!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வெங்கட் சாமிநாதனின் மனைவி சரோஜா மறைந்தார் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, March 16, 2010

வெங்கட் சாமிநாதனின் மனைவி சரோஜா மறைந்தார்

வெங்கட் சாமிநாதனின் மனைவி சரோஜா, 2010 மார்ச் 15 அன்று இரவு, சென்னையில் மாரடைப்பினால் மறைந்தார். அவருக்கு வயது 73.

சீர்காழி அருகில் கடவாசல் (குடவாசல் இல்லை) என்ற ஊரில் பிறந்த இவர், தம் திருமணத்திற்கு முன்பு, அரசுத் துறையில் எழுத்தராகச் சிறிது காலம் பணிபுரிந்தார். 1966இல் வெங்கட் சாமிநாதனை மணந்த இவர், அவருடன் தில்லியில் நீண்ட காலம் வாழ்ந்தார். இவர்களுக்குக் கணேஷ் என்ற மகன் உள்ளார்.

வெங்கட் சாமிநாதன் ஓய்வு பெற்ற பின் சென்னை திரும்பிய இவர், மடிப்பாக்கத்தில் வாழ்ந்து வந்தார். திருமதி சரோஜா, வெங்கட் சாமிநாதனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆணிவேராகத் திகழ்ந்தார். மெல்லிய தேகமும் மென்மையான குரலும் கொண்ட இவர், தம் காலம் முழுதும் ஓய்வறியாது உழைத்தார். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.

திருமதி சரோஜா அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

16.3.2010 அன்று முற்பகல், வெ.சா. அவர்களின் இல்லம் சென்றேன். திருமதி சரோஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினேன். இலக்கிய நண்பர்கள் திலீப்குமார், க்ரியா ராமகிருஷ்ணன், ரவி இளங்கோவன் ஆகியோரை அங்கே கண்டேன். உறவினர்கள் பலரும் வந்திருந்தனர்.

வெ.சா. அவர்களின் மகன் கணேஷ், இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார். 11.40 மணி அளவில் அம்மையார் பிரியா விடை பெற்றார்கள்.

இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை வெங்கட் சாமிநாதன் பெற வேண்டும்.

6 comments:

cheena (சீனா) said...

திருமதி சரோஜா வெங்கட் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக

நா. கணேசன் said...

My prayers for the departed soul,
and may God help the surviving family in the hard times.

N. Ganesan

வாக்குமூலம் said...

தன் எழுத்தால் உலகை வென்ற வெங்கட் சாமிநாதன் அவர்களின் துணைவியாரின் மறைவினால் துன்புறும் அக்குடும்பத்தார்க்கு ரமோனாவின் அஞ்சலிகள் அன்னாரின் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம்.
ரமோனா

மேமன்கவி பக்கம் said...

திருமதி சரோஜா வெங்கட் சாமிநாதனின் அவர்களின் மறைவையிட்டு எனது அஞ்சலியும் அனுதாபங்களும்

M.Rishan Shareef said...

மனதுக்கு மிகவும் கவலையளிக்கிறது.
அவரது இழப்பில் துயருரும் உள்ளங்கள் அனைத்தும் ஆறுதல் பெறட்டும்.

kargil Jay said...

இது மிகவும் எதிர்பாராதது . சமீபத்தில்தான் வெங்கட் சாமிநாதனின் பேட்டி தென்றலில் , துணைவியாரின் புகைப்படத்தோடு வந்திருந்தது. அவரது இழப்பில் துயருரும் உள்ளங்கள் அனைத்தும் ஆறுதல் பெறட்டும்