Mass dance in Mumbai streets. This is the spirit of Mumbai.
மும்பையில் வசித்தபோது (2014-16) என்னைக் கவர்ந்த விஷயங்களுள் முக்கியமானது, இப்படிப் பெருங்கூட்டமாக நடனம் ஆடுவது. சென்னையில் இது மிக அரிது. பெங்களூருவிலும் பார்ட்டி போன்ற நிகழ்வுகளில் மட்டுமே இப்படி ஆடிப் பார்த்திருக்கிறேன். ஆனால், மும்பையில் ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி ஆடுவது, இயல்பானது. மக்கள் ஒரு புள்ளியில், ஒரு கோட்டில் இணைவதைப் பார்க்கும்போது நமக்கே ஆடவேண்டும் என்ற உற்சாகம் வந்துவிடும். மும்பை வீதிகளில் நடைபெற்ற இந்தப் பெருங்கூட்ட நடனத்தைக் கண்டு மகிழுங்கள்.
No comments:
Post a Comment