!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> நங்கநல்லூரில் ஒரு மாலைப் பொழுது ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, April 20, 2010

நங்கநல்லூரில் ஒரு மாலைப் பொழுது

திரிசக்தி குழுமமும் நல்லூர் இலக்கிய வட்டமும் இணைந்து, 10.04.2010 அன்று சென்னை நங்கநல்லூரில் கவியரங்கத்தை நடத்தியதோடு இரண்டு புதிய நூல்களையும் வெளியிட்டன.

கவிமாமணி இலந்தை இராமசாமியின் “படைத்தளித்த பதிமூன்று”, பல்கலைச் செல்வர் ஆர்.எஸ். மணியின் “Idle Tears - விழியோரம் துளி ஈரம்” ஆகிய நூல்கள் வெளியிடப்பெற்றன.

கவிமாமணி இளையவன் தலைமையில் நடந்த கவியரங்கில் நல்ல பல கவிதைகளைக் கேட்க முடிந்தது. ஆர்.எஸ். மணியின் பாடலும் ரமணனின் பாடலும் மனத்தை உருக்குவதாக அமைந்திருந்தன. கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் நான் பார்வையாளராகக் கலந்துகொண்டு, நண்பர்கள் பலரைச் சந்தித்து மகிழ்ந்தேன்.


இந்தப் படத்தில் உள்ளோர் (இடமிருந்து வலமாக): ரமணன், ஹரிகிருஷ்ணன், வீரராகவன், திரிசக்தி சுந்தரராமன், ஆர்.எஸ். மணி, அண்ணாகண்ணன்.

இந்த நிகழ்வின் விரிவான படங்களை இங்கே காண்க.

(படத்திற்கு நன்றி: ரமணன்).

1 comment:

arunan said...

ரமணனின் ‘எட்டயபுரத்துச் சுப்பையா இங்க வளந்தானாம்’ என்னும் பாடல் கிடைத்தால் வலைத்தளத்தில் ஏற்றுங்களேன்....மிக அருமையான பாடல் அது....