கிளிங் கிளிங் மிதிவண்டி
கீய்ங் கீய்ங் மிதிவண்டி
மிதிக்க மிதிக்க முன்னேறும்
மேடு பள்ளம் பின்னோடும்
சட்டைப் பையில் வட்டாரம்
எட்டும் தூரம் எட்டூரும்!
புகை விடாமல் ஓடுமே
புதிய சக்தி கூடுமே
சுற்றுச் சூழல் காக்குமே
சுறுசுறுப்புச் சேர்க்குமே!
பெட்ரோல் செலவு இல்லையே
இரைச்சல், நெரிசல் இல்லையே
சிட்டாகத்தான் பறக்குதே
தெருவில் கோலம் பிறக்குதே!
கண்ட இடத்தில் போடாதே
கல்லு முள்ளு கண்ணாடி
வருது நமது புதுவண்டி
வழியை விடு மாயாண்டி!
காற்று வீசும் திசையிலே
போனதெல்லாம் அக்காலம்.
நாம் போகும் திசையிலே
காற்று வீசும் இக்காலம்!
=================================
படத்திற்கு நன்றி: http://www.redbrick.dcu.ie/~melmoth/RTW/koreapersonal.html
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Monday, October 05, 2009
மிதிவண்டி (சிறுவர் பாடல்)
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:01 AM
Labels: கவிதைகள், சிறுவர் பாடல், நட்சத்திர வாரம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்.
சிறுவர் பாடல் நல்லாயிருக்கு.
ஆஹா........... நீங்கதான் இந்தவார நட்சத்திரமா?
நல்வரவு.
நேற்றே முகத்தில் ஒரு திளக்கம் இருந்தது:-)))))
நண்பரே, தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்.
மிகவும் மகிழ்ச்சி.
சிறுவர் பாடல் நல்லாயிருக்கு. கலக்குங்க.
நிறைய எதிர்பார்க்கிறோம்.
கவிதைச் சூரியன் ஒருவாரகாலத்துக்கு வானத்து நட்சத்திரமாய் ஒளிர்வதில் மகிழ்ச்சி.வாழ்த்துகள்!
சிறுவர் பாடலோடு ஆரம்பித்திருக்கிறீர்கள்..மேலும் உங்களது திறமைமிகுந்த மரபுக்விதைகளையும் அளியுங்கள்!
ஆஹா, சைக்கிளில், ஸாரி, மிதிவண்டியில் உல்லாசமாகச் சென்ற நாட்கள் நினைவுக்கு வந்து அனுபவித்து மகிழ்ந்தேன். அருமை. வாழ்த்துக்கள்.
Post a Comment