canada with scholarship? An interview with CANext CEO Natraj Shriram. 

Tuesday, July 05, 2022

Fish Breathing

Fish Breathing at the Surface

நீருக்கு அடியில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும்போது, நீரின் மேற்பரப்பிற்கு வந்து மீன்கள் சுவாசிக்கும். இங்கே சில மீன்கள், நீரின் மேற்பரப்பிற்கு வந்து சுவாசிப்பதைப் பாருங்கள்.

https://youtu.be/EIQBoxb1PT4

முதலமைச்சர் அண்ணா வானொலி உரை | C.N.Annadurai Speech in All India Radio | 1967

தமிழ்நாட்டரசின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு வானொலியில் ஆற்றிய உரை இங்கே. அன்று அவர் பேசிய பலவும் இன்றும் பொருந்துவது நம்மை வியப்பில் ஆழ்த்தும். 55 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்போடு திகழும் இந்தக் குரலைக் கேளுங்கள்.

#dmk #admk #mdmk #aiadmk #dk #dravida #tamilnadu #politics #chiefminister #anna #அண்ணா #ArignarAnnaForever #cna #cnannadurai #Annadurai #அறிஞர் #பேரறிஞர்  #அறிஞர்அண்ணா #பேரறிஞர்அண்ணா #speech #publicspeech #orator #tamilnadu #AIR #AllIndiaRadio #ChennaiRadio #வானொலி #உரை #வானொலிஉரை #சென்னைவானொலி

108 வேல் பாடல் | பிரேமா நாராயணஸ்வாமி | 108 Vel song by Prema Narayanaswamy

108 முறைகள் 'வேல்' என்ற சொல் இடம்பெறும் பாடல், இது. 78 வயதில் இதை இயற்றி, இசையமைத்து, கணீர் என்று பாடுகிறார், பிரேமா நாராயணஸ்வாமி. கேட்டு மகிழுங்கள். வேல்! வேல்! வெற்றிவேல்!

Monday, July 04, 2022

காக்கையின் சாதுர்யம்

ஒரு பெரிய பொருளை எந்தப் புள்ளியில் பிடித்தால் சமநிலையுடன் தூக்கிச் செல்ல முடியும் என்பது இந்தக் காக்கைக்குத் தெரிந்திருக்கிறது.


This crow knows the art of balancing.


https://youtu.be/ouMEcb5aGvc

குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி? - 2

குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி? தம் அனுபவங்களின் வாயிலாக நிர்மலா ராகவன் முக்கியமான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்கியுள்ளார். இந்த இரண்டாம் பகுதியைப் பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

How to Bring up Responsible Children? An interview with Nirmala Raghavan. Part 2.

Sunday, July 03, 2022

கோவையில் ஒரு கொண்டாட்டம் | French Carnival at Coimbatore

கோவையில் அண்மையில் பிரெஞ்சு கார்னிவல் என்ற விழா நடைபெற்றது. குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லாத் தரப்பினரையும் கவரும் வகையில் நிகழ்ச்சியை அமைத்திருந்தார்கள். இந்த வண்ண மயமான, கோலாகல, கொண்டாட்டத்திலிருந்து சில துளிகள் இங்கே.

கோவையில் வழிப்பயணி | A co-passenger at Coimbatore

கோவை நகரப் பேருந்தில் இவரைச் சந்தித்தேன். படபடவெனப் பேசிக்கொண்டு வந்தார். ஆதரவற்ற நிலையில் உள்ளார். தமிழக அரசு, இவரைக் கண்டறிந்து, முதியோர் உதவித்தொகை வழங்க ஆவன செய்ய வேண்டுகிறேன்.

Saturday, July 02, 2022

குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தேவையா? | Is Bank Account Required for Children?

குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தேவையா? வங்கிப் பரிவர்த்தனைகளில் சிறுவர்கள் நேரடியாக ஈடுபடலாமா? அவர்கள் நிதியறிவு பெறத் தொடங்குவது எப்படி? எந்த வயதில்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

Is Bank Account Required for Children? How children can gain financial literacy? An interview with Ramakrishnan V Nayak.

சர்க்கரை வள்ளிக் கிழங்குப் பொரியல் | Sarkkarai Valli Kizhangu Poriyal

அருமையான சுவையும் சத்தும் நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்குப் பொரியல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். 

How to make tasty & healthy Sarkkarai Valli Kizhangu Poriyal (Sweet Potato Fry) by Sudha Madhavan.

Friday, July 01, 2022

குழந்தைகளுக்கான முதலீட்டுத் திட்டங்கள் | Investment Plans for Children

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முன்கூட்டியே சேமிக்கத் தொடங்குவது அவசியம். அவர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றங்களுக்கும் இலக்குகளுக்கும் நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது. தரமான கல்வி, திறன்கூட்டும் பயிற்சிகள், போட்டித் தேர்வுகள், வெளிநாட்டு மேற்படிப்பு, திருமணம் போன்ற பலவற்றுக்கும் திட்டமிடுவது நல்லது. ஆனால், இதை எங்கே தொடங்குவது? குழந்தைகளுக்கான முதலீட்டுத் திட்டங்கள், வாய்ப்புகள் என்னென்ன உள்ளன? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

Investment Plans for Children. An interview with Ramakrishnan V Nayak.

ஆதிமூலமே | முகுந்த இராமானுஜ தாசர் பஜனை | Mugunda Ramanuja Dasar Bhajan

'ஆதிமூலமே ஆதிமூலமே' என்ற பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினரின் ஆடல், பாடல், பஜனை. தஞ்சை வீதிகளில் நின்று வேடிக்கை பார்த்தோரையும் தன்வசம் ஈர்த்து நடனம் ஆடவைத்த பக்தி நர்த்தனம். கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.