திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசியில் அமைந்துள்ள அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வந்தோம். பாடல் பெற்ற இத்தலத்தில், முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டார் என்பது தலவரலாறு. ‘புக்கொளியூர் அவிநாசியே’ என்று சுந்தரரும் ‘அரிய பொருளே அவிநாசியப்பா’ என்று மாணிக்கவாசகரும் பாடியுள்ளனர். அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
நாங்கள் சென்ற நேரத்தில் ஆலயத்தின் வாயிலில் வீதியுலாவுக்கு ஆயத்தமாகும் நிலையில், பால தண்டாயுதபாணி ஐம்பொன் திருமேனியின் திவ்ய தரிசனம் கிடைத்தது. இக்கோவிலில் திருநீறு, குங்குமப் பிரசாதத்தை நெற்றிக்கு இட்டுக்கொள்ள தனியே நிலைக்கண்ணாடியும் வைத்திருக்கிறார்கள். பார்த்து மகிழுங்கள்.
No comments:
Post a Comment