இன்று ஜன்னலைத் திறந்தபோது, ஒரு புதிய பறவையைக் கண்டேன். சற்றே பெரிய பறவை. வட்ட விழிகளும் கூர்மையான வளைந்த அலகும் வெண்மையும் இளம்பழுப்பும் கலந்த மேனியும் கொண்ட பறவை. இறகுகளை விரிப்பதும் கோதுவதும் அரித்துக்கொள்வதுமாகத் துருதுருவென இருந்தது. இறகுகளைக் கோதும்போது கண்செருகி, அனுபவித்துக் கோதியது. பம் பம் பம் என நடனம் ஆடுவது போல், தலையை முன்னும் பின்னும் ஆட்டியது. நண்பர் சுந்தரைக் கேட்டு இதன் பெயர் அறிந்தேன்.
இது ஐரோவாசியச் சிட்டுப்பருந்து (Eurasian sparrowhawk, Accipiter nisus) அல்லது வடக்குச் சிட்டுப்பருந்து அல்லது சிட்டுப்பருந்து என அழைக்கப்பெறுகிறது. இது, சிறிய கொன்றுண்ணிப் பறவை. இதில் பெண் பருந்து, ஆணைவிட 25% வரை பெரியதாக இருக்கும். இவை 0.5 கிலோவுக்கு மேல் எடையுள்ள பறவைகளைக் கூடக் கொல்ல வல்லவை என விக்கிப்பீடியா சொல்கிறது. உலகம் முழுதும் பயணிக்கும் இந்தப் பறவை, வலசை போகும் வழியில் நம் ஜன்னலோரம் சிறிது நேரம் அமர்ந்தது.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Sunday, September 06, 2020
ஐரோவாசியச் சிட்டுப்பருந்து | Eurasian Sparrowhawk
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:27 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment