1200 ஏக்கர் பரப்பில் அமைந்த அழகப்பா கல்லூரியில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை இங்கே. கல்வியின் தேவை, அளவு, தரம், மொழி எனப் பலவற்றையும் குறித்த தம் சிந்தனைகளை முன்வைக்கிறார். எதைக் கற்பது, எவ்வாறு கற்பது, பாடத் திட்டம் எப்படி இருக்க வேண்டும், ஆசிரியர்கள் செய்ய வேண்டியது என்ன, படித்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என விரிவாக எடுத்துரைக்கிறார்.
இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறும் அண்ணா, ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். இந்தியாவின் இதயம் தமிழகம், இந்தியாவின் அறிவுக் கோட்டம் தமிழகம் என்றும் உறுதிபடக் கூறுகிறார்.
அழகப்பா கல்லூரியை அறிவாலயம் என அண்ணா எத்தனை முறைகள் குறிப்பிட்டுள்ளார் என்பதை அன்பர்கள் இயன்றால் கண்டுபிடியுங்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்த உரையை அண்ணாவின் 114ஆவது பிறந்த நாளில் கேட்டு மகிழுங்கள்.
The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech at Karaikudi Alagappa College during 1967.
No comments:
Post a Comment