!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வால் காக்கை | Dendrocitta vagabunda ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, July 07, 2020

வால் காக்கை | Dendrocitta vagabunda

வால் காக்கை (Rufous Treepie அல்லது Dendrocitta vagabunda) என்பது காக்கைக் குடும்பத்திலுள்ள பறவைகளுள் ஒன்று. இது அரிகாடை என்றும் முக்குறுணி என்றும் மாம்பழத்தான் குருவி என்றும் கொய்யாப் பழத்தான் என்றும் அழைக்கப்படும்[2]. நீண்ட வாலும் உரத்த இசைக் கூப்பாடும் (கோகீலா ... கோகீலா... என்ற தொனியில் இருக்கும்) இதன் தெளிவான அடையாளங்கள். வேளாண் இடங்களிலும் நகர்ப்புறத் தோட்டங்களிலும் தென்படும் இப்பறவை காக்கையைப் போலவே ஒரு அனைத்துண்ணி. இப்பறவைக்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்டுள்ள பெயர் டென்றொசிட்டா வேகபண்டா (Dendrocitta vagabunda). இதன் பொருள் மரங்கள் இடையே அலைபவன் (Wanderer amongst trees) என்பதாகும்.


No comments: