!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழ்சிஃபி ஒருங்குறிக்கு மாறிவிட்டது ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, February 11, 2007

தமிழ்சிஃபி ஒருங்குறிக்கு மாறிவிட்டது

நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது. 7 ஆண்டுகளின் உள்ளடக்கத்தோடு பல்லாயிரக்கணக்கான பக்கங்களுடன் தமிழ்சிஃபி, 2007 ஜனவரி 26 அன்று ஒருங்குறிக்கு மாறிவிட்டது.

2006 தொடக்கத்தில் ஒருங்குறிக்கு மாறவேண்டியதன் தேவையை அலுவலகத்தில் வலியுறுத்தினேன். அவர்களும் ஒப்புதல் வழங்கினார்கள். ஆயினும் பல்வேறு காரணங்களால் அந்த முயற்சியில் தாமதம் ஏற்பட்டது.

இடையில் வாசகர்கள், நண்பர்கள் பலரும்கூட இதை என்னிடம் நேரிலும் இணையத்திலும் வலியுறுத்தி வந்தார்கள். படிப்படியாகப் பல பணிகளை நிறைவேற்றி இன்று இந்த எல்லையை எட்டியுள்ளோம். ஒருங்குறி தொடர்பாக இன்னும் சில பக்கங்களில் சில பணிகள் பாக்கி உள்ளன. இந்த மாற்றத்திற்காகத் தொடர்ந்து உழைத்த சிஃபி தொழில்நுட்பப் பிரிவிற்கு மிக்க நன்றி. வெங்கடேஸ்வரன், கண்ணன், தினேஷ், மீனாட்சி, ராஜேஸ்வரி ஆகியோரின் முனைப்பான பங்களிப்பு பாராட்டுக்கு உரியது.

  • இனி தமிழ்சிஃபி வாசகர்கள், கூகிள், யாஹூ, எம்எஸ்என் போன்ற தேடுபொறிகளில் தமிழிலேயே தேடி, தமிழ்சிஃபியின் ஆக்கங்களைப் பெறலாம்.
  • விண்டோ ஸ் 2000, எக்ஸ்பி ஆகிய கணினிகளைப் பயன்படுத்துவோர், தனியாக எழுத்துரு இறக்கத் தேவையில்லை.
  • சிஃபி ஐடி உள்ளவர்கள், ஒவ்வோர் ஆக்கத்திற்கும் பின்னூட்டம் அளிக்கலாம்.
  • சிஃபியின் விவாதக் களத்தில் (http://sify.com/connect/discussions/viewforumtopics.php?f=13493664) தமிழிலேயே உரையாடலாம்.
  • அரட்டையிலும் தமிழில் கேள்விகள் கேட்கலாம்.
  • தமிழ்சிஃபியைத் தொடர்ந்து மலையாளசிஃபி, தெலுங்குசிஃபி, இந்திசிஃபி, கன்னடசிஃபி ஆகியவையும் ஒருங்குறிக்கு மாறவுள்ளன. தமிழ் சமாச்சார் உள்பட அனைத்து மொழி சமாச்சார்களும் ஒருங்குறிக்கு விரைவில் மாறும்.

மேலும் பல புதுமைகளையும் வாசகர்கள் எதிர்பார்க்கலாம். விண்டோஸ் 98 கணினி பயன்படுத்துவோருக்கு ஒருங்குறிப் பக்கங்களைப் படிப்பதில் உள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டும். உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

5 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வாழ்த்துக்கள்.

தளத்தை பார்த்தேன். இடப்பக்க பட்டையில் இணைப்புகள் எல்லாம் பாதி காணாமல் போன மாதிரி இருக்கின்றன. சரி பாருங்கள். வலப்பக்கப் பட்டையில் உள்ள சில தட்டிகள் இன்னும் பழைய எழுத்துருவிலேயே இருக்கின்றது என்று நினைக்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

அண்ணா கண்ணன் அவர்களே!

ஒருங்குறி அறிவிற்பிற்கு நன்றி!

தமிழ்மணம் & தேன்கூட்டில் இருப்பது போன்று சிஃபியிலும் ஒரு பதிவுகள் திரட்டிக்கு (aggregator)ஏற்பாடு செய்யுங்கள்.

அன்புடன்
SP.VR.சுப்பையா
http://devakottai.blogspot.com

Anonymous said...

எல்லோரும் மாறிய பிறகு கடைசி ஆளாக மாறியிருக்கிறீர்கள். இருந்தாலும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஒரு பதிவுகள் திரட்டிக்கு (aggregator)ஏற்பாடு செய்யுங்கள்.

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப நாளாய் எதிர் பார்த்தது. நன்றி.