எந்திரப் பொறியாளரான தீபிகாவுக்கு வெளியூரில் சென்று வேலை செய்யத் தொடங்கியதும் முடி உதிர்வுச் சிக்கல் ஏற்பட்டது. கோலம் போடும்போது கையில் தோல் உரிந்தது. சித்த மருத்துவரான தம் தந்தையின் உதவியுடன், தாயின் ஆலோசனைகளுடன் தனக்கான இயற்கைவழிப் பொருள்களை உருவாக்கத் தொடங்கினார். நல்ல பலன் கிடைத்தது. நெருங்கிய தோழிகளின் சிக்கல்களுக்கும் இதே போல் தீர்வு கண்டார்.
எங்களுக்கும் கிடைக்குமா எனப் பலரும் கேட்டதால், ரூட்ஸ் ஆர்கானிக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் வழியே நலங்கு மாவு, சிகைக்காய் மாவு, முடி உதிர்வைத் தடுக்கும் தைலம், வழுக்கையைப் போக்கும் தைலம், நரைமுடியை மாற்றும் தைலம், கண் மை, உதட்டுப் பூச்சு, பாத்திரம் தேய்க்கும் தூள், பற்பொடி, கோலப் பொடி, ஹோலிப் பண்டிகைக்கான வண்ணப் பொடி... எனப் பலவற்றை இயற்கை முறையில் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.
தான் உற்பத்தி செய்வதை, தான் பயன்படுத்திப் பார்த்து, தானே பரிசோதித்துப் பார்த்து, அதன் பிறகே மற்றவர்களுக்கு வழங்குகிறார். தனது வெற்றிப் பயணத்தை இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
No comments:
Post a Comment