!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழ்சிஃபி மகாத்மா காந்தி சிறப்பிதழ் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, September 30, 2006

தமிழ்சிஃபி மகாத்மா காந்தி சிறப்பிதழ்

'இப்படியொரு மனிதர் ரத்தமும் சதையுமாக இருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே நடமாடினார் என்பதை வருங்காலத் தலைமுறை நம்புவது கடினம்' என்று காந்தியைக் குறித்து ஐன்ஸ்டீன் அன்றே கூறினார். அப்படி இருக்கையில் இன்றைய சூழலில் தேசத் தந்தை காந்தியை நினைவுகூர்வது மிகவும் முக்கியம்.

எனவே அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்சிஃபி சார்பில் சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளோம். இதில் காந்தியின் பல்வேறு புகைப்படத் தொகுப்புகளும் காந்தியின் எழுத்துகள் சிலவும் காந்தியைப் பற்றிய எழுத்துகள் பலவும் இடம் பெற்றுள்ளன.

கி. ராஜநாராயணன், வெங்கட் சாமிநாதன் ஆகியோரின் கட்டுரைகளுடன் பி.கே. சிவகுமாரின் 'கண்டுணர்ந்த காந்தி' என்ற பத்தியும் சிறப்பிதழுக்கு வலிமை சேர்க்கிறது. காந்தியை நவீன ஓவியமாகவும் நீங்கள் கண்டு களிக்கலாம்.

காந்தி அன்பர்களை இந்தச் சிறப்பிதழ் கவரும் என்று நம்புகிறேன்.

4 comments:

வலைஞன் said...

சிறப்பிதழ்கள் எல்லாம் நல்ல முயற்சி.

அதிருக்கட்டும் யூனிகோடில் வர இருப்பதாகச் சொன்னீர்களே என்ன ஆச்சு?

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. செய்திகளையாவது யூனிகோடில் வெளியிட ஆரம்பிக்க் கூடாதா? யூனிகோடில் ஒரு செய்தித் தளத்தின் தேவையை யார்தான் நிறைவு செய்யப் போகிறார்களோ?

ஈழத்துச் செய்திகளுக்கென எத்தனை தமிழ் யூனிகோடு செய்தித்தளங்கள்? தமிழகம் மட்டும் இன்னும் தயங்குவதேன்?

முனைவர் அண்ணாகண்ணன் said...

விரைவில் தமிழ்சிஃபி, ஒருங்குறியில் மலரும். சற்றே பொறுங்கள்.

முனைவர் அண்ணாகண்ணன் said...

காந்தி தொடர்பான மேலும் இரண்டு கட்டுரைகளை அண்மையில் வெளியிட்டுள்ளோம்.

1. நாகேஸ்வரி அண்ணாமலையின் 'நான் அறிந்த காந்தி'

2. பி.கே.சிவகுமாரின் 'கண்டுணர்ந்த காந்தி - 3'

படித்து மகிழுங்கள்

Anonymous said...

Wish you success with your site. If you need Travel Nursing information, check out my blog.