அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Monday, November 30, 2020
Sunset at Chennai - 21
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:08 PM 0 comments
வண்ணத்துப்பூச்சியின் நாக்கு | Butterfly Tongue
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:10 PM 0 comments
புதிய கோணத்தில் இரட்டைவால் குருவி | Drongo in a new angle
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:44 AM 0 comments
Sunday, November 29, 2020
திருக்கார்த்திகை விளக்கீடு | Karthigai Deepam | கார்த்திகை தீபம்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:17 PM 0 comments
அந்தக் காலத் தொலைநோக்கி | Antique Old Binacular
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:03 PM 0 comments
அந்தக் காலத் தொலைபேசி | Antique Old Phone
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:46 PM 0 comments
கிராமபோனில் பாட்டு கேட்பது எப்படி? | How to operate a Gramophone?
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:26 AM 0 comments
Saturday, November 28, 2020
இரு மடையான்கள் | Indian Pond Herons
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:09 PM 0 comments
செர்ரி தக்காளி | Cherry Tomato
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:54 AM 0 comments
ஆள்காட்டிப் பறவையின் குரல் | Voice of Lapwing | Did-he-do-it?
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:47 AM 0 comments
Friday, November 27, 2020
கனமழையில் இரு பறவைகள் | Two birds in heavy rain
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:32 PM 0 comments
தாம்பரத்தில் தண்ணீர் வடிகின்றது!
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:41 PM 0 comments
Thursday, November 26, 2020
Alert: தாம்பரத்தில் வெள்ளம் ஏறுகிறது
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:48 PM 0 comments
தண்ணீரில் தத்தளிக்கும் மேற்குத் தாம்பரம் | Waterlogging in West Tambaram
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:02 PM 0 comments
நிவர் புயலின் தாண்டவம் | Power of Nivar
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:22 PM 0 comments
நிவர் புயலின் சீற்றம் - 3 | The furious cyclone Nivar - 3
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:45 AM 0 comments
Wednesday, November 25, 2020
நிவர் புயலின் சீற்றம் - 2 | The furious cyclone Nivar - 2
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:26 PM 0 comments
நிவர் புயலின் சீற்றம் | The furious cyclone Nivar
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:04 PM 0 comments
நிவர் புயலால் தீவிர கனமழை | 25.11.2020 | Heavy rain due to Cyclone Nivar
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:37 PM 0 comments
மழையில் நனையும் பெண்குயில் | Female Cuckoo in rain
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:52 AM 0 comments
சிறகு உலர்த்தும் பெண்குயில் | Female Cuckoo
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:10 AM 0 comments
Tuesday, November 24, 2020
நிவர் புயலின் நகர்வு அறிய | To Track Cyclone Nivar
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:37 PM 0 comments
நிவர் புயல் | Cyclone Nivar
Trees in tune to Cyclone Nivar.
நிவர் புயலுக்கு மரங்கள் நடனம் ஆடும் காட்சி.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:34 PM 0 comments
நிவர் புயல் கனமழை | Heavy rain with Cyclone Nivar
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:49 PM 0 comments
டிரோன் மூலம் டெலிவரி
அத்தியாவசியப் பொருள்களை டிரோன் மூலம் டெலிவரி செய்ய முயலலாம். புயல், மழை, வெள்ளம் போன்ற நேரங்களில், மனிதர்களால் செய்ய முடியாத பணிகளை டிரோன் போன்ற எந்திரங்களால் செய்ய முடியும்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:02 AM 0 comments
Monday, November 23, 2020
உவமைக் கவிஞர் சுரதாவுடன் நான்
உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு தொடங்கியுள்ளது. அவருடன் பற்பல கவியரங்குகளில் நான் கலந்துகொண்டுள்ளேன். மனத்தில் தோன்றியதை ஒளிவுமறைவு இல்லாமல் பேசுவார். ஒருமுறை என்னைப் பார்த்து, நீங்க அழகா இருக்கீங்க, நடிக்கப் போலாமே என்றார். உ.வே.சா. கவியரங்கில் நான் கவிதை படித்த பிறகு, தன் பையிலிருந்து ஒரு ரூபாய் கொடுத்துப் பாராட்டினார். சும்மா பாராட்டக் கூடாது, ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்டணும் என்பார். அவரை ஒரு முறை பேட்டி கண்டேன். அதை இங்கே படிக்கலாம். http://annakannan.blogspot.com/2005/07/blog-post_30.htmlஇந்தப் படத்தில் சுரதா, 1996ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 24 மணி நேரத் தொடர் கவியரங்கில் நான் பங்கேற்றதைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்குகிறார்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:48 PM 0 comments
மாட்டுக் கொக்குகள் | Cattle Egrets
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 6:31 PM 0 comments
சின்னான் என்கிற செங்குதக் கொண்டைக்குருவி | Red-vented Bulbul
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:34 AM 0 comments
Sunday, November 22, 2020
மாலை நேரப் பறவைகள் - 4 | Evening birds - 4
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:03 PM 0 comments
இந்தியக் குளத்துக் கொக்கு -2 | Indian Pond Heron - 2
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 6:34 PM 0 comments
நத்தை குத்தி நாரை - 2 | Asian openbill stork - 2
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:31 PM 0 comments
Saturday, November 21, 2020
இந்தியக் குளத்துக் கொக்கு அல்லது மடையான் | Indian pond heron
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:29 PM 0 comments
சௌந்திரவல்லி குப்புசாமி பாடல்கள் - 2
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:46 PM 0 comments
Friday, November 20, 2020
முத்தைத்தரு பாடல் - சுதா மாதவன் குரலில்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:51 PM 0 comments
என்முகம் பாரய்யா, சண்முகனே - சுப்புலட்சுமி மோகன் பாட்டு
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:44 PM 0 comments
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2020-21 | வேதா கோபாலன் | Gurupeyarchi Palan | ...
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:21 PM 0 comments
Thursday, November 19, 2020
மணத்தக்காளி என்கிற மணித்தக்காளி அறுவடை
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:31 PM 0 comments
#Shorts: Nithila's sparkler dance | நித்திலாவின் மத்தாப்பு நடனம்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:39 AM 0 comments
Wednesday, November 18, 2020
உருசியத் தமிழறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி மறைந்தார் | Alexander Dubiansky passes away
உருசியத் தமிழறிஞர், பேராசிரியர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி (Алекса́ндр Миха́йлович Дубя́нский, Alexander Dubyansky) (வயது 80), மாஸ்கோவில் இன்று மறைந்தார். கொரோனா தொற்றின் தாக்கத்தால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு வல்லமை மின்னிதழ், வாசகர்கள் சார்பிலும் தமிழ்கூறு நல்லுலகு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த இவர், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வந்தார். தமிழில் சரளமாகப் பேசவும் கற்றவர். இவர் தொல்காப்பியத்தைப் பற்றியும் சிலப்பதிகாரத்தைப் பற்றியும் உருசிய மொழியில் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஏறத்தாழ 110 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவருடைய பணியைப் போற்றி இவருக்குத் தென் ஆசிய கல்விக்கான குமுகத்தின் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது (Exemplar Academic Awards) 2013இல் வழங்கப்பெற்றது.
1998ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலகளாவிய முருகன் மாநாட்டில் பேரா.அலெக்சாந்தர் துபியான்ஸ்கி அவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளேன். தமிழ்ச் செவ்விலக்கியங்களின் பெருமைகளை உலக சமூகத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றதில் இவருக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.
இவரது 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வல்லமையாளர் விருதினை வழங்கி மகிழ்ந்தோம். இது தொடர்பான பேரா.செ.இரா.செல்வக்குமார் அவர்களின் அறிவிப்பு இங்கே: https://www.vallamai.com/?p=69166
துபியான்ஸ்கி அவர்களின் மறைவு குறித்து, ழான் லூக் செவியார் (Jean-Luc Chevillard), வல்லமைக் குழுமத்தில் பகிர்ந்துள்ள செய்தி இங்கே:
Dear Vallamai list members,
It is with great sadness that I have to announce that our dear colleague
and friend Alexander Dubiansky (b. 1941) died in Moscow this morning
because of Covid.
We shall miss him very much.
I include a picture taken in Paris on 28th september 2019 during the 4th
European Tamil conference. This was the last occasion for Eva and me to
meet with him face to face.
— Jean-Luc Chevillard (in Müssen)
போற்றுதலுக்கு உரிய பணிகள் புரிந்த துபியான்ஸ்கி அவர்களின் மறைவு, தமிழுலகிற்கும் மொழியியலுக்கும் பேரிழப்பு. தமிழின் தகுதிகளை, தமிழிலக்கியத்தின் சிறப்புகளை உலக அரங்கில் ஓயாமல் உரைத்த தமிழறிஞர், அறிவியல் பார்வையும் நம்பகத்தன்மையும் கொண்டவர், உவந்தேற்று மதிக்கப்பெற்ற அறிஞர் துபியான்ஸ்கியின் மறைவுக்குப் பெரிதும் வருந்துகிறோம். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.
படத்துக்கு நன்றி: https://www.ldcil.org,
The Hindu, June 22, 2010, Picture: K. Pichumani
நன்றி: https://www.vallamai.com/?p=99886
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:13 PM 0 comments
Tuesday, November 17, 2020
மழையில் நனைந்த கல்வாழைப் பூ | Canna Indica flower
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:59 PM 0 comments
#Shorts: Butterfly - 36 | வண்ணத்துப்பூச்சி - 36
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:57 PM 0 comments
அஞ்சலி: க்ரியா ராமகிருஷ்ணன்
அண்ணாகண்ணன்
தமிழ்ப் பதிப்பியலை, அகராதியியலை நவீன கண்ணோட்டத்துடன் அணுகி, தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப, புதிய பரிமாணங்களுடன் மிளிரச் செய்த க்ரியா ராமகிருஷ்ணன், இன்று (17.11.2020) மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன்.
க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களை நான் ஓரிரு முறைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன். முதல் முறை, 2004 காலக்கட்டத்தில் அமுதசுரபியில் நான் பொறுப்பில் இருந்தபோது, வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிப்பித்தேன். அப்போது ஒரு கூட்டத்தில் அவர், க்ரியா ராமகிருஷ்ணனை எனக்கு அறிமுகம் செய்வித்தார். க்ரியா என மெய்யெழுத்தில் தொடங்குமாறு ஏன் வைத்தீர்கள் எனக் கேட்டேன். அதுதான் அதன் உச்சரிப்பு என்றார். அப்படியானால், ராமக்ருஷ்ணன் என்றுதானே எழுத வேண்டும். அங்கு மட்டும் ஏன் கிருஷ்ணன் என எழுதுகிறீர்கள் எனக் கேட்டதாக ஞாபகம்.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் சைக்கிள் உள்ளிட்ட பிறமொழிச் சொற்கள் எப்படி இடம்பெற்றன? என அதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்களிடம் கேட்டேன். ஆனால், பிறகு இதற்கான தேவையைப் புரிந்துகொண்டேன். தமிழர் நாவில் புழங்கும் சொற்கள் அனைத்தையும் திரட்டித் தொகுக்கும் முயற்சியில் ராமகிருஷ்ணன், ஒரு முன்னோடி.
க்ரியா வலைத்தளத்தையும் (https://www.crea.in) செயலியையும் அவர் உருவாக்கியிருந்தார். தமிழில் அதிக அளவு சொற்களைத் திரட்டி, சொல்வங்கி ஒன்றை அவர் வைத்திருந்தார். தமிழில் மென்பொருள் கருவிகளை உருவாக்கும் நண்பர்கள், சொற்றொகுதிகள் தேவை எனக் கேட்டபோது, விக்கிப்பீடியாவையும் க்ரியாவையும் பரிந்துரைத்துள்ளேன்.
க்ரியா ஆண்ட்ராய்டு செயலியைத் தரவிறக்கினால் 10 முறைகள் மட்டுமே இலவசமாகத் தேட முடியும்; அதற்கு மேல் தேடுவதானால், ரூ.199 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டிருந்தார். இதற்காக அந்தச் செயலிக்கு மிகக் குறைவான மதிப்பீடு அளித்து, அவரை வசைமாரி பொழிந்திருப்பதைக் காணும்போது வருத்தமாக உள்ளது. தமிழ் மென்பொருள்கள், தமிழ்ச் செயலிகள், தமிழுக்காக உருவாகும் தொழில்நுட்பக் கருவிகளின் வணிகச் சந்தை, மிக பலவீனமாக இருக்கிறது. இந்த இடர்களை எதிர்கொண்டே, கடந்தே தமிழுக்கும் தமிழ்கூறு நல்லுலகிற்கும் தொண்டாற்ற வேண்டியிருக்கிறது.
புதிய சிந்தனை, புதிய ஆக்கங்கள், சமரசம் இல்லாத தரம், செம்மை ஆகியவற்றை முன்னிறுத்தி, 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றி உழைத்த க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு, தமிழுலகிற்குப் பேரிழப்பு. அவர் என்றென்றும் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.
அவரது முக்கியமான ஒரு நேர்காணல் இங்கே – https://tamil.asiavillenews.com
படத்துக்கு நன்றி: ஆசியாவில்லி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:40 PM 0 comments
நத்தை குத்தி நாரை | அகலவாயன் | Asian openbill stork | Anastomus oscitans
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:57 AM 0 comments
Monday, November 16, 2020
மத்தாப்பு நடனம் | Sparkler Dance
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:30 PM 0 comments
கரிச்சான் குருவிகளின் பாடல் | Song of Drongo
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:20 PM 0 comments
கற்பூரத்தின் இன்னொரு பயன்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:53 AM 0 comments
Sunday, November 15, 2020
இலண்டனில் காலை நடை | A Morning Walk in London
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:00 PM 0 comments
கைமுறுக்கு சுற்றுவது எப்படி? | KaiMurukku
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:09 PM 0 comments
தீபாவளி மழை | Rain after Deepavali
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:14 PM 0 comments
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2020-21 | வேதா கோபாலன் | Gurupeyarchi Palan | ...
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:09 AM 0 comments
Saturday, November 14, 2020
கேதார கௌரி விரதத்தின் தாத்பர்யம் | Kethara Gowri Viratham
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:15 PM 0 comments
தீபாவளி நல்வாழ்த்துகள் | Happy Deepavali
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:01 AM 0 comments
Friday, November 13, 2020
தீபாவளி லேகியம் | தீபாவளி மருந்து செய்வது எப்படி?
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:54 PM 0 comments
Wednesday, November 11, 2020
FactCheck: தமிழ்நாடு வடிவத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடம் உள்ளதா?
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:12 PM 0 comments
தீபாவளி பலகாரங்களுக்கு ஸ்ரீ காமதேனு ஸ்டோர்ஸ்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:30 PM 0 comments
விரலழுத்த மருத்துவம் | Reflexology | நிர்மலா ராகவன் நேர்காணல்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:22 PM 0 comments
Tuesday, November 10, 2020
Butterfly - 35 | வண்ணத்துப்பூச்சி - 35
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:09 PM 0 comments
நீலவால் பஞ்சுருட்டான் | Blue tailed bee eater | Merops philippinus
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:27 PM 0 comments
Sunday, November 08, 2020
Sunset at Chennai - 20
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:38 PM 0 comments
Saturday, November 07, 2020
வானவில் | Rainbow
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:23 PM 0 comments
'வாழ்நாள் சாதனையாளர்' சுபாஷிணி திருமலை | 'Lifetime Achiever' Subashini Tirumalai
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:21 PM 0 comments
Friday, November 06, 2020
நலவாழ்வுக்கு யோக முத்திரைகள் - 2 | Mudras (hand gestures) for Wellbeing - 2
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:18 AM 0 comments
Wednesday, November 04, 2020
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2020-21 | வேதா கோபாலன் | Gurupeyarchi Palan | ...
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:20 PM 1 comments
Sunday, November 01, 2020
Factcheck: நாடார் குலத்தை யுனெஸ்கோ பாராட்டியுள்ளதா?
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:11 PM 0 comments
வல்லூறு | வைரி | Shikra | Falcon | Accipiter badius
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:41 PM 0 comments
டிரோன்களைப் பொருள் விநியோகத்திற்கு மட்டுமின்றி, இருளான பகுதிகளில் ஒரு தற்காலிக நகரும் மின்விளக்காகவும் தொலைபேசி, இணையம் ஆகியவற்றை வழங்கும் ஒரு நகரும் கோபுரமாகவும் பயன்படுத்த முடியும்.
பொருள்களைக் கொண்டு சேர்ப்பதுடன், அவரவர் வீட்டிலிருந்து குப்பைகளைத் திரட்டிக்கொண்டு வந்து சேர்க்கும் பணிகளிலும் இவற்றை ஈடுபடுத்தலாம். சற்றே பெரிய டிரோன்களைத் தனி வாகனமாகவும் பொது வாகனமாகவும் பயன்படுத்தும் முயற்சிகளும் தொடங்கியுள்ளன. எனவே, விமானப் போக்குவரத்தைக் கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துவது போல், டிரோன் போக்குவரத்தையும் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் தேவை உள்ளது. இதற்கெனத் தனி ஆணையத்தை உருவாக்க வேண்டும்.