!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழில் பெயரும் வரிவிலக்கும் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, July 28, 2006

தமிழில் பெயரும் வரிவிலக்கும்

தமிழில் பெயர் கொண்ட திரைப்படங்களுக்கு வரிவிலக்கு என்று நடப்பு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. உடனே இது தொடர்பான விவாதம் தொடங்கிவிட்டது.

பெயரை மட்டும் தமிழில் வைத்தால் போதுமா? படம் முழுக்கத் தமிழில் இருந்தால்தான் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு. பா.ம.க.வோ, பெயரை மட்டும் தமிழில் வைத்திருந்தால் 50 சதமும் படம் முழுக்கத் தமிழில் பேசி, தமிழ்ப் பண்பாட்டைக் காக்கும் விதத்தில் படம் எடுத்திருந்தால் முழுமையான நூறு சத வரிவிலக்கும் அளிக்கலாம் என்று கூறியது.'தமிழில் பெயர் வைக்கும் எல்லா தமிழ் திரைப்படங்களுக்கும் வரி விலக்கு என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்க் கலாசாரத்தைச் சீரழிக்கும் வகையில் இன்றைய தமிழ் திரைப்படங்கள் அமைந்துள்ளன. அவற்றுக்கு வரி விலக்கு அளிக்கக் கூடாது. முழுக்க முழுக்க தமிழில் பேசி, தமிழ் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி, எல்லா வயதினரும் பார்க்கக் கூடிய தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்க வேண்டும்' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' என்ற தலைப்பிலான புதிய படத்தை, 'உனக்கும் எனக்கும்' என்று பெயர் மாற்றிவிட்டார்கள்.

அதே போல் சூர்யா-ஜோதிகா-பூமிகா நடிக்கும் ஜில்லுன்னு ஒரு காதல் என்ற படமும் சில்லுனு ஒரு காதல் எனப் பெயர் மாறியுள்ளது. எந்தப் போராட்டமும் நடத்தாமலே இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்திருப்பது தமிழக அரசுக்கு வெற்றிதான்.

இதே பாணியை இனி வரும் திரைப்படங்களும் பின்பற்றும் என்று எதிர்பார்க்கலாம். வடமொழிப் பெயர்களிலும் பல்வகை பெயர்ச் சொற்களிலும் பெயர் வைத்தால் அப்போது என்ன ஆகும்?

இப்போது எடுக்கப்பட்டு வரும் திரைப்படங்கள் அனைத்தும் ஓரளவு தமிழ்ப் பெயர்களுடனே உள்ளன என்பது ஆறுதல் தரும் செய்தி.

மாயக் கண்ணாடி, கிழக்குக் கடற்கரைச் சாலை, தர்மபுரி, நான் கடவுள், திமிரு, பேசும் தெய்வங்கள், தாமிரபரணி, தீபாவளி, அரண், தண்டாயுதபாணி, தீக்குச்சி, வசந்தம், முனி, பீமா, கண்ணம்மாபேட்டை, திருடி, ஆவணித் திங்கள், அகரம், ஒரு பொண்ணு ஒரு பையன், பொறி, மனசுக்குள்ளே, பண்டிகை, தொடாமலே, செல்லா, சிபி, பொன்னரசன், பிரியாமலே, வெடக்கோழி, நெஞ்சம் மறப்பதில்லை, மெய்க்காவலன், இது காதல் வரும் பருவம், ஆடும்
கூத்து, புதுப் புது ராகம், என் உயிரினும் மேலான, மனதோடு மழைக்காலம் ஆகியவை ஓரளவு தமிழ்ப் பெயர்களே (சிலவற்றில் வடமொழி ஆதிக்கம் உள்ளபோதிலும்).

இதில் என்ன சிக்கல் என்றால் நிறைய ஒற்றுப் பிழைகளோடு இந்தப் படங்கள் வெளிவருகின்றன. 'திருட்டுப் பயலே' என்று இருக்கவேண்டிய பெயர், 'திருட்டு பயலே' என்று இருந்தது. 'கிழக்குக் கடற்கரைச் சாலை' என இருக்க வேண்டிய படம், 'கிழக்கு கடற்கரை சாலை' என அமைந்துவிடும். இவை, தமிழ்ப் பெயர்கள் என்றாலும் பிழையான
தமிழ்ப் பெயர்கள். சொல்வதற்கு எளிதாக இருக்கவேண்டும் என்பதால் 'தினத்தந்தி' தமிழில் இந்தப் பெயர்கள் வெளிவர வாய்ப்பு உண்டு. எண்சோதிடம், எழுத்துச் சோதிடம், பெயர் சோதிடம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட திரையுலகினர் இப்படிப் பெயர் வைத்து விடுகின்றனர். இப்படிப் பெயர் வைத்தாலும் வரிவிலக்கு உண்டா?

மேலுள்ளவை மட்டுமல்லாமல் மேலும் பல திரைப்படங்களும் தயாரிப்பில் உள்ளன. ஜோகி, ஜாம்பவான், சக்கரவர்த்தி,ஜூலை காற்றில், குருஷேத்திரம், சூர்யா, கிளியோபாட்ரா, 1999, காதல் துரோகி, எம்டன் மகன், நெஞ்சில் ஜில் ஜில், போக்கிரி, செவன், வாத்தியார், வைத்தீஸ்வரன்... என வரும் தலைப்புகள், தமிழக அரசின் அறிவிப்பினால் மாறுமா?

நன்றி: தமிழ்சிஃபி

6 comments:

ஜயராமன் said...

தமிழில் பேர் இருந்தால் சொத்து வரி இலவசம் என்று சொல்லலாம். கருணாநிதி, ஸ்டாலின், ஜயராமன் மாதிரி பேர்கள் மாரும். தமிழ் பண்பாடாக துண்டு போட்டுக்கொண்டால் வருமான வரி கிடையாது என்று சொல்லலாம். பலபேர் வாழ்வு பிழைக்கும்.

கருப்புப்பணம் திராவிடத்துக்கு பயன்படும்.

வேட்டி கட்டுபவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்று சொல்லலாம். சின்ன மருத்துவர் ஐயாவும், சின்ன பேராண்டியும் வேட்டி கட்டுவார்கள்.

தயை செய்து இதையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

நன்றி

இரா.மோகன் காந்தி said...

தமிழ்க் கலாசாரத்தைச் சீரழிக்கும் வகையில் இன்றைய தமிழ் திரைப்படங்கள் அமைந்துள்ளன. அவற்றுக்கு வரி விலக்கு அளிக்கக் கூடாது. முழுக்க முழுக்க தமிழில் பேசி, தமிழ் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி, எல்லா வயதினரும் பார்க்கக் கூடிய தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்க வேண்டும்'

hosuronline.com said...

நாங்கள் வெட்கங்கெட்டவர்கள்... எங்களுக்கு பணம் தான் தேவை... மாணம் மறியாதை அனைத்தையும் துலைத்தவர்கள்... வடக்கத்திய நடிகைகளை நிர்வானப்படுத்தியே புழைப்பு கண்டவர்கள் - Kollywoodians

செல்வக்குமார் said...

இந்த விஷயத்தில் உங்கள் கருத்துதான் என் கருத்தும்.

நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்

செல்வக்குமார் said...

இந்த விஷயத்தில் உங்களுடைய கருத்துதான் என்னுடைய கருத்தும்.

நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

செல்வக்குமார் said...

இந்த விஷயத்தில் உங்களுடைய கருத்துதான் என்னுடைய கருத்தும்.

நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.