!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கவிஞர் ராஜமார்த்தாண்டனுக்கு அஞ்சலி ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, June 07, 2009

கவிஞர் ராஜமார்த்தாண்டனுக்கு அஞ்சலி

தமிழின் முக்கியமான இலக்கியத் திறனாய்வாளரும் கவிஞருமான ராஜ மார்த்தாண்டன், சாலை விபத்தில் மறைந்த செய்தி துயரம் அளிக்கிறது. 60ஆம் திருமணம் நடந்து, ஓராண்டு கழித்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

காலச்சுவடு பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அவர், 06.06.2009 அன்று சாலையைக் கடக்கும்போது, பேருந்து மோதி மரணம் அடைந்துள்ளார்.

கொல்லிப்பாவை
இதழ் ஆசிரியராகவும் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்), என் கவிதை (கவிதைகள்), ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு), கொங்குதேர் வாழ்க்கை - 3 (தொகுப்பு, தமிழினி), புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி), புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி) ஆகிய நூல்களின் ஆசிரியர்.

மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடித்து, ஓரளவு தன் குடும்பக் கடமைகளை நிறைவு செய்துள்ளார். இலக்கியவாதிகள் பலருடனும் நெருங்கிய நட்புப் பூண்டவர்.

தினமணி அலுவலகத்தில் அவர் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய போது, பல முறைகள் அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். பழகுவதற்கு இனிய மனிதர். மிக எளிய தோற்றம் கொண்டவர். அதிர்ந்து பேசாதவர். கவிஞர் என்ற முகத்தைத் தாண்டி, அவருக்குள் இருந்த இலக்கியத் திறனாய்வாளர் என்ற முகம், தாமதமாகத்தான் வெளிப்பட்டது. இந்த வகையில் அவரின் முக்கியமான நூல்களைத் தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

குடிப்பழக்கத்திற்கு அவர் அடிமையாகாமல் இருந்திருந்தால் தமிழுக்கு இன்னும்கூட நன்மை விளைந்திருக்கும்.

அவர் ஆன்மா, அமைதி கொள்ளட்டும்.

3 comments:

நா. கணேசன் said...

தகவலுக்கு நனிநன்றி!

நா. கணேசன்

M.Rishan Shareef said...

அன்னாருக்கு எனது அஞ்சலிகள் !!!

கே.பாலமுருகன் said...

இன்னுமொரு கவிதையை இழக்க நேரிட்டது. இழப்பு வெகு இயல்பான சம்பவம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யமட்டுமே உகந்ததாக இருந்துவிடுகிறது.

கவிஞர் ராஜா மார்த்தண்டனுக்கு எனது அஞ்சலி.

கே.பாலமுருகன்
மலேசியா