!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> நள்ளிரவில் மரமேறிய பூனையும் விரட்டிய காக்கைகளும் | Cat's midnight hunt a... ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, August 01, 2020

நள்ளிரவில் மரமேறிய பூனையும் விரட்டிய காக்கைகளும் | Cat's midnight hunt a...

நேற்று நள்ளிரவு 12 மணியிருக்கும். திடீரென்று காக்கைகள் அலறின. என்னவென்று மொட்டை மாடிக்குச் சென்றால், அங்கே காக்கைக் குஞ்சுகளைப் பிடித்துத் தின்ன, பூனை ஒன்று, மரமேறிக்கொண்டிருந்தது.



அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தில்தான் உலக அதிசயமாக, ஒரே மரத்தில் அடுக்கடுக்காக ஏழு கூடுகளைக் காக்கை கட்டியிருந்தது. அதன் ஏழாவது உச்சிக் கூட்டில் ஒரு மாதம் முன்பு, காக்கை குஞ்சு பொரித்தது. நாலைந்து குஞ்சுகள் இருக்கும். அதனால் இரண்டு மாதமாக நாங்கள் அங்கே நடமாட முடியவில்லை. எப்போது எந்தப் பக்கமிருந்து பாய்ந்து வருமோ, எனச் சுற்றி முற்றிப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். சற்று அசந்தால், காதுக்கருகே சர்ரென்று பறக்கும்.



இந்நிலையில் இந்த மரத்தில் பூனை ஏறுவதைப் பார்த்துவிட்டு, காக்கைகள் வீரிட்டு அலறின. அதைச் சுற்றிச் சுற்றி வந்து விரட்டின. நான் மொட்டை மாடி மின்விளக்கை இட்டு, கேமராவுடன் அருகில் சென்றதும் பூனை மெல்லக் கீழே இறங்கிவிட்டது.



 இதற்கு முன்பும் பூனை இப்படிக் குஞ்சுகளை வேட்டையாட முயன்றிருக்கிறது. அதனால்தான் 12 நாள்கள் முன்பு, பூனையை இரு காக்கைகளும் விரட்டின. பூனை பயந்து, வேப்ப மரத்தில் ஏறிக்கொண்டது. அந்தக் காட்சியை 2020 ஜூலை 19 அன்று நான் வெளியிட்டிருந்தேன்.



 இதோ, நேற்றைய நள்ளிரவைக் கிடுகிடுக்க வைத்த காட்சியைப் பாருங்கள்.



 

No comments: