தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில், பெரும் புகழ்பெற்றது. குலசை முத்தாரம்மன் என்றும் அழைக்கப்படுகிறது. 300 ஆண்டுகள் பழைமையான சக்தி தலம். இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா 12 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தசரா என அழைக்கப்படுகிறது.
திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலையில் அமைந்த இக்கோவில், திருச்செந்தூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிலிருந்து 20 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
நேற்று இந்தக் கோவிலுக்குச் சென்று முத்தாரம்மனைத் தரிசித்தோம். இதோ சில காட்சிகள்.
No comments:
Post a Comment