!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழ்சிஃபியில் என் ஓராண்டுப் பணிகள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, September 09, 2006

தமிழ்சிஃபியில் என் ஓராண்டுப் பணிகள்

2005 செப்டம்பர் 9 அன்று சிஃபியில் பணியில் சேர்ந்த நான், இந்த மாதம் 8ஆம் தேதியுடன் ஓராண்டினை நிறைவு செய்துள்ளேன். இணைய இதழ் ஆசிரியராக இந்த ஓராண்டில் நான் ஆற்றிய பணிகளுள் சில இங்கே:

வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நான் தயாரித்த சிறப்பிதழ்கள்:

நவராத்திரி சிறப்பிதழ் (2005)

தீபாவளி சிறப்பிதழ் (2005)

ஆண்டிறுதிச் சிறப்பிதழ் (2005)

பொங்கல் சிறப்பிதழ் (2006)

குடியரசு தினச் சிறப்பிதழ் (2006)

காதலர் தினச் சிறப்பிதழ் (2006)

ஜெ சிறப்பிதழ் (2006)

மகளிர் தினச் சிறப்பிதழ் (2006)

தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் (2006)

தேர்தல் 2006 சிறப்பிதழ் (2006)

லைலா சிறப்பிதழ் (2006)

ஃபிபா கால்பந்துத் திருவிழா (2006)

சுதந்திர தினச் சிறப்பிதழ் (2006)

சென்னை தினம் - 367 (2006)

பிள்ளையார் சதுர்த்தி சிறப்பிதழ் (2006)என் அழைப்பை ஏற்றுத் தமிழ் சிஃபியில் எழுத்துப் பத்தி தொடங்கியவர்கள்:

வெங்கட் சாமிநாதன்
பாக்கியம் ராமசாமி
கல்யாணி வெங்கடராமன்
நேசகுமார்
பி.கே.சிவகுமார்
சுபமூகா
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
நாகேஸ்வரி அண்ணாமலை


ஒலிப் பத்தி தொடங்கியவர்கள்:

நா.கண்ணன்
ஷைலஜா
வ.ஐ.ச.ஜெயபாலன் - வாசுகி ஜெயபாலன்
ஸ்ரீதேவி்


புதிதாக வலையேற்றம் கண்ட இலக்கிய இதழ்:

வடக்கு வாசல்

தமிழ்சிஃபியின் புதிய பகுதிகள்:

செவிநுகர் கனிகள் (ஆடியோ)
திரை ஓடை - டிரெய்லர் (வீடியோ)
குறுஞ்செய்தி உலகம்
வாசகர் கடிதங்கள்

அறிமுகங்கள்:

ஆசிரியர் பரிந்துரை எனப்படும் Editor's choice, தமிழில்
சென்னை பாக்ஸ் ஆஃபீஸ் (Box office hit reports), தமிழில்
அரட்டையில் (Chat) பங்கேற்கும் நட்சத்திரங்களின் ஆங்கில பதில்கள், தமிழில்
தகவல் சித்திரங்கள் (Infographics), தமிழில்.


குறிப்பிடத்தகுந்தவை:

* தமிழ் இணைய இதழ்களைப் பொறுத்தவரை ஒலிப் பதிவுகளையும் ஒலிப் பத்திகளையும் அறிமுகப்படுத்தி தமிழ்சிஃபி, முன்னோடிப் பணியாற்றி வருகிறது. தரமான ஒலிப் பதிவுகளை எவர் அனுப்பினாலும் அதை வெளியிடச் சித்தமாய் உள்ளோம்.

* பெருகிவரும் குறுஞ்செய்திகளுள் சுவை / பயன் மிகுந்தவற்றைத் தொகுத்து வருகிறோம். இதுவும் ஒரு முன்னோடிப் பணியே. எவரும் தமக்கு வந்த குறுஞ்செய்திகளைத் தொகுத்து மின்னஞ்சலில் எமக்கு அனுப்பி வைக்கலாம்.

* கருத்துக் கணிப்புகளை அதிகப்படுத்தியதன் மூலம் தளத்திற்கும் வாசகர்களுக்கும் இடையில் ஊடாட்டங்கள் அதிகரித்துள்ளன. tamileditoratsifydotcom என்ற மின்னஞ்சல் முகவரியைத் தந்து, வாசகர்களின் கடிதங்களையும் படைப்புகளையும் கருத்துகளையும் வரவேற்று, வெளியிட்டு வருகிறோம்.

* மீயுரைக் குறிப்பு மொழியில் (எச்டிஎம்எல்) பல சிறப்பிதழ்களை உருவாக்கியுள்ளோம்.

* தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டிய மே மாதத்தில், தமிழ்சிஃபி தளத்தில் வாசகர்கள் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கை (Page views), வழக்கத்தை விட இரு மடங்கானது. இத்தகைய எண்ணிக்கையை எட்டியது இதுவே முதல் முறை.

* சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, வாசகர்கள் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கை (Page views), ஒரே நாளில் 5 மடங்கு வளர்ச்சி
அடைந்தது. இத்தகைய எண்ணிக்கையை எட்டியது இதுவே முதல் முறை.

* எழுத்தாளர் சுஜாதா, 2005ஆம் ஆண்டின் சிறந்த வலைமனையாகத் தமிழ்சிஃபியைத் தேர்ந்தெடுத்தார். (ஆனந்த விகடன்)


இனி


விரைவில் தமிழ்சிஃபி, ஒருங்குறியில் (யுனிகோடில்) வெளிவர உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வாசகர்கள், எழுத்தாளர்கள், அனைத்துத் துறை சார்ந்த சிந்தனையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் தமிழ்சிஃபிக்கு வருகை தரவும் அதில் பங்கேற்கவும்
அன்புடன் அழைக்கிறேன்.

சிஃபிக்கு என்னையும் எனக்கு சிஃபியையும் அறிமுகப்படுத்திய நண்பர் ஆர்.வெங்கடேஷ், அடிப்படைகளை எடுத்துரைத்த நண்பர் ஏக்நாத், சிறந்த முறையில் ஆலோசனைகள் வழங்கிவரும் கே. வெங்கடேஷ், ராஜசேகர், சஸ்லின் சலீம், எனக்கு உறுதுணையாக இருக்கும் வேங்கடசுப்பிரமணியன்.... உள்பட இன்னும் பலருக்கும் இந்த வளர்ச்சியில் பங்குள்ளது. இவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

7 comments:

மதுமிதா said...

மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணாகண்ணன்

தொடர்ந்து சிறப்பாகப் பணிபுரியுங்கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் அண்ணாகண்ணன். உங்கள் பணி மேன்மேலும் சிறக்கட்டும். தளம் யூனிகோடில் வெளிவர இருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியூட்டும் செய்தி!

மஞ்சூர் ராசா said...

தமிழ் சிஃபியின் ஆரம்பக்கால வாசகன் என்ற முறையில் தொடர்ந்து படித்து வருகையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் மகிழ்வை தருகின்றன. அதில் உங்களின் பணி மிகவும் மெச்சத்தக்கது. கூடியவிரைவில் ஒருங்குறிக்கு மாறப்போகிறது என்பது எங்கள் அனைவருக்கும் ஒரு மிகவும் சந்தோசமான செய்தி.
இனி வாசகர் கடிதங்களை நீங்கள் அதிகம் எதிர்ப்பார்க்கலாம்.

தமிழ் சிஃபி மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள்

சாத்தான் said...

சிஃபி போல ஒரு மிகப் பெரிய நிறுவனத்திற்கு யூனிகோடின் முக்கியத்துவம் இப்போதுதான் புரிகிறது என்றால் வேடிக்கையாக இருக்கிறது. Better late than never என்பது சிஃபி பாலிசியோ?

newsintamil said...

வாழ்த்துக்கள்!

தமிழக வலை இதழ்கள் யூனிகோடின் தேவையை உணராமல் இருந்து வந்த, இன்னும் இருந்து வரும் நிலையில் முக்கியமான வலைத்தலமான சிபி யூனிகோடில் வரவிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

குறும்பன் said...

வரும் ஆண்டிலும் பல சிறப்பான செயல்கள் செய்ய வாழ்த்துக்கள்.