பொதுவாக, இ-நேர்காணல் என்பது, கேள்விகளை மின்னஞ்சல் வழியாக மொத்தமாக அனுப்பி, பதில்களை அதே வழியில் மொத்தமாகப் பெறும் வகையில் இருக்கும். பெரும்பாலும் Offline-இல் இது நடக்கும். இதில் ஒரு புதுமையாக, மின் அரட்டை (Chat) வழியே, நேரடியாக, Online-இல் நேர்காணலை அமைக்க முயன்றேன். ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுப் பதில் பெற்று, இயல்பான உரையாடலாகவே இதை அமைக்க விரும்பினேன்.
அந்த வகையில் தமிழில் புதிய இ-நேர்காணல் முறையினைச் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
இந்த வகையில் முதலில் 'பாட்யூனிவர்சல்' என்ற ஒலி இதழின் ஆசிரியர் 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன் அவர்களை நேர்கண்டேன்.
http://www.chennaionline.com/tamil/newsitem.aspx?NEWSID=b5bc2375-741e-4676-a598-a9fba52e5b58&CATEGORYNAME=TTN
அடுத்து, 'தமிழ் மரபு அறக்கட்டளை'யின் நிறுவனர்களுள் ஒருவரான சுபாஷினி டிரெம்மல் அவர்களை நேர்கண்டேன்.
http://www.chennaionline.com/tamil/newsitem.aspx?NEWSID=4ea614d5-c39a-41da-933a-fb7b65f91942&CATEGORYNAME=TCHN
அடுத்து, 'காந்தளகம்' பதிப்பகத்தின் உரிமையாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களை நேர்கண்டேன்.
http://www.chennaionline.com/tamil/newsitem.aspx?NEWSID=86cc2f4f-53be-448b-b3a8-a3eba521663c&CATEGORYNAME=TCHN
என்னைப் போன்று, நீங்களும் இவ்விதமாக முக்கிய நபர்களுடன் / நண்பர்களுடன் / நிபுணர்களுடன் உரையாடலாம். இரு தரப்பினரின் ஒப்புதலுடன், தமிழில் அமைந்துள்ள சுவையான, பயனுள்ள உரையாடல்களைத் தொகுத்து எமக்கு அனுப்பினால் அவற்றைச் சென்னை ஆன்லைன் தளத்தில் வெளியிடலாம்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Tuesday, April 28, 2009
தமிழில் புதிய இ-நேர்காணல் முறை
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 6:27 PM
Labels: அரட்டை, இணைய தளங்கள், ஊடகங்கள், நேர்காணல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment