புள்ளிச் சில்லை என்ற பறவையை இன்று முதல்முறையாகப் படம் பிடித்தேன். இது சிட்டுக்குருவி அளவிலான ஒரு பறவை. ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இதன் மேற்புறம் பழுப்பாகவும் மார்பு, வயிற்றுப்புறம் செதில் போல் புள்ளிகளுடன் இருப்பதால் புள்ளிச் சில்லை எனப்படுகிறது. இதன் அலகு பெரிதாக கூம்பு வடிவத்தில் இருக்கும். இது புற்களின் கிழங்கினை உணவாகக் கொள்ளும். மேலும் சிறு பூச்சிகளையும் பழங்களையும் உண்ணும்.
#ScalyBreastedMunia #LonchuraPunctulata #bird #Munia #chennaibird #birdphotography #birdwatching #BirdsSeenIn2022 #birds #பறவை #பறவைகள் #சென்னை #தாம்பரம்
No comments:
Post a Comment