மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் எழுத்தாளர் நிர்மலா ராகவன், 30 ஆண்டுகளாக இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவரது நூல்கள் பலவும், அச்சு நூல்களாக, மின்னூல்களாக, ஒலி நூல்களாக வெளிவந்துள்ளன. வல்லமையில் தொடர்ந்து பத்திகள் எழுதி வருகிறார். பாடல்கள் புனைந்து பாடியுள்ளார். எழுத்தாளர் என்ற முகத்தைக் கடந்து, இவருக்கு இன்னொரு முகமும் உண்டு. இவர், பூனைகள் வளர்த்து வருகிறார்.
பூனைகள் தொடர்பான எனது காணொலிகள் சிலவற்றை அண்மையில் யூடியூபில் வெளியிட்டேன். அதில் பூனைக்கு என்ன மன அழுத்தம் என்று கேட்டிருந்தேன். பூனைக்கு எதனால் எல்லாம் மன அழுத்தம் ஏற்படும் என எனக்கு விளக்கினார்.
அதைத் தொடர்ந்து, பூனைகள் தொடர்பான எனது கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாகவும் பூனையுடனான அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலும் இந்த நேர்காணலை வடிவமைத்தோம்.
இந்த அமர்வில், பூனைகளின் இயல்புகள், நடத்தை, பழக்க வழக்கங்கள், உணர்வுகள் உள்ளிட்ட பலவற்றையும் மிக அழகாக விளக்கியுள்ளார். பூனையின் அசைவுகளை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என விளக்கினார் (
பூனை மல்லாக்கப் படுத்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?)
மனித மொழியைப் பூனை புரிந்துகொள்கிறது (பூனைக்குத் தமிழ் புரியும்). பூனை கர்நாடக சங்கீதமும் பாடும். பூனைக்கு மனிதனை விட ஐந்து மடங்கு அதிகமான நுண்ணிய கேட்கும் திறன் உண்டு என்றார். பூனையின் வேட்டைத் திறன் பற்றியும் விளக்கினார் (இவர் வீட்டுப் பூனை, நான்கு பாம்புகளைக் கொன்றுள்ளது).
பூனை வளர்ப்போர், வளர்க்க விரும்புவோர் ஆகியோருடன் பூனைகளைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்தப் பதிவை அவசியம் பாருங்கள்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Thursday, August 27, 2020
பூனைகளைப் புரிந்துகொள்வோம் - நிர்மலா ராகவன் உடன் ஒரு நேர்காணல் | Nirmala...
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:50 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment