!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பண்டிதர் அயோத்திதாசர் சிலை | Pandit Iyothee Thass statue ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, October 11, 2020

பண்டிதர் அயோத்திதாசர் சிலை | Pandit Iyothee Thass statue

சென்னை, தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில், அயோத்திதாசப் பண்டிதர் மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள மூலிகைத் தோட்டத்தில், பண்டிதர் அயோத்திதாசருக்கு அழகிய சிலையை அமைத்துள்ளார்கள். அயோத்திதாசர், ஒரு பைசாத் தமிழன் என்ற இதழை நடத்தியதோடு, வேறு 25 நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளுக்குப் பகுதியளவு உரை வரைந்துள்ளார். ஆதி திராவிடர் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு சமூக, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சித்த மருத்துவராகவும் விளங்கியுள்ளார். தம் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தமது பெயரை அயோத்திதாசர் என மாற்றிக்கொண்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், தமது சிந்தனைகளாலும் துணிவான செயல்களாலும் 21ஆம் நூற்றாண்டிலும் எழுந்து நிற்கிறார்.



 

No comments: