!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> முரசொலி மாறனுக்குச் சிலை!!!?? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, December 09, 2006

முரசொலி மாறனுக்குச் சிலை!!!??



திமுக தலைவர் கருணாநிதியின் மனம் கவர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முழு உருவச் சிலை, பாராளுமன்ற வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்தார். மாறன் சிலை, பாராளுமன்றத்தில் மேலவை செல்லும் வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 8 அன்று காலை நடந்த விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் செகாவத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் அத்வானி, சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, மத்திய மந்திரிகள் சரத்பவார், மணிசங்கர் அய்யர், ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ராஜா, ஜெயபால் ரெட்டி, ஜி.கே.வாசன், ரகுபதி, வெங்கடபதி, பழனிமாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன், வேலு, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா. அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி,

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் குருதாஸ் குப்தா, தெலுங்கு தேசம் பாராளுமன்றத் தலைவர் எர்ரன்நாயுடு, முன்னாள் தமிழக ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர், கரண்சிங், தொழில் அதிபர் ராகுல் பஜாஜ், எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், ஏ.கே.மூர்த்தி, பெல்லார்மின், மோகன், அப்பாதுரை,

முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன், முரசொலி செல்வம், அவருடைய மனைவி செல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இறை உருவங்களின் சிலைகளை ஒரு பக்கம் தள்ளி வைப்போம். மனிதர்களின் சிலைகளை இப்போது கணக்கில் எடுப்போம். சிலையாக ஒருவரை வடிப்பதே முதலில் விமர்சனத்திற்கு உரியது. அவருடைய கருத்துகளை விட அவரது உருவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சரி, ஒருவரின் உருவம் என்பது அவரது கொள்கைகளுக்குக் குறியீடு என்று வைத்துக்கொண்டால் அதனை நாம் ஒரு கட்டம் வரைக்கும் அனுமதிக்கலாம்.

மேலும் ஒருவரின் சாதனைகளுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்றும் அதைக் கருதினால், சாதனையாளர்கள் அனைவருக்கும் சிலை வைக்கிறோமா? என்ற கேள்வி எழும். அப்படியே சாதனையாளர்களுக்கு அங்கீகாரம் என்று எடுத்துக்கொண்டாலும் சாதனை என்பதன் அளவீடு என்ன? அதனுடைய படிநிலைகள் என்ன? எந்த அளவு செயல்கள், சாதனைகள் புரிந்தவருக்குச் சிலை வைக்கலாம் என்ற எந்த அளவீடும் நம்மிடம் இல்லை.

இப்போதைய நடைமுறை என்னவென்றால், ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் கட்சிகள் முடிவு செய்வதே இறுதி நிலை என்றாகிறது. இது மக்களின் ஏகோபித்த விருப்பம் என்றும் கருத இயலாது. மக்களிடம் இன்னாருக்குச் சிலை வைக்கலாமா என்று வாக்கெடுப்பு ஏதும் நாம் நடத்துவதில்லை. அரசியல் கட்சித் தலைவர் சொன்னதுதான் சட்டம் என்றால், அவர் கை காட்டும் யாருக்கும் சிலை வைத்துவிடலாமா? சிலைக் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் குழு, பொம்மைக் குழுதானா?

அடுத்ததாகச் சிலை வைக்கும் இடங்களைப் பார்ப்போம். சாலை நடுவிலும் முக்கிய பகுதிகளிலும் இன்னும் மனிதர்களின் விருப்பப்படி எங்கும் சிலைகள் வைக்கப்படுகின்றன. ஒரு பகுதியில் சிலை வைப்பதற்கு என்ன அளவுகோல் இருக்கிறது? பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைப்பது, ஒரு கெளரவம் என்றால் அதற்கான நெறிமுறைகளை அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். சிலைக் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் குழு பரந்து பட்டதாக இருக்கவேண்டும். அது, அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கவேண்டும்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை திறப்புக்கு வராத பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் மாறன் சிலையைத் திறந்து வைக்கத் தவறவில்லை. இந்தத் தருணத்தில் எம்ஜிஆரையும் முரசொலி மாறனையும் எவருமே ஒப்பிடத்தான் செய்வார்கள். தமிழகத்தில் மூன்று முறைகள் தொடர்ந்து முதல்வராகப் பதவி வகித்த எம்ஜிஆர், நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் மக்களை ஈர்த்த தலைமைத்துவத்திலும் மேலும் சிலவற்றிலும் சிறந்து விளங்கினார். ஆனால், மாறனுடைய பங்களிப்பு, தேசிய அரசியல் என்ற அளவிலும்கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவரின் பெருமைகளாகக் கூறப்படுபவை, மிகையான புகழுரைகள்.

தமிழ்நாட்டிலிருந்து பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்க வேறு சிறந்த நபர்கள் யாரும் கிடைக்கவில்லையா? மீதம் உள்ள அனைவரையும் விட மாறனின் பங்களிப்பு சிறந்ததா? மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் ஒரே காரணத்தால் திமுகவின் கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளலாமா? இப்படி சுய ஆதாயம் தேடும் அரசியல் நோக்குள்ள கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதன் மூலம் மத்திய அரசின் தரம் தாழ்ந்துவிட்டது.

இப்படி விமர்சிப்பது, மாறன் ஒன்றுமே செய்யவில்லை என்ற அர்த்தத்தில் இல்லை; அவரையும் விடச் சாதித்த பெரிய மனிதர்கள் கவனிக்கப்படாமல் இருக்க, இப்படி கருணாநிதியின் ஒற்றை விருப்பத்தினால் மாறன், சிலைப் பந்தயத்தில் முந்துவது ஏற்புடையதா என்பது பற்றியே.


நன்றி: தமிழ்சிஃபி

27 comments:

Anonymous said...

சிலை கலாசாரத்திற்கான வித்தே இந்த திமுகதான். பெரியவர் விருப்பம், மத்திய அரசுக்கு ஆட்சி விருப்பம். இதில் மக்கள் விருப்பமோ, மற்றவர் விருப்பமோ எதுக்கு அவசியம்.

அருமையான பதிவு. பகுத்தறிவு பாசறைகள், கடவுள் சிலைகளை அவமதிக்கும், இந்தச் சிலைகளை அனுசரிக்கும்.

அகிலா said...

நீங்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கிறது. நம் நாட்டில் தான் வாய்மூடி கைக்கட்டி சேவகம் செய்கிறோம் அரசியல்வாதிகளுக்கு. வேதனையான விசயம் தான். கேட்பாரில்லாமல் போய்விட்டது. சில குழுக்கள் சுயலாபத்திற்காக நடுநிலையை தவறவிட்டுவிடுகின்றன. என்ன செய்யலாம்???

கருப்பு said...

எம்ஜிஆர் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவியதை பாப்பார பன்னாடைகள் ஆதரிப்பது ஏன்?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மாறன், எம்ஜிஆர் இருவருமே சிலை வைக்கத் தக்க அளவு என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இருவரும் அரசியல் வாதிகள் தான். அதற்கு மேல் உயர்ந்து செய்ததாக எதுவும் தெரியிவில்லை. அண்ணா, பெரியார், காமராஜர் இவர்களை தவிர சென்ற அரை நூற்றாண்டில் தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றத்தை யாரும் ஏற்படுத்தியதாகத் தோன்றவில்லை. ஆனால், எந்த சிலையை வைப்பது எந்த சிலையை எடுப்பது (ஆப்கனில் புத்தர் சிலை அழிப்பு) என்பதை உலகம் முழுக்க ஆட்சியாளர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். இந்த புலம்ப ஒன்றுமில்லை. வேறு எங்காவது மக்களிடம் கருத்து கேட்டு சிலை வைக்கிறார்கள் என்று தெரிந்தால் சொல்லுங்கள்

Anonymous said...

Super. You have exactly put what ever came to my mind when I heard the news. But you have presented it in a very logical manner. But how to spread this news to the public. Please send this article to some news papers like Hindu, dinamalr etc and let us see whether they publish or not.

வெங்கட்ராமன் said...

பா ஜ க ஆட்சிக்கு முந்தைய கூட்டனி ஆட்சியிலும் முறசொலிமாறன் மத்திய அமைச்சர்.

பா ஜ க ஆட்சியில் முறசொலிமாறன் மத்திய அமைச்சர்.

காங்கிரஸ் ஆட்சியில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர்

என்ன செய்வது ஆட்சி சுகத்தை சுகத்தை அனுபவிக்கும் _____ தனம் இது.

வெங்கட்ராமன் said...

தவறாக எழுதப்படும் வரலாறுகள்

என்ற தலைப்பில் இந்த விஷயத்தைப் பற்றி எழுதலாம் என்று இருந்தேன், நல்ல வேளை நன்றாக எழுதி விட்டீர்கள்.

நல்ல பதிவு, தொடருங்கள்.

முனைவர் அண்ணாகண்ணன் said...

எம்ஜிஆருக்குச் சிலை எதற்காக? என்ற கேள்வியும் சிந்தனைக்கு உரிய ஒன்றுதான். அவரையும்விடச் சிறந்தவர்கள், சாதித்தவர்கள் உண்டு. ஆனால், அவராவது ஒரு கட்சியின் தன்னிகரற்ற தலைவராக விளங்கியவர்; மாறன், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில்தானே இருந்தார்? கருணாநிதியையும் மாறனையும் ஒப்பிட்டாலே மாறன் எங்கு நிற்கிறார் என்று எளிதாகப் புரிந்துவிடும்.

Hariharan # 03985177737685368452 said...

சென்னையில் தனக்குச் தானெ சிலை வைத்து மகிழ்ந்த கருணாநிதி தற்போது தனது மனச்சாட்சிக்கு மனச்சாட்சி இல்லாமல் சிலை வைத்து அழகு பார்க்கிறது!

மன்மோகன் சிங்கை தயவு செய்து பிரதமர் என்று சொல்லாதீர்கள். அவர் உண்மையான் பிரதமரின் ஏவலாள் போகாதே என்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு எம்ஜிஆர் சிலை திறப்புக்கு மறைந்தும் மனச்சாட்சி சிலைதிறப்புக்கு நிறைந்தும் காணப்பட்டார்!

உயிரோடு இருந்த போது தமிழ்நாட்டில் நிறுவிக்கொண்ட மாதிரி கருணாநிதியின் ஆசை அவரது சிலையை அங்கே நிறுவிக்கொள்வது தான். அந்த அளவுக்கு பிளாக்மெயில் செய்ய செல்வாக்கு வரவில்லை போலிருக்கிறது!

கண்றாவி! எவனுக்குமே சிலை வைப்பதை அறவே தடுக்க வேண்டும். காந்தியை தவிர்த்து!

Anonymous said...

மறைந்த அண்ணன் முரசொலி மாறன் அவர்கள் தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் தனது இறுதி மூச்சு இருந்த வரை பாடுபட்ட போராளி. கட்சியே குடும்பம் என்று பாடுபடும் தொண்டர்களுக்கிடையில் குடும்பமே கட்சி என்ற கொள்கையில் முதலில் நிற்பவரின் நேரடி வாரிசு. எனவே தான் அவருக்கு சிலை. போங்கப்பா, எல்லாரும் போய் வேலையை பாருங்க.

bala said...

//மன்மோகன் சிங்கை தயவு செய்து பிரதமர் என்று சொல்லாதீர்கள். அவர் உண்மையான் பிரதமரின் ஏவலாள் போகாதே என்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு//

ஹரிஹரன் அய்யா,
சரியான கருத்து. ஜெயலலிதாவுக்கு பன்னீர்செல்வம்.சோனியாவுக்கு மன்மோஹன். அவ்வளவு தான்.

பாலா

பங்காளி... said...

1967 முதல் 2003 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர்....

கடந்த பத்தாண்டு கால இந்திய அரசியலில் அதன் முடிவுகளில் முக்கிய பங்காற்றியவர்....

தமிழகம் இன்றைக்கு தொழில்மயமாகி வருவதற்கு வித்திட்டவர்....

இந்தியாவின் டெட்ராய்ட் என பெருமையாய் கூறிக்கொள்கிறீர்களே அதற்கு அடித்தளமிட்டவர்....

நாங்குநேரி தொழில் பூங்காவிற்கு அடி கோலியவர்....

பத்தாம் வகுப்பை தாண்டாததுகள்தான் ஊளையிடுகின்றன என்றால்...உங்களைப் போன்ற நூல் வடிக்கும் ஆற்றல் பெற்றவர்களுமா இப்படி....

குறையில்லாத மனிதன் ஒருவனை காட்டுங்கள்....மாறன் பற்றிய உங்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறேன்....

Voice on Wings said...

பங்காளியின் கருத்துடன் உடன்படுகிறேன். மாநில அளவில் பங்காற்றியதை விட தேசிய அளவில், குறிப்பாக WTO (Doha round) போன்ற சர்வதேச மன்றங்களில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. SEZ திட்டத்திற்கு வித்திட்டவரும் அவர்தான் என்று அறிகிறேன். அத்திட்டத்தின் மீது எனக்கு விமர்சனமிருந்தாலும், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்தை முன்வைத்தவர் என்ற வகையில் அவர் தேசிய அளவில் கௌரவிக்கப்படுவது சரியென்றே தோன்றுகிறது. மன்மோகன் சிங், ப. சிதம்பரம், போன்றவர்களின் பங்களிப்பிற்கு சற்றும் குறைந்ததல்ல அவரது பங்களிப்பு.

Anonymous said...

If the statue in the parliment is a kid of recognition rules to be formulated. For eg, 1)they should have got Bhartaha Ratna award 2)Opinion poll from public etc

ஜடாயு said...

தமிழகத்தின் தலைசிறந்த மக்கள் தலைவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர். அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா எப்போதோ வழங்கப் பட்டு விட்டது (தமிழ் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ் இசைமேதை எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு இது வருவதற்கு சுமார் 15 ஆண்டுகள் முன்னமேயே!! தன்னை விட மூத்த அரசியல் தலைவர் பசுமைப் புரட்சி நாயகர் சி. சுப்பிரமணியத்திற்கு வருவதற்கும் முன்னாலேயே! காரணத்தை நீங்களே கண்டறியுங்கள்). டெக்னிக்கலி, இந்தச் சிறப்பு ஒன்றே போதும். அவர் சிலையை பாராளுமன்றத்தில் வைப்பதற்கு நிறைய முகாந்திரம் உள்ளது.

முரசொலி மாறன் இத்தகைய சிறப்புக்கு எந்த வகையிலும் தகுதியில்லாதவர். சில முறை மத்திய அமைச்சராக இருந்தார், தான் ஆவியான பின்னரும் தன் கத்துக்குட்டி மகன் மத்திய அரசில் நுழைந்து குடும்பச் சொத்தை வளர்ப்பதைப் பார்த்து மகிழ்கிறார் என்பதைத் தவிர அவர் என்ன கிழித்து விட்டார்?? தங்கள் குடும்ப நலனை முன் நிறுத்துதல் என்பதில் மாறன், கருணாநிதி குடும்பம் நிறுத்த முடியாத அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
பங்குச் சந்தையில் இடம் பிடித்தாயிற்று. Forbes உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தாயிற்று, இந்தியப் பாராளுமன்ற வளாகத்திலும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சிலைக்கு இடம் பிடித்தாயிற்று !

லக்கிலுக் said...

பிற்படுத்தப்பட்டத் தலைவர் ஒருவர் எதிர்காலத்தில் அறிவாளி என அறியப்படக்கூடாது என்ற ஆதங்கம் இந்தப் பதிவில் இருப்பதாக உணருகிறேன்.

Anonymous said...

//பிற்படுத்தப்பட்டத் தலைவர் ஒருவர் எதிர்காலத்தில் அறிவாளி என அறியப்படக்கூடாது என்ற ஆதங்கம் இந்தப் பதிவில் இருப்பதாக உணருகிறேன். //

பாருங்க, எப்படிப்பட்ட பின்னூட்டம்ன்னு?.....இது கருணாநிதியில் ஆரம்பித்து கடைநிலை ஊழியர் வரை பரவிவிட்டது...ஏதாவது லாஜிக்கலாக எதிர்த்தால் உடனே சாதீயத்தில் முடித்துவிடுவது.

இவர்களது லாஜிக் படி பார்த்தால், நாளை கமல்நாத், சிதம்பரம், போன்ற எல்லோருக்குமெ சிலை இருக்கும்....ஏன் சிபு சிரோன் சிலை கூட வைக்கலாம்

Anonymous said...

அய்யா இது பதிலுக்கு பதில் அவ்வளவுதான், எம்.ஜி.ஆரை தூக்குங்கள், மாறன் வெளியேறிவிடுவார்.

Anonymous said...

As far as I know he used his ministrial poat to take treatment for his health at Govt. Expense. He spent most of the days in the hospital

ENNAR said...

சிலை வைப்பதில் ஒரு தத்துவம் உண்டு எங்கே கலைஞரை தனக்கு அல்லது ஸ்டாலினுக்கு வைக்கச் சொல்லுங்கள் எங்காவது ஒரு சின்ன மூலையில் வைக்கமாட்டார்கள். உயிரோடு இரப்பவருக்கு சிலை வைத்து அவரது புகழை மங்கவைத்தனர் (காமராஜ்) உயிரோடு இருப்பவருக்கு சிலை வைத்தால் அவரது புகழ் மங்கும் என்பது தத்துவம்

bala said...

//பிற்படுத்தப்பட்டத் தலைவர் ஒருவர் எதிர்காலத்தில் அறிவாளி//

அண்ணா கண்ணன் அய்யா,

மாறன் அய்யா போல்,ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஒடுக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, 50% சிலை ஒதுக்கீடு செஞ்சா சமூக நீதி காப்பாற்றப்படும்னு தோணுது. லக்கி அய்யா ஒத்துப்பார்னு நினைக்கிறேன்.

பாலா

Anonymous said...

//எம்ஜிஆர், நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் மக்களை ஈர்த்த தலைமைத்துவத்திலும் மேலும் சிலவற்றிலும் சிறந்து விளங்கினார்.//

" மேலும் சிலவற்றிலும் " - GOT IT!!! :-)

அகிலா said...

வ‌ர‌லாறு த‌வ‌றாக‌ எழுத‌ப்ப‌டுகிற‌து என ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் மேலே சொல்லியிருந்தார். அதைவிட‌ வ‌ருத்த‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விச‌ய‌த்தை நான் இங்கு "சில" பின்னூட்ட‌ங்க‌ளிலே பார்க்கிறேன். நாம் ஏன் எப்போதும் ஜாதி என்கிற‌ போர்வையை போர்த்திக்கொள்கிறோம். ஒரு விவாதத்தை ஆரோக்கிய‌மாக‌ ந‌ம்மால் வ‌ள‌ர்த்த‌ முடிவ‌தில்லை. எல்லோருக்கும் க‌ருத்து சுத‌ந்திர‌ம் உண்டு. நான் ம‌றுக்க‌வில்லை. ஒருவ‌ர் இந்தந்த காரணங்களால் இவ‌ருக்கு சிலை வைக்க‌ எந்த‌ த‌குதியும் இல்லைன்னு சொன்னால், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அதை ஆத‌ரித்தோ இல்லை எதிர்த்தோ விம‌ர்சிக்க‌லாம். அதை விட்டுவிட்டு இங்கு எங்கிருந்து ஜாதி வ‌ந்த‌து. ந‌ம் த‌லைமுறையிலாவ‌து பழைய‌ன‌வ‌ற்றை க‌ளைந்து எரிந்துவிட்டு ஒரு புதிய‌ பார‌த‌ம் ப‌டைப்போம் என்று ந‌ம்பியிருந்தேன். இப்ப‌டியே ஜாதியை க‌ட்டிக்கொண்டு பின்னோக்கி ப‌ய‌ணிக்க‌ போகிறோமா என்றொரு அச்ச‌ம் வ‌லுப்பெருகிற‌து.

பி.கு: நான் மதங்களையும் ஜாதிகளையும் விட மனசாட்சி மதிப்பவன், நண்பர்கள் நான் ஏதொவொரு பிரிவை ஆதரிப்பதாக எண்ணி எதிர் தாக்குதல் தரவேண்டாம்.

கால்கரி சிவா said...

சிலைகள் வைப்பது நியாயம்தான் ஆனால் எங்கு என்பதுதான் கேள்வி.

அண்ணாதுரை என்ன சாதித்துவிட்டார்? இரண்டு வருடம் தமிழக முதலமைச்சராக இருந்தார். அவ்வளவுதான். அவருக்கு தமிழ்நாடு முழுவதும் சிலை அவர் பெயரில் தமிழ்நாடு முழுவதும் தெருபெயர்கள். இது ஒரு தனிமனித வழிபாடு. அவருடைய க்ளீன் இமேஜை காட்டி ஓட்டு வாங்கும் தந்திரம். இதேபோல் தான் எம்.ஜி.ஆர், காந்தி மற்றும் ஏனையோர்.

சிலை வைக்க ஏதுவான இடம் இந்த மாதிரி ஆட்கள் பிறந்த ஊரில் அல்லது வாழ்ந்த இல்லத்தில்தான். ஒரே ஒரு சிலை போதுமே. அவர்களின் சாதனைகளை புத்தகமாக இட்டு நூல் நிலையங்களில் சேமித்தால் போதுமே. எதிர்கால சந்ததியினர் இவர்களைப் பற்றி அறிய.

அருமையான கடற்கரையை மயான பூமியாக மாற்றி இறந்தவர்களின் சிலைகளைவத்து இயற்கையை செயற்கைதனத்தால் கெடுத்தும் குட்டி சுவரானதைத் தான் பார்க்கிறோம். இந்த சமாதிகள் பஸ் ஸ்டாண்டுகளாகவும் சிலைகள் சுண்டல் ஸ்டாண்டுகளாகவும் தான் பயனைடகின்றன. வேறு ஒரு பயனுமில்லை.

இவர்களுக்கும் ஸ்டாலின், மாவோ, சதாம் உசைன் போன்ற கொடுங்கோலருக்கும் அதிகம் வித்தியாசமில்லை

கால்கரி சிவா said...

சிலைகள் வைப்பது நியாயம்தான் ஆனால் எங்கு என்பதுதான் கேள்வி.

அண்ணாதுரை என்ன சாதித்துவிட்டார்? இரண்டு வருடம் தமிழக முதலமைச்சராக இருந்தார். அவ்வளவுதான். அவருக்கு தமிழ்நாடு முழுவதும் சிலை அவர் பெயரில் தமிழ்நாடு முழுவதும் தெருபெயர்கள். இது ஒரு தனிமனித வழிபாடு. அவருடைய க்ளீன் இமேஜை காட்டி ஓட்டு வாங்கும் தந்திரம். இதேபோல் தான் எம்.ஜி.ஆர், காந்தி மற்றும் ஏனையோர்.

சிலை வைக்க ஏதுவான இடம் இந்த மாதிரி ஆட்கள் பிறந்த ஊரில் அல்லது வாழ்ந்த இல்லத்தில்தான். ஒரே ஒரு சிலை போதுமே. அவர்களின் சாதனைகளை புத்தகமாக இட்டு நூல் நிலையங்களில் சேமித்தால் போதுமே. எதிர்கால சந்ததியினர் இவர்களைப் பற்றி அறிய.

அருமையான கடற்கரையை மயான பூமியாக மாற்றி இறந்தவர்களின் சிலைகளைவத்து இயற்கையை செயற்கைதனத்தால் கெடுத்தும் குட்டி சுவரானதைத் தான் பார்க்கிறோம். இந்த சமாதிகள் பஸ் ஸ்டாண்டுகளாகவும் சிலைகள் சுண்டல் ஸ்டாண்டுகளாகவும் தான் பயனைடகின்றன. வேறு ஒரு பயனுமில்லை.

இவர்களுக்கும் ஸ்டாலின், மாவோ, சதாம் உசைன் போன்ற கொடுங்கோலருக்கும் அதிகம் வித்தியாசமில்லை

கூத்தாடி said...

//தமிழகத்தின் தலைசிறந்த மக்கள் தலைவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர். அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா எப்போதோ வழங்கப் பட்டு விட்டது //

பாரத ரத்னா வழங்கும் அளவுக்கு அவர் துகுதியானவரா என்ன ? எந்த சூழ்நிலையில் கொடுக்கப் பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..அதுவும் ஓட்டு அரசியல் தான் ..உங்களுக்குப் பிடித்தவர் என்றாலொரு நியாயமும் பிடிக்காதவர் என்றால் ஒரு நியாயமும் தவறானது..

எம்ஜியாருக்கு பாரத ரத்னா கொடுப்பது நியாயம் என்றால் கருணாநிதிக்கும் கொடுக்கலாம் ..பாஜக ஆட்சியில் இருந்து பால் தாக்கரே போய் விட்டால் அவருக்கூம் கொடுக்கலாம் ..

Anonymous said...

நரசிம்மராவ் அவர்களுக்கு சிலை இருக்கிறதா? தோஹா மாநாட்டில் அவர்
பேசிய பேச்சு இந்திய அரசின் நிலைப்பாடின் தொடர்ச்சியே!!
அதுவரை நாம் எடுத்துவந்த வளரும் நாடுகளின் வர்த்தக அளவின் கட்டுப்பாடுகுறித்த நிலையில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அந்த இடத்தில் வேறு அமைச்சர் இருந்தாலும் அவரும்,முரசொலிமாறனுடைய செயலையே செய்திருப்பார். ஆனால்,
Definitely there were many Central ministers from tamilnadu who did better and have equal credibility as he has. It is nothing but a political move.

It is not a move to praise him for his backward class.

How many of you think that M.Maran family was treated ill because of his community?