!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Unexpected death of a Butterfly | வண்ணத்துப்பூச்சியின் எதிர்பாரா மரணம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, September 07, 2020

Unexpected death of a Butterfly | வண்ணத்துப்பூச்சியின் எதிர்பாரா மரணம்

இந்த வண்ணத்துப்பூச்சி எப்படி இறந்திருக்கும் என உறுதியாகத் தெரியவில்லை.



நேற்றுதான் நண்பர் ஒருவர், எருக்கம்பாலைத் தொட்டுவிட்டு, தற்செயலாகக் கண்ணைக் கசக்கியதால், கண்பார்வை இழந்ததாக எழுதியிருந்தார். இந்த நச்சுத்தன்மை, எருக்கம்பூ, செடி என அனைத்திலும் இருக்க வேண்டும். எருக்கம்பூவில் அமர்ந்த இந்த வண்ணத்துப்பூச்சியின் இறகு, பக்கத்துப் பூவில் பட்டிருக்க வேண்டும். அந்தப் பூவின் இதழ்கள் இறுக்கமாக மூடியிருக்க வேண்டும். ஒரு பக்கத்து இதழ்கள் சிக்கிக்கொண்டதால், இன்னொரு பக்கத்து இதழ்களை அடித்துப் பார்த்து நகர முடியாமல் போயிருக்கும். அதனால்தான் அந்தப் பக்கத்து இறகுகளும் கிழிந்திருக்கின்றன. இந்த வண்ணத்துப்பூச்சி பதறிக் கதறிப் பறந்ததில் அந்த முனையில் இருந்த எல்லா எருக்கம்பூக்களும் விழுந்திருக்கும். இதுவே எனக்குத் தோன்றியது. இது சரிதானா என அறிந்தோர் விளக்குங்கள்.



 இதற்கு முன் பல முறைகள் வண்ணத்துப்பூச்சிகள் எருக்கம்பூவில் அமர்ந்ததைக் கண்டிருக்கிறேன். இந்த முறை மட்டும் எப்படி இந்த வண்ணத்துப்பூச்சி சிக்கியது?



 ஆனால், பாருங்கள். பக்கத்திலேயே இன்னொரு வண்ணத்துப்பூச்சி, இந்தச் சுவடே தெரியாமல், பூக்களில் மாறி மாறி அமர்வதைப் பாருங்கள். இதுதான் வாழ்க்கை.



 

No comments: