சென்னை வானொலியின் முதல் அலைவரிசையில் (Medium Wave 720 kilo hertz) 14.3.2009 சனிக்கிழமை அன்று காலை 7.25 மணிக்கு (தில்லிச் செய்திகள் முடிந்த பின்) 'மக்கள் மேடை' என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
அதில் இந்த வாரம், 'கல்வி தொடர்பான இணைய தளங்கள்' என்ற தலைப்பில் சிலரிடம் கருத்துக் கேட்டுத் தொகுத்து வெளியிடுகிறார்கள். அதில் என் கருத்துகளையும் பதிந்து சேர்த்துள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியை அமைத்துள்ளவர்: கீதப்ரியன்.
வாய்ப்பு உள்ளவர்கள் கேளுங்கள்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Friday, March 13, 2009
கல்வி தொடர்பான இணைய தளங்கள்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:28 PM
Labels: இணைய தளங்கள், கல்வி, வானொலி
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சென்னை வானொலியை இணையம் வழி கேட்க வாய்ப்புண்டா
http://www.newsonair.com/nsd_schedule.asp
இந்தப் பக்கத்தில் தமிழ் உள்ளிட்ட வட்டார மொழிச் செய்திகளைக் கேட்க முடியும். இதர நிகழ்ச்சிகளைக் கேட்க வழி இல்லை.
hi anna kannan. kindly write a blog on ur opinion on sri lankan tamils.
அன்புள்ள அண்ணா கண்ணன்,
சென்னை ஆன்லைன் செய்தித்தள ஆசிரியராக சேர்ந்து இருப்பதற்கு நல வாழ்த்துக்கள். ஒரு கவிஞராகவும், வலைத்தள இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கும் தங்களிடம் ஒன்றை வேண்டுகிறேன்.
புதியன வருதல் நன்று, அதை வரவேற்பதும் நன்று என்றாலும், நமது முன்னோடிகளை அறவே மறந்து போய் விடுவது சரியாக இருக்குமா?
கவியோகி சுத்தானந்த பாரதியாருக்கு, உரிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் தரத் தமிழகம் தவிர விட்டதாகவே தோன்றுகிறது. கவிஞர், நாடக ஆசிரியர்,மொழிபெயர்ப்பாளர், தமிழிசைக்குப் பல பாடல்களைத் தந்தவர், ஆன்மீக சாதனையாளர் என்று பன்முகத் திறமை கொண்ட கவியோகியாரை வாய்ப்புக் கிடைக்கிற சமயங்களிலெல்லாம், உங்களுடைய வலைத்தளத்தில், தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மறு அறிமுகம் செய்து வைக்கிற பணியைச் செய்ய முடியுமா?
செய்ய முடிந்தால், அது தமிழுக்குச் செய்கிற பனி.
வாழ்த்துக்கள் -அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
Post a Comment