!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> நளினியை விடுவிக்க இயக்கம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, January 20, 2007

நளினியை விடுவிக்க இயக்கம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினியை விடுவிக்க கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பாடலாசிரியரும் கவிஞருமான தாமரை, இந்த இயக்கத்தின் அமைப்பாளராகச் செயல்படுகிறார். இந்தக் கையெழுத்து இயக்கம் தொடர்பாக தாமரை விடுத்துள்ள செய்திக்குறிப்பு, பிடிஎஃப் கோப்பாகக் கீழே உள்ளது.



உங்கள் கணினியில் அக்ரோபாட் ரீடர் இல்லாதவர்கள், அதை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

இது தொடர்பாகத் தாமரையிடம் பேசியபோது, "ஆயுள் தண்டனை என்பது, ஆயுள் முழுதும் சிறையில் இருப்பதே என்று நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது. எனவே, மனிதநேய அடிப்படையில் நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறோம். 16 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ள நளினி, அவரின் 14 வயது மகளுடன் இனியாவது சேர்ந்து வாழ வேண்டும்" என்று கூறினார்.

இந்தக் கையெழுத்து இயக்கத்தை இணையம் வழியாகவும் நடத்தவேண்டும் என்று விரும்பும் அவர், இதற்கெனத் தனிப் படிவத்தை விரைவில் வெளியிட உள்ளார்.

நன்றி: தமிழ்சிஃபி

5 comments:

சிறில் அலெக்ஸ் said...

சிறையில் அல்லல்படும் மக்கள் இன்னும் பலர் இருப்பார்களே அவர்களுக்காகவும் இந்த இயக்கம் கையெழுத்து சேகரிக்கப் போகிறதா? நளினிக்கு எந்த அடிப்படையில் இந்த சிறப்பு தகுதி? இதையெல்லாம் கடிதம் சொல்லவில்லையே?

அவர் இதற்குத் தகுதியானவர் என்கிற பட்சத்தில் நிச்சயம் இந்த இயக்கம் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்,

Sri Rangan said...

அன்பு அண்ணாக்கண்ணன்,வணக்கம்!


இந்த விடையத்தில் இந்திய ரோவுக்கு மிகப் பெரும் பங்கு இருப்பது ஊரறிந்தவுண்மை!


இந்தியத் தலைவரைக் கொலை செய்வது அவ்வளவு இலேசான காரியமில்லை.


அது புலியாக இருந்தாலென்ன அல்லது அமெரிக்க உளவுப்படையாக இருந்தாலென்ன இது இந்திய உளவுப்படையின் உதவியின்றி முடியாத காரியம்.


எனவே நளினி விடுதலையாவது மனிதாபிமான முறையில் மிக அவசியம்!


எய்தவர்கள் பதவி-அதிகாரங்களில் இன்னும் இருக்க, அம்புகளை நோவதில் என்ன இருக்கு?


ஒரு சாதரணமான மனிதரால் இந்தவுண்மையை மிக எளிதாக அறிய முடியும்.


இந்தியா என்பது வெறும் சினிமாத் தனமான நாடு அல்ல.


அது மிகப் பெரும் வலுவுள்ள, உலகத்திலேயே மிக முன்னேறிய பாதுகாப்பு அரணுடைய நாடு.


அந்த நாட்டின் அதிபரை ஒரு சின்னஞ்சிறு அமைப்பு...


கேட்க, கவுண்டமணி செந்தில் காமடிகூட முன்னேறிய மாதிரி இருக்கு.


எனவே நளினி அப்பாவி.


விடுதலையாவது அவசியம்.


கையெழுத்துப் போடுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.


அறியத் தாருங்கள்.


இது நல்ல முயற்சி.
கூடவே உங்களுக்கு என் நன்றி!

We The People said...

இதெல்லாம் ஒரு பொழப்ப்பா அண்ணாகண்ணன்!!! ஏன் இந்த தாமரை போன்றவர்கள் http://www.ibnlive.com/news/son-rises-to-save-pow-dad-from-pak/31588-3.html இந்த செய்தியில் உள்ளவர்களை காப்பாற்ற ஒரு இயக்கம் ஆரம்பிக்கவில்லை??

என்னமோ போங்க நாடு எங்க போகுதேன்னு புரியலை!!!

:(((((((((((((((

Anonymous said...

சரி நள்னியை விடுதலை செய்து விடலாம்.

பிரபாகரன் பொட்டு அம்மன் போன்ற குற்றவாளிகள் கதி என்ன?

தெரிந்தே சதி செயத குற்றத்திற்க்கு நளினிக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியதே தவறு.

இங்கு எங்கு மனித நேயம் வருகிறது?
குற்றம் என்று தெரிந்தே கொலை செய்த ஒருவரை தண்டிப்பதே சிறந்தது.

தாமரை இது போல காரியங்கள் செய்வதை விட பிளாட்பாரம் வாழும் அனாதை குழந்தைகளை காப்பாற்ற பெட்டிழன் அனுப்பினால் நலம்.

Anonymous said...

வேண்டுமென்றால் மகளும் சேர்ந்து சிறையில் இருக்கட்டுமே!