!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2021/07 - 2021/08 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, July 31, 2021

நாகேஸ்வரி அம்மன் தேர் ஆயத்தம்

சென்னை தாம்பரம் அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவும் பிரம்மோற்சவமும் ஒருசேர நடைபெற்று வருகின்றன. இன்று மதியம், தேரில் அம்மன் பவனி வந்தாள். அதற்கு முன்னதாக நடந்த தேர் ஆயத்தப் பணிகளை இங்கே காணலாம். சிவப்புக்கல் மூக்குத்தியும் நீலக்கல் மூக்குத்தியும் அணிந்து, சர்வாலங்காரத்துடன் அன்னை வீற்றிருக்கும் அழகைப் பாருங்கள்.

கொய்யா அறுவடை - 6 | Guava Harvest - 6 | 2021

இன்றைய கொய்யா அறுவடை, அமோகம்!


சிரிப்பு யோகா - பயிற்சி 7 | தேநீர்ச் சிரிப்பு | Tea Laughter

தேநீர்ச் சிரிப்பு (Tea Laughter) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதோ பயிற்சி வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா Haho Sirippananda Sampath. அவருடன் சேர்ந்து, தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் ஊழியர்களும் அட்டகாசமாகச் சிரிப்பதைப் பாருங்கள்.

Friday, July 30, 2021

சிரிப்பு யோகா - பயிற்சி 6 | ஹாஹோ சிரிப்பானந்தா

'சிரிப்பு யோகா' தொடரில் ஆறாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. சர்க்கரை நோய் எனப்படுகிற நீரிழிவைச் சரிசெய்கிற பேராற்றல், இந்தப் பயிற்சிக்கு உண்டு. தொடர்ந்து தொண்டு ஆற்றுவோம், சேவை ஆற்றுவோம், வாருங்கள்.

Thursday, July 29, 2021

White Tiger - On the move

உலகப் புலிகள் தினத்தில் இந்த வெள்ளைப் புலியைப் பாருங்கள்.

Watch this in International Tiger Day.

சக்தி கானம் 5 - உலகாளும் தாயே

சமயபுரம் மாரியம்மனைக் கொண்டாடும் 'உலகாளும் தாயே' என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். சக்தி கானம் இசைப் பேழையிலிருந்து ஐந்தாவது பாடல். ஓம் சக்தி! பராசக்தி!

சிரிப்பு யோகா - பயிற்சி 5 | ஹாஹோ சிரிப்பானந்தா

'சிரிப்பு யோகா' தொடரில் ஐந்தாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், நமது முகமே சூரியகாந்திப் பூவைப் போல் மலர்ச்சி உடையதாக மாறிவிடும். செய்து பாருங்கள்.

Wednesday, July 28, 2021

Very Good! Very Good! Hey!

ஹாஹோ சிரிப்பானந்தா கற்றுத் தரும் சிரிப்பு யோகாவை, எங்கள் மகன், இரு வயதுச் சிறுவன் ஹரி நாராயணன் செய்கின்றான். 

இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் காட்சியை வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பினால், அதையும் வெளியிடுவோம். உங்கள் வீடியோ காட்சிகளை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

வீதியில் பொழிந்த வித்தக இசை

அருள்மிகு நாகேஸ்வரி அம்மன், தாம்பரம் கடைத்தெருவில் நேற்று இரவு வீதி உலா வந்தார். அம்மன் தேருக்கு முன்னால், வாத்தியக் குழுவினர், நடந்துகொண்டே வாசித்தனர். அம்மன் வருகையை மங்கல இசையால், மக்களுக்கு அறிவித்தனர். நாகஸ்வரமும் மேளமும் இழையும் இந்த இன்னிசையைக் கேட்டு மகிழுங்கள்.

நாகேஸ்வரி அம்மன் வீதி உலா | ஆடித் திருவிழா | தாம்பரம்

ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சென்னை தாம்பரம் முத்துரங்கம் பூங்காவில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு நாகேஸ்வரி அம்மன், தாம்பரம் சந்தைக் கடைத்தெருவில் வீதி உலா வரும் காட்சி. 

Tuesday, July 27, 2021

கொய்யா அறுவடை - 5 | Guava Harvest - 5 | 2021

இன்றைய கொய்யா அறுவடை, மகிழ்ச்சி!

Monday, July 26, 2021

இங்கே என்ன நடக்குது?

இங்கே நடப்பது என்ன? மாநாடா? வகுப்பா? சந்திப்பா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

வி.கிருத்திகா ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

திண்டிவனத்தில் எட்டாம் வகுப்புப் படிக்கும் வி.கிருத்திகாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Sunday, July 25, 2021

நம் மாடித் தோட்டத்து அறுவடை | Garden Harvest

நம் மாடித் தோட்டத்தில் காராமணி, தக்காளி, நட்சத்திர வெண்டை, யானைத் தந்த வெண்டை, முள்ளங்கி ஆகியவற்றை இன்று அறுவடை செய்தோம். இளசான, குளிர்ச்சியான, பசுமையான காய்கறிகளைப் பார்த்து மகிழுங்கள்.

சிரிப்பு யோகா - பயிற்சி 3 | ஹாஹோ சிரிப்பானந்தா

'சிரிப்பு யோகா' தொடரில் மூன்றாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. உற்சாகத்துக்கு நாங்கள் உத்தரவாதம்.

#Shorts: Passion Flower | கிருஷ்ண கமலம் | Passiflora | Krishna Kamal

கிருஷ்ண கமலத்திற்குப் பாண்டவ கௌரவர் பூ என இன்னொரு பெயர் உண்டு. இந்தப் பூ, மகாபாரதத்தையே தன்னுள் கொண்டுள்ளதாகச் சித்திரிக்கப்படுகிறது. சுற்றிலும் இழை இழையாக உள்ளவை கௌரவர்கள். நடுவில் உள்ள ஐந்து மகரந்த இழைகள் பாண்டவர்கள். மையத்தில் உருண்டையாக உள்ளது திரௌபதி. அதற்கும் மேலே உள்ள மூன்று இழைகள் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகள். உட்புறம் தெரியும் கருநீல (பர்ப்பிள்) வளையம் கிருஷ்ணர் கையிலிருக்கும் சுதர்சனச் சக்கரம் என வர்ணிக்கிறார்கள். இந்தப் பூவை வீட்டில் வளர்த்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பலரின் நம்பிக்கை. இதைப் பார்த்து மகிழுங்கள்.

Saturday, July 24, 2021

சிரிப்பு யோகா - பயிற்சி 2 | ஹாஹோ சிரிப்பானந்தா

'சிரிப்பு யோகா' தொடரில் இரண்டாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இரட்டிப்புக் கரவொலியுடன் உங்களை இந்தப் பயிற்சிக்கு வரவேற்கிறோம். வருக! வருக!

இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் காட்சியை வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பினால், அதையும் வெளியிடுவோம். உங்கள் வீடியோ காட்சிகளை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

சக்தி கானம் 4 - பொழுது விடிந்தது

ஆடி மாதம், அம்மன் மாதம். சக்தி கானம் இசைத் தொகுப்பிலிருந்து இதோ, அடுத்த பாடல். இந்த இடர்காலம் நீங்கி, நல்ல பொழுது விடிய, நம் ஆத்தாள் பாதாளப் பொன்னியம்மன் அருளட்டும்.

Friday, July 23, 2021

கொய்யா அறுவடை - 4 | Guava Harvest - 4 | 2021

மாடியிலிருந்து பார்த்தபோது, மஞ்சள் நிறத்தையும் கடந்து நல்ல சந்தன நிறத்தில் கொய்யாப் பழங்கள் மின்னின. பறித்துச் சாப்பிட்டுப் பார்த்தேன், ஆஹா என்ன சுவை, என்ன மணம். நம் தோட்டத்தில் இன்று மீண்டும் கொய்யா அறுவடை.

சிரிப்பு யோகா - பயிற்சி 1 | ஹாஹோ சிரிப்பானந்தா

'சிரிப்பு யோகா' தொடரில் முதல் பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. பலத்த கரவொலியுடன் உங்களை இந்தப் பயிற்சிக்கு வரவேற்கிறோம். வருக! வருக!

இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் காட்சியை வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பினால், அதையும் வெளியிடுவோம். உங்கள் வீடியோ காட்சிகளை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Thursday, July 22, 2021

சிரிப்பு யோகா - அறிமுகம் | Laughter Yoga | ஹாஹோ சிரிப்பானந்தா

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், பலரும் சிரிப்பையே மறந்துவிட்ட நிலையில், சிரிப்பு யோகா மூலம் உடலுக்கும் மனத்துக்கும் ஒருசேரப் புத்துணர்ச்சி ஊட்டுகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. நம் யூடியூப் அலைவரிசையின் மூலம், நேயர்களுக்குச் சிரிப்பு யோகா கற்றுத் தர முன்வந்துள்ளார். இந்த ஜாலியான பயிற்சியில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் இணைந்து பங்குபெறுங்கள். வாய்விட்டுச் சிரிப்போம், வாருங்கள். 

இன்றைய அறுவடை | Today's Harvest

நம் மாடித் தோட்டத்தில் இன்றைய அறுவடை

Wednesday, July 21, 2021

வண்டியை வெளியே எடுப்பது எப்படி?

மண்ணில் சக்கரங்கள் புதைந்த இந்த வண்டியை, ஓரிரு மணி நேரம் முயன்ற பிறகு வெளியே எடுத்தார்கள். எப்படி வெளியே எடுத்தார்கள், தெரியுமா? இந்தச் சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

சக்தி கானம் 3 - பவனி வரா

ஆடி மாதத்திற்கு அழகு சேர்க்க வருகிறது, இந்த அம்மன் பாடல். சக்தி கானம் இசைத் தொகுப்பிலிருந்து இதோ, 'பவனி வரா பவனி வரா பாளையக்காரி'.

வாடாமல்லியில் வண்ணத்துப்பூச்சி - 2 | Butterfly on Gomphrena Globosa

வாடாமல்லியிலும் துளசியிலும் மாறி மாறி அமரும் வண்ணத்துப்பூச்சி, தன் பட்டுச் சிறகை விரித்துத் தேனருந்தும் பேரழகுக் காட்சி.

Tuesday, July 20, 2021

How Smooth is Chennai Bypass Road? | Test Drive

உயர்வகை மகிழுந்து தயாரிக்கையில், அதைச் சோதிக்க ஒரு பரிசோதனை உண்டு. ஒரு குவளையில் தண்ணீர் நிரப்பி வைத்துவிட்டு ஓட்டுவார்கள். மேடுபள்ளங்களில் அதிலிருந்து தண்ணீர் சிந்தாமல், தண்ணீர் ஆடாமல் இருப்பதை வைத்து அதன் தரத்தை முடிவு செய்வார்கள். அதிவேக ரெயிலிலும் தண்ணீர்க் குவளையில் உள்ள நீர் அசையாமல் இருப்பதை அண்மையில் யூடியூபில் பார்த்தேன். 

இந்த வாரத்தில் சென்னைப் புறவழிச்சாலையில் ஒருமுறை பயணித்தேன். சாலையின் சமநிலையைப் பரிசோதிக்கும் ஆர்வம் வந்தது. எங்கெல்லாம் சாலை சமமாக இருக்கிறது, எங்கெல்லாம் மேடுபள்ளம் இருக்கிறது என்பதைக் கேமராவின் அசைவை வைத்துத் தீர்மானிக்கலாம். சாலை அமைப்போர், இப்படியெல்லாம் பரிசோதனை செய்வதில்லையா? 


#Shorts: Squirrel on Electric Wire

மின்வடத்தில் ஒரு துருதுரு அணில், தாவிச் செல்வதைப் பாருங்கள்.

காவ்யஸ்ரீ ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

பெங்களூருவில் ஆறாம் வகுப்புப் படிக்கும் காவ்யஸ்ரீயின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Monday, July 19, 2021

ஒரே நாளில் 50 கொய்யாப் பழங்கள்

இன்று நம் வீட்டுக் கொய்யா மரத்தில் ஒரே நாளில் 50 கொய்யாப் பழங்கள் கிடைத்தன. அறுவடைக் காட்சிகள் இங்கே.

விதைகள் | Seeds | ஆடிப் பட்டம்

ஆடிப் பட்டம் தேடி விதை என்பர். மயில் மாணிக்கம், புடலை, வெண்டை, மிளகாய், தூதுவளை, காராமணி ஆகியவற்றின் விதைகள் எப்படி இருக்கும் தெரியுமா? அவற்றை அந்தந்தச் செடிகொடியிலிருந்து எப்படி எடுக்க வேண்டும் தெரியுமா? இந்தப் பதிவைப் பாருங்கள்.

சக்தி கானம் 2 - ஊரே கூடுது

ஆடி மாதம் என்றாலே அம்மன் பாடல்கள் களைகட்டும். சக்தி கானம் இசைத் தொகுப்பிலிருந்து இதோ இரண்டாவது பாடல், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும், சரவெடி போன்ற அதிரடிப் பாடல்.

பாடல் - ஊரே கூடுது
பாடலாசிரியர்  - வாரணா
இசையமைப்பாளர் - கிறிஸ் மார்ட்டின் போனாமி
பாடியவர் - கிருத்திகா
தயாரிப்பாளர் - ரமேஷ் வெங்கட்ரமணன்
தயாரிப்பு நிறுவனம் - ஆர்.எம்.கிரியேஷன்ஸ்

Sunday, July 18, 2021

ஆனந்த் ராமச்சந்திரன் ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

திருவண்ணாமலையில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் ஆனந்த் ராமச்சந்திரனின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Saturday, July 17, 2021

சக்தி கானம் 1 - எடுத்த காரியமும் ஜெயமாக

ஆர்.எம்.கிரியேஷன்ஸ் நிறுவனம், சக்தி கானம் என்ற தலைப்பில் ஒலிப்பேழை ஒன்றை வெளியிட்டது. அதில் இடம்பெற்ற ஏழு பாடல்களையும் நம் யூடியூப் அலைவரிசையில் வெளியிட, தயாரிப்பாளர் ரமேஷ் வெங்கட்ரமணன் அனுமதி அளித்துள்ளார். அவருக்கும் இந்த முயற்சியை ஒருங்கிணைத்த நண்பர் வாரணா அவர்களுக்கும் நன்றி. 

ஆடி மாதம், அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில், சக்தி கானத்தை வெளியிடுவதில் மகிழ்கிறோம். இதோ, முதல் பாடல். வெற்றி கணபதியை வணங்கித் தொடங்குகிறோம். 

பாடல் - எடுத்த காரியமும் ஜெயமாக
பாடலாசிரியர்  - வாரணா
இசையமைப்பாளர் - கிறிஸ் மார்ட்டின் போனாமி
பாடகர் - கிறிஸ் மார்டின் போனாமி
தயாரிப்பாளர் - ரமேஷ் வெங்கட்ரமணன்

Friday, July 16, 2021

வெற்றிலைக் கொடி | Vetrilai | Betel

நம் வீட்டுத் தோட்டத்தில் வெற்றிலைக் கொடி. இதன் அழகைப் பார்த்து மயங்கிவிட்டேன். 

ஏழாம் அறிவே கல்வி - ஆனந்த ராவ் பாடல் | Ananda Rao song on Education | Kalvi

கல்வியின் பெருமைகளை,  துள்ளாத மனமும் துள்ளும் பாடலின் மெட்டில், எளிய தமிழில் தாமே இயற்றிப் பாடுகிறார், ஆனந்த ராவ். மாணவர்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல். மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டு, மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் பகிருங்கள். கல்வியின் பெருமைகளை உணர்ந்து போற்றுவோம்.

Thursday, July 15, 2021

கீர்த்திதேவி ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

பெங்களூருவில் ஆறாம் வகுப்புப் படிக்கும் கீர்த்திதேவியின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

மகராசர் காமராசர் - மூன்று மெட்டுகளில் ஷைலஜாவின் குரலிசை

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், 'மகராசர் காமராசர்' என்ற எனது பாடலைக் கேளுங்கள். ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடி, இதற்கு இனிமையும் பெருமையும் சேர்த்துள்ளார்.

Wednesday, July 14, 2021

கொய்யா அறுவடை - 2 | Guava Harvest - 2 | 2021

இன்றைய எங்கள் கொய்யா அறுவடை!

எம்.எல்.கிஷோர் ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

தஞ்சாவூரில் ஆறாம் வகுப்புப் படிக்கும் எம்.எல்.கிஷோரின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Tuesday, July 13, 2021

எங்கள் மாடித் தோட்டம் | Garden Tour | Terrace Garden Tour

எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாம், வாங்க.

Home Tour | 2 BHK Flat For Sale In Sri Mitra Symphony In Hoodi, Bangalore

எங்கள் குடும்ப நண்பர் வெளிநாட்டுக்குக் குடிபெயர்ந்ததால், பெங்களூரு ஹூடி பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி வீட்டை விற்கவுள்ளார். இந்த வீட்டுக்கு நாங்கள் குடும்பத்துடன் ஒருமுறை சென்று வந்துள்ளோம். நல்ல காற்றோட்டமான, அமைதியான, அனைத்து வசதிகளும் உள்ள வீடு. பிரதான இடத்தில் அமைந்துள்ளது. இந்த வீட்டைப் பார்வையிட விரும்பும் அன்பர்கள், இந்தப் பதிவைப் பாருங்கள். வீடு வாங்கும் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள்.

Monday, July 12, 2021

பாடகர் ஆனந்த ராவ் உடன் நேர்காணல் | Interview with Singer Ananda Rao

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஆனந்த ராவ், இந்த 79 வயதிலும், தமிழில் பாடல்கள் இயற்றி இனிமையாகப் பாடுகிறார். பழைய திரைப்படப் பாடல்களின் மெட்டுகளில் இவர் தமிழிலும் தெலுங்கிலும் பாடல்கள் இயற்றியுள்ளார். இவற்றை டி.எம்.எஸ்., கே.பி.சுந்தராம்பாள், ஜேசுதாஸ், எம்.எஸ்.வி., டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா... உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் முன்னிலையில் பாடிப் பாராட்டுப் பெற்றுள்ளார். 

சுவாகத் ஓட்டலிலும் உட்லண்ட்ஸ் ஓட்டலிலும் உணவு பரிமாறுபவராகப் பணியாற்றிய இவர், அங்கு உணவருந்த வந்த அண்ணா, கலைஞர், சி.என்.ஏ.பரிமளம், ம.பொ.சி. உள்ளிட்ட பிரமுகர்களுக்கு உணவு பரிமாறியுள்ளார். ஜேசுதாஸ், பித்துக்குளி முருகதாஸ், ஹரிதாஸ் கிரி ஆகியோருடன் இணைந்து கோரஸ் பாடியுள்ளார். 

சமையல் கலைஞர்கள் நலவாரியம், கட்டடத் தொழிலாளர் நலவாரியம், கோவில் பணியாளர் நலவாரியம், தையல் தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட பலவற்றில், அவர்களின் விழாக்களில் அந்தத் தொழிலாளர்களைப் பற்றிய பாடல்களைப் பாடி, உழைக்கும் வர்க்கப் பாடகர் எனப் பாராட்டுப் பெற்றுள்ளார். 

மேலும் தனக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், மருந்துக் கடைக்காரர்கள், செவிலியர்கள் எனப் பலர் மீதும் பாடல்கள் இயற்றி அவர்களை மகிழ்வித்துள்ளார். இதனால் மருத்துவத்திற்குக் கட்டணம் இல்லாமல், அவர்கள் இவருக்கு பரிசுத் தொகையும் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த வகையில் இவர், மன்னர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடிய சங்க காலப் புலவர் மரபில் வருகிறார். 

தொலைபேசி வழியிலான இந்த நேர்காணலில் இவரது இனிய பாடல்களையும் அனுபவங்களையும் கேட்டு மகிழுங்கள்.

இவரை எனக்கு அறிமுகம் செய்வித்த நண்பர் குமரி எஸ்.நீலகண்டனுக்கு நன்றி.

Sunday, July 11, 2021

Asian Koel in tight closeup

சூரிய ஒளியில் தகதகவெனக் கரும்பட்டுப் போல மின்னும் மேனியுடன், நம் ஜன்னலோரக் கருவேப்பிலைப் பழங்களை உண்ணும் குயிலை மிக மிக அருகில், அலகுடன் உங்கள் மூக்கு உரசும் தூரத்தில் பாருங்கள்.

Saturday, July 10, 2021

இது எதன் குரல்? | Which voice this is?

இது எதன் குரல்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ரப்பர்பேண்டு கிடார் செய்வது எப்படி? | How to make Rubberband Guitar?

ரப்பர்பேண்டு கிடார் செய்வது எப்படி? இதோ விளக்குகிறார், நித்திலா.

Friday, July 09, 2021

A Walk in Durdle Door

இங்கிலாந்தில் உள்ள டர்டில் டோர் (Durdle Door) என்ற சுற்றுலாத் தலம், மிகவும் புகழ்பெற்றது. திரைப்படங்கள் பலவும் இங்கே படமாக்கப்பட்டுள்ளன. இந்த வனப்பு மிகுந்த இடத்தில், நவ்யாவுடன் இணைந்து நடக்கலாம், வாருங்கள்.

Thursday, July 08, 2021

பச்சைமா மலைபோல் மேனி | Pachai Maa Malai Pol Meni | Krishnakumar

தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய 'பச்சைமா மலைபோல் மேனி' என்ற அருட்பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

#Shorts: Belgium Deers | பெல்ஜியம் மான்கள்

பெல்ஜியத்தில் வசிக்கும் கிறிஸ் வேய்னான்ட்ஸின் தோட்டத்தில் அவர் வளர்க்கும் மான்கள். எழுத்தாளர் மாதவன் இளங்கோ, அங்கே சென்றபோது செல்லம் கொஞ்சிய பேரழகுக் காட்சிகள். பார்த்து மகிழுங்கள்.

Wednesday, July 07, 2021

வேப்பம்பழம் உண்ணும் குயில் | Asian Koel eats Neem fruit

வேப்பம்பழம் மரத்தில் இருக்கும்போதே அதன் தோலைக் கழற்றிப் போட்டு, தொங்கும் கொட்டையை மட்டும் குயில் லாகவமாக லபக் செய்யும் காட்சி.

#Shorts: Pomegranate flower | மாதுளம்பூ

அபிராமி அந்தாதியில் அன்னையை மாதுளம்பூ நிறத்தாள் என்று அபிராமி பட்டர் பாடுகிறார். 

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை....

இந்த மாதுளம்பூ நிறம் எப்படி இருக்கும்? இந்தப் பதிவைப் பாருங்கள்.

Tuesday, July 06, 2021

ஜெயந்தி சங்கர் பிறந்து வளர்ந்த கதை

சிங்கப்பூரில் வாழும் தமிழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 22 வயது வரை தான் பெற்ற அனுபவங்களை, கற்ற கலைகளை, பயணித்த ஊர்களை, சந்தித்த மனிதர்களைப் பற்றி இந்த அமர்வில் பகிர்ந்துகொண்டுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 40 புத்தகங்களை எழுதியவர், எனக்குப் பிடித்த மொழி மலையாளம் எனக் கூறுகிறார். இந்தச் சுவையான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

Monday, July 05, 2021

Mayfield Lavender Farm at London

Mayfield Lavender is a family farm based just 15 miles from Central London. The farm is divided between two locations five kilometers apart and has a 25 acre Organic lavender farm in Banstead and a 12 acre Plant Nursery with Orchard and Shop in Epsom. Mayfield Lavender also makes and sells beautiful lavender products and loves to welcome visitors to experience the beauty of Lavender.

Video by Navya.

ஜெயந்தி சங்கரின் வீணையிசை - 2

ஜெயந்தி சங்கரின் வீணையிசையில் இதோ இன்னொரு ரத்தினம்

பாடல்: மகாகணபதிம்
இயற்றியவர்: முத்துசாமி தீக்‌ஷிதர்
ராகம்: நாட்டை
தாளம்: ஆதி

Sunday, July 04, 2021

பூமகள் ராமச்சந்திரன் ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

திருவண்ணாமலையில் ஏழாம் வகுப்புப் படிக்கும் பூமகள் ராமச்சந்திரனின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

மின்கம்பத்தில் அணில் - 2 | Squirrel on Electric Post - 2

இன்று காலையில் இந்த அணில், மின்கம்பத்தில் ஏறி ஆராய்ந்து பார்த்துவிட்டு, தொங்குபாலம் போன்று நீண்டிருந்த மின்கம்பியில் சரசரவென நடந்து வித்தைகள் காட்டியது. அந்தரத்தில் நடக்கும் இந்தச் சுந்தரத்தைப் பாருங்கள்.

வாடாமல்லியில் வண்ணத்துப்பூச்சி | Butterfly on Gomphrena Globosa

கர்மயோகத்துக்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு. 

Saturday, July 03, 2021

நல்ல கூந்தல் பெற - நிர்மலா ராகவன் உடன் ஒரு நேர்காணல்

நல்ல கூந்தல் பெற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைத் தன் நேரடி அனுபவங்கள் வாயிலாக நகைச்சுவையுடன் எடுத்துரைக்கிறார் நிர்மலா ராகவன். முடி வளர, முடி உதிர்வது நிற்க, வழுக்கையிலிருந்து முடி வளர, முடி கெட்டியாக இருக்க, பொடுகு நீங்க... பற்பல குறிப்புகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அமாவாசையன்று இப்படிச் செய்தால் முழங்காலைத் தொடும் அளவுக்கு முடி வளரும் என அவர் சொல்வது ஓர் ஆச்சரியத் தகவல். இந்தப் பயனுள்ள உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

Friday, July 02, 2021

#Shorts: Achamillai Achamillai | அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே - எங்கள் மகன் ஹரி நாராயணனின் வீறுமிகு வீர முழக்கம்.

Thursday, July 01, 2021

பெல்ஜியத்தில் செர்ரிப் பழ அறுவடை | Cherry Harvest at Belgium

பெல்ஜியத்தின் தீனன் நகரில் வாழும் எழுத்தாளர் மாதவன் இளங்கோ, தன் வீட்டில் உள்ள பச்சைப் பசேல் செர்ரி மரத்திலிருந்து செக்கச் சிவந்த செர்ரிப் பழங்களை அறுவடை செய்கிறார். உண்ணும்போது மட்டுமில்லை, காணும்போதும் தித்திக்கும் பழங்கள் இவை. கண்டு மகிழுங்கள்.

ஆண்டவன் அன்பே சக்தி தரும் | Andavan Anbe Sakthi Tharum | பாபநாசம் சிவன்

பாபநாசம் சிவன் இயற்றிய 'ஆண்டவன் அன்பே சக்தி தரும்' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். ஆண்டவன் என்று பொதுவாகக் குறிப்பிட்டிருப்பதால், எல்லா மதங்களை, மார்க்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும். இந்தப் பாடலைக் கேட்டுச் சக்தி பெறுங்கள்.