ஆம்னி பேருந்துகள், கடந்த ஆண்டுகளில் சென்னைப் புறவழிச் சாலையில் சென்றன. வானகரம் சுங்கச் சாவடி உள்ளிட்ட இடங்களில் மக்கள் நின்று அவற்றில் ஏறுவது வழக்கம். இப்போது அத்தனை வாகனங்களும் கத்திப்பாராவிலிருந்து தாம்பரம் வழியே ஜி.எஸ்.டி. சாலையில் செல்கின்றன. இவை பல இடங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக, ஓரங்களில் நிற்கின்றன. முக்கியமாக, தாம்பரம் ரெயில் நிலைய வாசலில் அதிகம் நிற்கின்றன. இதனால் அவற்றின் பின்னே நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் ஸ்தம்பித்து நிற்கின்றன. நின்றுகொண்டிருக்கும் வாகனங்களைக் கிளப்ப, இந்தக் காவலர் சைரன் ஒலியைப் பயன்படுத்துகிறார்.
அவசர ஊர்தி, தீயணைப்பு வாகனம், பெருந்தலைவர்கள் பயணம் போன்றவற்றில் சைரன் ஒலிப்பதைப் பார்த்திருக்கிறேன். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சைரன் ஒலியைப் பயன்படுத்துவதை இப்போது தான் பார்க்கிறேன். முக்கியமான, அவசரத் தருணங்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் எனப் படித்த ஞாபகம். இம்மாதிரி போக்குவரத்தைச் சரிசெய்யவும் சைரனைப் பயன்படுத்தலாமா?
No comments:
Post a Comment