எங்கள் தாத்தா வீட்டுத் தோட்டத்தில் நார்த்தை மரம் இருந்தது. முள் நிறைந்த மரம் அது. சிறு வயதில் அதிலிருந்து நார்த்தங்காய் பறித்து உண்டது உண்டு. இதற்கென்று அலக்கும் வைத்திருப்பார்கள். அந்த நார்த்தை இலைகளைப் பறித்து, நார்த்தை இலைப் பொடியும் செய்து வைப்பார்கள். தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொண்டால், அருமையாய் இருக்கும். இதற்கு வேப்பிலைக்கட்டி என்றும் பெயர் உண்டு.
சுவையும் சத்தும் மணமும் நிறைந்த வேப்பிலைக்கட்டி என்கிற நார்த்தை இலைப்பொடி செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், திருமதி சரோஜா வெங்கட்ராமன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
#cooking #recipe #veppilaikatti #வேப்பிலைக்கட்டி #southindian #tamilrecipe #Indianrecipe #நார்த்தைஇலைப்பொடி #நார்த்தை #narthalapodi #podi #thool #dhool #பொடி #தயிர்சாதம் #உணவு #food #curdrice #foodblog #foodblogger #foodexperience
No comments:
Post a Comment