நேற்று காஞ்சிபுரம் சென்றிருந்தோம். அங்கே ஸ்ரீ பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவிலுக்குள் நுழைந்தபோது ஓர் இனிய ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு குழுவினரின் புதுமையான பஜனையைக் கண்டோம். ஆடல் பாடலுடன், தெருக்கூத்தின் கூறுகளுடன் அந்தப் பஜனை அமைந்திருந்தது. அதில் நடனம் ஆடியவர் சுழன்றும் குதித்தும் பாய்ந்தும் பலவிதமாக அபிநயித்தும் ஆடியது, கண்ணைக் கவர்ந்தது. வழக்கமான பஜனையிலிருந்து மாறுபட்டு, அது ஒரு பாய்ச்சலாக இருந்தது. அந்தப் பஜனையிலிருந்து சில காட்சிகள் இங்கே.
Vibrant Vaishnav Bhajan at Kanchipuram.
No comments:
Post a Comment