!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2021/08 - 2021/09 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, August 31, 2021

கண்ட நாள் முதலாய் | புல்லாங்குழல் இசை | அஷோக் ரவி | Kanda Naal Mudhalai

கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு - 7

'கண்ட நாள் முதலாய்' என்ற புகழ்பெற்ற பாடலை, அஷோக் ரவியின் புல்லாங்குழலிசையில் கேட்டு மகிழுங்கள்.

Monday, August 30, 2021

கண்ட நாள் முதலாய் | Kanda Naal Mudhalai - Krishna Version

கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு - 6

முருகனைப் பாடுகின்ற 'கண்ட நாள் முதலாய்' என்ற புகழ்பெற்ற பாடலைச் சற்றே திருத்தி, கண்ணனைப் பாடுகின்றார், கல்யாணம் பக்திசாரன். கேட்டு மகிழுங்கள்.

#Shorts: கண்ணிநுண் சிறுத்தாம்பு | Kanninun Siruthambu

கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு - 5

மதுரகவியாழ்வார் அருளிச்செய்த 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்ற பாமாலையின் முதல் பாடலைச் செல்வி வி.ஸ்ரீநிகா இங்கே வழங்குகிறார்.

கிருஷ்ண லீலை | Krishna Leelai

கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு - 4

எங்கள் மகன் ஹரி நாராயணனின் கிருஷ்ண லீலை. 

Sunday, August 29, 2021

கோவிந்தா கோவிந்தா | Govinda Govinda | Krishnakumar

கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு - 3

அருள் கூடிவரும் இந்தத் திருநாளில், 'கோவிந்தா கோவிந்தா' என்ற புகழ்பெற்ற பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

முரளீதரா கோபாலா | Muralidhara Gopala | Krishnakumar | 4K

கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு - 2

என்.எஸ்.சிதம்பரம் இயற்றி இசையமைத்த 'முரளீதரா கோபாலா' என்ற புகழ்பெற்ற பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இது 4K தரத்தில் அமைந்த காணொலி.

முரளீதரா ஹரே மோகன கிருஷ்ணா | தஞ்சை ராமையா தாஸ் | கிருஷ்ணகுமார்

கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு - 1

பிரேம பாசம் திரைப்படத்தில், தஞ்சை ராமையா தாஸ் இயற்றி, எஸ்.ராஜேஸ்வர ராவ் இசையமைத்த 'முரளீதரா ஹரே மோகன கிருஷ்ணா' என்ற புகழ்பெற்ற பாடலை, 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Saturday, August 28, 2021

#Shorts: Red Helen

சந்தன முல்லையில் தேனருந்தும் வண்ணத்துப்பூச்சி!

#Shorts: கூம்பு வடிவ ஒலிபெருக்கி | Cone Speakers

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை நீதிமன்றம் தடை செய்த பிறகும் இன்னும் இவை புழக்கத்தில் இருக்கின்றன. தாம்பரம் பெருநகராட்சி ஆணையாளரே இவற்றைப் பயன்படுத்துகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகுமா? இதில் அரசின் கொள்கை முடிவு என்ன?

Friday, August 27, 2021

நிலையான வைப்புநிதி - எதில்? எப்படி? | ராமகிருஷ்ணன் நாயக் | Fixed Deposit

ராமகிருஷ்ணன் நாயக், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர். 26  ஆண்டுகளாக நிதித் துறையில் பணியாற்றி வருகிறார். தட்சின் கேப்பிடல் என்ற நிறுவனத்தின் இயக்குநர். நிலையான வைப்புநிதி குறித்த பல்வேறு ஐயங்களுக்கு இந்தப் பதிவில் பதில் அளித்திருக்கிறார். சிறு முதலீட்டாளர்கள் அவசியம் பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். நிதி, முதலீடு, சேமிப்பு, காப்பீடு தொடர்பான உங்கள் கேள்விகளை, பின்னூட்டம் வழியே எங்களுக்கு அனுப்புங்கள்.

கொண்டு செலுத்திடுவேன் | அண்ணாகண்ணன் | கிருஷ்ணகுமார்

அண்ணாகண்ணன் இயற்றி இசையமைத்த 'கொண்டு செலுத்திடுவேன்' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

Thursday, August 26, 2021

#Shorts: Feeding a cow

பசுவுக்குப் பழங்கள் கொடுக்கும் இந்தச் சிறுமி வாழ்க!

#Shorts: Rod Cutting

ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பல்வேறு கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எங்கள் வீட்டின் அருகே நடைபெற்று வரும் கட்டுமானப் பணியின் ஒரு கீற்று இங்கே.

#Shorts: Yellow Fellow

எதற்காகத் தலையசைக்கிறாய், இளம்பூவே?

Wednesday, August 25, 2021

The Story of Doc McStuffins | Nithila

இன்று நித்திலாவின் எட்டாவது பிறந்த நாள். இதை முன்னிட்டு, தன்னைக் கவர்ந்த டாக் மெக்ஸ்டஃபின்ஸ் (Doc McStuffins) என்ற பாத்திரத்தின் (தொலைக்காட்சித் தொடரின் கதாநாயகி) கதையை நித்திலா இங்கே விவரிக்கிறார். 

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் | Karpagavalli Nin Porpathangal | கிருஷ்ணகுமார்

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பணிந்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!

என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

Tuesday, August 24, 2021

சுண்டைக்காய் அறுவடை | Sundaikkai | Turkey berry Harvest

நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று சுண்டைக்காய் அறுவடை.

Monday, August 23, 2021

Singapore Underwater World - An amazing Tour

சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில், அண்டர்வாட்டர் வேர்ல்டு என்ற நீர்வாழ் உயிரினக் காட்சியகம் இருந்தது. இதன் உள்ளே, அக்ரிலிக் என்ற நெகிழியால் ஆன, நீரடிச் சுரங்கம் இருந்தது. இந்தச் சுரங்கத்தின் வழியே நீர்வாழ் உயிரினங்களை மிக நெருக்கமாகக் கண்டு மகிழ முடிந்தது. 1991ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இது, 2016ஆம் ஆண்டு மூடப்பட்டது. 25 ஆண்டுகளில் பல்லாயிரம் பார்வையாளர்களை ஈர்த்தது. 2002 காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் வசித்தபோது ஹேமமாலினி இந்தக் காணொலியை எடுத்தார். இதைப் பார்க்கும்போது, ஆழ்கடலில் விழிவிரியப் பார்த்துக்கொண்டே நாம் நடந்து வரும் உணர்வைப் பெறுகிறோம். சின்னஞ்சிறியதும் பென்னம்பெரியதுமாக, விதவிதமான நீர்வாழ் உயிரினங்கள், நம் தலைக்கு மேலும் நாலாபுறத்திலும் வலம் வருவது, அரிய ஓர் அனுபவம். 

London Chocolates

Unboxing London Chocolates. Thanks to Navya.

Saturday, August 21, 2021

#Shorts: Dance of Fire

தீயின் நடனம்

வீணையடி நீயெனக்கு | மகாகவி பாரதியார் | கிருஷ்ணகுமார்

மகாகவி பாரதியின் 'வீணையடி நீயெனக்கு' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இந்நாள் நன்னாள், இக்கணம் பொற்கணம்.

Friday, August 20, 2021

இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி | அண்ணாகண்ணன் | பரிமளா சாரநாதன்

நான் இயற்றிய 'இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி'யைத் திருமதி பரிமளா சாரநாதன், அழகுற இசையமைத்துப் பாடியுள்ளார். இந்தப் பாட்டு விருந்தினைக் கேட்டு மகிழுங்கள்.

பட்டாம்பூச்சி நடக்கிறது | Walking Butterfly

பட்டாம்பூச்சி இரவில் என்ன செய்யும் என்பது என் நெடுநாள் ஐயம். நேற்று இரவு பத்து மணியளவில் இந்தப் பட்டாம்பூச்சி, எங்கள் வீட்டு ஜன்னலில் வந்தமர்ந்தது. பொதுவாக, பட்டாம்பூச்சிகள் இரவில் வெளியே வருவதில்லை. சில மட்டும், குழல் விளக்கின் வெளிச்சத்தை நாடி வரும். இதுவும் அப்படியே வந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த வெளிச்சத்திலிருந்து அதற்கு என்ன கிடைக்கும் என அறியேன். இன்னொரு வியப்பு, இந்தப் பட்டாம்பூச்சி நடக்கிறது.

Thursday, August 19, 2021

கணினித் தொழில்நுட்பக் கலைச்சொற்கள் - அண்ணாகண்ணன் கருத்துரை

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில், கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நான் வழங்கிய கருத்துரை இங்கே.

Wednesday, August 18, 2021

கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுக் கூட்டம்

 தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசாணையின்படி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில், துறைதோறும் வல்லுனர் குழுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. அதில், தெரிவிக்கும் கலைச்சொற்களை, சொற்குவை இணையத்தளத்தில் ஏற்றி வருகின்றனர். அந்த வரிசையில், 19.08.2021 அன்று கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இதில் வல்லமை மின்னிதழ் ஆசிரியர் முனைவர் அண்ணாகண்ணன், நீச்சல்காரன், முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் தமிழ்ப்பரிதி மாரி, இரா.நரசிம்மன் (சைபர்சிம்மன்), முனைவர் இல.சுந்தரம், முனைவர் வ.தனலட்சுமி, மீ.சோமசுந்தரம், முனைவர் ச.முத்துவிக்னேஷ், மு.சு.அருண்குமார். இர.கன்னியம்மாள், அ.கிருஷ்ணகுமார், ச.பார்த்தசாரதி, கி.முத்துராமலிங்கம், க.விஜயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அகரமுதலி திட்ட இயக்ககத்தின் இயக்குநர் தங்க.காமராசு, நோக்கவுரை நிகழ்த்துகிறார். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார். 

சொற்குவை (sorkuvai)


யூடியூப் தளத்தில் இது நேரலையாக ஒளிபரப்பாகிறது.

Fishing in England

இங்கிலாந்தில் எப்படி மீன்பிடிக்கிறார்கள் என்று பாருங்கள்.

#Shorts: Mandevilla White | Rock Trumpet

நர்சரி என்னும் நாற்றுப் பண்ணையில் இந்தப் பூவைப் பார்த்தேன். அமெரிக்கக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டது. வெண்ணிற மாண்டுவில் (Mandevilla White) என்று பெயர். நீண்ட கூம்பு போல் இருப்பதால், பாறைத் தாரை அல்லது பாறை எக்காளம் (Rock Trumpet) என்றும் அழைக்கின்றனர். வேறு பல வண்ணங்களில் பூக்கக் கூடியது. பிரித்தானிய தோட்டக் கலைஞர் ஹென்றி மாண்டுவில் என்பாரின் பெயரால் இது, மாண்டுவில் என அழைக்கப்பெறுகின்றது.

Tuesday, August 17, 2021

மாதவிடாய் வலி தீர | நிர்மலா ராகவன்

மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்குத் தாங்க முடியாத அளவுக்கு வலி, வருத்தம், கோபம், எரிச்சல் போன்ற கலவையான உணர்வுகள் எழுகின்றன.  உயிரைப் பிளக்கும் இந்த வலியைத் தீர்க்கும் மருந்துகள், மருத்துவ முறைகள், பயிற்சிகள் என்னென்ன? இந்த நேரத்தில் அவர்களும் குடும்பத்தினரும் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? இதோ, ஆலோசனை வழங்குகிறார் நிர்மலா ராகவன். அத்துடன், மகப்பேற்றுக்குப் பிறகு வயிறு பெருத்துவிடும் பெண்கள், வயிறு சுருங்க என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். இந்த உரையாடலைப் பார்த்துப் பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும்.

#Shorts: Cat eats grass in early morning

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவது நல்லது என்பர். இது பூனைகளுக்கும் தெரிந்திருக்கிறது.  இதோ இந்தப் பூனை, இளசான அருகம்புல்லாகத் தேடி எடுத்துச் சுவைக்கிறது. இன்று காலை 6 மணியளவில் கண்ட காட்சி.

Monday, August 16, 2021

ஒரு செம்ம கதை | ஹரி நாராயணன்

இன்று எங்கள் மகன் ஹரி நாராயணனின் மூன்றாவது பிறந்த நாள். இதை முன்னிட்டு, அவன் சொன்ன கதை ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். 

Sunday, August 15, 2021

இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி | அண்ணாகண்ணன்

இந்தியத்தாய்க்கு நான் பாடிய திருப்பள்ளியெழுச்சி இதோ. 'பூபாளம்' என்ற தலைப்பில், 1996இல் வெளியான என் முதல் கவிதைத் தொகுப்பில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது.

தொன்று நிகழ்ந்தது | மகாகவி பாரதியார் | கிருஷ்ணகுமார்

பாடல் - தொன்று நிகழ்ந்தது
இயற்றியவர் - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாடியவர் - கிருஷ்ணகுமார்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

Saturday, August 14, 2021

#Shorts: Balancing Toy

A balancing toy at Back to the 90s Mittai Kadai, Chennai.

Pink Dolphin Show at Singapore | Sentosa Island

சிங்கப்பூரில் நடைபெற்ற பிங்க் டால்பின் கேளிக்கைக் காட்சி, இதோ. டால்பின்கள் நடனமாடுவதையும் நடப்பதையும் வளையத்துக்குள் பாய்வதையும் வளையத்தை மூக்கால் சுழற்றுவதையும் பந்து எடுத்து வருவதையும் பார்வையாளருக்கு முத்தம் கொடுப்பதையும் இன்னும் பல சாகசங்களையும் கண்டுகளியுங்கள். 

படப்பதிவு - ஹேமமாலினி லோகநாதன்.

Friday, August 13, 2021

#Shorts: Oh Butterfly

கோவையில் நான் கண்ட வண்ணத்துப்பூச்சி, இது. கல்லிலும் மண்ணிலும் அமர்ந்தபடி இருந்தது. அரை மணிநேரம்போல் இதைப் பின்தொடர்ந்து படமெடுத்துக்கொண்டிருந்தேன். அதைத் தொந்தரவு செய்கிறேன் என எண்ணியதோ என்னவோ, நேராக என் கண்களைக் குறிவைத்து, தாக்குவது போல் நெருங்கி வந்தது. கண்களுக்கு முன் செல்பேசி இருந்ததால் தப்பித்தேன்.

சமயபுரத்தாளே சங்கரியே | பிரேமா நாராயணஸ்வாமி பாடல் | Samayapuram Mariyamman

இந்த ஆடி வெள்ளியில் சமயபுரத்தாளைப் போற்றி வணங்குவோம். பிரேமா நாராயணஸ்வாமி இயற்றி, இசையமைத்துப் பாடிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

சமயபுரத்தாளே சங்கரியே 
சக்தி உமையாளே ஸ்யாமளியே

Thursday, August 12, 2021

Elephant Bath | யானைக் குளியல்

ஆகஸ்டு 12, உலக யானை தினம் (World Elephant Day). யானைகள் குளிக்கும் அழகை இங்கே பாருங்கள். பேருருவம் கொண்ட போதிலும், அதுவும் ஒரு குழந்தை தான் என்பதை இதில் கண்டுகொள்ளலாம்.

புதிய விளையாட்டுகள் - 90ஸ் மிட்டாய் கடை | New Products in 90s Mittai Kadai

சென்னை சிட்லபாக்கத்தில் அமைந்துள்ள பேக் டு த 90ஸ் மிட்டாய் கடை (Back To The 90s Mittai Kadai), 90களில் புழக்கத்தில் இருந்த விளையாட்டுகள், தின்பண்டங்களுக்குப் புகழ் பெற்றது. இந்தக் கடையின் புதிய வரவுகள், புதிய விளையாட்டுகள், புதிய தின்பண்டங்கள் என்னென்ன? வாங்க, பார்க்கலாம்.

தற்கா

தற்கா என்ற பெயரில் கை சுத்திகரிப்புப் பொருள் ஒன்றைப் பார்த்தேன். கையைச் சுத்திகரிப்பதன் வழியாகத் தன்னைக் காத்துக்கொள்ளலாம் என்ற பொருளில், தற்கா எனப் பெயரிட்டது நல்ல பொருத்தம். மேலும் இது, திருக்குறளில் இடம்பெறும் சொல்.


தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

Wednesday, August 11, 2021

சின்னஞ்சிறு கிளியே | மகாகவி பாரதியார் | கிருஷ்ணகுமார் | Chinnanjiru Kiliye

பாடல் - சின்னஞ்சிறு கிளியே
இயற்றியவர் - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாடியவர் - 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார்

#Shorts: Moon Cactus | Ruby Ball Cactus

நர்சரி எனப்படும் நாற்றுப் பண்ணையில், இந்தச் செடியின் விலை முந்நூறு ரூபாய். வலைத்தளம் ஒன்றில் இதை எழுநூறு ரூபாய்க்கு விற்கிறார்கள். 

Tuesday, August 10, 2021

மயில் மாணிக்கம் விதைகள் | Mayil Manickam Seeds | Ipomoea Quamoclit

நம் மாடித் தோட்டத்தில் உள்ள மயில் மாணிக்கம் கொடியின் விதைகளைச் சேகரித்து வைத்தோம். உங்களுக்கு இந்த விதைகள் வேண்டுமா?

#Shorts: A Ride in Bournemouth Zip Wire | England

இங்கிலாந்தின் போனமாத் கடற்கரையில் ஜிப் வயர் என்ற சேவை உண்டு. அந்தரத்தில் ஒரு கொக்கியில் தொங்கியபடி, விரிந்த கடலைப் பார்த்துக்கொண்டே பயணிக்கலாம். வர்றீங்களா, ஒரு நடை பறந்துட்டு வரலாம்?

Monday, August 09, 2021

#Shorts: மின்னும் கல்வாழை | Canna Indica

இன்றைய மாலை நேர மஞ்சள் வெயிலில், சிலுசிலுத்து ஜொலித்த கல்வாழை.

Sunday, August 08, 2021

#Shorts: Nigerian Banana | நைஜீரிய வாழை

நைஜீரியாவில் என் தம்பி பிரசன்னா, வாழைத்தார் அறுவடை செய்யும் காட்சி.

இல்லறத்தில் இன்பம் சூழ - 1 | நிர்மலா ராகவன்

நம் யூடியூப் அலைவரிசையில் ஒரு புதிய பகுதியைத் தொடங்கியுள்ளோம். இல்லறத்தில் இன்பம் சூழ, செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து, எழுத்தாளர் நிர்மலா ராகவன் ஆலோசனை வழங்குகிறார். குடும்பத்தில் எப்படியெல்லாம் சிக்கல்கள் உருவாகின்றன, அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்று கனிவுடன் எடுத்துரைக்கிறார். உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை யூடியூபில் இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும்.

Saturday, August 07, 2021

நட்சத்திர வெண்டை விதைகள் | Star Vendai Seeds | Star of David Okra

நம் மாடித் தோட்டத்தில் உள்ள நட்சத்திர வெண்டை விதைகளைச் சேகரித்து வைத்தோம். இந்த விதைகள், உங்களுக்கு வேண்டுமா?

Friday, August 06, 2021

சக்தி கானம் 6 - செம்பரிதி ஜோதியிலே

இந்த ஆடி வெள்ளியில் அம்மனைத் தொழுவோம். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை ஆராதிக்கும் 'செம்பரிதி ஜோதியிலே' என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். சக்தி கானம் இசைப் பேழையிலிருந்து ஆறாவது பாடல்.  ஓம் சக்தி! பராசக்தி!

சிரிப்பு யோகா - பயிற்சி 10 | ஒரு சென்டி மீட்டர் சிரிப்பு

இந்த ஒரு சென்டி சிரிப்புப் பயிற்சியைச் செய்தால், உங்கள் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கும். அனாவசியக் கொழுப்புகள் கரையும். விநாடிகளில் உங்கள் நாடி செம்மையடையும். நாடி வாருங்கள், நலம் பெறுங்கள். வேடிக்கையாக வெடித்துச் சிரியுங்கள்.

Wednesday, August 04, 2021

சிரிப்பு யோகா - பயிற்சி 9 | ஒரு மீட்டர் சிரிப்பு

'சிரிப்பு யோகா' தொடரில் ஒன்பதாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இதைத் தொடர்ந்து செய்து வர, தூக்கமின்மையால் ஏற்படும் களைப்பு நீங்கும். இதை ஒரு முறை செய்தால், அரை மணி நேரம் தூங்கினால் பெறக்கூடிய ஆற்றல் கிடைக்கும். அளந்து சிரிக்கலாம், வாங்க.

அமெரிக்காவில் வீட்டுத் தோட்டம் | Home Garden at USA

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வாழ்ந்து வரும் திருமதி லட்சுமி அவர்களின் அழகிய வீட்டுத் தோட்டம் இதோ. தொட்டியிலேயே வாழை மரம் வளர்க்க முடியும் எனக் காட்டியிருக்கிறார். இந்தக் கண்கவர் தோட்டத்தைக் கண்டு மகிழுங்கள்.

Tuesday, August 03, 2021

மொபைலில் கேரம் விளையாடுவது எப்படி? | How to Play Carrom on Mobile Phone?

மொபைலில் கேரம் விளையாடுவது எப்படி? இதோ, செயல்முறை விளக்கம் வழங்குகிறார், சுதா மாதவன். நீங்களும் விளையாடிப் பாருங்க, உங்க அனுபவத்தை எங்களுக்குச் சொல்லுங்க.

A visit to ZSL London Zoo

லண்டன் உயிரியல் பூங்காவின் உள்ளே சுற்றிப் பார்க்கலாம், வாங்க.  

London Zoo is the world's oldest scientific zoo. It was opened in London on 27 April 1828, and was originally intended to be used as a collection for scientific study. In 1831 or 1832, the animals of the Tower of London menagerie were transferred to the zoo's collection. It was opened to the public in 1847. Today, it houses a collection of 673 species of animals, with 19,289 individuals, making it one of the largest collections in the United Kingdom. The zoo is sometimes called Regent's Zoo. It is managed under the aegis of the Zoological Society of London (established in 1826) (Wiki).

Video by Navya.

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமா? | ஹாஹோ சிரிப்பானந்தா

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமா? எப்படி? சிரிக்கும்போது உடலில், மனத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? ஏன் சிரிக்க வேண்டும்? எப்படிச் சிரிக்க வேண்டும்? நுணுக்கமாக விளக்குகிறார் ஹாஹோ சிரிப்பானந்தா.

Sunday, August 01, 2021

கலைஞர், ஜெயலலிதா, மோடி, அம்பானி... எல்லோரையும் பாடுவேன் - ஆனந்த ராவ்

உழைக்கும் வர்க்கப் பாடகர் ஆனந்த ராவ், ஓட்டல்களில் உணவு பரிமாறுபவராக (சப்ளையர்) வேலை பார்த்தவர். 79 வயதிலும் படபடவெனப் பேசுகிறார். திரைப்பாடல் மெட்டுகளில் தானே பாட்டுக் கட்டி, இனிய குரலில் பாடுகிறார். விவசாயப் பணியாளர், கட்டடத் தொழிலாளர், சமையல் கலைஞர், தையல் கலைஞர், ஆட்டோ ஓட்டுநர்... எனப் பலரையும் பாடியவர். அத்துடன் நில்லாமல் கலைஞர், ஜெயலலிதா, மோடி, அம்பானி... எனப் பலரையும் புகழ்ந்து பாடியிருக்கிறார். யாரைப் பற்றியும் பாட முடியும், எல்லோரையும் நேசிக்கிறேன் என்கிறார். இந்தப் பதிவில் தமது பாடல்கள் பலவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். சுவையான இந்த உரையாடலைக் கேட்டு மகிழுங்கள்.

சிரிப்பு யோகா - பயிற்சி 8 | குரு சிரிப்பு | ஹாஹோ சிரிப்பானந்தா

'சிரிப்பு யோகா' தொடரில் எட்டாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இதைத் தொடர்ந்து செய்து வர, அனாவசிய கொழுப்புகள் குறையும், வாழ்க்கைத் தரம் மேம்படும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம், வாங்க.