இன்று ஒரு பெரிய குளவி, வீட்டுக்குள் வந்துவிட்டு, வெளியே செல்லத் தெரியாமல் திண்டாடியது. ஒவ்வொரு ஜன்னலிலும் முட்டி மோதி, ஏதேனும் சிறு வழி கிடைக்குமா என்று தேடியது. இறுதியில் கதவைத் திறந்து வைத்த பிறகு அதன் வழியே விருட்டெனப் பறந்து சென்றது.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Wednesday, September 30, 2020
வீட்டுக்குள் வந்த குளவி | Large Wasp entered into the house
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:16 PM 0 comments
நிர்மலா ராகவன் எழுத்துலக அனுபவங்கள் - 1 | Nirmala Raghavan's writing exp...
15 வயது மாணவி, ஆசிரியர் முன்னால் தன் குட்டைப் பாவாடையைத் தூக்கிக் காட்டினார். அடுத்து நடந்தது என்ன?
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:45 AM 0 comments
நிர்மலா ராகவன் எழுத்துலக அனுபவங்கள் - 1 | Nirmala Raghavan's writing exp...
மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமிழில் 25 நூல்களையும் ஆங்கிலத்தில் 6 நூல்களையும் எழுதியவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல துறைகளிலும் அமைந்த இந்த நூல்கள் பலவும், பரிசுகளையும் பாராட்டுகளையும் வென்றவை. கணவரிடம் அடி வாங்கி, பாதுகாப்பு இல்லத்தில் தங்கியோர், ஓடிப் போனவர்கள், தொழுநோயாளிகள், குண்டர் குழுவில் இருந்தோர்... எனப் பலரையும் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கையைக் கேட்டுக் கதைகளாக எழுதியவர். எழுதுவதற்கான கருக்களைத் தேர்ந்தெடுப்பது, அதற்காகக் கள ஆய்வு செய்வது, பாத்திரங்களாகவே மாறுவது, கூடு விட்டுக் கூடு பாய்வது... என விரியும் தமது அனுபவங்களை இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:38 AM 0 comments
Monday, September 28, 2020
உடல் சிலுப்பும் தவிட்டுக் குருவி | Yellow-billed babbler, after the rain
மழையில் நனைந்த இந்தத் தவிட்டுக் குருவி, மழைக்குப் பிந்தைய இளவெயிலில் தன் உடலை என்னமாய்ச் சிலுப்புகிறது, பாருங்கள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:02 PM 0 comments
மழையில் நனையும் பறவைகள் | Birds in rain
இன்று சென்னை, தாம்பரத்தில் திடீர் மழை பெய்தது. அதில் பெண்குயில், இரட்டைவால் குருவி, காக்கை எனச் சில பறவைகள் நனையும் காட்சி இங்கே.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:14 PM 0 comments
Sunday, September 27, 2020
செங்குளவி | Ropalidia marginata
இன்று இந்தச் செங்குளவியைப் பார்த்தேன். இட்டிலிப்பூ எனப்படும் வெட்சிப்பூவிலும் அதன் காம்பிலுமாக மாறி மாறித் தாவிக்கொண்டிருந்தது. இது கொட்டினால் கடுமையாக வலிக்கும். வீக்கம் ஏற்படும்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:32 PM 0 comments
Thursday, September 24, 2020
நான் கண்ட மாணாக்கர்கள் - நிர்மலா ராகவன் நேர்காணல் | Nirmala Raghavan int...
எழுத்தாளர் நிர்மலா ராகவன், மலேசியாவில் 30 ஆண்டுகளில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு இயற்பியல் கற்பித்தவர். மலாய், சீனர், இந்தியர் எனப் பல்லின மாணவர்களின் உள்ளம் கவர்ந்தவர். கற்றல் திறன் குறைந்தவர்களுக்கும் வறுமையில் வாடியவர்களுக்கும் இனக் காழ்ப்பை எதிர்கொண்டவர்களுக்கும் துணை நின்று பாதுகாத்தவர். இந்த நேர்காணலில் தாம் சந்தித்த மாணவர்கள் சிலரைப் பற்றி நம்முடன் உரையாடுகிறார்.
படம் வரைவது தவிர வேறு எதுவுமே தெரியாத மாணவர்கள், தேர்வு என்றால் படிக்க வேண்டுமா என்று கேட்ட மாணவர், வகுப்பில் தூங்கிய மாணவர், பொம்மையே பார்க்காத மாணவர், F.U.C.K. என்று ஆய்வுக்கூடத்தில் எழுதிய மாணவர், தெருவில் நின்று தங்கள் உடலை 50 காசுக்கு விற்ற மாணவியர், இந்த வகுப்புக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக என் அனுதாபங்கள் என்று சொன்ன மாணவர் எனப் பலரை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். ஆட்டிசம் பாதிப்புள்ள மாணவரை வகுப்பில் மானிட்டராய் நியமித்தது, பட்டன் போடாத / ஜிப் போடாத மாணவர்களுக்கு ஊக்கு வாங்கிக் கொடுத்தது, ஒரு வகுப்பை ஒரே மாதத்தில் ஆங்கிலம் பேச வைத்தது, சீன மாணவியருக்கு நடனம் சொல்லிக் கொடுத்தது... எனப் பல அனுபவங்கள் இதில் உண்டு.
இந்த சுவாரசியமான நேர்காணலைப் பார்த்து மகிழுங்கள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:57 PM 0 comments
Wednesday, September 23, 2020
செம்பகம் என்கிற செம்போத்து | Centropus sinensis
தமிழீழத்தின் தேசியப் பறவையான செம்பகம் என்கிற செம்போத்தினை முன்பு பகிர்ந்திருந்தேன். நேற்று இந்தப் பறவை தனது ஜோடியுடன் நம் வீட்டின் அருகேயே வந்தது. ஆயினும் சற்றே எட்ட நின்றது. மதில் சுவரில் மெல்ல நடை போட்டது. கண்முன்னே பறந்து காட்டியது. புல்வெளியில் ஜோடியுடன் உலா வந்தது. இந்த ஜோடியில் ஒரு பறவையை இங்கே காணலாம்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:18 PM 0 comments
Tuesday, September 22, 2020
மயில் மாணிக்கத்தில் ஒரு சிற்றெறும்பு
மயில் மாணிக்கத்தில் ஒரு சிற்றெறும்பு புகுந்து விளையாடும் பொற்கணம்!
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:07 PM 0 comments
How to make Jilebi from clay?
களிமண்ணிலிருந்து ஜிலேபி செய்வது எப்படி? விளக்குகிறார் நித்திலா.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:05 PM 0 comments
நித்திலாவின் ஓவியங்கள் | Drawings of Nithila
எங்கள் மகள் நித்திலாவின் ஓவியங்கள் சில, உங்கள் பார்வைக்கு.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:02 PM 0 comments
Nursery plant - 1
Saw this plant in the nursery today. Enjoy.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:58 PM 0 comments
Butterfly - 33 | வண்ணத்துப்பூச்சி - 32
இன்று செடி நாற்றங்காலில் இந்த வண்ணத்துப்பூச்சியைக் கண்டேன். நீங்கள் இதை விரும்பக்கூடும்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:57 PM 0 comments
செம்பருத்தி
இது ஒரு தனி வகைச் செம்பருத்தி. இன்று செடி நாற்றங்காலில் கண்டேன்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:56 PM 0 comments
லில்லி - 2 | Lily - 2
மழைத் துளிகளை ஏந்தி நிற்கும் லில்லி மலர்கள்!
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:44 PM 0 comments
மொசுக்கட்டை
நம் வேலியோரம் உள்ள இந்தச் செடியின் பெயர் என்ன? இதில் அடர்த்தியாக இருக்கும் இது மொசுக்கட்டை போல் தெரிகிறது. இவற்றை எப்படி அகற்றுவது? அறிந்தோர் விளக்குக.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:52 PM 0 comments
Friday, September 18, 2020
Sunset at Chennai - 17
பொன்மாலைப் பொழுது - இது ஒரு
பொன்மாலைப் பொழுது
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:18 PM 1 comments
தவிட்டுக் குருவிகள், அணில் & மைனா | Yellow-billed babblers, Squirrel and...
தற்செயலாக இன்று இதைப் பார்த்தேன். முதலில் நான்கைந்து தவிட்டுக் குருவிகள், அடுத்து ஓர் அணில், அதையடுத்து ஒரு மைனா என வரிசையாக வந்து நம் வீட்டுக் கோதுமை உப்புமாவைச் சுவைத்துச் சென்றன. இந்தப் பதிவில் ஒவ்வொரு வகை உயிரினத்துக்கும் ஒவ்வொரு வகை இசையைச் சேர்த்துள்ளேன். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:32 PM 1 comments
Butterfly - 31 | வண்ணத்துப்பூச்சி - 31
இன்று இந்த அற்புதமான வண்ணத்துப்பூச்சியைக் கண்டேன். நித்தியக் கல்யாணியில் அமர்ந்து தேனருந்திக்கொண்டிருந்தது. அரை நிமிடமே ஆனாலும் அழகிய தருணம்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:52 PM 0 comments
Thursday, September 17, 2020
கொசுக்களைக் கொல்ல | To kill mosquitoes
சென்னை, தாம்பரத்தில் கொசுத் தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வந்தோம். இன்று கடையில் விசாரித்தபோது, ஊதுபத்தி ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். வழக்கத்தை விடப் பெரிதாக இருந்தது. அதைக் கொளுத்தி வைத்த பிறகு என்ன நடந்தது என்று பாருங்கள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:25 PM 0 comments
Evening sky at Chennai - 15
இன்று மாலையில் வானில் பறவைகளும் தும்பிகளும் குதூகலமாய், குறுக்கும் நெடுக்கும் பறந்தவண்ணம் இருந்தன. சூரிய அஸ்தமனத்தைப் படம் எடுக்க முயன்றேன். இந்தப் பறவைகளும் கூடவே பதிவாகிவிட்டன.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:44 PM 0 comments
குயில், என் மனைவியின் பகைவன் | Cuckoo, the enemy of my wife
குயிலுக்கு அதிக நேரம் செலவிடுவதால், இதர வேலைகளுக்கு நேரம் குறைவதால், குயிலைத் தொந்தரவு செய்யும் வண்ணம் யாரும் உரக்கப் பேசாதீர்கள், சப்தம் எழுப்பாதீர்கள், அசையாதீர்கள் என்று நான் வீட்டாரைக் கேட்பதால், குயிலைச் சரியான கோணத்தில் படம் பிடிக்க, மற்றவர்களை நகர்ந்து அமரச் சொல்வதால், குயில், என் மனைவியின் பகைவன்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:47 PM 0 comments
Butterfly - 30 | வண்ணத்துப்பூச்சி - 30
Never seen such a force in love!
இப்படி ஒரு காதல் வேகத்தை இதுவரை நான் கண்டதில்லை!
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:21 PM 0 comments
Wednesday, September 16, 2020
குட்டையில் எருமைகள் | Buffaloes in a pond
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனச் சொல்வது போல், ஒரே குட்டையில் ஊறும் எருமைகளை இங்கே பார்க்கலாம். ஈ மொய்த்தாலும் மொய்க்காவிட்டாலும் காதுகளைத் தொடர்ந்து ஆட்டுவது இவற்றின் இயல்பாகிவிட்டதாகத் தெரிகிறது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:12 PM 0 comments
கருங்குயிலின் வெண்ணிறகு | White feather of a black Cuckoo
மழையில் நனைந்திருக்குமோ என்னவோ. இரண்டு நாள்களாக எல்லாக் குயில்களும் உடலைக் கோதிக்கொண்டே இருக்கின்றன. இன்று ஒரு குயில், தன் கருஞ்சிறகைக் கோதி, அதிலிருந்து வெண்ணிறகை வெளியே எடுத்துப் போட்டது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:31 PM 0 comments
இரட்டைவால் குருவி - 3 | Drongo - 3
கரிச்சான் என அழைக்கப்படுகிற இரட்டைவால் குருவி, மரத்திலும் மதிலிலும் மட்டுமின்றி, சிறு செடியிலும் அமர்கின்றது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:03 PM 0 comments
Butterfly - 29 | வண்ணத்துப்பூச்சி - 29
கறுப்பு வெள்ளையில் சிறகசைத்து, காற்றில் அபிநயித்து, கவின்கலை வளர்க்கிறது, இந்த வண்ணத்துப்பூச்சி.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:25 PM 0 comments
Loten's sunbird | ஊதாத் தேன்சிட்டு
தேன்சிட்டின் ஒரு வகையான ஊதாத் தேன்சிட்டினை Loten's Sunbird இன்று பார்த்தேன். மினுமினுவென்ற தகதக மேனி, கூரிய அலகு, கீச்கீச் என்ற குரல், மிகச் சிறிய உருவம் எனக் கவர்ந்து இழுத்தது. அந்தரத்தில் ஒரே இடத்தில் நின்றவாறு சிறகடித்தபடி பூக்களில் தேனருந்தியது. தேனருந்தும் காட்சியைப் படம் எடுக்க இயலவில்லை. என்றாலும், ஊதாத் தேன்சிட்டு அலகு திறந்து பாடுவதை இந்தப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:30 PM 0 comments
Q&A: பெயருக்கு முன்பு அடைமொழிகளை இடுவது எப்படி?
நோக்கர் உறுப்பினர் கதீப் மாமூனா லெப்பை அவர்களின் கேள்விக்கு எனது பதில் இங்கே.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:03 AM 0 comments
Monday, September 14, 2020
ஆடாதொடை சிகரெட் | சித்தா மூலிகை சிகரெட் | Siddha Herbal cigarette | Adha...
புகையிலை சிகரெட்டால் புற்றுநோய் உள்ளிட்ட பல தீங்குகள் ஏற்பட்டு வருகையில், மூலிகை சிகரெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார், டேவிட் ராஜா. புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை இதன் மூலம் மீட்டு, புகைப் பழக்கத்தையே கைவிடச் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆடாதொடை இலைகளைக் கொண்டு இந்த அதிசயத்தை, சித்த மருத்துவரான இவர் மனைவி டாக்டர் கமலா சௌந்திரம் முதலில் நிகழ்த்திக் காட்டி, காப்புரிமை பெற்றார். அதைத் தொடர்ந்து, முள்ளை முள்ளால் எடுப்பது போல், சிகரெட்டைச் சிகரெட்டாலேயே வீழ்த்தும் வகையில், இதற்குப் புது வடிவம் கொடுத்து, வணிக ரீதியில் டேவிட் ராஜா, சந்தைப்படுத்தி வருகிறார். சித்தா மூலிகை சிகரெட்டை உருவாக்கியது எப்படி என்று இந்த நேர்காணலில் நமக்கு விவரிக்கிறார். ஒரு தொழில்முனைவோராக அவரது பயணத்தையும் அவர் எதிர்கொண்ட சவால்களையும் இதில் காணலாம்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:10 PM 0 comments
Cuckoo and an online class
Cuckoo is listening the online class of my daughter Nithila.
என் மகள் நித்திலாவின் இணையவழி வகுப்பை இன்று ஒரு குயிலும் கேட்டுக்கொண்டிருந்தது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:59 AM 0 comments
Sunday, September 13, 2020
குயிலும் தையல் சிட்டும் | Cuckoo and a Tailorbird
மழை ஓய்ந்த குளிர் ஞாயிறு. இன்று ஜன்னல் எதிரே ஒரு கருங்குயில் நெடுநேரம் தரிசனம் தந்தது. வேப்பிலைகள், மழைநீரை ஏந்தி நிற்க, பல்வேறு பறவைகளும் குரல் கொடுக்க, தனிமைத் தவத்தில் இருந்தது இந்தக் குயில். இந்தப் பதிவின் இறுதியில் குயில் எதிரே ஒரு தையல் சிட்டு வந்து அமர்ந்தது. அதன் வாயில் உணவைக் கவ்வியபடி, சற்றே உலாவிப் பறந்தது. இந்த மழைக்காலம், மனத்திற்கு இனிமை தருகின்றது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:30 PM 0 comments
மின்கம்பியை ஆராயும் தவிட்டுக் குருவி | Yellow-billed babbler is checking...
அசல் மின்கம்பியைத் தன் அலகால் ஆராய்கின்றது இந்தத் தவிட்டுக் குருவி. இதுதான் ஆபத்தோடு விளையாடுவது என்பதா?
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:12 PM 0 comments
நடனம் ஆடும் மயில் மாணிக்கம் | Dancing Mayil Manickam | Ipomoea quamoclit
காற்றின் ஜதிக்கு நடனம் ஆடும் மயில் மாணிக்கம்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:30 AM 0 comments
உடல்கோதும் தவிட்டுக் குருவி | Preening Yellow-billed babbler
சற்றே நனைந்த தவிட்டுக் குருவி உடல் கோதுவதும் தன் இடத்தில் உட்கார்ந்த தவிட்டுக் குருவியை விரட்டிவிட்டு அங்கே காக்கை வந்து அமர்வதும் ஜோடியாக அமர்ந்து தவிட்டுக் குருவிகள் கோதுவதும் அழகு, இனிது, அமுது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:08 AM 0 comments
Saturday, September 12, 2020
வேலைக்காரி அந்துப்பூச்சி | Handmaiden moth | Amata passalis
வேலைக்காரி அந்துப்பூச்சி என்பது விட்டில் பூச்சி இன, எபெபீட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சி ஆகும். இது இலங்கை, இந்தியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
இவை 3.5 செ.மீ. நீளம் கொண்டவை. இவை நேராக இல்லாமல் குறுக்குமறுக்காகப் பறக்கக்கூடியன. பகலில் இரவு ஆகிய இருசமயங்களிலும் நடமாடக்கூடியன. செங்குத்தான பகுதிகளில் இறக்கைகளை விரித்துவைத்தே உட்காரக்கூடியன. பொதுவாக அந்திப்பூச்சிகள் வண்ணத்துப்பூச்சிகளை ஒத்த இறக்கை வடிவத்தையே பெற்றிருக்கும். ஆனால் இந்த அந்திப்பூச்சி பார்ப்பதற்குக் குளவியைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவே இப்படிப்பட்ட உடல் தகவமைப்பைப் இவை பெற்றுள்ளன.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:36 PM 0 comments
தங்கம்மாள் பாரதி படைப்புகள் - ஜெயா தொலைக்காட்சியில் சுதாங்கன் நூல் அறிமுகம்
மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சுதாங்கன் அவர்களின் மறைவு அறிந்து வருந்துகிறேன். அவருடன் எனக்கு நேரடிப் பழக்கமில்லை.
தங்கம்மாள் பாரதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தங்கம்மாள் பாரதி படைப்புகள் என்ற நூலை 2004இல் அமுதசுரபி சார்பில் நான் தயாரித்தேன். இந்த நூலின் பதிப்பாசிரியர், முனைவர் விஜயபாரதி. இந்த நூலை எழுத்தாளர் சுதாங்கன், ஜெயா தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தினார். அதில் என்னையும் பாராட்டியிருந்தார். அந்தப் பதிவு, உங்கள் பார்வைக்கு இங்கே.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:16 PM 0 comments
பெயர் என்ன? - 5 | Find the name - 5
இந்தப் பூச்சியின் பெயர் என்ன?
Find the name of this insect.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:04 PM 0 comments
ஊஞ்சலாடும் இரட்டைவால் குருவி | Drongo on swing
வெவ்வேறு மின்கம்பிகளில் ஊஞ்சலாடும் இரட்டைவால் குருவிகளை இங்கே பார்க்கலாம். இதில் 44ஆவது விநாடியில் இரண்டு இரட்டைவால் குருவிகளும் சண்டை போடுகின்றவா? காதல் செய்கின்றனவா?
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:43 PM 0 comments
குயிலின் அமுத கானம் - 7 | Singing Cuckoo - 7
குயிலை அது கூவும்போது மிக நெருக்கத்தில் படம் பிடித்தேன். ஆயினும் சற்றே குவியம் மாறிவிட்டது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:43 PM 0 comments
Butterfly - 28 | வண்ணத்துப்பூச்சி - 28
Why the butterfly is sitting on a Tar road?
வண்ணத்துப்பூச்சி, மலரில் அமரும், தேனருந்தும் என்றெல்லாம் கவிதை வடிப்போம். ஆனால், அது எல்லா இடங்களிலும் அமர்கின்றது. முன்னர் அது, எலுமிச்சைச் செடியைச் சுற்றியபோது இதே கேள்வியைக் கேட்டேன். நண்பர் கார்கில் ஜெய், அதிலிருக்கும் உப்புக்காக அங்கே அமர்கின்றது என்றார்.
இங்கே தார்ச்சாலையில் வண்ணத்துப்பூச்சி அமர்ந்துள்ளது. கல்லிலும் மண்ணிலும் அதற்கு என்ன கிடைக்கும்?
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:30 AM 0 comments
Friday, September 11, 2020
Butterfly - 27 | வண்ணத்துப்பூச்சி - 27
Butterfly spreads happiness, pleasantness, positive vibrations, where ever it goes.
தான் செல்லும் இடமெங்கும் மகிழ்ச்சியை, இனிமையை, நல்லதிர்வுகளை உண்டாக்குகிறதே, எத்தனை அழகு இந்த வண்ணத்துப்பூச்சி!
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:55 PM 0 comments
இரட்டைவால் குருவி | Drongo
Watch the flying Drongo.
கரிச்சான் எனப்படும் இரட்டைவால் குருவியை இன்று மதியம் மீண்டும் பதிந்தேன். அது பறக்கும் அழகும் இதில் பதிவாகியுள்ளது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 6:06 PM 0 comments
சமஸ்கிருதம், செத்த மொழியா? - மதுமிதா நேர்காணல் | Madhumitha interview
கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான மதுமிதா, பல நூல்களின் ஆசிரியர். சமஸ்கிருதத்திலிருந்து சுபாஷிதம் (மகாகவி பர்த்ருஹரியின் கவிதைகள்), மேகதூதம், ருதுசம்ஹாரம் உள்ளிட்ட நூல்களைத் தமிழில் பெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமிக்காக, ஒடியக் கவிஞர் பிரதீபா சத்பதியின் கவிதைகளை வசீகரிக்கும் தூசி என்ற பெயரில் தமிழில் பெயர்த்துள்ளார். கன்னடத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் சிற்சில நூல்களைத் தமிழுக்குப் பெயர்த்துள்ளார். மொழிகளுடனான அவரது பயணம் குறித்தும் சமஸ்கிருத மொழியின் தனித்தன்மைகள் குறித்தும் தமிழ்-வடமொழிக்கு இடையிலான உறவுகள் குறித்தும் இந்த நேர்காணலில் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சமஸ்கிருதம், செத்த மொழியா?, ஆலயங்களில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஒலிப்பது ஏன்? சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றனவா? வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்தனவா? மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்களா? இந்திப் படிப்பதால் என்ன பயன்? போன்ற சர்ச்சைக்குரிய பல கேள்விகளுக்கு நயமாகப் பதில் அளித்துள்ளார். இந்த அர்த்தமுள்ள நேர்காணலைக் காணுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:36 AM 0 comments
Thursday, September 10, 2020
செக்கர் வானம் | Evening sky at Chennai - 14
The magnificent evening sky today at Chennai.
எல்லையிலாப் பேரழகுடன் இன்றைய மாலைப் பொழுது. இதை வர்ணிக்க முயல்வதை விட, மௌனமாய் இரசிப்பதே மேலானது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:57 PM 0 comments
இரண்டு பசுக்கள் | Two cows
நெருப்பில் ஈக்கள் மொய்ப்பதில்லை, ஓடும் நீரில் பாசி பிடிப்பதில்லை என்ற வரிகளை எங்கோ படித்திருக்கிறேன். நம் தெருவுக்கு இன்று வந்த இரண்டு பசுக்களைப் பார்த்தேன். அசைவில்லாமல் நின்ற பசுவின் மீது அதிக ஈக்களும் அசைந்துகொண்டிருந்த மற்றதன் மீது மிகக் குறைந்த ஈக்களும் இருக்கக் கண்டேன். தொடர் இயக்கமே நம்மைத் துடிப்புடன் இருக்கச் செய்யும். சில்லறைத் துன்பங்கள், நம்மை அண்டாமல் இருக்கவும் செய்யும் எனக் கண்டுகொண்டேன்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:42 PM 0 comments
Butterfly - 26 | வண்ணத்துப்பூச்சி - 26
நேற்று கிட்டாத சிறகசைப்பு, இன்று நிறையவே கிட்டியது. இந்த வண்ணத்துப்பூச்சியின் நிறமும் வடிவழகும் மரத்தின் உள்ளமைப்பை ஒத்திருப்பதை வியக்கிறேன்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:11 PM 0 comments
குயிலின் அமுத கானம் - 6 | Singing Cuckoo - 6
The singing Cuckoo on a Neem tree in this chill morning.
குளிர்ச்சியான இன்றைய இளங்காலை வேளையில், வேப்ப மரத்தில் அமர்ந்து இந்தக் குயில் இசைக்கும் அமுத கானத்தைக் கேளுங்கள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:48 AM 0 comments
Wednesday, September 09, 2020
Sleeping cat - 3 | உறங்கும் பூனை - 3
மதில் மேல் பூனை என்ற பழமொழி உண்டு. எந்தப் பக்கம் குதிப்பது என்ற குழப்பம் இல்லாமல், மதில் மேலேயே படுத்துத் தூங்குகிறது இந்தப் பூனை.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:43 PM 0 comments
கரிச்சான் | இரட்டைவால் குருவி | Drongo
இன்று மாலை வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. எங்கள் வீட்டுக் கொய்யா மரத்தில் இரண்டு காக்கைகளும் அவற்றின் நேரெதிரே குயில்போல் இரு கருநிறப் பறவைகளும் உட்கார்ந்திருந்தன. காக்கைக்கு எதிரே உட்காரும் அளவுக்குக் குயிலுக்குத் துணிச்சல் வந்துவிட்டதா எனப் பார்த்தால், அவை இரண்டும் கரிச்சான் குருவிகள். இரட்டைவால் குருவி என்றும் அழைப்பார்கள். இந்தப் பதிவில் ஒரு கரிச்சானையும் அது மெல்லிய குரலில் பாடுவதையும் நீங்கள் பார்க்கலாம்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:45 PM 0 comments
Butterfly - 25 | வண்ணத்துப்பூச்சி - 25
ஓர் அழகிய வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பை ஓரங்குல இடைவெளியில், குவிய மாறுபாட்டால் இழந்தேன். என் சிறிய படக்கருவி தானாகவே குவியத்தைத் தீர்மானிக்கும். அதை மாற்ற நாம்தான் இடம்மாறவேண்டும். எங்கே நான் நகர்ந்தால், பட்டாம்பூச்சி பறந்துவிடுமோ என ஒரே இடத்தில் நின்றேன். ஆனால், குவியத்தை நேராக்கிய பிறகு, வண்ணத்துப்பூச்சி அதிகமாகச் சிறகசைக்கவில்லை. படப்பதிவில் இது ஒரு பாடம்.
பிறகு ஏன் இதைப் பகிர்கிறேன்? சிறகசைக்காவிட்டாலும் வண்ணத்துப்பூச்சி அழகு என்பதற்காகவே.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:01 PM 0 comments
பாயுமொளி நீயெனக்கு!
அந்தி நேரத்து அஸ்தமனச் சூரியனையும் அந்நேரத்தில் வானில் காணும் வர்ண ஜாலங்களையும் பல முறைகள் பதிவு செய்து வழங்கியுள்ளேன். சில நாள்களாக அவற்றை நான் கவனிக்கவில்லை. நேற்று மாலை ஓர் அதிசயமாக, ஒளிக்கதிர் பாய்ந்து, ஒரு கோடு போட்டது போல், வானைப் பிரித்திருந்தது. ஒரு பாதி முழுதும் நீலமும் மறுபாதியில் வெண்மையும் நீலமும் கலந்தாற்போலும் காட்சி தந்தது. இந்த அழகிய காட்சியைத் தம் செல்பேசியில் பதிவு செய்து வந்து, அறைக்குள் எனக்குக் காட்டினார், என் மனைவி. அன்பை வெளிப்படுத்த ஆயிரம் வழிகள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:53 PM 0 comments
Tuesday, September 08, 2020
பெருஞ்சித்திரனாரும் வள்ளலாரும் - பேராசிரியர் அரசேந்திரன் நேர்காணல் | Pro...
தமிழறிஞரும் வேர்ச்சொல் ஆய்வு வல்லுனருமான கு.அரசேந்திரன் அவர்களை அவரது இல்லத்தில் (08.09.2020) சந்தித்தேன். அரசேந்திரன், சென்னை, தாம்பரம், கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்து, ஓய்வு பெற்றவர். இவர் ஆக்கிய கால் அடி தாள் சொல் வரலாறு, உலகம் பரவிய தமிழின் வேர்-கல் ஆகிய ஆய்வு நூல்கள், பெரும் புகழ் பெற்றவை. கம்பராமாயணத்தில் அணிகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பாவலர் பெருஞ்சித்திரனாரின் மாணவர். தமிழ்த் தேசிய உணர்வு கொண்டவர். வள்ளலார் வழி நடப்பவர்.
இந்த நேர்காணலில் பெருஞ்சித்திரனாரையும் வள்ளலாரையும் தம் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டது ஏன் என்று விளக்குகிறார்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:01 PM 0 comments
குயில் என் தாய் | Cuckoo my mother
வண்ணச் சிறகு விரித்து வானை அளந்து, எண்ணி எண்ணி மகிழுமாறு இனிய கீதம் பாடி, ஓடி ஆடிக் களைத்து அமர்ந்தாள் என் தாய். கடந்து போன பொற்காலத்தை நினைவுகூர்வதும் தலைநிமிரும் அடுத்த தலைமுறையைக் கண்டு மகிழ்வதுமே இப்போது இயலக் கூடியவை. வாழ்க என் தாய்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:01 AM 0 comments
Monday, September 07, 2020
500 videos in my YouTube channel
https://www.youtube.com/user/annakannan
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:05 PM 0 comments
Factcheck: Is Tamil an official language of Google? | தமிழ், கூகுளின் அல...
கூகுள் நிறுவனம், தமிழ் மொழியைத் தன்னுடைய அலுவல் மொழியாக (Official language) அங்கீகரித்துள்ளது என்ற செய்தி, பல மாதங்களாக, சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வாட்ஸாப் செய்திகளாகவும் சுற்றி வருகிறது. இதன் உண்மைத் தன்மை என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:22 PM 0 comments
Unexpected death of a Butterfly | வண்ணத்துப்பூச்சியின் எதிர்பாரா மரணம்
இந்த வண்ணத்துப்பூச்சி எப்படி இறந்திருக்கும் என உறுதியாகத் தெரியவில்லை.
நேற்றுதான் நண்பர் ஒருவர், எருக்கம்பாலைத் தொட்டுவிட்டு, தற்செயலாகக் கண்ணைக் கசக்கியதால், கண்பார்வை இழந்ததாக எழுதியிருந்தார். இந்த நச்சுத்தன்மை, எருக்கம்பூ, செடி என அனைத்திலும் இருக்க வேண்டும். எருக்கம்பூவில் அமர்ந்த இந்த வண்ணத்துப்பூச்சியின் இறகு, பக்கத்துப் பூவில் பட்டிருக்க வேண்டும். அந்தப் பூவின் இதழ்கள் இறுக்கமாக மூடியிருக்க வேண்டும். ஒரு பக்கத்து இதழ்கள் சிக்கிக்கொண்டதால், இன்னொரு பக்கத்து இதழ்களை அடித்துப் பார்த்து நகர முடியாமல் போயிருக்கும். அதனால்தான் அந்தப் பக்கத்து இறகுகளும் கிழிந்திருக்கின்றன. இந்த வண்ணத்துப்பூச்சி பதறிக் கதறிப் பறந்ததில் அந்த முனையில் இருந்த எல்லா எருக்கம்பூக்களும் விழுந்திருக்கும். இதுவே எனக்குத் தோன்றியது. இது சரிதானா என அறிந்தோர் விளக்குங்கள்.
இதற்கு முன் பல முறைகள் வண்ணத்துப்பூச்சிகள் எருக்கம்பூவில் அமர்ந்ததைக் கண்டிருக்கிறேன். இந்த முறை மட்டும் எப்படி இந்த வண்ணத்துப்பூச்சி சிக்கியது?
ஆனால், பாருங்கள். பக்கத்திலேயே இன்னொரு வண்ணத்துப்பூச்சி, இந்தச் சுவடே தெரியாமல், பூக்களில் மாறி மாறி அமர்வதைப் பாருங்கள். இதுதான் வாழ்க்கை.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:19 PM 0 comments
குயில் என் காவலன் | Cuckoo my guard
மறைவாய் அமரும். சுற்றும் முற்றும் பார்க்கும். சிறு அசைவையும் கண்டுபிடிக்கும். குரலெடுத்துக் கூவும். கிளைக்குக் கிளை தாவும். விண்ணில் பாயும். தாக்க வரும் காக்கையிடமிருந்து தப்பிக்கும். எப்போதும் என்னைச் சுற்றியிருக்கும் குயில், என் காவலன்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:15 AM 0 comments
Sunday, September 06, 2020
தவிட்டுக் குருவிகள் இப்படியும் செய்யுமா? | Yellow-billed babbler
இன்று அந்தி மயங்கிய வேளையில், தவிட்டுக் குருவிகள் குறித்து இரு புதிய செய்திகளைத் தெரிந்துகொண்டேன். முதலாவது, அது கூடு கட்டும் என்பது. ஒரு தவிட்டுக் குருவி, பெரிய கம்பியைக் கவ்விச் செல்வதைக் கண்டேன். இரண்டாவது, தவிட்டுக் குருவிகளால் காக்கையை விரட்ட முடியும் என்பது. தங்கள் பக்கத்துக் கிளையில் உட்கார வந்த காக்கையைத் தவிட்டுக் குருவிகள் பல சேர்ந்து, அடுத்த நொடியே விரட்டியடித்தன. இதுதான் ஒற்றுமையின், கூட்டணியின் வலிமை.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:40 PM 0 comments
ஐரோவாசியச் சிட்டுப்பருந்து | Eurasian Sparrowhawk
இன்று ஜன்னலைத் திறந்தபோது, ஒரு புதிய பறவையைக் கண்டேன். சற்றே பெரிய பறவை. வட்ட விழிகளும் கூர்மையான வளைந்த அலகும் வெண்மையும் இளம்பழுப்பும் கலந்த மேனியும் கொண்ட பறவை. இறகுகளை விரிப்பதும் கோதுவதும் அரித்துக்கொள்வதுமாகத் துருதுருவென இருந்தது. இறகுகளைக் கோதும்போது கண்செருகி, அனுபவித்துக் கோதியது. பம் பம் பம் என நடனம் ஆடுவது போல், தலையை முன்னும் பின்னும் ஆட்டியது. நண்பர் சுந்தரைக் கேட்டு இதன் பெயர் அறிந்தேன்.
இது ஐரோவாசியச் சிட்டுப்பருந்து (Eurasian sparrowhawk, Accipiter nisus) அல்லது வடக்குச் சிட்டுப்பருந்து அல்லது சிட்டுப்பருந்து என அழைக்கப்பெறுகிறது. இது, சிறிய கொன்றுண்ணிப் பறவை. இதில் பெண் பருந்து, ஆணைவிட 25% வரை பெரியதாக இருக்கும். இவை 0.5 கிலோவுக்கு மேல் எடையுள்ள பறவைகளைக் கூடக் கொல்ல வல்லவை என விக்கிப்பீடியா சொல்கிறது. உலகம் முழுதும் பயணிக்கும் இந்தப் பறவை, வலசை போகும் வழியில் நம் ஜன்னலோரம் சிறிது நேரம் அமர்ந்தது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:27 PM 0 comments
குயில் என் மருத்துவன் | Cuckoo my doctor
தன் உடலைப் பேணும் குயில், தனக்குத் தானே சரிசெய்துகொள்கிறது. தன் இறகுகளுக்கு உள்ளிருந்து வெள்ளைப் பஞ்சு போல் ஒன்றை இன்று வெளியில் எடுத்தது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:03 AM 0 comments
Saturday, September 05, 2020
இரை தேடும் புறா - 2 | The Pigeon in search - 2
The pigeon in move.
ஒரு சிறிதும் நிற்காமல், சோராமல், தளராமல் இயங்கிக்கொண்டே இருக்கும் புறா.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:51 PM 0 comments
குயில் என் ஆசிரியன் | Cuckoo my teacher
குயிலிடமிருந்து பாடக் கற்கலாம். பாடம் கற்கலாம். பாயக் கற்கலாம். பறக்கக் கற்கலாம். கொஞ்சக் கற்கலாம். தேடக் கற்கலாம். வாழக் கற்கலாம். குயிலிடமிருந்து கற்க ஏராளம் உண்டு. கற்பிப்பதற்காக அது நன்றி எதுவும் எதிர்பாராது. பாராட்டை வேண்டாது. வெறுமே சொல்லிச் செல்லாது, கருப்பொருளாகவே மாறிவிடும். என் வாழ்வே என் செய்தி எனக் கூறும் இந்தக் குயிலை விதந்தோதுவேன்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:32 AM 0 comments
Friday, September 04, 2020
Cat vs Cat | பூனைச் சண்டை
முதல் பூனை என்ன செய்ததோ தெரியவில்லை. இரண்டாவது பூனை அதை விரட்டியது. முதல் பூனை, வேப்ப மரத்தில் ஏறிவிட, இரண்டாவது பூனையும் ஏறியது. எங்கள் ஜன்னலுக்கு எதிரே இரண்டு பூனைகளும் ஏறி நின்றன. கர் புர்ரென்று முறைத்து உறுமிச் சண்டையிட்டன. இரண்டும் பெரிய பூனைகள். இவையிரண்டும் மரத்தில் ஏறி நிற்பதைப் பார்த்து, நான்கைந்து காக்கைகள் கூடிவிட்டன. இரண்டாவது பூனை கீழே இறங்கி, மரத்தடியிலேயே காத்திருந்தது. முதல் பூனை தயங்கித் தயங்கி இறங்காமலேயே நின்றது. பிறகு நாங்கள் குரல் கொடுத்ததும் அது அவசரமாக இறங்கியது. காத்திருந்த பூனை, மீண்டும் விரட்டத் தொடங்கியது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:48 PM 0 comments
Butterfly - 24 | வண்ணத்துப்பூச்சி - 24 | Brown butterfly
A brown butterfly on the golden shower tree.
கொன்றை மரத்தில், பழுப்பு நிறத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:21 PM 0 comments
Butterfly - 23 | வண்ணத்துப்பூச்சி - 23
கொன்றை மரத்தில் சற்றுமுன் இந்த வண்ணத்துப்பூச்சியைக் கண்டேன். உச்சி வெயிலில் இது சிறகசைக்கும் அழகே தனி.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:24 PM 0 comments
Butterfly - 22 | வண்ணத்துப்பூச்சி - 22
இலைகளின் பின்னே அமரும் வண்ணத்துப்பூச்சியை முன்னர் பார்த்தோம். இங்கே இங்கே ஒரு வண்ணத்துப்பூச்சிக் கூட்டமே இலைகளின் பின்னே அமர்ந்துள்ளன.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:40 PM 0 comments
A cute dog - 2
அப்பாவி நாய் என்று முன்னொரு பதிவு இட்டிருந்தேன். அதே நாயை இன்று மீண்டும் கண்டேன். அதே முகம், அதே கண்கள். ஆனால், இன்று வேறு நடவடிக்கைகள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:20 AM 0 comments
Butterfly - 21 | வண்ணத்துப்பூச்சி - 21
இந்த அழகிய வண்ணத்துப்பூச்சியை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:39 AM 0 comments
Thursday, September 03, 2020
Honeycomb | தேன்கூடு
A honeycomb next to our house.
நம் வீட்டை ஒட்டியுள்ள கொன்றை மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளன.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:39 PM 0 comments
குஞ்சுக்கு உணவூட்டும் காக்கை - 2 | Crow feeds child - 2
Mother crow feeds the child.
குஞ்சு சற்றே வளர்ந்திருந்தாலும் இன்னும் முழுதாக வளரவில்லை. எனவே தாயுள்ளத்துடன் காக்கை உணவூட்டுகிறது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:51 PM 0 comments
கண்மூடித் தூங்கும் பெண்குயில் | Sleeping Cuckoo (female)
குயில் கண்மூடித் தூங்குவதை இன்றுதான் முதன்முதலில் கண்டேன்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:59 PM 0 comments
நீள்முருங்கை | Murungai | Moringa oleifera
இவ்வளவு நீளமான முருங்கைக்காய்களைப் பார்த்திருக்கிறீர்களா?
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:51 AM 0 comments
மயில் மாணிக்கமும் ஒரு கட்டெறும்பும் | Mayil Manickam | Ipomoea quamoclit
மயில் மாணிக்கத்தின் மீது ஒரு கட்டெறும்பு
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:42 AM 0 comments
Wednesday, September 02, 2020
கரிச்சான் | Drongo
இன்று மாலை இந்தப் பறவையைக் கண்டேன். வழக்கம்போல், நண்பர் சுந்தர் லெட்சுமணனிடம் இதன் பெயர் கேட்டேன். கரிச்சான் வகையாக இருக்கலாம் என்றார். பிறகுதான் ஞாபகம் வந்தது. இதைப் பார்த்த 15 நிமிடங்கள் கழித்து, வால் பிளவுபட்ட பறவையொன்று கூரை மீது அமர்ந்திருந்ததைக் கண்டேன். அது குயில் எனக் கருதிப் படம் எடுக்கவில்லை. ஆனால், வழக்கமாகக் குயில் அங்கே உட்காராது. எனவே, இது கரிச்சான் குருவியே என அறிந்தேன்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:06 PM 0 comments
ஒரு தென்னை மரம் வீழ்ந்தது
நம் வீட்டருகே ஒரு தென்னை மரம், பக்கத்து மனையில் நீண்டு வளர்ந்திருந்தது. அந்த மனையில் வீடு கட்டப்பட்டு வருவதால், இன்று தென்னை மரத்தை வெட்டிவிட்டார்கள். காட்டை அழித்து நகரத்தை உருவாக்கியது போய், நகருக்குள்ளும் வீடுகளுக்காக மரங்களை அழித்து வருகிறார்கள். அதிலும் தென்னை மரத்தின் வேர்கள், அருகிலுள்ள வீடுகளையும் கட்டடங்களையும் வலுவிழக்கச் செய்யும் என்பதும் ஒரு காரணம். வீடுகளைப் பாதிக்காத வகையிலான மரங்களை வளர்ப்பது, எதிர்காலத்தில் அதை வெட்டும்படியான சூழலைத் தவிர்க்கும்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:06 PM 0 comments
குயில் என் நாயகி | Cuckoo my darling
ஜன்னலோரத்துப் பெண்குயில், இன்று நெடுநேரம் எனக்குக் காட்சி தந்தது. அலகால் சிறகைக் கோதுவதும் காலால் முகத்தை அரித்துக்கொள்வதும் அங்குமிங்கும் பார்ப்பதுமாக இருந்தது. வண்ணச் சிறகை விரித்து மூடியது. வானையும் என்னையும் பார்த்தது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:01 PM 0 comments
Indian cow | கோமாதா
கோமாதா என்று அழைக்கப்படும் பசுவுக்குள் அத்தனை தெய்வங்களும் வாழ்கின்றன. அதை வணங்குவோம், பேணுவோம், காப்போம்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:25 PM 0 comments
A lovely calf
A lovely calf in front of a grocery store starts to live with flies.
மளிகைக் கடைக்கு முன் படுத்திருந்த இந்த அழகிய செம்பழுப்பு நிறக் கன்றுக்குட்டியை இன்று கண்டேன். எத்தனை விரட்டினாலும் ஈக்கள் மீண்டும் மீண்டும் அதன் மீது அமர்ந்தன. ஈக்களோடு அது வாழப் பழகிக்கொண்டது என நினைக்கிறேன்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:03 PM 0 comments
பெண்குயிலின் கொட்டாவி - 2 | Female Cuckoo's yawn - 2
This female Cuckoo yawns twice today morning.
இன்று காலை ஒரு பெண்குயில், இரு முறைகள் கொட்டாவி விட்டது. அந்த அழகிய காட்சி, இங்கே.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:41 PM 0 comments
Tuesday, September 01, 2020
குயில் என் காதலி | Cuckoo my lover
Wow sweety, what a beauty!
பெண்குயிலை இவ்வளவு நெருக்கத்தில் இன்றுதான் கண்டேன். ஆஹா, என்ன ஓர் எழில், ஒயில், வனப்பு!
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:03 PM 0 comments
A cute dog
புல்வெளியில் அமர்ந்திருக்கும் இந்த நாயின் அப்பாவித்தனம் (innocence), மிக அழகாக இருக்கிறது.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 6:22 PM 0 comments
குயில் என் தேவதை | Cuckoo my angel
இன்று காலை வெயிலில், சிறகை விரித்துவைத்து, இறகைக் கோதும் தேவதை, இதோ.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:09 PM 0 comments
Nirmala Raghavan's Little Lovers | நிர்மலா ராகவனின் சின்னஞ்சிறு காதலர்கள்
ஆசிரியரையே காதலிக்கும் மாணவர்களை நாம் திரைப்படங்களில், கதைகளில் கண்டிருப்போம். நிஜத்திலும் சிலர் உண்டு. அப்படி மாணவர்களின் காதலுக்கு உரியவர், நிர்மலா ராகவன். மலேசியாவில் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தம் சின்னஞ்சிறு காதலர்கள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:00 AM 0 comments