எங்கள் வீட்டு வாசலில் இந்தப் பூக்கள் நிறைய உள்ளன. தமிழகமெங்கும் வேலியோரங்களில், வயற்காடுகளில் இவை காணப்படும். வெட்டுக்காயப் பூண்டு, கிணற்றுப்பாசான், வெட்டுக்காயப் பச்சிலை, செருப்படித்தழை, மூக்குத்திப்பூண்டு, காயப்பச்சிலை எனப் பலவாறாக இது அழைக்கப்படுகிறது. இலங்கையில் தமிழ் மக்கள் இச் செடியைக் கோணேசர் மூலிகை என அழைப்பர்.
இந்தச் செடியின் இலைகளை வெட்டுக் காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துவர். குழந்தைகள் இதன் பூவை நீண்ட காம்புடன் கொய்து தாத்தா தாத்தா தல குடு என்று சொல்லியபடி கிள்ளி விளையாடுவார்கள். எனவே இதற்குத் தாத்தாப்பூ என்ற பெயரும் உண்டு.
இந்தப் பூவின் மீது, வண்ணத்துப்பூச்சிகள் அவ்வப்போது அமர்ந்து தேன்குடிக்கும். நீண்ட காம்புடன் கூடிய இந்த மெல்லிய பூவில் ஒரு கனத்த வண்ணத்துப்பூச்சி அமர்ந்தால், தாண்டுக் குச்சியை(Pole vault)ப் போல் இவை நன்கு வளையும்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Wednesday, August 19, 2020
வெட்டுக்காயப் பூண்டு | கிணற்றுப்பாசான் | தாத்தாப்பூ | Tridax procumbens
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:21 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment