!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2020 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, December 31, 2020

100 நாரைகள் சங்கமம் | 100 Storks Get-together | Asian Openbill Storks

சில நாள்கள் முன்பு, 100 நாரைகள் பறக்கும் காட்சியைப் பகிர்ந்தேன். அந்த நாரைகள் அனைத்தும் நம் வீட்டின் பின்னே இன்று அமர்ந்து, 2021ஆம் ஆண்டு குறித்து மந்திராலோசனையில் ஈடுபட்ட காட்சி, இங்கே.

உண்மைச் சம்பவம் 1 - புறவழிச் சாலையிலே | In Chennai Bypass Road

சென்னைப் புறவழிச் சாலையில் எனக்கு நடந்த உண்மைச் சம்பவத்தை விவரித்துள்ளேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

திருப்பாவை - 16 | நாயகனாய் நின்ற | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 16

கதவு என்பதை இலக்கிய நடையில் கதவம் என எழுதுவர். கதவம் என்ற சொல், திருப்பாவையில் மூன்று இடங்களில் வருகிறது. 9ஆம் பாடலில், மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய் என்கிறார். 16ஆவது பாடலில் இரு இடங்களில் கதவம் வருகின்றது. வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் என்றும் நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய் என்றும் பேசுகின்றார். இதே கதவை வாசற்கடை என்றும் சொல்வதுண்டு. நின் வாசற் கடை பற்றி என்றும் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் என்றும் ஆண்டாள் பாடுகிறார். 

2020ஆம் ஆண்டு முடிந்து, 2021ஆம் ஆண்டின் மணிக்கதவம் திறக்கும் தருணம், இது. புதியன பிறக்கட்டும், நல்லன நடக்கட்டும் என நாயகனை வேண்டுவோம். நாயகனாய் நின்ற நந்தகோபனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

Wednesday, December 30, 2020

மார்கழிக் கோலம் - 2 | Margazhi Kolam - 2

மார்கழியின் அடையாளமாகத் திகழும் வண்ண வண்ணக் கோலங்கள், நம் வீதிகளை அலங்கரிக்கும் கோலத்தைப் பாருங்கள்.

திருவெம்பாவை - 15 | ஓரொருகால் எம்பெருமான் | ஸ்ருதி நடராஜன் குரலில்

திருவெம்பாவை - 15

மாணிக்கவாசகர்

பாடியவர் - ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

பொழிப்புரை:

கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய கொங்கை களை உடையீர்! ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினாள் கூறுதலை நீங்காதவளாகிய இவள் மனம் மகிழ்ச்சி மிக விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காத நீரின் நீண்ட தாரைகள் ஒழுகப் பூமியின்மேல் ஒருமுறையே வீழ்ந்து எழாது வணங்குவாள். பிற தேவரைத் தான் வணங்கமாட்டாள். பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ? இவ் வாறு பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில் நீர் குதித்து ஆடுவீராக.

உரைக்கு நன்றி - தேவாரம் தளம் (Thevaaram dot org)
படத்திற்கு நன்றி - விக்கிப்பீடியா

திருப்பாவை - 15 | எல்லே இளங்கிளியே | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 15

திருப்பாவை 15

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

மரபுக் கவிதைக்குள் உயிர்ப்புள்ள ஓர் உரையாடலை இயல்பாக அமைக்க முடியும், ஒரு காட்சியை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்ட முடியும் என்பதற்கு, திருப்பாவையின் 15ஆம் பாடல் ஓர் எடுத்துக்காட்டு. 

வாசலில் நின்று அழைக்கும்போது, சற்றே உரக்க அழைப்போம். அப்படித் தோழியை உரக்கக் அழைக்கிறார். ஏய் என்பதன் அக்கால வடிவம், எல்லே. எல்லேஏஏஏ என்று அதை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டலாம். அவர்களின் உரையாடல் இப்படிப் போகிறது.

ஏடீ பொண்ணே இன்னுமா தூங்குறே?

சில்வண்டு போல் காதுகிட்ட ங்கொய்ய் என்று கூப்பிடாதீங்க, பெண்டுகளா. இதோ  வந்துட்டேன்.

கதை விடுவதில் நீ கெட்டிக்காரி. உன் வாயளப்பு எல்லாம் எப்பவோ எங்களுக்குத் தெரியும்.

நீங்களே வல்லவர்களாக இருங்கள். நானே ஏமாற்றுக்காரியாக இருந்துட்டுப் போறேன்.

சீக்கிரமா வா. உனக்கு மட்டும் தனியா என்ன வேண்டியிருக்கு?

எல்லாரும் வந்தட்டாங்களா?

வந்துட்டாங்க, நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கோ. குவலய பீடம் என்ற யானையைக் கொன்றவனும் பகைவர்களை நேருக்கு நேர் சந்தித்து வென்றவனுமாகிய மாயக்கண்ணனைப் பாடுவதற்கு வாடீ, இளங்கிளியே.

இந்த இனிய உரையாடலை அழகிய கவிதையாய்ப் படைத்த ஆண்டாளின் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

Tuesday, December 29, 2020

திருவெம்பாவை - 14 | காதார் குழையாட | ஸ்ருதி நடராஜன் குரலில் | Thiruvembavai - 14

திருவெம்பாவை - 14

மாணிக்கவாசகர்

பாடியவர் - ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

பொழிப்புரை:

காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய, வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.

உரைக்கு நன்றி - தேவாரம் தளம் (Thevaaram dot org)
படத்திற்கு நன்றி - விக்கிப்பீடியா
By Artist Genius Shri K.R.Venugopal Sharma

திருப்பாவை - 14 | உங்கள் புழக்கடை | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 14

ஆஹா, நாம் எப்பேர்ப்பட்ட காலத்தைக் கடந்து வந்திருக்கிறோம். ஒவ்வோர் வீட்டிலும் புழக்கடை (வீட்டின் பின்புறப் பகுதி) இருந்தது. அங்கே தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் ஒரு குளம் (வாவி) இருந்தது. அதில் காலையில் செங்கழுனீர்ப் பூக்களும் இரவில் ஆம்பல் மலர்களும் மலர்ந்தன. 

இந்த இடத்திலிருந்து குறுகி, நாம் இன்றைய சதுர அடி வீடுகளுக்கு வந்திருக்கிறோம். இன்றும் மிகப் பெரிய மாளிகைகளில் வீட்டோடு இணைந்து நீச்சல் குளம் உண்டு. அதுவும் நீச்சல் குளம் தான். பூந்தடாகம் இல்லை. இன்றும் பலர் வீடுகளில் தோட்டம் உண்டு. ஆனால், அதில் செங்கழுனீர், ஆம்பல் மலர்கள் இல்லை. இன்றும் கிராமப்புற வீடுகளில் புழக்கடை உண்டு. ஆனால், வீட்டுக்கு வீடு குளம் இல்லை. 

வீட்டுக்கு வீடு தண்ணீர்த் தொட்டி வைத்து, வாளிகள் வைத்து, அதில் லாரியில் தண்ணீர் வாங்கி நிரப்பும் இந்தக் காலத்தில், வீட்டுக்கு வீடு ஒரு வாவி (குளம்) என்பது எப்பேர்ப்பட்ட கனவு. நாம் இழந்த பொற்காலத்தை நினைவூட்டுகிறது ஆண்டாளின் இந்தப் பாடல். 

அதிலும் உன் வீட்டுத் தோட்டத்து வாவியில் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்கின்றன. நீ இன்னும் உறங்குகிறாயே எனக் கேட்கிறார். அந்தப் பூக்களை மட்டுமில்லை, பூக்கள் மலரும்போதே விழிக்கின்ற வழக்கத்தையும் நாம் இழந்திருக்கிறோம் எனப் புரிகிறது. திருப்பாவையின் 14ஆவது பாடல் உங்கள் புழக்கடை, செல்வி ஸ்வேதாவின் குரலில் இதோ.

Monday, December 28, 2020

திருப்பாவை - 13 | புள்ளின்வாய் கீண்டானை | சேகர் முத்துராமன் குரலில்

புள்ளும் சிலம்பினகாண் என்பது திருப்பாவையில் இரு இடங்களில் வருகின்றது. 6ஆவது பாடல், 'புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்' எனத் தொடங்குகின்றது. 13ஆவது பாடலில் 'புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்' என வருகின்றது. சிலம்புதல் என்றால் இரட்டிப்பொலி எழுப்புதல், மாறி மாறி ஒலித்தல் எனப் பொருள். புள் எனில் பறவை. பறவை விதவிதமாக இரட்டிப்பு ஒலி எழுப்புவதை நாம் கேட்டிருப்போம். 'கீசுகீசு' என ஆனைச்சாத்தன் பேசுவதை ஆண்டாளே பதிவு செய்துள்ளார். அரிய, அழகிய வாழ்வியற்கூறுகள் நிறைந்த திருப்பாவை, நாம் பெற்ற செல்வம். புள்ளின் வாய் கீண்டானை என்ற 13ஆவது பாடலைச் சேகர் முத்துராமன் குரலில் கேளுங்கள்.

Sunday, December 27, 2020

திருவெம்பாவை - 12 | ஆர்த்த பிறவி | ஸ்ருதி நடராஜன் குரலில் | Thiruvembava...

திருவெம்பாவை 12


மாணிக்கவாசகர்


பாடியவர்: ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்


ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்

தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்

ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.


நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.


பொழிப்புரைக்கு நன்றி - thevaaram dot org

படத்துக்கு நன்றி - விக்கிப்பீடியா


திருப்பாவை - 12 | கனைத்து இளம் | சேகர் முத்துராமன் குரலில் | ஆண்டாள்

குளிர்ந்தேலோர் எம்பாவாய் என உள்ளம் குளிர்தலைப் பற்றி முன்னர் பார்த்தோம். மார்கழிக் குளிரையும் ஆண்டாள் பாடியுள்ளார். தலையில் பனி வீழ, நின் வாசற்கடை பற்றி நிற்கின்றோம். ஈதென்ன பேருறக்கம்? இப்போதாவது எழுந்திரு எனத் தோழியைக் கோதை எழுப்புகிறார். உள்ளம் குளிரச்செய்யும் திருப்பாவையின் 12ஆவது பாடலைச் சேகர் முத்துராமனின் குரலில் கேளுங்கள்.

#Shorts: Udupi Shri Shani Kshetra | உடுப்பி சனி பகவான் ஆலயம்

கர்நாடகம் மாநிலம், உடுப்பியில் உள்ள சனி பகவான் ஆலயம். சனிப்பெயர்ச்சி அன்று சனி பகவானை வணங்கி, அருள் பெறுங்கள். வர்ணனை, காயத்ரி சேஷா. 

திருப்பாவை - 12 | கனைத்து இளம் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 12

11ஆவது பாடலில் ஆயர்கள், கறவைக் கணங்களிடம் தாங்களே பால்கறக்கிறார்கள். 12ஆவது பாடலில், கற்றெருமை கன்றை நினைத்து, நின்று பால்சொரிந்து, தான் நின்ற இடத்தையே நனைத்துச் சேறாக்குகிறது. நின்று பால்சோர என்றால், மாடு நிற்கிறது எனப் பொருள் இல்லை. மழை நின்று பெய்கிறது என்றால், நீடித்துப் பெய்கிறது எனப் பொருள் கொள்வோமே அப்படி இந்த எருமை நின்று பால்சொரிகிறது. கன்றை நினைத்த உடனே தாய்க்கு இப்படிப் பால் பெருகும். அப்படிப் பக்தர்களுக்காக அருள் சொரிகின்ற மனத்துக்கு இனியானைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

100 நாரைகள் | 100 Storks

நம் வீட்டுக்கு மேலே சற்றுமுன் ஒரு நூறு நத்தை குத்தி நாரைகள் வட்டமிட்டுப் பறந்த அழகிய காட்சி, இதோ.

Saturday, December 26, 2020

சனிப்பெயர்ச்சி பலன்கள் | 2020 - 23 | Sani Peyarchi Palan | வேதா கோபாலன்

ஞாயிறு அதிகாலை 5.22 மணிக்குச் சனிப்பெயர்ச்சி. வேதா கோபாலன் வழங்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே. உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பாருங்கள்.

85 வயதில் திருப்பாவை பாடும் ஜெயலட்சுமி செல்லப்பா | Jayalakshmi Chellappa...

வயது ஓர் எண்ணிக்கை மட்டுமே. எந்த வயதிலும் நம் திறமைகளை, ஆற்றல்களை உற்சாகமாக வெளிப்படுத்த முடியும். சென்னையில் வசிக்கும் திருமதி ஜெயலட்சுமி செல்லப்பா, 85 வயதிலும் அருமையாகப் பாடுகிறார். இதோ, திருப்பாவையிலிருந்து நான்கு பாடல்களை நமக்காகப் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.

திருவெம்பாவை - 11 | மொய்யார் தடம் | ஸ்ருதி நடராஜன் குரலில் | Thiruvembavai - 11

நாம் குளத்தில் குதிக்கும்போது, குபீர், தொபீர், படீர், தொபுக்கடீர் என்றெல்லாம் ஒலியெழுவதைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். திருவெம்பாவையில் மாணிக்கவாசகர், வேறு ஓர் ஓசையைக் குறிப்பிடுகிறார். பாவை நோன்பு இருக்கும் பெண்கள், குளத்தில் குளிக்கச் செல்கிறார்கள். அது, வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட பொய்கை. அதில் முகேர் எனச் சப்தம் எழுமாறு குதித்துக் குளிக்கிறார்களாம். இந்த மாணிக்கப் பொய்கையில் நீங்களும் பாய்ந்து குளியுங்கள். டெக்சாஸ்வாழ் ஸ்ருதி நடராஜனின் மந்திரக் குரலில் இந்த இனிய பாடலைக் கேளுங்கள்.

திருப்பாவை - 11 | கற்றுக் கறவை | சேகர் முத்துராமன் குரலில் | ஆண்டாள் | A...

தேவ கணங்கள், பூத கணங்கள், மிருக கணங்கள், பட்சி கணங்கள் எனப் பலவற்றை நாம் படித்தும் கேட்டும் இருப்போம். இந்தக் கணம் என்பதற்குக் கூட்டம் என்று பொருள். நொடியைக் குறிக்கும் கணம் என்பது, க்ஷணம் என்பதன் தமிழ் வடிவமாகும், திருப்பாவையின் 11ஆவது பாடலில் கற்றுக் கறவைக் கணங்கள் எனப் பசுக்கூட்டங்களை ஆண்டாள் குறிப்பிடுகிறார். இந்தக் கணத்தில் இதைச் சேகர் முத்துராமன் குரலில் கேளுங்கள்.

திருப்பாவை - 11 | கற்றுக் கறவை | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 11

ஆளன் - ஆட்டி என அழைப்பது தமிழ் மரபு. ஆளன் என்பவன் ஆளுகின்றவன். ஆட்டி என்பவள் ஆளுகின்றவள். வல்லாளன், பேராளன், சீராளன் என்றெல்லாம் ஆண்களை அழைப்பார்கள், சீமாட்டி, பெருமாட்டி, திருவாட்டி எனப் பலவாறாகப் பெண்களை அழைப்பார்கள். இந்த வரிசையில்தான் பெண்டாட்டியும் தோன்றியது. ஆட்சிமை உடைய பெண், ஆளும் பெண் என்பது பொருள். இக்காலத்தில் இது, குடும்பத்தை ஆளும் பெண் என்ற பொருளில் மனைவிமார்களுக்கு வழங்குகிறது. இந்தப் பாடலில் ஆண்டாள் தன் தோழியைச் செல்வப் பெண்டாட்டி எனச் செல்லமாக அழைக்கிறார். தமிழ்க் குலத்தின் பொற்கொடி ஆண்டாளின் அமுதத் தமிழில் திருப்பாவையின் 11ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

Friday, December 25, 2020

நென்மேலி மலையில் ஒரு பயணம் | Trekking at Nenmeli Hill

செங்கல்பட்டு அருகில் உள்ள நென்மேலி மலையின் மீது நானும் நித்திலாவும் அண்மையில் சிறுநடை சென்று வந்தோம். திருமாலின் திருநாமம் ஆங்காங்கே வரையப்பெற்றிருந்தது. இந்த வழியே செல்லலாம் எனப் பாதையை அடையாளம் காட்டுவதற்காக வரைந்துள்ளதாக அங்கு ஒருவர் கூறினார். இந்த மலையழகை எங்களுடன் இணைந்து காண வாருங்கள்.

நம்ம வீட்டுக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் | Christmas celebration at our house

நம்ம வீட்டுக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சில காட்சிகள் இங்கே. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

திருவெம்பாவை - 10 | பாதாளம் ஏழினும் | ஸ்ருதி நடராஜன் குரலில் | Thiruvembavai - 10

இறைவனுக்கு உருவம் கொடுத்தாலும் அது ஓர் அடையாளமே. அதுவே முழுமையான உருவம் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் அவனை எப்படி ஓர் எல்லைக்குள் சுருக்க முடியும்? அதனால்தான் மாணிக்கவாசகர், சிவபெருமானை ஓத உலவா ஒருதோழன் என்கிறார். அவன் ஊர் எது? பேர் எது? உற்றார் யார்? அயலார் யார்? இத்தகையவனை எவ்வாறு பாடுவது? எனக் கேட்கிறார். தன் திருமேனியில் பேதை ஒருபால் கொண்ட தோழனை டெக்சாஸிலிருந்து ஸ்ருதி நடராஜன் உளமாரப் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.

திருப்பாவை - 10 | நோற்றுச் சுவர்க்கம் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 10

திருப்பாவை, பல்சுவைப் பெட்டகம். ஒரு பாடலில் ஆண்டாள் சீறி எழுவார். மறு பாடலில் உருகிக் கரைவார். இன்னொரு பாடலில் செல்லமாய்க்  கோபித்துக்கொள்வார். அடுத்த பாடலில் வாயாடி போல் பேசுவார். அவரது இந்தப் பத்தாவது பாடலில், நகைச்சுவை ஊற்றெடுக்கிறது. நோன்பு நோற்று சுவர்க்கம் செல்வேன் என்றெல்லாம் சொன்னாய். வாயிற்கதவைக் கூடத் திறக்கமாட்டேன் என்கிறாயே. கும்பகர்ணன் தன் தூக்கத்தை உன்னிடம்தான் விட்டுச் சென்றானோ? அம்மாடி, கதவைத் திற என் ராசாத்தி என்கிறார்.

இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

திருப்பாவை - 10 | நோற்றுச் சுவர்க்கம் | சேகர் முத்துராமன் குரலில்

திருப்பாவை - 10
பாடியவர்: சேகர் முத்துராமன்
விளக்கம்: பிரபா ஸ்ரீதர்

மனம் என்னென்னவோ விரும்புகிறது. வாயும் தயக்கமின்றி அதைச்சொல்லி  விடுகிறது. ஆனாலும் வைராக்கியம் வர மறுக்கிறது. சொன்ன சொல் காப்பதில்லை. துயரம் வரும் போது பகவானை நாடுகிறோம். உனையன்றி வேறு யாரையும்  நினையேன் என்றே சத்தியமும் செய்கிறோம். துயர் நீங்கி மகிழ்ச்சிப் பெருகும் போதோ, மகிழ்ச்சியிலே  திளைத்துப் போகிறோம். உலக இன்பம் எனும் புதைகுழியில் விழுவது தெரிவதில்லை, மூழ்குவது உணர்வதில்லை. சொன்ன சொல்லையும்  காப்பதில்லை.
.
இங்கேயும் ஒருத்தி, சொன்ன சொல் மறந்து துயில்கிறாள். நோன்பு நோற்றுப் பணி செய்திருப்பேன் என்றாள்.  அவனுக்காக இல்லாவிட்டாலும் தன் பொருட்டு  நோன்பு நோற்று சுவர்க்கம் புகுவேன் என்றெல்லாம் அலங்காரச் சொற்கள் சொன்னாலும் உறக்கம் அவளை மீறி ஆட்கொண்டுவிட்டது. 
.
நோன்பு  நோற்பது நமக்காக. நாம் பக்தி செய்வதும் நம் நலனுக்காகவே. அவனைப்  புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும், அதனால் அவன் பாதிக்கப்படுவதேயில்லை. முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவனவன். நமது பிம்பத்தையே அவன் பிரதிபலிக்கிறான். நாம் பணிந்தால், அவன் செவி சாய்ப்பான். இவள் தூங்கிக் கொண்டிருப்பதால் தோழிகள் அழைப்பிற்கு  பதில் பேசவில்லை. வாயிற்கதவைத் திறக்கவில்லை. 
.
அளவிட முடியாத பெரும் தூக்கத்தை உடையவளே!  அந்த நாராயணன் ஸ்ரீராமனாக அவதரித்து, கும்பகர்ணனை ஆட்கொண்ட போது, கும்பகர்ணன் தன் தூக்கத்தை உன்னிடம் விட்டுப் போனானோ என்று கரிசனத்துடன் கிண்டலும் செய்கிறார்கள் ஆயர்க்குலப் பெண்கள். அழகிய ஆபரணத்தைப் போன்று பக்தர் குழாமுக்கு எழில் சேர்ப்பவளே, உறக்கம் தெளிந்து வந்து  கதவைத் தாள்திறவாய்!
.
கும்பகர்ணனை விஞ்சும்  நம்முடைய தூக்கத்தை அந்த ஸ்ரீராமனே வீழ்த்தட்டும். 

Thursday, December 24, 2020

திருப்பாவை - 9 | தூமணி மாடத்து | சேகர் முத்துராமன் குரலில் | ஆண்டாள்

திருப்பாவையின் 9ஆம் பாடல், சேகர் முத்துராமன் அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

Black Rooster | கருஞ்சேவல் | கொக்கரக்கோ

செங்கல்பட்டு அருகில் உள்ள நென்மேலி கிராமத்திற்கு அண்மையில் சென்றபோது அங்கு இந்தக் கருஞ்சேவலைக் கண்டேன். கொக்கரக்கோ எனப் பிரமாதமாகச் சிறகடித்துக் கூவியது. நீங்களும் பாருங்கள்.

நென்மேலி குரங்குகள் | Nenmeli Monkeys

செங்கல்பட்டு அருகில் உள்ள நென்மேலி கிராமத்திற்கு அண்மையில் சென்றபோது அங்கு ஏராளமான குரங்குகளைக் கண்டேன். அவற்றின் லீலைகள் சிலவற்றை இங்கே பாருங்கள்.

திருவெம்பாவை - 9 | முன்னைப் பழம்பொருட்கும் | ஸ்ருதி நடராஜன் குரலில்

மரபில் வேர்விட்டு, நவீனத்தில் கிளைவிரித்தலை இன்று பல துறைகளில் பேசுகிறோம். ஆனால், இதை முதலில் காட்சிப்படுத்தியவர், மாணிக்கவாசகர். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே என்ற அவரது அடியொற்றியே இன்றும் நாம் மரபையும் நவீனத்தையும் ஒருசேர இணைத்துக் காண்கிறோம். அப்படி இணைந்திருப்பதை விரும்புகிறோம். 


பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய் விளங்கும் பரஞ்சோதியாம் சிவபெருமானைப் போற்றுவோம். திருவாசகத்தின் 9ஆவது பாடல் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளைப் பின்னைப் புதுமைகள் பல மேவிய டெக்சாஸிலிருந்து ஸ்ருதி நடராஜன் பாடுவதைக் கேளுங்கள்.


திருப்பாவை - 9 | தூமணி மாடத்து | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 9

1300 ஆண்டுகளுக்கு முந்தைய காட்சியை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார், ஆண்டாள். தூய மணிமாடத்தில் சுற்றும் விளக்கு எரிகிறது. நறுமணத் தூபம் கமழ்கிறது. துயிலணை (படுக்கை) மேல் தோழி கண்வளர்கிறாள். 

தூங்குதல் என்பதைக் கண்வளர்தல்  என்பது தமிழ் மரபு. குழந்தைக்குத் தாலாட்டு பாடும்போது கண்வளராய், கண்வளராய் எனப் பாடுவர். இதற்குக் காரணம், கண்மூடுதல் என்பது அமங்கலமானது. கண்வளர்தல் என்கிறபோது அதுவே மங்கலச் சொல்லாகிவிடுகிறது. இந்த மரபைப் பின்பற்றி, ஆண்டாளும் கண்வளர் என்கிறார். 

ஆனால், மாமான் மகள் இன்னும் எழவில்லை என்றதும், சரவெடியாய் வெடிக்கிறார். மாமீ, நீங்களாவது எழுப்பக் கூடாதா? அவள் என்ன ஊமையா? செவிடா? மந்தமானவளா? பெருந்துயில் துயிலுமாறு யாரும் மந்திரித்துவிட்டார்களா? என்றெல்லாம் பொங்குகிறார். வைகுந்தனின் நாமங்களை வாயாரச் சொல்ல அழைக்கிறார்.

இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

Wednesday, December 23, 2020

திருவெம்பாவை - 8 | கோழி சிலம்ப | ஸ்ருதி நடராஜன் குரலில் | Thiruvembavai - 8

தமிழர்களிடம் ஒரு நல்ல வழக்கம் உண்டு. ஒருவரைச் சற்றே குறைசொல்லும் முன், முதலில் அவரை வாழ்த்திவிட்டு, பிறகே அதைச் சொல்வார்கள். 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர், இதை நயமாகச் சொல்கிறார். 

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்

ஒப்பற்ற ஒளிப்பிழம்பை, நிகரற்ற கருணையை உடைய சிவபெருமானின் இணையற்ற புகழைப் பாடினோம். உனக்குக் கேட்கவில்லையா? வாழ்க, இது என்ன உறக்கமோ? வாய்திறந்து பேசு என்கிறார். இது என்ன உறக்கமோ எனக் குட்டுவதற்கு முன், வாழ்க என வாழ்த்துகிறார்.

உறங்குவது போலும் சாக்காடு என வள்ளுவர் சொல்கிறார். எனவே உறங்குவோரை, உறங்கச் செல்வோரை, உறங்கி விழிப்போரை நாம் எப்போதும் வாழ்த்தியே தொடங்க வேண்டும். அது நல்லதிர்வுகளைத் தோற்றுவிக்கும். இதுபோல், விடைபெற்றுச் செல்வோரை, வெளியே புறப்படுபவரை, புதிய செயல் செய்யத் தொடங்கும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையும் நாம் வாழ்த்த வேண்டும்.

திருவெம்பாவையின் இந்த நயமான பாடலை, ஸ்ருதி நடராஜன் (டெக்சாஸ்) குரலில் கேளுங்கள்.

திருப்பாவை - 8 | கீழ்வானம் வெள்ளென்று | சேகர் முத்துராமன் குரலில் | ஆண்டாள்

குதூகலம் என நாம் இன்று பயன்படுத்தும் சொல்லை, 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், கோதுகலம் எனப் பயன்படுத்துகிறார். இவற்றுக்கு மூலம், வடமொழியில் உள்ள  --कौतूहल--கௌ1தூஹல--  என்ற சொல்லாகும். இதற்கு உள்ளக் களிப்பு என்று பொருள். கோதுகம் என்றும் இதற்கு இன்னொரு வடிவம் உண்டு. அதன் மூலம்  -- कौतुक--கௌ1து11-- என்ற சொல்லாகும். இதற்கும் உள்ளக் களிப்பு என்றே பொருள். திருப்பாவையின் எட்டாவது பாடலில் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் என ஆண்டாள் துயிலெழுப்புகிறார். சேகர் முத்துராமனின் குரலில் கீழ்வானம் வெள்ளென்று என்ற பாடலைக் கோதுகலத்துடன், உள்ளக் களிப்புடன் கேட்போம், வாருங்கள்.

ஓவியத்திற்கு நன்றி - ஷ்யாம்

திருப்பாவை - 8 | கீழ்வானம் வெள்ளென்று | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 8

எழுந்திராய், எழுந்திராய் என்று உறங்கும் தோழியரை மட்டுமா ஆண்டாள் எழுப்புகிறார்? உறங்கும் தமிழ்க்குடியையும் சேர்த்தே எழுப்புகிறார். அவர்தம் உள்ளத்தையும் எழுப்புகிறார். அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக. கீழ்வானம் வெளுக்கின்றது. தேவாதி தேவனைச் சேவிப்பவர்க்கு ஆவாவென்று அருள் சிறக்கும். இதோ, செல்வி ஸ்வேதாவின் குரலில், திருப்பாவையின் எட்டாவது பாடல், கீழ்வானம் வெள்ளென்று. கேட்டு மகிழுங்கள், இணைந்து பாடுங்கள்.

Tuesday, December 22, 2020

A visit to Srinivasa Ramanujan Memorial at Kumbakonam

இன்று கணித மேதை ராமானுஜனின் 133ஆவது பிறந்த நாள். 32 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன், மறைந்து 100 ஆண்டுகள் கடந்த பிறகும், கணித உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருக்கிறார். இவரது பிறந்த நாளை இந்தியாவின் கணித நாளாகக் கொண்டாடுகிறோம். கும்பகோணத்தில் உள்ள, இராமானுஜனின் நினைவு இல்லத்தைக் கடந்த ஆண்டு ஆவணப்படுத்தினேன். அவரது அறையும் பயன்படுத்திய கட்டிலும் பார்த்துக்கொண்டிருந்த ஜன்னலும் அப்படியே உள்ளன. ராமானுஜன் நடமாடிய இடத்தை நீங்களும் பாருங்கள்.

#Shorts: Jewel Bug

செங்கல்பட்டு அருகே நென்மேலி கிராமத்தில் இந்தப் பொன் பச்சைப் பூச்சியைப் படம் பிடித்தேன்.

தென்னங்கீற்றில் ஆனைச்சாத்தன் | Black Drongo on Coconut Tree

திருப்பாவையின் 7ஆவது பாடலில் ஆனைச்சாத்தன் இடம்பெற்று, உலகமெங்கும் இந்தப் பாடல் பாடப்படுகிறது. இந்த 7ஆம் நாளை ஆனைச்சாத்தன் நாள் (The day of Black Drongo) எனக் கொண்டாடினால் என்ன?

ஆண்டாள் பாடிய ஆனைச்சாத்தன் குருவிகளில் சில, நம் வீட்டருகே குடியிருக்கின்றன. இவை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் அமரும். முன்பு வாழையிலையில் அமர்ந்ததைப் பகிர்ந்தேன். தென்னங்கீற்றில் அமர்ந்த கோலம் இங்கே.

கரிச்சான் - Black drongo

ஆண்டாள் ரசித்த ஆனைச்சாத்தன் பறவைக்காகவே தனி இழை தொடங்கியுள்ளேன். இதில் 18 பதிவுகள் உள்ளன. பார்த்து மகிழுங்கள். 

கரிச்சான் குருவிகளின் பாடல் | Song of Drongo

ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தனின் கீசுகீசு எனும் குரல் இங்கே

கீசுகீசு எனப் பாடும் ஆனைச்சாத்தன் - 1 | Drongo - 1

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? எனத் திருப்பாவையில் கேட்கிறார். ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தன் இதுதான். இரட்டைவால் குருவி, கரிச்சான், கரிக்குருவி என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இதன் கீசுகீசு என்ற குரலை நான் பல முறைகள் பதிவு செய்துள்ளேன். ஆனைச்சாத்தனின் குரலை இங்கே கேளுங்கள்.

திருப்பாவை - 7 | கீசுகீசு என்றெங்கும் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai

அரவம் என்ற சொல், ஆண்டாளுக்குப் பிடித்துப் போயிற்று போலும். திருப்பாவையில் இரண்டு பாடல்களில் நான்கு முறை, இந்தச் சொல் இடம்பெறுகிறது. ஒவ்வொரு முறையும் ஒரே பாட்டில் இரு முறைகள். அதுவும் அடுத்தடுத்த பாடல்களில் வருகின்றது. 6ஆவது பாடலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம், அரியென்ற பேரரவம் என்கிறார். 7ஆவது பாடலில், ஆனைச்சாத்தனின் பேச்சரவம், தயிரரவம் என்கிறார். நான்கு இடங்களிலும் இதற்கு ஓசை என்றே பொருள். இந்தச் சொல், பாடலுக்குத் தனித்த அழகையும் மிடுக்கையும் தருகின்றது. திருப்பாவையின் 7ஆவது பாடல் கீசுகீசு என்றெங்கும், இதோ செல்வி ஸ்வேதாவின் குரலில். கேட்டு மகிழுங்கள். இணைந்து பாடுங்கள்.

திருப்பாவை - 7 | கீசுகீசு என்றெங்கும் | சேகர் முத்துராமன் குரலில் | ஆண்டாள்

நாயகப் பெண்பிள்ளாய்! எனத் தோழியரை ஆண்டாள் அழைத்தாலும் அந்த விளி, அவருக்கே அழகாகப் பொருந்துகிறது. இந்தப் பாடலில் தேசமுடையாய் என ஆண்டாள் சொல்வது, இந்தக் காலப் பொருளில் இல்லை. தேசு என்ற சொல்லுக்கு ஒளி, அழகு எனப் பொருள்கள் உண்டு. ஒளி பொருந்திய பெண்ணே என்ற பொருளிலேயே தேசமுடையாய் என அழைக்கிறார். கீசுகீசு என்றெங்கும் என்ற 7ஆவது பாடலை இப்போது சேகர் முத்துராமன் அவர்களின் குரலில் கேளுங்கள்.

Monday, December 21, 2020

Ohio Birds

அமெரிக்காவின் பல பகுதிகளில் இப்போது பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. ஒஹாயோ மாகாணத்தின் பனி படர்ந்த ஏரிக்கரையில், பறவைக் கூட்டம் ஒரே தாளகதியில் கீழிறங்குவதும் சிறகடித்து மேலேறிப் பறப்பதும் மிக ரம்மியமாக இருக்கிறது. இந்த வசீகரக் காட்சியை ஒஹாயோவிலிருந்து படமெடுத்து அனுப்பியிருக்கும் திலகா சுந்தருக்கு நம் நன்றிகள்.

திருவெம்பாவை - 6 | மானே நீ நென்னலை | ஸ்ருதி நடராஜன் குரலில் | Tiruvembavai

திருப்பாவை வெளியிட்ட போது, திருவெம்பாவை எங்கே என்று அன்பர்கள் கேட்டார்கள். இதோ, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரிலிருந்து நமக்காகப் பாடுகிறார், திருமதி ஸ்ருதி நடராஜன். இவரை நமக்கு அறிமுகப்படுத்திய திருமதி சுதா மாதவன் அவர்களுக்கு நன்றி. இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

திருப்பாவை - 6 | புள்ளும் சிலம்பினகாண் | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiru...

செல்வி ஸ்வேதாவின் குரலில் திருப்பாவையின் 6ஆவது பாடல் புள்ளும் சிலம்பினகாண். கேட்டு மகிழுங்கள், இணைந்து பாடுங்கள். மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை - 6 | புள்ளும் சிலம்பினகாண் | சேகர் முத்துராமன் குரலில் | ஆண்டாள்

சேகர் முத்துராமன் குரலில் திருப்பாவையின் 6ஆவது பாடல் புள்ளும் சிலம்பினகாண். ராகம் - சங்கராபரணம்.

2021 ஆண்டுப் பலன் | வேதா கோபாலன் | 2021 Yearly Predictions | 2021 Annual Predictions

2021ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? இடர்கள் தீருமா? மகிழ்ச்சி கிட்டுமா? நினைத்தது நடக்குமா?  2021ஆம் வருடத்துக்கான ஆண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் அவர்கள், 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் கணித்து வழங்கியுள்ளார். உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பாருங்கள்.

Sunday, December 20, 2020

சண்டைச் சேவலின் கூவலும் எதிர்க்கூவலும் | Voice of Fighting Rooster

செங்கல்பட்டு அருகே நென்மேலி எனும் கிராமத்திற்கு நேற்று சென்றேன். அழகிய காட்சிகள் பலவற்றைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். இந்தச் சண்டைச் சேவல் கூவ, பதிலுக்கு எங்கிருந்தோ வேறொரு சேவல் கூவியது. வழக்கமாக, நாய் ஒன்று குரைக்க, பல இடங்களில் உள்ள நாய்கள் குரைக்கும். இங்கே சேவல்கள் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுகின்றன.

#Shorts: Christmas Trees at London Mall

Christmas Trees at London Mall. Thanks to Navya for the video.

திருப்பாவை - 5 | மாயனை மன்னு | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 5...

ஒரு தீபத்திலிருந்து ஏராளமான தீபங்களை ஏற்றுவது போல், ஆண்டாளின் பாடல்களைப் பாடும் ஒவ்வொருவரும் அந்த ஜோதியை முன்னெடுத்துச் செல்கிறார்கள். வண்ண ஒளியை எண்ணங்களில் ஏற்றுகிறார்கள். இதோ செல்வி ஸ்வேதா, ஆண்டாளின் கைவிளக்கை ஏந்திப் பாடுகிறார். 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...'

திருப்பாவை - 5 | மாயனை மன்னு | லட்சுமிப்பிரியா குரலில் | ஆண்டாள் | Andal...

ஆயர் குலத்தினில் தோன்றிய எனச் சொல்லாமல், தோன்றும் அணிவிளக்கை என ஆண்டாள் ஏன் சொன்னார்? கண்ணன் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருப்பான் என்பதன்றோ, இதன் உட்பொருள். தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, நம் செய்பிழை யாவும் தீயினில் தூசாகும் என அறுதியிட்டுக் கூறுகிறார் ஆண்டாள். திருப்பாவையின் ஐந்தாவது பாடல் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில் கேளுங்கள்.

Saturday, December 19, 2020

திருப்பாவை -4 | ஆழி மழைக்கண்ணா | ஸ்வேதா குரலில் | Tiruppavai -4 | Aazhi Mazhaikanna in Shwetha R voice

மழையின் அறிவியல், மணிவண்ணனின் அழகியல், பக்தியின் செவ்வியல், கவித்துவம் மின்னும் பாட்டியல் ஆகிய இவை அனைத்தையும் ஒரே பாட்டில் எட்டுகின்ற ஒப்பற்ற தமிழ்ச்செல்வி, ஓங்குபுகழ் திருச்செல்வி ஆண்டாளின் வண்ணத் தமிழில், திருப்பாவையின் நான்காவது பாடல், ஆழி மழைக்கண்ணா. இந்தப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

திருப்பாவை - 4 | ஆழி மழைக்கண்ணா | லட்சுமிப்பிரியா குரலில் | Tiruppavai - 4

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, அருட்செல்வி ஆண்டாளின் அமுதத் தமிழில், திருப்பாவையின் நான்காவது பாடல், ஆழி மழைக்கண்ணா. இதோ, செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில். கேட்டு மகிழுங்கள்.

Friday, December 18, 2020

இரைதேடும் நத்தை குத்தி நாரை | Asian Openbill Stork

நம் வீட்டுக்குப் பின்னுள்ள புல்வெளியில் நத்தை குத்தி நாரை, இன்று காலை இரைதேடியது. பின்னர் சிறகடித்துப் பறந்து, அருகில் உள்ள மதிலில் அமர்ந்தது. இந்த அழகான காட்சியைப் பாருங்கள்.

இவ்வளவும் நம்ம வீட்டுத் தோட்டத்து அறுவடை | Harvest at our home garden

இளசு, புதுசு, தினுசு, இதோ நம் வீட்டுத் தோட்டத்து விளைச்சல்.

Kingfisher - 2 | மீன்கொத்தி - 2

Meet Kingfisher, our neighbor.


நம் வீட்டருகே எப்போதும் அமர்ந்திருக்கும் மீன்கொத்தியை இன்று சற்று நெருக்கத்தில் கண்டேன்.


திருப்பாவை - 3 | ஓங்கி உலகளந்த | ஸ்வேதா குரலில் | Tiruppavai - 3 | Shwetha R

எம்பாவாய், எம்பாவாய் என்று நம்பாவையரை நாவினிக்க அழைத்து, பாவை நோன்பிருந்து, உத்தமன் பேர்பாடி உய்யுங்கள் என வழிகாட்டுகிறார், ஆண்டாள். ஓங்கி உலகளந்த என்ற மூன்றாவது பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

திருப்பாவை - 3 | ஓங்கி உலகளந்த | லட்சுமிப்பிரியா குரலில் | Tiruppavai -3...

மதுரகவிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, திருப்பாவை. இது, சொல்லினிமையும் பொருளிமையும் ஒருங்கே அமைந்தது. வாய்விட்டுப் பாடுவதற்கு ஏற்றது. இசையுடன் இணைந்து பரிமளிப்பது. ஓங்கி உலகளந்த எனத் தொடங்கும் பாடலில், ஓங்கி என்று எடுக்கும்போதே திருமாலின் பேருருவம் நம் மனக்கண்முன் தோன்றிவிடும். வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என்ற வரி, எண்ணி எண்ணி மகிழத்தக்கது. தமிழ்க் குலம் பெற்ற நீங்காத செல்வம் அன்னை ஆண்டாளின் மூன்றாவது பாடலைச் செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில் கேளுங்கள்.

Thursday, December 17, 2020

Sunset at Chennai - 22

சென்னையில் சூரியன் அஸ்தமிக்கும் அழகிய காட்சி.

சிறகடிக்கும் நீர்க்காகம் | Cormorant | Neer Kaagam

இன்று பார்த்த நீர்க்காகம் தன் சிறகுகளை அடித்துக்கொண்டே இருந்தது. அதற்கு முன்னதாகப் பார்த்த நீர்க்காகம், அருகில் உள்ள குட்டையில் மூழ்கி எழுந்து வந்து, இதே போல் சிறகடித்தது. எனவே தன் சிறகுகளை உலர்த்தவே இவ்வாறு செய்கிறது.

செங்கல் அடுக்கும் கலை | Bricks over the head

தலைக்கு மேல் 10 செங்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிச் செல்லும் கட்டடத் தொழிலாளர்கள். இடம்: தாம்பரம், சென்னை.

திருப்பாவை - 2 | வையத்து வாழ்வீர்காள் | ஸ்வேதா குரலில் | Tiruppavai - 2 | Shwetha R

கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள், அரங்கனை ஆண்டாள் எனப் போற்றும் வண்ணம் அன்னை பிராட்டி அருளிச் செய்த திருப்பாவையின் இரண்டாவது பாடல், வையத்து வாழ்வீர்காள்! செல்வி ஸ்வேதா பாடிய இந்தப் பாடலை வையத்து வாழும் யாவரும் கேட்டு மகிழுங்கள். இணைந்து பாடுங்கள்.

திருப்பாவை - 2 | வையத்து வாழ்வீர்காள் | லட்சுமிப்பிரியா குரலில் | Tiruppavai - 2

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் வையத்து வாழ்வீர்காள்! எனத் தொடங்கும் இரண்டாவது பாடலை நமக்காகப் பாடியிருப்பவர், செல்வி லட்சுமிப்பிரியா. கேட்டு மகிழுங்கள். நீங்களும் இணைந்து பாடுங்கள்.

Wednesday, December 16, 2020

மார்கழிக் கோலம் - 1 | Margazhi Kolam - 1

மார்கழி என்றாலே இசை, நாட்டியத்திற்கு மட்டுமின்றி, கோலத்திற்கும் தனி இடம் உண்டு. வீதிகள் முழுவதும் வண்ண வண்ணக் கோலங்கள் அலங்கரிக்கும். எத்தனை எத்தனை கோலங்கள். அவற்றுள் எத்தனை எத்தனை வண்ணங்கள். இதோ, கோலங்களுள் ஒரு வகையான கம்பிக் கோலத்தை எப்படி இடுவது என்று நமக்கு வரைந்து காட்டுகிறார் திருமதி கெளரி. இதைப் பார்த்து, நீங்களும் முயன்று பாருங்கள்.

#Shorts: Flying Parrot | பறக்கும் கிளி

மார்கழி முதல் நாளாம் இன்று, கிளியொன்று பறக்கக் கண்டேன். இது, யாரைத் தேடிச் செல்கிறது?

Two Mynas | இரு மைனாக்கள்

மின்கம்பியில் பாடியபடி ஊஞ்சலாடும் இரு மைனாக்கள்.

திருப்பாவை - 1 | மார்கழித் திங்கள் | ஸ்வேதா குரலில் | Tiruppavai | Margazhi Thingal

ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பாடப் பாட, அதில் தோயத் தோய, நாவினிக்கும், மனமினிக்கும், பாடும், கேட்கும், நினைக்கும் பொழுதெல்லாம் இனிக்கும். அந்த அற்புதப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

திருப்பாவை - 1 | மார்கழித் திங்கள் | லட்சுமிப்பிரியா குரலில்| Tiruppavai

ஆண்டாள் நாச்சியார் பாடிய உயர் செவ்விலக்கியமான திருப்பாவையைப் பாடி மகிழ்வோம், வாருங்கள். மார்கழித் திங்கள் எனத் தொடங்கும் முதல் பாடலை நமக்காகப் பாடியிருப்பவர், செல்வி லட்சுமிப்பிரியா.

Tuesday, December 15, 2020

#Shorts: Voice of Myna

மைனாவின் இனிய குரலைக் கேளுங்கள்.

Morning Sun | காலைச் சூரியன்

Morning Sun today at Chennai!


மேகங்களிலிருந்து வெளிப்படும் இன்றைய காலைச் சூரியன்!


Monday, December 14, 2020

நீர்க்காகம் | Cormorant

நீர்க்காகத்தை இன்று முதல் முறையாகப் பார்த்தேன். தாம்பரத்தில் நம் வீட்டுப் பின்புறம் ஓர் எல்லைக் கல்லில் வந்து அமர்ந்தது. தன் பெரிய சிறகுகளை விரித்தபடி, அதை ஆராய்ந்தபடி, அலகால் குடைந்தபடி, காலால் முகத்தைச் சொறிந்தபடி, சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தது. சாதாரணக் காகம் ஒன்று, அதைச் சற்று சீண்டிப் பார்த்தது.

Christmas Celebration at London 2020

Dazzling display of lights and decorations, sparkling LED light curtains, twinkling fairy lights, stunning colors are spreading festive vibes across. Here is a glimpse of bright London. Thanks to Navya for the visuals.

கிறிஸ்துமஸை முன்னிட்டு, லண்டன் வீதிகளில் ஒளி விளக்குகளும் சர விளக்குகளும் வண்ணத் தோரணங்களுமாக மாநகரமே விழாக் கோலம் பூண்டிருக்கிறது. வீதியோர மரங்களும் தங்க, வைர, வைடூரியங்களாக மின்னுகின்றன. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழுங்கள். படமெடுத்து அனுப்பிய நவ்யாவுக்கு நன்றி. 

வாழை இலையில் ஒரு கரிச்சான் | Black Drongo on Banana leaf

வாழை இலையில் கரிச்சான் என்கிற இரட்டைவால் குருவி அமர்ந்திருப்பதைச் சற்றுமுன் பார்த்தேன். இதோ உடனுக்குடன் பகிர்கின்றேன். இதன் அலகு ஓரத்தில் வெண்புள்ளி ஒன்று இருப்பதை இன்றுதான் கவனித்தேன்.

மஞ்சள் அழகி | Common Jezebel | Delias eucharis | Yellow Butterfly

A lovely, colorful butterfly! I would suggest, we can declare this butterfly as a symbol of Holi festival.

ஹோலிப் பண்டிகையின் அடையாளச் சின்னமாக இந்த மஞ்சள் அழகியை அறிவிக்கலாம்.

Sunday, December 13, 2020

புடலங்காய் காய்த்தது | Snake gourd | Trichosanthes cucumerina

நம் வீட்டுத் தோட்டத்தில் புடலங்காய் காய்த்துள்ளது. சிறிய ரகப் புடலை எனத் தெரியாமல், இன்னும் நீளமாக வளரட்டும் என்று காத்திருந்த நேரத்தில் அது பழுத்துக் கொடியிலேயே காயந்துவிட்டது. ஆனாலும், அதே கொடியில் இன்று இன்னொரு புடலை பிஞ்சு விட்டுள்ளது, பார்க்க மிக அழகாக உள்ளது.

#Shorts: London Bridge

புகழ்மிக்க லண்டன் பாலத்தின் எழிற்கோலம், இதோ. நமது இராமேஸ்வரம் பாம்பன் பாலத்தைப் போல, லண்டன் பாலமும் கப்பல் வரும்போது இரண்டாகப் பிரிந்து உயர்ந்து, கப்பலுக்கு வழிவிடும். கப்பல் சென்ற பிறகு, பழையபடி கீழே இறங்கி, சாலையாகிவிடும். ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே இவ்வாறு பாலம் பிரிந்து சேரும். பிரிவதற்கு ஒரு நிமிடமும் சேருவதற்கு ஒரு நிமிடமும் ஆகும். இது எப்போது நடக்கும் என்று தெரியாது. எனவே சிலருக்கு மட்டுமே இதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். லண்டனில் வசிக்கும் நவ்யா, லண்டன் பாலம் மூடும் காட்சியை நமக்காகப் பதிவு செய்து அனுப்பியுள்ளார். பார்த்து மகிழுங்கள்.

Saturday, December 12, 2020

Jewel Bug | பொன் பச்சைப் பூச்சி

பொன் பச்சைப் பூச்சி. ஆறு நிமிடம் காட்சி தந்தார். பொறுமையாக, விதவிதமாக எடுக்க முடிந்தது. இதைப் படமெடுக்கையில், இடையே ஒரு குளவி சுற்றிச் சுற்றி வந்து அச்சுறுத்தியது. எனினும் இதை வெற்றிகரமாகப் பதிவு செய்தேன். பார்த்து மகிழுங்கள்.

சுழலும் சந்தன முல்லை | Rotating Santana Mullai | Jasminum Auriculatum

நம் வீட்டு மாடித் தோட்டத்தில் உள்ள சந்தன முல்லையில் இன்று ஒரு புதுமையைப் பார்த்தேன். செடியிலிருந்து விழுந்தும் விழாத ஒரு முல்லை மலர், தலைகீழாகத் தொங்கியபடி சுழன்றுகொண்டிருந்தது. எவ்வளவு காற்று அடித்தபோதும் விழாமல் சுழன்றுகொண்டே இருந்தது. சில பந்தங்கள் ஆழமானவை. அவ்வளவு எளிதில் விட்டு விலகுவதில்லை. 

Friday, December 11, 2020

#Shorts: Loten's Sunbird | Purple Sunbird 2

நம் தோட்டத்தில் இன்று கண்ட ஊதா தேன்சிட்டு.

வெட்சிப் பூவில் வண்ணத்துப்பூச்சி | Butterfly on West Indian Jasmine

இட்லிப் பூ என அழைக்கப்படும் வெட்சிப் பூவில் வண்ணத்துப்பூச்சி தேனருந்தும் அற்புதக் காட்சி. 

Butterfly on West Indian Jasmine, captured today at our home garden.

Thursday, December 10, 2020

#Shorts: Black-rumped flameback | Golden-backed Woodpecker | பொன்முதுகு ...

பொன்முதுகு மரங்கொத்தியை இன்று முதல் முறையாகக் கண்டேன். நம் வீட்டு வேப்பமரத்தில் சிறிது நேரம் இளைப்பாறியது.

பவழமல்லி பூத்தது | Pavazhamalli | Night-flowering Jasmine

நம் வீட்டு மாடித் தோட்டத்தில் பவழமல்லி பூத்துள்ளது. மகிழ்ச்சி!

Wednesday, December 09, 2020

என் இனிய தவிட்டுக் குருவி | My dear Yellow-billed babbler

கிலுகிலுகிலுகிலுவென உருளும் குரல், தத்தும் நடை, விர்ரெனச் சிறகு விரித்துப் பறக்கும் எழில், கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என ஈர்க்கும் என் இனிய தவிட்டுக் குருவியே! தவிட்டு வண்ணம் கொண்டதனால் இப்பெயர் பெற்றாயோ! ஒவ்வொரு கணத்தையும் அமர கணமாக்கும் வித்தையை எனக்குக் கற்றுத் தருவாயா?

#Shorts: Loten's Sunbird

பூக்களில் தேனருந்தும் தேன்சிட்டு

கவிதை மட்டும்: அண்ணாகண்ணன் தேர்ந்தெடுத்த கவிதைகள்

கவிதை மட்டும் என்ற வாட்ஸாப் குழுவை நண்பர், இயக்குநர் ஏகம்பவாணன் நடத்துகிறார். இந்தக் குழுவில் தினந்தோறும் ஒரு தலைப்பு அறிவித்து, கவிதைப் போட்டி நடத்துகிறார். அதே போன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை நடுவராக அறிவிக்கிறார். வரக்கூடிய கவிதைகளை அந்த நடுவரிடம் ஒப்படைத்து, சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார். அந்த வகையில், 2020 நவம்பர் 5ஆம் நாளுக்கான கவிதைப் போட்டிக்கு என்னை நடுவராக அறிவித்தார். வரப்பெற்ற கவிதைகளைத் திறனாய்ந்து, பரிசுக்கு உரிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கினேன். அந்தப் பதிவு இங்கே. பரிசு பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

Tuesday, December 08, 2020

புள்ளி மூக்கு வாத்து | Spot-billed Duck

புள்ளி மூக்கு வாத்து அல்லது புள்ளி மூக்கன், நீரின் மேற்பரப்பில் உணவருந்தும் வாத்து வகைகளுள் ஒன்றாகும். இவற்றின் அலகின் நுனியில் ஒரு மஞ்சள் நிறப்புள்ளி இருக்கும். காலை, மாலை வேளைகளில் ஆண், பெண் பறவைகள் எப்போதும் இணையாக இணைந்துதான் இரை தேடும். மதிய நேரத்தில், கண்ணை மூடித் தண்ணீரிலேயே தூங்கும் வழக்கம் கொண்டது.

நேற்று முதல்முறையாகப் புள்ளி மூக்கு வாத்துகளைப் பார்த்தேன். நம் வீட்டுக்குப் பின்னால் உள்ள மதிலில் அழகாக அமர்ந்திருந்தன. அவற்றுடன் ஆள்காட்டிப் பறவைகளும் அமைதியாக அமர்ந்திருந்தன. மடையான் ஒன்று பறந்து வந்து, இவற்றை எல்லாம் விரட்டிவிட்டது.

#Shorts: Purple Sunbird | Loten's Sunbird

பறந்தபடி பூக்களில் தேனருந்தும் பேரலகுத் தேன்சிட்டு என்கிற ஊதாத் தேன்சிட்டு.

மீனம் | சனிப்பெயர்ச்சி பலன்கள் | வேதா கோபாலன் | Sani Peyarchi Palan for Meenam

மீன ராசிக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு (2020-23)

கும்பம் | சனிப்பெயர்ச்சி பலன்கள் | வேதா கோபாலன் | Sani Peyarchi Palan for Kumbam

கும்ப ராசிக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு (2020-23)

மகரம் | சனிப்பெயர்ச்சி பலன்கள் | வேதா கோபாலன் | Sani Peyarchi Palan for Magaram

மகர ராசிக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு (2020-23)

தனுசு | சனிப்பெயர்ச்சி பலன்கள் | வேதா கோபாலன் | Sani Peyarchi Palan for Dhanusu

தனுசு ராசிக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு (2020-23)

விருச்சிகம் | சனிப்பெயர்ச்சி பலன்கள் | வேதா கோபாலன் | Sani Peyarchi | Viruchigam

விருச்சிகம் ராசிக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு (2020-23)


துலாம் | சனிப்பெயர்ச்சி பலன்கள் | வேதா கோபாலன் | Sani Peyarchi Palan for Thulam

துலாம் ராசிக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு (2020-23)

கன்னி | சனிப்பெயர்ச்சி பலன்கள் | வேதா கோபாலன் | Sani Peyarchi Palan for Kanni

கன்னி ராசிக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு (2020-23)

சிம்மம் | சனிப்பெயர்ச்சி பலன்கள் | வேதா கோபாலன் | Sani Peyarchi Palan for Simmam

சிம்ம ராசிக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு (2020-23)

கடகம் | சனிப்பெயர்ச்சி பலன்கள் | வேதா கோபாலன் | Sani Peyarchi Palan for Kadagam

கடக ராசிக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு (2020-23)

Monday, December 07, 2020

மிதுனம் | சனிப்பெயர்ச்சி பலன்கள் | வேதா கோபாலன் | Sani Peyarchi Palan for Mithunam

மிதுன ராசிக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு (2020-23)

ரிஷபம் | சனிப்பெயர்ச்சி பலன்கள் | வேதா கோபாலன் | Sani Peyarchi Palan for Rishabam

ரிஷப ராசிக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு (2020-23)

மேஷம் | சனிப்பெயர்ச்சி பலன்கள் | வேதா கோபாலன் | Sani Peyarchi Palan for Mesham

மேஷ ராசிக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு (2020-23)

ஒரு ஜோடி தவிட்டுக் குருவிகள் | Dual Yellow-billed babbler

இந்த ஜோடி என்ன செய்கிறது என்று பாருங்கள்.

#Shorts: Ponvandu | பொன்வண்டு | Sternocera

இன்று கண்டேன் ஒரு பொன்வண்டு.

Six birds | ஆறு பறவைகள்

ஒரே வரிசையில் ஆறு பறவைகள் (மடையான், மைனா, உண்ணிக் கொக்கு)

இரையைக் கொத்தும் இளம் கொக்கு | Indian Pond Heron on grass

ஓர் இளம் இந்தியக் குளத்துக் கொக்கு (மடையான்), புல் மீது அமர்ந்தபடி, இரையைக் கொத்தி உண்ணுகிறது. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து என்ற குறளுக்கு இணங்க, இந்த இந்தியக் குளத்துக் கொக்கு காத்திருந்து கொத்துகிறது. அதன் கழுத்து எவ்வளவு நீளும் என்பதையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Sunday, December 06, 2020

அடையாற்றின் கரையில் உடைப்பு

அடையாறு நதியின் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்றிலிருந்து மேற்குத் தாம்பரம், பெருங்களத்தூர், வரதராஜபுரம், பாலாஜி நகர், குட்வில் நகர்... என இதைச் சுற்றியுள்ள 20 ஊர்களில் தண்ணீர் புகுந்துள்ளது. கால்வாய்களில் நீர்மட்டம் ஏறி, கரைகளை மீறி நாலாபுறமும் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. சாலைகளை மூழ்கடித்து, வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரை உடைந்துள்ள பகுதியை இங்கே பார்க்கலாம். தாம்பரம் பெருநகராட்சி உடனடி நடவடிக்கை எடுத்து, கரையை அடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தாழைக் கோழிகளின் சண்டை | Common Moorhen Fight

டிஷ்யூம் டிஷ்யூம்

இரண்டு ஜோடி தாழைக் கோழிகள், நம் வீட்டுப் பின்புறத்தில் உண்டு. அவற்றுக்குள் ஏதோ தகராறு. இரண்டு தாழைக் கோழிகள், பல முறைகள் அடித்துக்கொண்டன. வெவ்வேறு இடங்களில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. நடுவில் ஒரு தாழைக்கோழி தடுக்கப் போய், அதற்கும் நாலு சாத்து விழுந்தது. அந்தப் பரபரப்பான சண்டைக் காட்சியை இங்கே பாருங்கள்.

Saturday, December 05, 2020

சனிப்பெயர்ச்சி பலன்கள் | 2020 - 23 | Sani Peyarchi Palan | வேதா கோபாலன்| Vedha Gopalan

ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களின் கணிப்பில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ. 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள், பரிகாரங்களுடன், எந்தெந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

புரவிப் புயல் கனமழை | Heavy rain with Cyclone Burevi

இன்று காலை புரவிப் புயலுடன் சேர்ந்த கனமழை, சென்னை, தாம்பரத்தில் உள்ள நம் பகுதியைப் புரட்டி எடுத்தது.

Friday, December 04, 2020

வேப்பமர உச்சியிலே சின்னான் | Red-vented Bulbul

Red-vented Bulbul is singing on the top of Neem tree.

Rain drops | மழைத்துளிகள்

புரவிப் புயல், சென்னை தாம்பரத்தில் நம் பகுதியில் சில்லென்ற சூழலையும் சிறு தூறலையும் நாள்முழுக்கத் தந்துள்ளது. நீர்ப்படுகை மீது மழைத்துளிகள் வரையும் வட்டங்களும் ஓவியங்களும் அழகோ அழகு. பார்த்து மகிழுங்கள்.

Squirrel is eating Dosa | தோசை சாப்பிடும் அணில்

நம் வீட்டுத் தோசையை வெளுத்துக் கட்டும் அணில்.

Thursday, December 03, 2020

Do your duty!

What ever the situation, do your duty! On a rainy day in Cyclone Puravi, the pigeon is busy as usual!

உச்சியில் இரட்டைவால் குருவி | Black Drongo on top

ஹாஹாஹா, இந்தப் படத்தைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். இதை எடுக்கும்போது என் கை மெல்ல ஆடியது. ஆனால், படத்தைப் பார்த்தால், கம்பத்தை யாரோ இங்கும் அங்கும் நகர்த்த, உச்சியில் இரட்டைவால் குருவி அசையாமல் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது, இல்லையா?

#Shorts: Yellow-billed babbler

Aim, Catch, Conquer!


நினைத்ததை நடத்தியே முடிப்பவன்!


கத்தரிக்காய் காய்த்தது | Baby brinjal in our garden

நம் வீட்டுத் தோட்டத்தில் கத்தரிக்காய் காய்த்தது.

Wednesday, December 02, 2020

Three pigeons and a crow | மூன்று புறாக்களும் ஒரு காக்கையும்

மூன்று புறாக்களும் ஒரு காக்கையும் இரையுண்ணும் போது...

மீன்கொத்தியும் பெண்குயிலும் | Kingfisher and a female Cuckoo

மீன்கொத்தியும் பெண்குயிலும் நம் வீட்டு வேப்ப மரத்தில் எதிரெதிரே அமந்து காற்று வாங்கும் காட்சி.

Cattle Egret is walking

Cattle Egret is walking on the wall!


உண்ணிக் கொக்கு உன்னிப்பாக நடக்கிறது!


Cute kitten fight on tree

மரத்தின் மீது இரு பூனைக்குட்டிகள் போடும் செல்லச் சண்டையைப் பாருங்கள்.

#Shorts: The walking Myna

இன்று காலையில் நம் வீட்டெதிரே நடைபழகிய மைனா.

White-throated Kingfisher | வெண்தொண்டை மீன்கொத்தி

நம் வீட்டு வேப்ப மரத்தில் வீற்றிருக்கும் மீன்கொத்தி. இடம்: தாம்பரம், சென்னை. 

Tuesday, December 01, 2020

பறக்கும் நாரைகள் | Flying storks | Asian openbill stork

வரிசையாக அமர்ந்திருக்கும் மூன்று நாரைகள் (நத்தை குத்தி நாரைகள்) ஒன்றன்பின் ஒன்றாக, மேலெழுந்து உயரப் பறக்கும் காட்சி, இன்றைக்குப் பார்க்கக் கிடைத்தது. இதில் ஒரு நாரை, மெல்ல நடந்து, பக்கத்தில் இருந்த உண்ணிக் கொக்கைத் தன் பேரலகு திறந்து சிரித்துக்கொண்டே விரட்டிவிட்டது, அழகான ஒரு நாடகம்.

கரிச்சான் - Black drongo

அன்பர்கள் என்னை மன்னியுங்கள்.

பாயும் குயில் என்ற தலைப்பில் முன்னர் 4 காணொலிகளை இட்டிருந்தேன். தூரத்திலிருந்து பார்க்கும்போது அப்படித்தான் தெரிந்தது. இப்போது பார்க்கும்போது, அவை கரிச்சான் பறவைகள் எனத் தெரிகிறது. அன்பர்கள் யாருமே இதைச் சுட்டிக் காட்டவில்லையே. இப்போது திருத்திவிட்டேன். ஆனால், இதற்காக நான் எழுதிய கவிதையை அப்படியே விட்டுவிட்டேன்.

களிவளர் குயிலே மின்னும்
கவினெழு சுடரே  
குளிரிளந் திருவே வண்ணக்
குழலிசை அமுதே 
ஒளிமுகிழ் கனவே பண்ணில்
உயிர்வளர் ஒயிலே
வெளியிது உனக்கே நன்கு
விரித்திடு சிறகே

நீள்விசும்பு வாசுதேவன் என்பார், இன்று நம் கரிச்சான் பதிவுக்கு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். ஆனைச்சாத்தான் என இலக்கியத்தில் குறிப்பிடுவது இந்தப் பறவையைத் தானே எனக் கேட்டிருந்தார். தேடிப் பார்த்தேன். அவர் சொன்னது சரியே. ஆனைச்சாத்தன் என்பதே சரியான பெயர். திருப்பாவையில் ஆண்டாள், கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? எனக் குறிப்பிடுவது நம் கரிச்சானையே. மார்கழியும் நெருங்கிவிட்டது.

எனவே இந்தக் கரிச்சானைச் சிறப்பிக்க, இதைப் பதிந்து நான் வெளியிட்ட 14 காணொலிகளையும் தனி இழையில் சேர்த்திருக்கிறேன். அன்பர்கள் பார்த்து மகிழுங்கள்.

Monday, November 30, 2020

Sunset at Chennai - 21

சென்னையில் இன்று செஞ்சூரியன் அஸ்தமிக்கும் காட்சி. இதில் குறுக்கும் நெடுக்கும் பறக்கும் பறவையின் பெயர், யாருக்காவது தெரியுமா?

வண்ணத்துப்பூச்சியின் நாக்கு | Butterfly Tongue

வண்ணத்துப்பூச்சி நடந்து செல்வதை இன்றுதான் பார்த்தேன். மேலும் அதன் நீண்ட குழல் போன்ற நாக்கையும் அதைக் கொண்டு அது உறிஞ்சி உண்பதையும் இன்றுதான் கண்டேன். இதன் இறக்கைகள், இரும்புக் கவச உடை போல் அமைந்து, எந்திரப் பூச்சி போல் நகர்ந்தது, புதுமையாக இருந்தது.

புதிய கோணத்தில் இரட்டைவால் குருவி | Drongo in a new angle

இன்று கண்ட இரட்டைவால் குருவி (கரிச்சான்), என் தலைக்கு மேல் இருந்த கிளையில் அமர்ந்தது. இதனால் அதைப் புதிய கோணத்தில் காண முடிந்தது. அது கூரிய அலகால் சிறகைக் குடைந்தது. வெயிலில் சிறகு விரித்துக் காய வைத்தது. காலால் தலையை நறநறவென்று சொறிந்துகொண்டது. இத்தனையும் இரண்டே நிமிடத்தில்.

Sunday, November 29, 2020

திருக்கார்த்திகை விளக்கீடு | Karthigai Deepam | கார்த்திகை தீபம்

திருக்கார்த்திகையை முன்னிட்டு, இன்று நம் இல்லத்தில் தீபங்கள் ஏற்றி வழிபட்டோம். எல்லோர் வாழ்வும் ஒளிரட்டும்! 

அந்தக் காலத் தொலைநோக்கி | Antique Old Binacular

அந்தக் காலத் தொலைநோக்கி வழியே அந்தக் காலத்தையே பார்க்கலாம்.

அந்தக் காலத் தொலைபேசி | Antique Old Phone

இன்று நம் செல்பேசிகள், உள்ளங்கைக்குள், கைக்கடிகாரத்தில், மோதிரத்தில் சுருங்கிவிட்டன. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பேசுவதற்கும் கேட்பதற்கும் தனித் தனியே இரண்டு பாகங்களைப் பிடித்துக்கொண்டு பயன்படுத்தினோம். இன்று நம் செல்பேசிகள், உள்ளங்கைக்குள், கைக்கடிகாரத்தில், மோதிரத்தில் சுருங்கிவிட்டன. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பேசுவதற்கும் கேட்பதற்கும் தனித் தனியே இரண்டு பாகங்களைப் பிடித்துக்கொண்டு பயன்படுத்தினோம். அப்படியான ஒரு தொலைபேசி, சென்னை, சிட்லபாக்கத்தில் உள்ள பேக் டு த 90ஸ் மிட்டாய் கடையில் உள்ளது. அந்தத் தொலைபேசியை இன்று பார்ப்போம்.

கிராமபோனில் பாட்டு கேட்பது எப்படி? | How to operate a Gramophone?

கிராமபோன் என்ற இசைக்கருவியை நாம் பழைய திரைப்படங்களில் பார்த்திருப்போம். இன்று ஒரு காட்சிப் பொருளாகவே மாறிவிட்டது. ஆனால், 100 ஆண்டுகள் பழைமையான ஒரு கிராமபோன், இன்றும் இயங்குகிறது. சென்னை, சிட்லபாக்கத்தில் உள்ள பேக் டு த 90ஸ் மிட்டாய் கடையில் உள்ளது. இதைக் கொண்டு, கிராமபோன் எப்படி இயங்குகிறது? அதில் எப்படிப் பாட்டுக் கேட்பது என்று பாருங்கள்.

Saturday, November 28, 2020

இரு மடையான்கள் | Indian Pond Herons

புயல், மழைக்குப் பிறகு நேற்று நம் வீட்டு மதிலுக்குள் இறங்கிய இரண்டு மடையான்கள் (இந்தியக் குளத்துக் கொக்கு) என்ன செய்கின்றன என்று பாருங்கள்.

செர்ரி தக்காளி | Cherry Tomato

நம் வீட்டு மாடித் தோட்டத்தில் விளைந்துள்ள செர்ரி தக்காளிகளை இன்று அறுவடை செய்தோம்.

ஆள்காட்டிப் பறவையின் குரல் | Voice of Lapwing | Did-he-do-it?

இன்று காலை எழுந்தவுடன், ஆள்காட்டிப் பறவையின் உரத்த பாடலைக் கேட்டேன்.

கணந்துள்–ஆள்காட்டி (Lapwing) என்ற தலைப்பில் சற்குணா பாக்கியராஜ், வல்லமை மின்னிதழில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

பறவையியலாளர்கள் ஆள்காட்டியின் குரலை, ”loud and penetrating” என்று குறிப்பிடுகின்றனர். பறவைகளின் தந்தை என்று போற்றப்படும் முனைவர் சலீம் அலி, இந்தப் பறவைகளின் குரலை வர்ணிக்கும் போது,  “மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, இரட்டை அசையில், “twit, twit” என்று இரண்டு வினாடிக்கொரு தடவையும், இடைஇடையே, மிகவும் உயர்ந்த குரலில் “twit-twit-twit-twit”,  என்று இரக்கமான குரலும் கொடுக்கும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சூழ்நிலைக்கேற்றவாறு, குரலை உயர்த்தியோ, தாழ்த்தியோ, “Did-he-do-it?” என்று வருத்தம் தோய்ந்த குரல் கொடுக்கும்” என்கிறார் (The Book of Indian Birds, Salim Ali.  p.139-140).

இந்தக் காணொலியில் உள்ளது எந்த ஆள்காட்டிப் பறவையின் குரல் என்பதை நீங்களே கண்டுகொள்ளுங்கள்.

Friday, November 27, 2020

கனமழையில் இரு பறவைகள் | Two birds in heavy rain

நிவர் புயல் விர்ரென வீசிய நவம்பர் 25ஆம் தேதி கனமழையும் பிளந்து கட்டியது. அப்போது நம் வீட்டருகே உள்ள மதிலில் இரு பறவைகள் நடை பயின்றன. நத்தை குத்தி நாரையும் உண்ணிக் கொக்கும் நெருங்கி வந்து என்ன பேசியிருக்கும்?

தாம்பரத்தில் தண்ணீர் வடிகின்றது!

மேற்குத் தாம்பரத்தில் பல பகுதிகளில் நேற்று வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஆயினும் படிப்படியாக இப்போது குறைந்து வருகின்றது. ஆயினும் குப்பைகளும் பாம்புகளும் இறந்த உயிரினங்களின் சடலங்களும் ஆங்காங்கே சூழ்ந்துள்ளன. மரங்களும் மரக்கிளைகளும் விழுந்து கிடக்கின்றன. தேங்கியுள்ள நீரிலிருந்து குபுகுபுவென குமிழ்கள் வெளிவருகின்றன. இதோ, களத்திலிருந்து நேரடிக் காட்சிகள்.

Thursday, November 26, 2020

Alert: தாம்பரத்தில் வெள்ளம் ஏறுகிறது

சென்னை, மேற்குத் தாம்பரத்தில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி, அதன் நீர்மட்டம் ஏறுகிறது. வீடுகளிலிருந்து சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு, தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் பெயர்ந்து வருகிறார்கள். தண்ணீர் வடியும் என்று பலரும் காத்திருக்கிறார்கள். களத்திலிருந்து நேரடிக் காட்சிகள்.

தண்ணீரில் தத்தளிக்கும் மேற்குத் தாம்பரம் | Waterlogging in West Tambaram

சென்னை, மேற்குத் தாம்பரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளே தெரியாத அளவு தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதோ ஒரு நேரடிக் காட்சித் தொகுப்பு.

நிவர் புயலின் தாண்டவம் | Power of Nivar

நிவர் புயலின் தாண்டவத்தால் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, தாம்பரத்தில் நம் பகுதியில் ஒரு சிறு உலா வந்தபோது கண்ட பாதிப்புகள் இங்கே.