!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கணினித் தமிழ் - பன்னாட்டுக் கருத்தரங்கில் நான் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, February 27, 2010

கணினித் தமிழ் - பன்னாட்டுக் கருத்தரங்கில் நான்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையின் மொழியியல் ஆய்வுப் பிரிவு கணினித் தமிழ் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வு, சென்னைப் பல்கலையின் மெரினா வளாகத்தில் 2010 பிப்.24, 25, 26 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

மொழித்தொழில் நுட்பமும் தமிழும் என்ற தலைப்பிலான அமர்வில் மாலன் தலைமையில் முனைவர் நீலாதிரி தாஸ், பேராசிரியர்கள் ந.கணேசன்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), ந.தெய்வசுந்தரம், அருள்மொழி, உமாராசு, டேவிட் பிரபாகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

யுனிகோடும் தமிழும் என்ற தலைப்பிலான அமர்வில் உத்தமம் அமைப்பின் தலைவர் வெங்கட்ரங்கன் தலைமையில் இராமன், அ.இளங்கோவன், இராம.கி., நாகராசன் (என்.எச்.எம்.எழுதி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேச்சுத் தொழில்நுட்பமும் தமிழும் என்ற தலைப்பிலான அமர்வில் பேரா.சி.சண்முகம் தலைமையில் பேராசிரியர்கள் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் ஏ.ஜி.இராமகிருஷ்ணன், அமிர்தா பல்கலைக்கழகத்தின் சந்தோஷ்குமார், முருகையன், நடன சபாபதி, இரவிசங்கர் (புதுவை), ராஜன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

கணினிவழித் தமிழ்க் கல்வியும் பிற கணினிப் பயன்பாடுகளும் என்ற தலைப்பிலான அமர்வில் பேராசிரியர் நடராசப்பிள்ளை தலைமையில் முனைவர் விஜயராணி, ஆ.இரா.சிவகுமாரன், பேரா.தியாகராசன், மு.இளங்கோவன், மு.பழனியப்பன் உள்ளிட்டோருடன் நானும் பங்கேற்றேன். 'தமிழக அரசின் தமிழ் இணையத்தளங்கள்' என்ற தலைப்பில் என் கட்டுரை அமைந்திருந்தது.

பெரும்பாலான உரைகள், திரைவிரி உரை (பவர் பாய்ன்ட்) முறையில் அமைந்திருந்தன. பத்ரி சேஷாத்ரி, மறவன்புலவு க.சச்சிதானந்தன் உள்ளிட்ட பலரும் விவாதங்களில் பங்கெடுத்து, ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தெரிவித்தனர். தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் வல்லுநர்கள் பலரும் பங்கேற்றனர். முனைவர் தெய்வசுந்தரம், தொலைநோக்குடன் இந்தக் கருத்தரங்கினை வடிவமைத்து நடத்தினார். கருத்தரங்கின் இறுதியில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வு தொடர்பான சுட்டிகள்:

கணினித்தமிழ்-பன்னாட்டுக்கருதரங்கம் இனிதே தொடங்கியது

தமிழ்க்கணினி பன்னாட்டுக்கருத்தரங்கு முதல் அமர்வு

தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருத்தரங்கம் - படங்கள்

தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருதரங்கம் மூன்றாம் நாள் நிகழ்வுகள்

=============================================
படத்திற்கு நன்றி: முனைவர் மு.இளங்கோவன்

5 comments:

துளசி கோபால் said...

இனிய பாராட்டுகள்.

புகழ் ஏணியில் மேலே மேலே போய்க்கொண்டிருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

விண்ணைத் தாண்டி(யும்) செல்ல வாழ்த்துகின்றேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

மிக்க மகிழ்ச்சி!!
இணையத்தமிழ் மணம் பரவட்டும்..

kargil Jay said...

munaivar pattam kidaikkuma?

kargil Jay said...

why no more comments?

முனைவர் அண்ணாகண்ணன் said...

முனைவர் பட்ட ஆய்வு சரியான திசையில் வளர்ந்து வருகிறது. ஆயினும் இதற்கு நிறைய நடைமுறைகள் உள்ளன.